குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழி!

23.08.2020.....தமிழினம்  இவர்களால் ஏமாற்றப்படுவது  உங்களுக்குப்பபுரியாமல் பதவிமட்டும் போதுமா? இவர்களிடம் நீங்களும் எமாற 5ஆண்டுகள் வேண்டுமா??கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று மாலை பயணம் மேற்கொண்ட அவர் தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்தரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுகூடி ஆராய்ந்து தலைவர், கொறடா, ஊடக பேச்சாளர் போன்ற பதவி நிலைகளை தெரிவு செய்வது வழமை 2010ஆம் ஆண்டு ஊடக பேச்சாளராக சுரோஸ் பிரேமச்சந்திரனும், 2015 சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டார்கள். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பிற்பாடு நாடாளுமன்ற குழு இந்த தெரிவினை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற குழு கூட்டப்படாத பட்சத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு நேற்று சம்பந்தன் தலைமையில் கூடி கொள்கையளவில் பிரதம கொறடாவாக சித்தார்த்தன் பெயரும், ஊடகப்பேச்சாளர் ஆக அடைக்கலநாதன் பெயரினையும் சம்மந்தன் முன்மொழிந்துள்ளார்.

இது எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற குழுகூடி அனுமதியினை பெற்றும் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பதவி நிலையில் தொடர்ந்து அங்கம் வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேச்சு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

இந்திய தூதவருடன் பேச்சு வழமையானது இந்திய தூதவரின் அழைப்பினை ஏற்று எங்கள் தலைவர்கள் சந்தித்துள்ளார்கள். புதிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பிற்பாடு ஒரு சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இருந்தாலும் பல்வேறு விடையங்கள் சம்மந்தமாக பேசப்பட்டதாக அறிகின்றேன்.

எதிர்காலத்தில் தமிழ மக்களின் பிரச்சனைகள் சம்மந்தமாக அரசாங்கத்தடன் அல்லது அரச தரப்புடன் உறவினை பேணி எதிர்கால நடவடிக்கை முன்னெடுப்பது சம்மந்தமாக இருதரப்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.