குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 1 ம் திகதி வியாழக் கிழமை .

உலகின் மூத்தமொழியாகி தாய்மொழியிலும்,இலங்கையின்மூத்தமக்களின் மொழியிலும், இணைப்புமொழியான ஆங்கிலம்,

இலங்கையின் சிங்களக்கிராம மக்களின் பழமொழியும் சிங்களத்தில் கூறி நிறைவு செய்தார்.(கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது. ” என்று கூறினார்.தேசத்தின் அடைப்படையில் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகளை வழங்கி னாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம்- பாராளுமன்ற முதல் அமர்வில் நீதியரசர் விக்னேசுவரன் எடுத்தரைப்பு. இன்று தான் தமிழர் வென்றதன் அடையாளம் இலங்கை கப்பாராளுமன்றத்தில் உலகின் மூத்த மொழியென்று பதிவாகியுள்ளது அதனால் இன்றதான் தமிழர்களின் தேர்தல் வெற்றிநாள்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில்  சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் இந்த நாட்டில் உதயமாகும் என்று யாழ்- கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேசுவரன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்த போதே நீதியரசர் விக்னேசுவரன் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பேச்சை தமிழில் ஆரம்பித்த நீதியரசர் விக்னேசுவரன், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் அந்த தமிழ் மொழியில் தனது உரையை ஆரம்பிப்பதாகவும் கூறி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி சிங்கள மொழியில் தனது உரையை நிறைவுசெய்தார்.

“வணக்கம் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே!  தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முதற்கண் என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பித்து பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் மொழியிலும்  எனது வாழ்த்தினை கூறுகின்றேன். எமது பாராளுமன்ற பாரம்பரியத்தின் மிக உயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமைக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.   ” என்று பேசிய நீதியரசர் விக்னேசுவரன்  சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தன தனது நீண்ட அரசியல் பயணத்தின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ள அனுபவத்தை சபாநாயகர் பதவிக்கு நல்லமுறையில் பயன்படுத்துவார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இன்றைய அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அதேபோல மறைந்த யே. ஆர். யெயவர்தனவின் கீழ் யானைப் பலத்துடன் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி இன்று ஒரே ஒரு உறுப்பினர் என அளவுக்கு அதன் பலம் சுருங்கிவிட்டதாக தனதுரையில் கோடிட்டு காட்டிய நீதியரசர் விக்னேசுவரன் அதே பிழையை தற்போதைய பொதுயன பெரமுன அரசும்  விட்டு அதே பாதையை தெரிவுசெய்யாது என்று நம்புவதாக கூறினார்.

“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977 ஆம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் யே.ஆர். யெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983 ஆம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது.  அந்த காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக  எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்றவகையிலும்  இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான  சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன். ” என்று கூறினார்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி அழுத்தம் திருத்தமாக தனது உரையில் விக்னேசுவரன் வலியுறுத்தினார். “குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய  உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக் கப்படுவதன் பிரகாரம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை  அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் ” என்று கூறினார்.

சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் நீதியரசர் தனது இந்த உரையில் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

“கௌரவ சபாநாயகர் அவர்களே, பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு  தெரியும். அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது. ” என்று கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.