குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

குமரிக்கண்டம் -? கமரிக்கண்டம் பாகம் ..1.......பாகம் 2 நல்லதமிழில் மாற்றப்படவுள்ளது....

முன்னுரை 12.08.2020....குமரிக்கண்டம் எனும் சொல்லிற்கு பக்கத்தில் வினாக்குறி போட்டிருப்பது, அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்ததா என்பதே ஐயப்பாட்டிற்குரியது என்பதை உணர்த்தவே. குமரிக் கண்டம் என்று ஒன்று நிச்சயமாக இருந்தது.....அதற்கு ஆதாரங்கள் இவை இவை இவை ......என அண்மைக்காலத்தில் நிறுவ முயன்றவர்களில் , பகுத்தறிவாளர் புலவர் குழந்தை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,, அருளாளர் பொள்ளாச்சி       நா . மகாலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்த்தக்கவர்கள். இது குறித்து நூல்கள் சிலவும் வெளி வந்துள்ளன. இல்லை. குமரிக்கண்டம் என்றோர் பெரும் நிலப் பரப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை என அண்மைக் காலமாக வெளிவரும் புவியியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படியில் வாதிடுவோரும் பலர் உளர்.. யெயபாரதன் இது பற்றி அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். தினமணி இதழிலும் சனசக்தி இதழிலும் இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்  நானும் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

இந்தக் கட்டுரைக்குள் புகும் முன் சில புவியியல் உண்மைகளை தெரிந்து கொள்ளுதல் நலமென எண்ணுகிறேன். இதெல்லாம் தெரிந்ததுதானே என பல இடங்களில்  நீங்கள் கருதக் கூடும். ஆயினும் கட்டுரையின் முழுமை கருதி இவற்றை எழுதுகிறேன். ஆதலின் பொறுமை காத்து படியுங்கள்.

 

முதலாவதாக , குமரிக் கண்டம் இருந்தது என வாதிடுவோர், அந்தக் கண்டம் அழிந்து   போனதற்கு அடுத்து அடுத்து நிகழ்ந்த கடல் கோள்களே காரணம் என்று தங்கள் வாதத்தை முன் வைக்கின்றனர். ஆதலின் முதலில் கடல்கோள் பற்றிப் பார்ப்போம்.,

1.கடல்கோள் :

. தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் நிகழ்ந்த கடல்கோள்கள் பற்றிய நேரடித் தகவல்கள் எதுவும் இதுவரை நமக்கு கிடைத்த பாடில்லை. ஆயினும் சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கடல்கோள் பற்றிய குறிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் காணக் கிடைகின்றன. பொதுவாக கடலின் நீர் மட்டம் உயர்ந்து வந்து நிலப்பகுதியை அபகரித்து கொள்வதே கடல்கோள் என அறியப்படுகிறது கடலின் நீர் மட்டம் எப்போதெல்லாம் உயர்கிறது, எந்த அளவிற்கு உயர்கிறது என்பதை முதலில் ஆய்வோம்.

1.அ. கடல் ஓதங்கள் ( TIDES ):

கடலின் மட்டம் அனைத்து இடங்களிலும்அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது இடத்திற்கு இடம் வேறுபடுவது மட்டுமல்ல, ஒரே இடத்திலும் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது உயர்ந்துகொண்டும் தாழ்ந்துகொண்டும்தான் இருக்கிறது. இந்த ஏற்றத் தாழ்வுகள் சூரியன், பூமி, சந்திரன் இவைகளின்  ஈர்ப்பு விசைகள் காரணமாகவே நிகழ்கின்றன. கடல் மட்டம்  சராசரி அளவிலிருந்து ஆறுமணி நேரத்திற்கு ஒரு முறை புதிய உயர்வையும், ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை புதிய தாழ்வையும் அடைகின்றது..அதாவது சுமாராக இருபத்தி நான்கு மணி நேரத்தில் கடல் மட்டம் இருமுறை உயர்ந்து இருமுறை தாழ்கிறது, உயர் நிலையை உயர்வோதம் என்றும் தாழ் நிலையை தாழ்வோதம் என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்தில்முறையே , HIGH TIDE  மற்றும்  LOW TIDE . எங்கள் பகுதி மீனவர்கள் இதை ஏத்தம் (ஏற்றம்)-வத்தம் (வற்றம்) எனக் குறிப்பிடுவர். இந்த ஏற்றத்  தாழ்வுகளும் அனைத்து நாட்களிலும் ஒரே அளவில் இருப்பதில்லை.  நிறை நிலாக்காலங்களிலும் மறை நிலாக்காலங்களிலும் உயர்வோதத்திற்கும் தாழ்வோதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் 1.5 மீ. முதல்  2 மீ. வரை இருக்கும். மற்ற பிறை நிலாக்காலங்களில்  1 மீ. முதல்   1.5 மீ. வரை இருக்கும்.

இதன் காரணமாகவே நிறை நிலாக்காலங்களிலும், மறை நிலாக்காலங்களிலும் கடல் நீர் ஊருக்குள் புகுவது, வழக்கத்திற்கு அதிகமாக பின் வாங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கடந்த மறைநிலா நாளுக்கு அடுத்த நாள் (05.06.2016) கடலூர், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டிணம், புதுப்பட்டணம் போன்ற இடங்களில் ஊருக்குள் கடல்நீர் புகுந்ததை இங்கு நினைவு கூறலாம். “ஊருக்குள் கடல்நீர் புகுந்தது”..... “வழக்கத்திற்கு அதிகமாக பின் வாங்கியது” என ஊடகங்களில் செய்திகள் வரும்போது பாருங்கள். அன்று நிறை நிலா அல்லது மறைநிலா அல்லது இவற்றை ஒட்டிய நாட்களாகவே இருக்கும். 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குமுன் வரை இவை அதிகமாக கவனிக்கப் படவில்லை. ஆனால் சுனாமிக்குப் பின்  இந்த சாதரணமான நிகழ்வுகளும் ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கப்பட்டதால்  கடலோரம் வாழும் மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகினர். ஓதங்களுக்கும் கடல்கோளுக்கும் எந்தவித தொடர்பும்  இல்லை. ஆனாலும் சிலர் ஓதங்களை “கடல் கொந்தளிப்பு” என எழுதுவதும் , இது போன்ற நிறைய கொந்தளிப்புகள் ஏற்பட்டுதான் குமரிக் கண்டம் அழிந்திருக்க வேண்டும் என கற்பனை செய்வதும் ஏற்று கொள்ள இயலாதவை.குமரிக்கண்டம்: உண்மையா? பாகம் 2

முதல் பாகம் காண:

இரண்டாம் பாகத்தில் 3 முக்கிய தலைப்புகளில் குமரிக்கண்டத்தொடர்பு பற்றி விவாதிப்போம்.

 

I. கடல்கோள் அ ஊழிவெள்ளம்

II. கடலில் மூழ்கிப்போன நிலங்கள்

III. தமிழுக்கும் மூழ்கிப்போன கண்டத்துக்குமுள்ள தொடர்புகள்

கடல்கோள் அ ஊழிவெள்ளம் என்பது, ஏறக்குறைய தொல் நாகரீகங்கள் எல்லாமே சொல்லி இருக்கக்கூடிய, பரம்பரை பரம்பரையா மக்கள் மூலம் நினைவு கூறப்பட்ட பெரும் துன்பகரமான நிகழ்வு. உலகின்  பல நாடுகளில், இலக்கியங்களில் சொல்லப்படும் அந்தப்பேரழிவு எங்கெங்கே பதிவு செய்யப்பட்டது என்ற தேடலோடு தொடங்குவோம்.

I. கடல்கோள் அ ஊழிவெள்ளம்

1. கிறித்தவ விவிலிய தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளதன்படி, ஏதேன் தோட்டத்தைவிட்டு மனிதன் வெளியேற்றப்பட்டு சில தலைமுறைகள் கடந்த பின்பு மனிதன் பாவ வழிகளில் வீழ்ந்து கடவுளை விட்டு தூரப்போனான். கடவுள் உலகை அழிக்க எண்ணி வெள்ளமொன்றை அனுப்ப எண்ணினார். நோவா நீதிமானாக இருந்தபடியால் அவரையும் அவர் குடும்பத்தையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடிவு செய்தார். கடவுள் பேழையொன்றை செய்யச்சொல்லி அவர் குடும்பத்தையும்,  விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சோடியையும் காப்பாற்றினார். நோவாவின் 600வது அகவையில், வெள்ள நிகழ்வு. (தொடக்கநூல்: 7 ஆம் அதிகாரம்)

2. பபிலோனிய வரலாறில்  கில்காமேசு  (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்க்காக "உட்னபிசிதிம்" (Utnapishtim) என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காக பெரிய கப்பல் ஒன்றை செய்யச் சொன்னார். வெள்ளத்தின் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வை கொடுத்தார்.

3. சுமேரியரின் வரலற்றின் படி, சார்ரூபாக் நகர சியுசூத்ரா (Zisudra) அரசன், என்கி கடவுளால் எச்சரிக்கப்பட்டு,  பெரிய கப்பலைச் செய்யக் கட்டளையிடப்பட்டு காப்பாற்றப்படுகிறார்.

4. அக்காத் வரலாற்றில் என்லில் (Enlil) கடவுள் அத்ரசிசுவிவை காப்பாற்றுகிறார்.

5. எகிப்திய வரலாற்றில் காப்பாற்றப்பட்டவர் டோத் (Toth)

6. கிரேக்க வரலாற்றில் 3 கடல்கோள் பற்றிய குறிப்புகள்: ஓசியெகூ(ஸ்) (Ogyges), தேகாலியன் (Deucalion), டார்டனுஸ் (Dardanus).

7. ஆப்ரிக்க இனங்களில் Kwaya, Mbuti, Maasai, Mandin, மற்றும் Yoruba  இன மக்களிடம் கடல்கோள் பெருங்கதைகள் உண்டு.

8. சீனாவில் காப்பாற்றப்பட்டவர் டும் (Dum).

9. மெக்சிகோவில் (Aztec) காப்பாற்றப்பட்டவர்கள் கோக்ஸ் கோக்ஸ் (Coxcox) என்பவரும் அவரது மனைவியும்.

10. இந்தியாவில் சதபாத பிரமாணம்  (Shatapatha Brahmana) கி.மு. 300, மற்றும் மச்ச புராணம் (Matsya Purana) கி.பி. 250 களில் மனு என்பவர் வெள்ளம் பற்றி எச்சரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்கிறது. இந்த மனு என்பவர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கிறது. சத்யவிரதன் என்ற மன்னன் பெயரும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பெயர்களும் குறிப்பது ஒரே நபரைத்தான் என்றும் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக கீற்றுவில்  அதிஅசுரன்  விளக்கம் தருகிறார்.

தமிழீழத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா அவர்களின் “தமிழர் சரித்திரம்”(1940) என்னும் நூலில் மனு என்பவன் சத்தியவிரதன் என்னும் திராவிட வேந்தன் எனவும் பாண்டிய நாட்டை ஆண்ட ஒரு தமிழ் மன்னன் எனவும் ந.சி. கந்தையா அவர்கள் கூறுகிறார்.

கடல்கோளுக்கு முன்பு இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை வடமலை என்று புராணங்களிலும் இலக்கியங்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வடமலையில் தான் மனுவின் பேழை இருந்ததென  சதபத பிராமணம் என்ற வடமொழிநூல் கூறுகிறது. வடமலை எனக் குறிப்பிடப்படும் குற்றால பொதிகை மலையில் தான் மனு தவம் செய்தான். அப்போது வைகை ஆற்றில் இருந்து ஒரு தெய்வீகமீன் வடிவம் தோன்றியதாகவும் மச்சபுராணம் கூறுகிறது. வைகை ஆற்றின் கரையில் தான் மனு தவம் செய்தான் என அக்கினிபுராணம் கூறுகிறது. மனுவானவன் பாலாற்றின் கரையில் தவம் செய்தான் என்று மகாபாரதத்தின் வனபர்வம் கூறுகிறது.

“மனு தமிழ் உலகத்தில் தோன்றியவராதலாலும், சூரிய குமாரனனான அம் மனு மலையாள மலையில் தவஞ்செய்தமையாலும், சத்திய விரதன் என்னும் அவர் கிருத மாலை என்னும் வையை ஆற்றில் பலியிட்டமையாலும்,   பாண்டிய அரசரின் இலட்சினையாக்கப்பட்ட தெய்வீக மீன், பாண்டியரின் தலைநகராக வந்த மதுரையிலே தமிழ் சாதியனரின் முன்னோராகிய மனுவின் முன் தோன்றினமையாலும், மனுவும் அவர் வழி வந்தோரும் தமிழரேயாவர்.”

இப்படி ஏறக்குறைய 500 தொன்மங்கள், பாரம்பரியக் கதைகள் உலகெங்கும் உள்ள தொல் நாகரிக நினைவுகூறல்கள் உள்ளதாக புவிபரிணாமவியலாளர் ராபர்ட் சூக் (Robert Schoch) கூறுகிறார். காண்க:

II. கடலில் மூழ்கிப்போன நிலங்கள்

இரண்டாவதாக இந்தப் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்ட நினைவுகூறலில் பெரும் நிலப்பரப்பும் மூழ்கியதாக கூறப்படுவதில் மிகப் பிரபலமான 3 இடங்கள்.


1. அட்லாண்டிஸ் (அட்லாண்டிக் கடலுக்கடியில்)

2. மு (MU) (ஜப்பானுக்கருகில் பசிபிக் கடலுக்கடியில்)

3. குமரிக்கண்டம் அ லெமுரியா (இந்தியப்பெருங்கடலில்)

(நம் புரிதலுக்காக ஒரு சின்ன விளக்கம்: நாடுகளின் இன்றைய பிரிவுகள் அடிப்படையிலேயே பொதுவாக நம் கண்ணோட்டம் இருக்கும்.

1. இன்றைய காலகட்டத்தில் நாட்டு எல்லைப் பிரிவுகளிலும் சில மாறுதல்கள் (எ .கா: 1971 வரை பங்களாதேஷ் இல்லை, 1947 வரை பாகிஸ்தான் இல்லை)

2. ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தில் நாடுகள் பெயர் மாற்றம் 15-20 ம் நூற்றாண்டுகள் வரை.

3. பாண்டிய, சோழர்கள் வணிகம் செய்த காலங்களில் பெயர் மற்றும் பண்பாட்டில் மாற்றங்கள் (10-12 நூற்றாண்டுகள்)

4. கி.மு 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த எல்லைகளால் குறுக்கப்படாத, பேரரசுகளின் பிரிவினைகளற்ற, அனைவருக்குமான, பொதுவான,  எல்லையற்ற உலக நிலை. நாடு என்ற ஒரு கருத்தே இல்லாதிருந்த பூமி. இன்றைய நாட்டு எல்லைகளால், நில வரைபடங்களால் பாதிக்கப்பட்டுள்ள நமது உலக பிம்பங்களை கழற்றி வைத்துவிட்டு தொடர முயற்சிப்போம்.)

(இரண்டாவதான விளக்கம்: விவிலியம், இராமாயணம், மகாபாரதம், போன்றவைகளில் தமிழரின் வாழ்வியல் கூறுகளை மிக அதிக அளவில் காணலாம் என்பதால், அவற்றை மத நூல்களாக இங்கே நான் பாவிக்கவில்லை, நமது மூதாதையர், மூத்த தமிழ்குடி வரலாற்றினை இன்னும் பாதுகாக்கும் ஆவணப்பெட்டகங்களாகத்தான் அவைகளைக் கணிக்கிறேன்.)


1. அட்லாண்டிஸ்

1. இலியட், ஒடிசி என இரண்டு கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஓமர் (Homer), அட்லாண்டிஸ் என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

2. பிளேட்டோ: அட்லாண்டிஸ் என்னும் ஒரு பலம் மிகுந்த கடற் படையினைக் கொண்டிருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

பிளேட்டோவின் கூற்றுப்படி அட்லாண்டிஸ் கடற்படையாக இருந்தது. இது பில்லர் ஆப் ஹெர்குலெசுக்கு முன்பாக அமைந்திருந்தது. மேற்கத்திய ஐரோப்பாவின் பல பகுதிகளையும் ஆப்பிரிக்காவையும் இது கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்தகாலம் சுமார் கிமு 9600 ஆக இருக்கலாம். அட்லாண்டிஸ் ஏதென்ஸ்சை படையெடுத்து தோற்றுபோனது. இதனால் ஏற்பட்ட "இடையூறின் காரணமாக ஒரே பகல் மற்றும் இரவில் எதிர்பாராமல்" அட்லாண்டிஸ் கடலில் மூழ்கிபோய்விட்டது.

ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விட்டது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார், அக்கண்டம் எப்படி அழிந்தது என்ற செய்திகள் தெளிவாக, நம்பத்தகுந்த வகையில் இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போனது.

மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டு ஒரு அழிந்த கண்டத்தினை அட்லாண்டிக் கடல் பகுதி முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியபாடில்லை.


அறிவியல்பூர்வ நிலவியல் நோக்கிலும் இதுசாத்தியமில்லாத ஒன்று. காரணம் அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மலைத்தொடரானது கடல் மட்டத்திலிருந்து உள்ள தூரம் 2700 மீட்டர். அதாவது ஏறக்குறைய 3 கி.மீ. ஆழத்தில் உள்ளதால் 120 மீட்டர் கடல் உயர்வு அதனை மூழ்கடித்திருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை. ஐரோப்பியர்கள் தாங்களே மனிதகுல முன்னோடிகள் என்று நிரூபிக்க பலவழிகளில் முனைந்தாலும் வரலாற்று உண்மை அவர்கள் சார்பாக இல்லை.

2. இரண்டாவதாக ஜப்பானுக்கருகில் மு (MU) என்ற நிலப்பரப்பு மூழ்கியுள்ளதாக கூறப்படுவது.









ஆனால் ஜப்பானை ஒட்டிய கடலுக்குள் உள்ள நிலப்பரப்பை நோக்கினால் அப்படி ஒரு பெரும் நிலப்பரப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறே இல்லை. காரணம் ஜப்பானின் நிலத்தை ஒட்டிய கடல் ஆழமானது மட்டுமல்ல  எரிமலை சீற்றத்தால் உருவான மிக மிகச்சிறிய தீவுகள் மட்டுமே  தனித் தனித்தீவுகளாய் உள்ளதே தவிர பெரும் நிலப்பரப்பு இல்லை. ஜப்பானுக்கருகில் கடலடி நிலப்படம் காண்க:






ஆனால் ஜப்பானுக்கு தெற்கே இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு தீவுக் கூட்டங்களாகவும், ஆழமற்ற கடல் பரப்புகளாலும் உள்ளதால் சாத்தியமுள்ள மூழ்கிய கண்டமாக பலராலும் எழுதப்பட்டு வருகிறது.








கூகிள் நிலப்படத்திலும் கடலுள் மூழ்கிய இந்தோனேசியாவை ஒட்டிய அதிக ஆழமற்ற நிலப்பரப்பைக்காணலாம்.






3. குமரிக்கண்டம் அ லெமூரியா


1. லெமூரியா:


இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார்.

இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன என விளக்கம் தருகிறார். இவரைத்தொடர்ந்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel), Helena Blavatsky, William Scott-Elliot, Frederick Spencer Oliver போன்றோரும் லெமூரியா என்ற ஒரு கண்டத்தின் முன்னாள் இருப்பை வலியுறுத்துகின்றனர். காண்க:


2. குமரிக்கண்டம்:


தேவநேயப் பாவாணர், கா. அப்பாத்துரை முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்.[1]


இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த) அதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். 20 மில்லியன் வருடங்கள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய லெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்பதின் பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று. காண்க:


ஒரு விளக்கத்திற்காக லெமூரியா, குமரிக்கண்டம் எனப் பெயர்கள் பிரிக்கப்பட்டாலும் அவை குறிப்பது ஒன்றே. அது கடலில் மூழ்கிய தமிழர் நிலப்பகுதி.

தமிழர்களாகிய நமக்கு தரப்படும் ஒரு கருத்தாக்கம் குமரிக்கண்டம் என்பது


1. ஒருங்கிணைந்த ஒரூ மாபெரும் நிலப்பரப்பு இந்தியப்பெருங்கடலில் மூழ்கியது.


2. அது இன்றைய தமிழ்நாட்டை ஒட்டியே தான் இருந்திருக்க வேண்டும்.


முதல் பாகத்தில் நாம் கண்டது போல குமரிக்கண்டம் ஒருங்கிணைந்த ஒரே நிலப்பரப்பு அல்ல. இலக்கியத்தில் சொல்லப்படும் 49 தீவுக்கூட்டங்களாக பரந்து விரிந்து கிடந்த ஒரு மாபெரும் நிலத்தொகுப்பு. மேற்கே ஆப்பிரிக்காவிற்கு அருகில் மடகாஸ்கரிலிருந்து கிழக்கே ஈஸ்டர் தீவு என்று ஐரோப்பியர்களால் பெயர் மாற்றப்பட்ட ரப்பா நூயி (Rapa Nui) தீவு வரை ஆஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளடங்கிய தீவுகளும் நாடுகளுமாக விளங்கிய ஒரு பெரிய நிலத்தொகுப்பு.


ருத் மொன்ட்கொமெரி என்பவர் மூ கண்டமும் லெமூரியா கண்டமும் ஒன்றெனவும், அட்லாண்டிஸ் என்ற கடலில் மூழ்கியதாக கருதப்படும் மற்றொரு கண்டத்தோடு ஒப்பிட்டு அதுவும் ஒன்றே எனக்கூறினார். காண்க:








இந்தப்பகுதியில் வசித்த தமிழர்கள் பல நூறு, ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் ஏற்பட்ட


1. சுனாமி

2. எரிமலைச்சீற்றம்

3. பனிமலை உருகி திடீர் கடல் மட்ட உயர்வு.


போன்ற காரணங்களால் உலகிலேயே மிக அதிக பட்ச அளவில் பாதிக்கப்பட்டு இனமே சிதறி ஓடும் நிலைக்குத்தள்ளப்பட்டது. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள் இருப்பதால் இன்றும் இப்பகுதி நெருப்பு வளையப் பகுதி (Ring of Fire) என்றே அழைக்கப்படுகிறது.





இந்தப்பகுதியில் தான் உலகின் மிக ஆழமான 3 கடல் பகுதியும் அமைந்துள்ளது.


1. பசிபிக் பெருங்கடலின் மிக ஆழமான மரியானா படுகுழி

2. அட்லாண்டிக் பெருகடலின் மிக ஆழமான பியூர்டோ ரிகோ படுகுழி

3. இந்தியப்பெருங்கடலின் மிக ஆழமான சுண்டா படுகுழி


எல்லாவற்றையும் விட மிக மிக அதிகமாக எரிமலைகள், நில நடுக்கம், சுனாமி ஏற்படும் பகுதியான இந்தோனேசியா இதன் மையமாக இருக்கிறது. என்ன ஒர் அபாயகரமான பகுதி, எத்தனை எரிமலைகள் மொத்தம் 300 எரிமலைகள்.








III. தமிழுக்கும் மூழ்கிப்போன கண்டத்துக்குமுள்ள தொடர்புகள்



இந்தத் தொடர்புகளை பல வழிகளில் காணலாம். பல தென்கிழக்காசிய நாடுகளோடும், அங்குள்ள பெயர், ஊர், பண்பாடு இவற்றோடு தொடர்பு படுத்திப் பார்ப்போம்.



1. சிங்கப்பூர்


சிங்கம் +ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர், சிங்கபுரம் என்ற தமிழ்ப்பெயர்.

சிங்கப்பூர் நாட்டின் அடையாள இலச்சினை இதனை தெளிவாகச் சொல்கிறது.













2. மலேசியா


The word Melayu in the Malay derive from the Tamil words Malai and ur meaning "mountain" and "city, land", respectively. Malayadvipa was the word used by ancient Indian traders when referring to the Malay Peninsula.











இறையானரகப் பொருளுரை இளந்திரையம் என்னும் நூலையும் திரையன் மாறன் என்னும் அரசனையும் குறிக்கிறது.சோழ மன்னர்கள் கெடாவையும், சயாமையும் ஆண்ட செய்தியும், முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது.


3. பர்மா

பர்மாவின் பழங்கால தலைநகரமான புரோம் வைணவ வழிபாட்டின் மையமாகத் திகழ்கிறது. புரோம் நகருக்கு “புகநாம்யோம்” என்ற பர்மியப் பெயரும் உண்டு. இதற்கு பொருள் “விஷ்ணுபுரம்” என்றாகும். மாறன் என்ற சொல் – இந்திய மண்னர்களில் குறிப்பாக தமிழ் நாட்டு பாண்டிய மன்னர்களில் புகழ் மிக்க ஒரு சொல்லாக தெரிகிறது.பாண்டியர்களின் ஆளுமைக்குட்பட்ட மாறன்மார் தேசம்தான் இன்றைய மயன்மார் நாடா என்பது ஆராயவேண்டிய விஷயம்.


மாறன் மகா வம்சம் என்பது பண்டைய கெடாவின் சரித்திர நூல். மாறன் மகா வம்சன் கடாரத்தின் முதல் மண்னன் ஆவான். ஆனால் அவர்களின் புனைவு கதைகளில் ரோம் ராஜியத்தின் இளவரசியை சீன இளவரசனுக்கு மணமுடிக்க அனுப்பி வைகப்படும் ஒரு கடற்படையின் தலைவானாகவும் இன்றைய இந்திய கோவாவில் இருந்து புறப்படும் படை சில கருட இனத்தவரின் தாக்குதலை முறியடித்து கெடாவில் இந்திய சாராஜ்ஜியத்தை நிறுவிய முதல் மன்னாக மாறன் மகாவம்சனின் கதை சொல்லப்பட்டிருகின்றது.


மதுரையை ஆண்ட பாண்டியன் ஒருவன் சாவகம் என்னும் சாலித் தீவை கைப்பற்றி, அதன் கடற் கரையில் அலைநீர் அலசுமாறு ஒரு பாறையில் தன் அடிச்சுவட்டைப் பொறித்து வைத்தக் காரணமாக வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டார். இவருடைய காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு. சாலி என்பது சாவகத்தின் பழையப்பெயர். சாவகம் ஒரு காலத்தில் தமிழாட்சிக்குட்பட்டிருந்தமைக்கு சான்றாக இன்றும் சில பட்டிணங்கள் பாண்டியன், மதியன், புகார், பாண்டிவாசம், மலையன்கோ, கந்தழி செம் பூட்செய், மீனன் காப்பு என்று தமிழ்ப்பெயர்களில் வழங்கி வருகிறது.


சாவகத்தின் அருகில் மதுரா (மதுரை) என்ற தீவும் உண்டு. கி.பி. 114ல் ஜாவாவை ஆபுத்திரன் என்ற அரசன் ஆண்டதாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஜாவாவை “ஆபுத்திரநாடு” என அழைக்கப்பட்டது. மனிமேகலை ஜாவா நாட்டிற்கு சென்ற சமயம் அங்கு தமிழ் மொழிப்பேசப்பட்டது என கூறப்படுகிறது.


இராமயனாத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஸ்வர்ண தீபத்தைற்கு ராஜ சுக்கிரவன் தூதுவர்களை அனுப்பி சீதையை தேடும்படி அனுப்பியிருகின்றார். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள்.


சுவர்ணதீபம் என்றால் பொருள்:


சுவர்ண தீவம் - சுவர்ண தீவு. சுவர்ணம் என்றால் சு - வர்ணம். சோதிய வர்ணம் (சோதியான சூரியனின் வர்ணமான தங்க நிறம்.) ஆக சுவர்ண தீவு என்றால் தங்க தீவு, தங்கம் அதிகம் கிடைக்கப்பெறும் தீவு என்றே பொருள்.


4. தாய்லாந்து


இன்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தின் பெயர் சுவர்ணபூமிதான்.


விமான நிலையத்திற்குள் அசுரர்களும் தேவர்களும் பாற்கடல் கடைந்த கதை வடிக்கப்பட்டுள்ளது.










சுமத்திராவில் “மலையு” என்ற ஊர் உண்டு. இது மலையூர் மறுவி மலையுவுக மாற்றம் பெற்று இருக்கலாம். இங்கிருந்து மலாய் மொழி பரவியதாகவும் சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. ஸ்ரீவிஜயா என்ற ராஜியம் இப்பொழுது சுமத்திரா என்ற தீவில்தான் அமைந்திருந்தது. இதி ஸிங் என்ற சீன தூதர் கெடாவிலிருந்து நாகப்பட்டிணம் நாவாய் மூலம் முப்பது நாட்களில் சேரலாம் என்று எழுதியுள்ளார்.


டாலமி, பெரிப்ளூஸ் என்ற பயணிகள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தமிழர்களின் கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.


தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.



‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.



கட்டுரை : தென்கிழக்காசியாவில் தமிழ், மலாய்மொழி வேர்நிலை உறவுகள்


கட்டுரையாளர்:   திரு. இர.திருச்செல்வம்,


தலைவர், தமிழியல் ஆய்வுக் களம், மலேசியா.


மேற்குச் சுமத்திராவில் உள்ள புக்கிட் கோம்பாக்(Bukit Gombak) எனும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில், “மலையூர்புரம் – Malaiyur-pura” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. அதற்கு விளக்கமாக “kota malaiyur – மலையூர்க் கோட்டை” அல்லது “kota gunung - மலைக்கோட்டை” என்று ஆய்வாளர்கள் பொருள் கூறுகின்றனர். [ ‘Kota’ என்பது கோட்டை என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு]. மலாய்(மலாயு) எனும் சொற்பிறப்பு வரலாற்றை “ malaiyur ; malaiyu ; malayu ; melayu” என்று அவர்கள் விளக்கப்படுத்துகின்றனர். இது தெற்றெனத் தமிழ்வழி மூலத்தினைக் காட்டுகின்றது.


தென்கிழக்கு ஆசியாவுக்குப் பாண்டியர் தொடர்பு தொல்பழந் தொடர்பு.


சேரர் தொடர்பு புருணை என்னும் பொருநைத் தீவுக்கும், பனைத்தீவு என்னும் பிலிப்பைன்சு தீவுக்கும் பெயர்வழங்கிய பழந்தொடர்பு.


அவரது கால்நூற்றாண்டு கால வேர்ச்சொல் ஒப்பியல் ஆராய்ச்சி வழியாக, பல்லாயிரக் கணக்கான தூய செந்தமிழ் உறவுக்கூறுகளைக் கொண்டுள்ள செவ்விய சொற்களை மலாய் மொழியிலும், அதனை ஒத்த பிற தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கண்டுபிடித்துள்ளார்.


1. சூர் = அச்சம். சூரம் ; Seram = அச்சம்.


2. செகு(வெட்டு, நீக்கு) ; Cegah


3. தகு(தகை = தடு, தவிர், நீக்கு) ; Tegah


4. பற(வு); Baroh (பறவை) – [Jawa]


5. சே(தங்கு) ; Sewa (தங்குதற்கான வாடகை)


6. குடங்கு(குடங்கர்)t; JK Kedung [குழி]


7. பூசு(கழுவு, கழுவித் தூய்மை செய்) ; Basuh


8. தொல்(லு) ; Dulu [முன், முன்பு]


9. செம்; Semat [ செம்முதல்(கட்டுதல், பிணித்தல்) ]


10. பிள் ; Belah [ பிள ]


11. கம்(மு) ; [ஒடுங்கு, குன்று, குறைந்திடு] Kemis, Kemek, Kempis, ...


12. அம்பு (அம்பர் – மேல், மேலிடம்) ; Ampuh [ Top]


13. அங்கு(பிள) ; Angga [அங்காத்தல் ; வாய்பிளத்தல், வாய்திறத்தல்]


14. குறு(வெட்டு, அறு) ; Goroh/Gorok, Kerat 15. கரடு =Kerutu.


16. குறள் ; கறள் ; கறளை = வளர்ச்சியற்றது, குறள் – Kerdil.


17. கண் ; கண்(ணுதல்) ; கண்ணல் ; காணல் ; Kenal(கண்டு அறிந்திருத்தல்).


தமிழ்                       மலாய்  மலகாசி  பாதாக்  மதுரா  மாகாசார்  பூகிசு  சுண்டா



பொறை(பாரம்)        berat      wezatra       Borat       Bero      Batala          wara      Beurat



தோரை(குருதி)       darah     Ra             Dara         doro           -             Dara         -



தரை                        darat          -            darat        Doro           -             Dara       Darat



(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.


தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.


மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன.


அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.






5. பிலிப்பைன்ஸ்


இராஜேந்திர சோழனுடைய கல்வெட்டு பிலிப்பைன்ஸ் நாட்டை பரசுராமா என அழைக்கிறது. அதற்கு முன்னதாக பனை நாடு என்று அழைக்கப்பட்டதைப் பார்த்தோம்.

இன்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஏறக்குறைய 25 சதவிகிதம் தமிழ் உண்டு.

உதாரணமாக

புத்தி, துக்கம், குரு, சம்பிலதாயம் (சம்பிரதாயம்), முகா (முகம்), டம்ளா (தர்மம்), மண்டலா (மந்திரம்), கழுற (கழுகு), சுவர்கா (சுவர்க்கம்), நெரகா (நரகம்) என அப்படியே தமிழ் வார்த்தைகள்.


மாறனாவோ (Maranao) ராமாயணக்கதையில்  மகாராஜா ராவணா, மகாராடியா லாவணா எனப்படுகிறார்.


இராஜேந்திர சோழனின் கல்வெட்டு வார்த்தைகள் இதோ அங்குள்ள அன்றைய நாடுகளின் பெயர்களோடு:

தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்

செருவிற் சினவி யிருபத் தொருகால்

அரசுகளை கட்ட பரசு ராமன் (பிலிப்பைன்சின் முன்னாள் தமிழ்ப்பெயர் )

மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி

இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)


அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்

சங்கிராம விசையோத் துங்க வர்ம

னாகிய கடாரத் தரசனை வாகையும்

பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)


துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்

ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்

விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்

புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்

நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்

வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்

ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்

கலங்கா வல்வினை இலங்கா சோகமும்

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்

காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்

கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்

தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்

கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்

தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)


தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்

மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான

உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..."


மாயிருதிங்கம் மற்றும் மாவிலிம்பங்கம் இரண்டும் பிலிப்பைன்சில் உள்ள தீவுகள்.

சிரிவிஜயா - சுமத்ரா

பனை - பிலிப்பைன்ஸ்

மலையூர் - மலேசியா

இலங்காசோகம் - இலங்கை தேசம்

வளைப்பந்துரு - வியட்நாம் ?

நக்காவரம் - நிகோபார்

கடாரம் - கெடா

இலைமுரிதெசம் - சுமத்ராவில் Aceh பகுதி (2004 ல் சுனாமி பாதித்த பகுதி )

மாபாளம் - பெகு

மடமாலிங்கம் - தம்ப்ரளிங்கா

தக்கோலம் - தகோபா






6. கொரியா



கொரிய மொழிக்கு அடிப்படை தமிழே!

வியக்கும் கொரிய தமிழ் ஆய்வாளர்  ஜங் நம் கிம்



-கொஞ்சம் கொஞ்சம். கொரியனில் சொகோஞ், சொகோஞ்,

-வணக்கம் என்பதற்கு கொரியனில் பங்கப்தா,

-அப்பா, அம்மா இரண்டும் கொரியனிலும் அதே உச்சரிப்புதான்.


-அதிர்ச்சி, ஆச்சர்யம் ஆகிய உணர்வை வெளிப்படுத்துவதற்கு அம்மம்மா... என்று வார்த்தையை பயன்படுத்துவீர்கள். கொரியனிலும் அதேதான்


-குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவீர்கள். கொரியனில் தாலேதா

-மலை ஏறுவதற்கு தமிழில் ஏறு என்று சொல்வீர்கள். கொரியனில் ஓறு

-தவறு செய்தவர்களை தண்டிக்க கைது செய்வார்கள். கொரியனில் கதுதா.

-நாள் கொரியனிலும் நாள் தான்,

-அச்சச்சோ என்பது கொரியனில் அச்சா,

-சோறு என்பது கொரியனில் சாறு

-பாம்பு கொரியனில் பேம்ப்

-மனைவி கொரியனில் மனோரா

-வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் போது இங்கே மாவிலைத் தோரணம் (mango leaves) கட்டுவார்கள், சொல்லப்போனால் கொரியனில் மாங்காய் கிடையாது. காரணம், குளிரான பகுதி. ஆதலால் மிளகாயை தோரணமாக கட்டுவார்கள். அதற்குப் பெயரும் மாவிலை தோரணம்தான்.

-தமிழில் உப்பு அந்த காலத்தில் சொக்கம் என அழைக்கப்பட்டது, ஆச்சர்யம் என்னவென்றால் கொரியனிலும் அதேதான்.


-கொறியா (Korea) என்ற பெயரே நல்ல தமிழ்ப்பெயர் அது தீவக்குறை. மூன்று புறமும் கடல் சூழ்ந்த ஒரு தீபகற்பம் அ தீவக்குறை (peninsula).


தீவக்குறை, தீவக்கொறியா, கொறியா (Korea). காண்க நிலப்படம்:






7. ஜப்பான்



டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.


1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. அப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.


தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின.



http://1.bp.blogspot.com/-Pw1uv9U4HPY/UDyoUot5bXI/AAAAAAAABnI/Up7KiA7u16c/s1600/ohno.jpg


12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் ஜப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.


(எ.கா)

நம்பு- நமு

யாறு- யற

நீங்கு-நிகு

உறங்கு-உரகு

கறங்கு-கரகு

அகல்-அகரு

அணை-அண

கல்-கர


எனச் சொல் ஒற்றுமை உள்ளன.

தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில்  ஜப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது. அதனைச் சிறிய புத்தாண்டு (Koshogatsu) என்பர்.விழா நாளில் கொங்கரா கொங்க எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் ஜப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார்.  1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது  ஜப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும்  ஜப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்) எழுதினார்.


பழைனவற்றைக் கழிதல், சிறுபறை முழக்கம், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், பொங்கலன்று வாசலில் காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் ஜப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் ஜப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.



திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்:


முந்திய காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள். இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது.



8. நிகோபார் (நக்காவரம்)

சூர்மலை வாழும் நக்க சாரணர், நயமிலர் என்ற மணிமேகலை (16 55, 56) வரிகளில் இந்தச் செய்தி உண்டு.சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆடையின்றி அம்மணராக வாழ்ந்த நக்கசாரணர், அவ்வாறே மணிமேகலையின் காலத்திலும் ஆடையின்றித் தொடர்ந்தனர், இன்று வரை அவர்களுட் பலர் ஆடையின்றியே வாழ்கின்றனர்.


அந்த நக்கசாரணர் வாழ்கின்ற இடமே நக்காவரம். நக்காவரம்:


நிக்கோபார் என்ற இன்றைய வழக்குச் சொல் நக்காவரத்தின் போலி.



9. கம்போடியா



மேருமலையின் தென் முனையில் இருக்கும் நாடு கம்போடியா. இங்கு நாட்டு மக்களே, குமர் என்றுதான்  அழைக்கப்படுகின்றனர்.

கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer). கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர்.





கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்று தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.



10. குமரோஸ்







11. நியூசிலாந்து


தமிழ் மணி என்று சொல்லப்டுகின்ற கப்பல் மணி ஒன்று 1836 ல் நியுசிலாந்து நாட்டில் கண்டெடுக்கப்பபட்டுள்ளது. முகைதீன் கப்பல் மணி என்று தமிழிலே எழுதப்பட்ட அந்த 500 வருடத்திற்கு மேல் பழ‌மையான அந்த மணி எப்படி நியுசிலாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டது  என்பது பெரிய ஒரு கேள்விக்குறியாக‌ உள்ளது. தமிழர்களின் இரும்புத்தொழில்நுட்பமும் தமிழிலேயே அச்சு வார்க்கும் திறனும், கடற்பயண வியாபாரமும் வெகு காலத்திற்கு முன்பே கண்டங்களையும் தான்டி நடைபெற்றுள்ளன என்பதற்கு இதுவே நல்ல சாட்சி. தமிழர்கள் வீரர்கள் மட்டும் அல்ல கடற் தீரர்கள்.









12. ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியா மற்றும் அட்லாண்டிஸ் என்ற இரண்டு பெயர்களும் குறிக்கும் சொல் ஆதித்தேயம் என்பதே.

இங்கிலாந்து என்ற வார்த்தைக்கு  இத்தாலிச்சொல் இங்கில் தெர்ரா (Inghil terra) (அதாவது இங்குள்ள தரை. அங்குள்ள தரை அது ஐரோப்பா கண்டப்பகுதி)

அதேபோல அட்லாண்டிஸ் என்பதும் அட்லாந்து - அதி லாந்து - ஆதி லாந்து - ஆதி நிலம்.

அதேபோல ஆஸ்த்ரேலியா என்பதும் ஆதித்தேயம் என்பதிலிருந்தே மருவி இருக்கவேண்டும்.

காரணம் அறிவியல் பூர்வமானதும் கூட. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுடைய ஜீன்களையும் இந்திய பழங்குடி மக்களின் ஜீன்களையும் ஆய்வுக்குட்படுத்திய போது மிகபொருத்தமாய் இருந்ததாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காண்க:

ஆஸ்திரேலிய பூர்வகுடி பெரியவரும், சிறுவர்களும் தமிழர்களைப்போல் இல்லையா?





DNA ஆய்வு முடிவுகள்:



அறிவியல் ஆய்வு முறையில் பிரித்தானிய ஆக்ஸ்போர்ட்டின் DNA பரிசோதனையில் தென்கிழக்காசிய மக்களின் தொன்மை 50,000 வருடங்கள் என்றும் அவர்களே பூர்வ குடி மக்கள் என்றும் மூன்று முறை ஏற்பட்ட கடல்கோள்களிலிருந்து (இறுதியாக ஏற்பட்டது 15,000 - 7000 ஆண்டு கால இடைவெளியில்) மீண்டு வந்தவர்கள் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காண்க:


3 கடல் கோள்கள்: முதலாவது 70,000 ஆண்டுகளுக்கு முன்னதாக, கடைசி 12,000. காண்க:


தமிழ் இலக்கியச் சான்றுகளும் 3 தமிழ்ச்சங்கங்கள் ஒவ்வொரு அழிவுக்குப்பிறகும் நடைபெற்று தமிழ் வளர்த்ததை சொல்வது இந்த 3 கடல்கோள்களை நிரூபிக்கிறது.


ஒரு ஜீன் விளக்கப்படம், எவ்வாறு தென்னிந்தியர் ஆஸ்த்ரேலியாவிற்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு: மஞ்சள் நிற ஜீன் குறியீடு ஆத்திரேலிய பழ ங்குடியினருடையது. பச்சைக்குறியீடு தென்னிந்திய தமிழருடையது.





மேலும் உலகின் பல நாட்டு நபர்களை விட தமிழர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பாக BBC யும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் உசிலம்பட்டியைச்சேர்ந்த விருமாண்டி என்பவரின் DNA 99 சதவிகிதம் பொருந்துவதாக கண்டுபிடித்ததை யூ டியூப் காணொளியிலும் காணலாம்.



It took five years for the Pitchappan team of 10 scientists to establish the DNA link between Virumandi and the first migrants to the subcontinent. The studies also proved that though the migration to India took place some 70,000 years ago, the first settlement in the South happened about 10,000 years later.

"More than half of the Australian aborigines carry this M130 gene. The marker is also present among some people in Philippines and the tribals of Malaysia," said Dr Pitchappan.











1. கங்காரு.



கங்காரு என்ற பெயர் எப்படி வந்ததுன்னு பலருக்கும் தெரியும்.

ஆஸ்திரேலியா வந்திறங்கிய ஒரு ஐரோப்பியர் அதிசயமாகத்தெரிந்த இந்த விலங்கினத்தை முதன்முறை பார்த்து பழங்குடிகளிடம் இதன் பெயரென்ன எனக்கேட்க, அவர் என்ன கேட்டார் என்று புரியாத அம்மக்களில் ஒருவர் கேட்டது புரியவில்லை என்று அவர்கள் மொழியில் சொன்னதையே அவ்விலங்கின் பெயராய் புரிந்துகொண்டு கங்காரு என்பதையே அவ்விலங்கின் பெயராக்கினார் என்பது வழக்கு.

உண்மையில் அந்த விலங்குக்கு பெயர் வச்சவன் தமிழன். அந்த விலங்கின் பெயர் ஒரு தமிழ் பெயர். அது மார்சூப்பி. கூகுள் போய் கங்காரு என்று தேடினால் அந்த விலங்கின் உட்குழு பெயர் மார்சூப்பியல் என்று வரும்.

Scientific classification

Kingdom: Animalia

Phylum: Chordata

Class: Mammalia

Infraclass: Marsupialia

Order: Diprotodontia

Family: Macropodidae

Genus: Macropus

Subgenus: Macropus and Osphranter


மார்சூப்பியல் சென்று தேடினால் அது ஓரியண்டல் என்று முடித்து கொள்கிறார்கள்.


ஏன் அந்த பெயர் ?

எந்த விலங்கினத்தின் குட்டியும் அதன் தாயை விட பொதுவாக பத்தில் ஒரு மடங்கு அல்லது பதினைந்தில் ஒரு மடங்கு சின்னதாக இருக்கும், மனிதன் உட்பட.

ஆனால் இந்த கங்காரு மட்டும் பிறக்கும் பொது  தாயை விட 500 மடங்கு சிறியது.






தாய்க் கங்காருவின் வயிற்றுப்பையுள் செல்லும் குட்டி வெளியே வராது. வர முடியாது. ஏறக்குறைய 4 வருடங்கள் தாயின் வயிற்றுப்பைக்குள்தான் அதற்கு வாழ்க்கை. அதனாலேயே தமிழர்கள் அந்த விலங்குக்கு வைத்த பெயர் மார்சூப்பி.

13. ஈஸ்டர் தீவுகள் (ரப்பா நூயி)


ஈஸ்டர் தீவுகள் என்று பரவலாக அறியப்பட்ட சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுகள் மிகப்பழமையானவை தமிழர்களோடு தொடர்புடையவை.






ஜேக்கப் ரோஜ்ஜவீன் என்ற டச்சுக்கார முதல் ஐரோப்பியர் 1722 ஏப்ரல் 5[8] அங்கு கரை இறங்கிய நாள் ஈஸ்டர் என்பதால் அப்பெயரை வைத்தார். அதன் உண்மையான பெயர் ரப்பா நுயி (Rapa Nui) என்பதே. இந்த தீவில் பிரம்மாண்டமான மனித முக சிலைகள் (அவர்கள் வைத்துள்ள பெயர் முகவாய் தான் (Moai)) மொத்தம் 887 இருக்கிறது. ஒரு சிலையைக்கூட இன்றைய தொழிநுட்பம் கொண்டும் அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது.

எங்கெங்கு அந்த சிலைகள் என்ற படம்.







அந்த சிலைகளில் ஒரு சில




இந்த சிலைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெரியது என்பதை அருகிலுள்ள நபர்களைக் கொண்டு காணலாம்.




ரப்பா நூயி போன்றே இந்தோனேசியாவிலும் உள்ள பிரமாண்ட மனித முக சிலை மற்றும் பெருவடிவங்கள்.








ரப்பா நூயி தீவுகளில் வாழ்ந்து கடல்கோளில் மறைந்தவர்கள் பயன்படுத்திய குறியீடுகளும்,


சிந்து சமவெளி தமிழர்களின் குறியீடுகளும் எவ்வாறு ஒரேமாதிரியாய் உள்ளன என்று பார்த்தால் ஆச்சரியமாய்த்தான் உள்ளது.








14. இந்தோனேசியா


சுமத்ரா

இந்தோனேசியாவிலுள்ள ஜாவா (சாவகம்) தீவிலுள்ள மிக உயர்ந்த மலையின் பெயர் செமேரு semeru. இன்னொரு மலையின் பெயர் பா பாண்டியன் என்பதே. இதே பெயரில் ஒரு மலை பிலிப்பைன்ஸ் நாட்டிலும். கீழே அதன் படம்.



மேலதிக தகவலுக்கு கீழே உள்ள உசாத்துனையை நாடலாம்.


http://en.wikipedia.org/wiki/Mount_Semeru


பிலிப்பைன்சிலும் பா பாண்டியன் மலை.




இன்னொரு மிக முக்கிய தகவல் தமிழர்களின் தலைநகராக, கடல்கொண்ட தொல் தமிழகத்தின் எச்சமாக விளங்கும் ஒரு பகுதியின் பெயர் மதுரையே.




அந்த தொல் மதுரை தீவு மற்றும் நீரிணைப்பு இந்தோனேசியாவிலுள்ள யாவகத்தீவில் உள்ளது.





இந்த இந்தோனேசிய யாவகத்தீவில் உள்ள மதுரையில் மக்கள் இன்றும் பேசும் மொழி மதுரேசி என்றே அழைக்கப்படுகிறது.





காரணம் என்னவென்றால் துவக்க காலத்தில் அங்குதான் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதோடு கி.பி 10, 11 ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களின் அரசு குறிப்பாக, உலகின் முதல் கடற்படையைக்கொண்டிருந்த ராஜேந்திர சோழனுடைய கடற்படையின் காரணமாக தமிழ் மிகப்பரவலாக அங்கு இருந்தது. அவரது அரசு எல்லைகளைக் குறிக்கும் வரைபடம்.







இந்தோனேசிய மொழியின் பெயரே Bahasa, இது பாசை (சமஸ்க்ரிதம்), பாசை என்பதற்கு பேச்சு என்பதே தமிழ் மூலச்சொல்.

University of Madras Lexicon



சாவகம்:


n. prob. yāvaka.


1.The Archipelago, Sumatra-Java or Java;

யவத்தீவு.சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின் (மணி.14, 74).

2. Language of the country ofCāvakam, one of 18 languages referred to inTamil works;

யவத்தீவில் வழங்குவதும் பதினெண்மொழிகளுள் ஒன்றானதுமான பாஷை. (திவா.).


இந்தோனேசிய விமான சேவையின் பெயர் கருடா (கருடா என்றால் கழுகு)

( பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா?)







இந்தோனேசிய சாவகத்தீவின் எழுத்து முறை கவி (Kawi) என்றே அழைக்கப்படுகிறது. காண்க:


இந்தோனேசிய முதல் அதிபரும் இந்தோனேசியாவுக்கு 1949 ல் டச்சுக்காரர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தந்தவருமான சுகர்னோ (1901-1970) தன் மகனுக்கு வைத்த பெயர் சுகர்னோபுத்திரன் (சு-கர்ணன் - சுகர்னோ - Sukarno) காரணம், மகாபாரதப்போரில் கர்ணன் சூழ்நிலை காரணமாக தீயவர்களோடு சேர்ந்ததால் இவர் தன் மகனை நல்ல கர்ணன் என்ற பொருளில் சு-கர்னோ என்று பெயரிட்டார். மகள் பெயர் மேகவதி சுகர்னோ புத்திரி (இவர் இந்தோனேசியாவின் ஐந்தாவது அதிபராக செயல்பட்டவர்.)


ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் சாவகம்(ஜாவா) பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.


பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.


தமிழகத்திற்கும்சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை கூறுகிறது.

சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் வுல்ட்ஸ் (Hultz) என் சே.,ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கூறுகின்றனர்.



தென்கிழக்காசியாவோடு பொதுவான தொடர்புகள்


சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய

தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு.

--மகாகவி பாரதியார்


காம்போஜம்(கம்போடியா),

ஸ்ரீவிஜயம்(சுமத்ரா),

சாவகம்(ஜாவா),

சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து),

கடாரம்(மலேசியா),

நக்காவரம்(அந்தமான்,நிக்கோபார் தீவுகள்),



தமிழர் வரலாறு-தேவநேயபாவாணர் பக் 130-131 பாண்டியன் வெற்றிச் செயல்


"வானியைந்த விருமுந்நீர்ப்

பேஎநிலைஇய விரும்பௌவத்துக்

கொடும்புணரி விலங்குபோழக்

கடுங்காலொடு கரைசேர

நெடுங்கொடிமிசை யிதையெடுத்

தின்னிசைய முரசமுழங்கப்

பொன்மலிந்த விழுப்பண்ட

நாடார நன்கிழிதரும்

ஆடியற் பெருநாவாய்

மழைமுற்றிய மலைபுரையத்

துறைமுற்றிய துளங்கிருக்கைத்

தெண்கடற் குண்டகழிச்

சீர்சான்ற வுயர்நெல்லின்

ஊர்கொண்ட வுயர்கொற்றவ"




(மதுரைக்காஞ்சி .75-88)


என்று, மாங்குடி மருதனார்தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை,அவன் முன்னோருள் ஒருவன் செய்த வெற்றிச் செயலை அவன்மேலேற்றிக் கூறி விளித்தார். அவ்வெற்றிச் செயல், கடல்கடந்து சென்று, சாவகம் என்னும் சாலித் தீவைக் கைப்பற்றியதாகும்.

சாலி என்பது செந்நெல் என்றுபொருள்படும் தென்சொல். பிற்காலத்திற்பாண்டியனொடு சென்ற பிராமணப் பூசகன் ஒருவன், சாலி என்பது ஒரு தவசப் பெயராயிருத்தலால், அதை வடமொழியில்

யவ என்று மொழி பெயர்த்தான். அதுபின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழிற் சாவகம் என்னும் வடிவு கொண்டது. சாலித்தீவின் தலைநகர்சாலியூர்.

சாலித்தீவைப் பாண்டியன் கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்றுகுடியேறினர். அதனால், அத் தீவின் பல பிரிவுப்பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார்,பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி,செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டுவிளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னுமிடத்துள்ள மலையர், தம் முன்னோர்இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர் என்றும்;


கெரினி (Gerini)என்னும் ஆசிரியர், அங்கு வழங்கும் மலையன் கோலன்(Maleon Kolan) என்னுங்குடிப்பெயரை, மலையர் சோழர் என்னும் தமிழரசர் குடிப்பெயர்களுடன் இணைத்துக் காட்டுகின்றனர் என்றும்;


திருவிசயம் (ஸ்ரீ விஜய) என்னும் அரையத்தலைவனுக்குச் சுறவக் கொடியும் திருமாறவிசயோத்துங்கன் (ஸ்ரீமாற விஜயோத்துங்கன்)என்னும் பெயர் உண்டென்றும்; ரா. ராகவையங்கார்தாம் எழுதியுள்ள தமிழ் வரலாறு என்னும் நூலிற்கூறியுள்ளார் (பக்.338-9).

மீனன் மீனவன்; அஃதாவது மீனக்கொடியுடைய பாண்டியன். மீனன் காப்பு என்பது பாண்டியன்காவலுள்ள இடம் என்று பொருள்படும்.

தமிழர் படிப்படியாகப் பக்கத்துத் தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத்தெரிகின்றது.


சாலிக்கு வடகிழக்கில் ஒரு சிறு தீவுமதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra)என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo)என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறை மலையா (Malaya) என்றும்பெயர் பெற்றுள்ளன.

பொருநை (தாம்பரபரணி) என்பதுபாண்டிநாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பதுபொதியமலைப் பெயர். சுமதுரா என்பதன் முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore) என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால் ஏற்பட்டனவாகும். புரம் என்னும் ஈறு தமிழ்.





மேலும் ஒரு சில பெயர் மூலச்சொல் விளக்கங்கள்.

மடல் கசங்கு= விரிந்திருக்கும் மட்டைகளைக் கொண்ட பனைமரம். மடக்கசங்கு என்பதே மடகசக்கர் (Madagascar) என்று திரிந்தது.

கசங்கு = பனைமரம்


மாளல் தீவு = பெருவெள்ளத்தால் மாண்டுப்போனவர் வாழ்ந்த இடம்.

மாளல் தீவு=மாலத் தீவு எனப்பட்டது


செங்களத் தீவு = அரிமாவின் பெயரால் சிங்களம் என்று சொல்லப்பட்டதாக கருதப்பட்டாலும், செங்களம்= சிவப்பு நிறம் என்ற பொருளில் சொல்லப்பட்டதே.


நக்கவாரி= தென்னை வகையைச் சார்ந்தது. நக்கவரம்=நிக்கோபார் என்றுத் திரிந்தது.


சுமத்திரா என்ற செம்மதுரை= தமிழ் வளர்த்த தென்மதுரை, தற்கால மதுரை, கங்கை கரையிலுள்ள வடமதுரை (மத்துரா) என்ற வரிசையில் தமிழன் கண்டநகரம் செம்மதுரை. செம்மதுரை=சுமத்திரா எனத்திரிந்தது.


ஜாவா= ய+அகம்= யாவகம். தென்திசை நாடு. யாவகம் பின்னர் சாவகம் என்றாகி , சாவா என்று நிலைத்தது


மலேசியா= மலேயா எனப்பட்ட மலைநாடு


கினியா= கனிகள் தீவு அல்லது பழங்கள் நிறைந்த தீவு


பல்லாங்குழி விளையாட்டு


Congkak or Congklak is a mancala game of Malay origin played in Malaysia, Singapore, Indonesia, Brunei and Southern Thailand.

Tamil people play the same game as Pallankuzhi

Close variants are Dakon or Dhakon (Java), Sungka (Philippines), Chongka' (Marianas), Jogklak (interior of Java); Dentuman Lamban (Lampung), Mokaotan, Maggaleceng, Aggalacang or Nogarata (Celebes), Chonka (Sri Lanka) and Naranj (Maldives).

Congkak, which is often considered a game for girls, has simple rules that allow the boards to have different numbers of holes. Congkak boards are often made of teak or mahogany wood are often elaborately carved into various shapes such as naga or birds.

The word congkak is believed to originate from old Malay "congak", meaning "mental calculation"[1] which is mainly practiced in this game.



1. ஜாவா தீவின் பல்லாங்குழி






2. மலேசியாவின் பல்லாங்குழி






3. ஆப்பிரிக்காவின் பல்லாங்குழிகள்








1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது


கடலோடித் தமிழர்கள்:


பாய்மரங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் கட்டிய கட்டுமரப்படகுகள் மற்றும் காற்றின் காலத்தையும் அதன் வேக திசையையும் அறிந்து கடலில் செலுத்திய தமிழர்களின் திறன் அமெரிக்காவிலும் பின்பற்றப்படுகிறது.



US Government recently adopted the ancient Indian catamaran-making technology to construct fast ships. The ships, built with technology adapted from ancient Tamil methods to make catamarans, can travel over 2,500 kms in less than 48 hours, twice the speed of the regular cargo ships. Refer to chapter on Seafaring in Ancient India.


மாயன் பிரமிடுகளோடு உள்ள தொடர்புகள்:


மெக்சிகோவின் பிரபலமான பிரமிடு கிக்கன் இட்சா. வானியல் நுணுக்கங்கள் கொண்டது.





ஒரு வருடத்தில் சம இரவு-பகல் வரும் இரண்டு நாட்களில் (Vernal, Spring Equinox) மட்டும் சூரியனின் ஒளி படும் பகுதியால் பாம்பின் உருவம் படிகளில் தெரியும் வகையில் கட்டியிருக்கிறார்கள். அந்த பாம்பு தெரியும் நாளின் படம். பாம்பின் தலை கீழே.






இதே போன்ற ஒரு பிரமிடு கம்போடியாவிலும் அதே வானியல் நுணுக்கங்களோடு.






மெக்சிகோவின் பிரபலமான பிரமிடு கிக்கன் இட்சா இருக்குமிடத்தின் பெயர் சிலம்பலம். சிலம்பலம் என்றால் வெற்று இடம் என்பதே பொருள். நம்மூரில் சிதம்பரம் கோயிலிலும் அதே சிறப்பு அதை சிதம்பர ரகசியம் என்பார்கள். அதாவது கோயில் கருவறை துணிகொண்டு மூடப்பட்டிருக்கும். உள்ளிருக்கும் இறைவன் உருவமாயும் இல்லை அருவமாயும் இல்லை அரு-உருவமாய் இருக்கிறார் என்பதே பொருள். அவரை நடராசர் என்கிறார்கள். உண்மையில் அது நாத ராசா. சப்தம் தான், அண்டவெளி தான் அது, உருவமற்ற இடைவெளி (Space).


Chichen Itza. This pyramid was built for astronomical purposes and during the vernal equinox (March 20) and the autumnal equinox (September 21) at about 3 P.M.. the sunlight bathes the western balustrade of the pyramid's main stairway. This causes seven isosceles triangles to form imitating the body of a serpent 37 yards long that creeps downwards until it joins the huge serpent's head carved in stone at the bottom of the stairway.


The Mayan pyramid is similar to the temple-pyramids of Cambodia.


The temple structure at the top is exactly 1/4th of the base according to Vastu Vedic principles of Mayan. Most interesting is the name of the structure - chilambalam, meaning a sacred space. The Mayans worshiped the very concept of space, specifically a space made according to the modular system. This same idea is found in Hinduism in the sacred room in the center of the Chidambaram Siva Temple in South India, where space or akasha is worshiped-there is no idol. Mayan chilambalam refers to a sacred space, as does Tamil Chidambaram.




இரண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள்:


says oxford studies. These theories became popular with the publication of Dr. Stephen Oppenheimer's book,  Eden in the East in 1999







and a few years later with the late Professor Arysio Santos' book, Atlantis, the Lost Continent Finally Found.






குனுங் பதன்க் (Gunung Padang)


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஜாகர்தா (Jakarta) விலிருந்து 120 கி.மீ. தொலைவில் சான்சூர் (ஊர் என்ற பெயர் வந்தாலே அது தமிழ்ப்பெயர்தான்) மற்றும் சுகபூமி (Sukabumi) மற்றும் சுகமுக்தி (Sukamukti) என்ற ஊர்களுக்கு அருகில் கரியமுக்தி (Karyamukti) எனும் ஊரில் பழங்கால வாழிடம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.


மேலே உள்ள எல்லா ஊர்களும் இந்தோனேசியாவிலுள்ள தமிழ்ப்பெயர்களே, எப்பெயரையும் நான் திருத்தி எழுதவில்லை.






1914 ல் ஒரு டச்சு பத்திரிக்கையான  "Rapporten van de Oudheidkundige Dienst" என்ற இதழில் கட்டுரையாக வந்தது.



இங்கிலாந்து  மரபனுவியலாளரும், ஆக்ஸ்போர்ட் டெம்பிள்டன் கல்லூரி உறுப்பினருமான

ஸ்டீபன் ஒபென்ஹைமர்  (Dr. Stephen Oppenheimer) 1999 ல் வெளியிட்ட Eden in the East என்ற நூலில் மனித குலத்தின் தொடக்கத்தை ஆய்ந்து இந்த கடலில் மூழ்கிய தென்கிழக்காசிய நாகரீகமே உலகின் முதல் நாகரீகம் முதல் நிமிர்ந்த மனித குலம் (Homo Erectus) உருவான இடம் என விளக்கங்களுடன் தெளிவுபடுத்துகிறார். காண்க:

பிரமிடு உருவத்தில் உள்ள கீழுள்ள மலை இயற்கையானது அல்ல. தமிழர்கள் கி.மு. 23,000 ஆண்டளவில் உருவாக்கியது. மலை முழுவதும் கல் பலகைகளால் ஆனது.






அமெரிக்க மியாமி நகர பீட்டா ஆய்வுக்குழு (Beta Analytic) நடத்திய கார்பன் முறை கால ஆய்வில் இவ்விடம் பெருவின் மச்சு பிச்சு (Machu Picchu) வை ஒத்திருப்பதாகவும் 23,000 ஆண்டுகள் பழமையானது என்றும், மனித நாகரீகத்தின் தொட்டில் (Cradle of Civilizations) என்றும் இதுவே உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதன்  கட்டிய கட்டடங்களில் மிகப்பழமையானது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். காண்க:

இதன் மலை உச்சிக்குச் சென்றால்:










இந்தோனேசிய அறிவியல் நிறுவனத்தில் அமைந்துள்ள மூத்த நிலவியல் ஆய்வாளர் முனைவர் டான்னி நாட்டவிட்ஜாஜை  (Danny Natawidjaja PhD., senior geologist of the Research Center for Geo technology at the Indonesian Institute of Sciences) சந்தித்து, அவரின் ஆய்வுகளை பரிசோதித்துவிட்டு, உலகளவில் கடலாய்வு செய்து வரும் கிரகாம் ஹன்கொக் (Graham Hancock) தெரிவிக்கிறார்:


உலகின் மிகத் தொன்மையான பிரமிடு உள்ள இந்த நாகரீகம் மிகவும் வளர்ச்சி கண்ட நாகரீகம் தான்; மேலும் பிளேட்டோ கூறிய அட்லாண்டிஸ் நாகரீகம் இதுதான் என்று நம்பலாம் என்றும் தெரிவித்தார். காண்க:








குனுங் பதான்க் என்னும் இடம் 37,03,700 (37 இலட்சம்) கற்பலகைகள் கொண்டது. ஒவ்வொரு கற்பலகையும் 1 அ 2 மீட்டர் நீளமும் 90 முதல் 600 கிலோ எடை கொண்டது. இந்தக்கற்கள் சூரியனின் கடக ரேகை மகர ரேகைக்கால நிலைகளையும் விளக்கும் வகையில் அமைந்த மாயன் பிரமிடுகளைப் போன்றது என விண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஜாவா தீவின் பிரமிடு அமைந்த பகுதி, உள்ளூர் சுண்டானிய மக்களால் பரயாங்க் படாங் (Parahyang Padang) என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் "பண்டையவர்களின் பகுதி" என்பதே. சுண்டபுரா (Sundapura) என்பதன் பொருள் சூரியபுரம் என்பதே.







சோழர்கள் தங்கள் கொடியில் சூரியனைக்கொண்டதைப்போல, தமிழர் விழா பொங்கல் ஒரு சூரிய விழா என்பதைப்போல நமது முன்னோர்கள் வின்னியலின் முதன்மையான, உயிர் உருவாக்கத்தின் அடிப்படையான, தமிழீழ எல்லாளனைப்போல சூரியப்புதல்வர்களே.


குனுங் பதான்க் ஒளிப்படம் காண யூ டியூப்



இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் நமது வரலாறுக்கு இருக்கின்றது.

தொடர்ந்து தேடுவோம் வேறு தலைப்புகளில்.

உதவிய அனைத்து மூலங்களுக்கும் நன்றி.

நாம் நம் வரலாறைப் பாதுகாப்போம். வீண் பெருமைக்காக அல்ல. அந்நிய மொழி அடிமைத்தனத்தை விட்டொழிக்கவும், இழந்திருக்கும் இழந்துகொண்டிருக்கும் தமிழர் உரிமைகளை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் மீண்டுமாய் தமிழ் வழி தமிழர் வாழ்வெழுச்சியை உருவாக்கி

வளமான, தன்மானமிக்க, சமத்துவ சமுதாயம் படைக்கவுமே.


தொடர்ந்து தேடுவோம்..


குமரிக்கண்டம்: உண்மையா? பாகம் 1

குமரிக்கண்டம்: உண்மையா? பாகம் 1


நாம் இதுவரை அங்கோர்வாட் உள்ளடங்கிய தென்கிழக்காசிய குமர் நாகரீகம், ஈரான், காஷ்மீர் உள்ளடங்கிய சுமேரிய நாகரீகம், மெசொபடோமிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், மாயன் மற்றும் இன்கா நாகரீகங்களைப்பற்றி குறிப்பிடத்தக்க வகையில் தமிழரோடு, தமிழோடு தொடர்புள்ளதை விவாதித்துள்ளோம்.


இனி  இவை எல்லாவற்றுக்கும் மூலமும் தொடக்கமுமாய் இருந்த தமிழரின் பூர்வீகம் பற்றித் தேடுவோம்.


எந்தச்சூழ்நிலையிலும் இந்தக்கட்டுரைகள், தமிழரின் பழம்பெருமை பேசி நிகழ் காலத்தை மறக்கச்செய்யவோ,

வீண் பெருமை அரிப்புக்குத் தீனி போடுவதோ அல்ல.


உலகின் எல்லா இனங்களும் தங்களது வரலாற்றை மறக்காதவை, அவற்றை பாதுகாப்பவை,  தமிழினம் தவிர.

தமிழினம் மட்டுமே தன் அழிவில் பெருமை கொள்கிறது. எனக்குத் டமில் வராது என தமிங்கிலம் பேசுவதை ஒரு இயல்பான பரிணாமமாக கருதுவது ஒரு குழு.  தாய் மொழி தெரியாததை பெருமையோடு அறிக்கையிடும் கேவலம் எனக்குத்தெரிந்து தமிழர்களிடம்(?)தான் இருக்கு. மொழி என்பது தொடர்புகொள்ள ஒரு வழி தானே எதுவாயிருந்தால் என்ன என இன்னொரு குழு. தமிழில் பேசினாலே தீவிரவாதியாய் பார்ப்பது இன்னொரு குழு, தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழருக்கெதிராய் பேசும் தினமலர், சோ போன்ற குழுக்கள் இன்னொரு பக்கம்.


தமிழரின் வரலாற்றை மறைத்து திரித்து அழித்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வந்திருக்கும் ஆரியக்கூட்டம், இன்றும் கூட


பூம்புகார் கடலாய்வு நடத்தி பாதியில் மூடியது,


ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை முடிந்து பல வருடங்கள் ஆன பின்னும் இன்னும் வெளியிடாமல் மறைப்பது,


சிந்துவெளி, துவாரகை ஆய்வு முடிவுகள் தமிழருடையதா, ஆரியருடயதா என்ற கேள்விக்கு மழுப்பலாக அது இந்தியருடையது என்ற முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. சொல்வது,


என தன் முகத்தை தெளிவாகவே காட்டுகிறது.


இதற்கு சரியான பதிலை, வரலாற்றுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவேண்டிய தமிழன் எப்படி இருக்கிறான்?


டாஸ்மாக் தமிழன், ரசிகர் மன்றத் தமிழன், கடலைத்தமிழன், எதையும் கலாய்க்கும் தமிழன், வெட்டிபேச்சு பேசியே காலம்போக்கும் தமிழன், தமிழ், தமிழனுக்கெதிராகவே பேசித்திரியும் எட்டப்பத்தமிழன், சாதியத்தமிழன், தமிங்கிலத்தமிழன், 9-5 அலுவல் தமிழன், இந்தியத்தமிழன், இவர்களை மறைமுக ஆரியக்கூட்டம் எனலாம்.

அவர்கள் அங்கிருந்து செய்ய வேண்டிய வேலையை, உள்ளிருந்தே செய்பவர்கள் (பல நேரங்களில் அறியாமலேயே).


பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழர்கள் கட்டிக்காத்த பாரம்பரியம், ஆயிரக்கணக்கில் சித்தர்களும், அறிஞர்களும், கணியர்களும் உருவாக்கிய, வானியல், இலக்கியம், மருத்துவம், கட்டடக்கலை, விவசாயம், மற்றும் தமிழ்த்தாத்தா வ.வே.சு. சேகரித்த ஓலைச்சுவடிகள், பாவாணர் கண்டுபிடித்த வேர்ச்சொல் விளக்கவுரைகள் இன்னும் பிற வீனாகப் போய்விடக்கூடாதல்லவா.


தமிழர் வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாய் அல்ல, அறிவியல் பூர்வமாய் அணுகுவோம். உண்மை எது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்போம். தெரிந்த உண்மையை பகிர்வோம், அறிவிப்போம், அதன் மூலம் தமிழரின் சுயமரியாதையை, தன்னம்பிக்கையை மீட்போம். தமிழால் பன்னெடுங்காலமாய் முடிந்தது, இன்றும் முடியும், தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழி வேலைவாய்ப்பு, தமிழ்வழி அரசாங்கம், தமிழ்வழி தமிழர் மேம்பாடு என ஆங்காங்கே சிறு சிறு முயற்சிகளாய்.


அந்த வகையில் மிகச்சிறிய ஓர் அறிவியல்பூர்வ ஆய்வுத் தேடல் முயற்சிதான் இது.


குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா?


ஒரு சிறிய சூழல் அறிமுகம்:


நமது பூமியின் மேல்புறம் 72 % கடல்நீரால் சூழப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இந்தப் பெருங்கடல்களில் 5 % மட்டுமே அறிந்து கொள்ள  முடிந்துள்ளது. மீதி 95 % இந்த 21 ம் நூற்றாண்டிலும் அறியப்பட இயலாத புதிர்தான். காண்க:


பூமியின் நிலமட்டத்திலிருந்து பூமியின் மையத்திற்கு உள்ள தூரம் 6371 கி.மீ.

பூமியின் ஒரு பக்கம் நுழைந்து மறுபக்கம் வரவேண்டுமென்றால் 12,742 கி.மீ. (6371 x 2).

அதாவது அதுதான் பூமியின் குறுக்களவு அல்லது விட்டம்.




இந்த 6371 கி.மீ. வரை மையம் கொண்டுள்ள பூமியின் நில உட்பகுதியில் கடலின் அதிகபட்ச ஆழம் வெறும் 11 கி.மீ. மட்டுமே. கால்பந்தின்மேல் ஒரு குன்டூசியை மெதுவாகப் போட்டால் கால் பந்தில் என்ன பள்ளம் உண்டாகுமோ அவ்வளவுதான் கடல் ஆழம். உலகில் உள்ள கடல்களில் மிக மிக ஆழமான அந்த இடத்தின் பெயர் மரியானா படுகுழி (Mariana Trench) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கருகில் பசிபிக் பெருங்கடலில் உள்ளது.


இந்த மரியானா படுகுழிக்குள் எவரெஸ்ட் சிகரத்தை (9கி.மீ. உயரம்) வைத்தால் சிகரத்திற்குமேல் 2 கி.மீ.  உயரத்திற்கு கடல் நீர் இருக்கும்.





1) கடல் அகழ்வாய்வில் குமரி நாடு:


இப்ப இந்தியாவிற்கு வருவோம். தெற்கே இந்தியப்பெருங்கடலில் (அதிகபட்ச ஆழம் (Sunda Trench) சுண்டா படுகுழி 8 கி. மீ. அல்லது 7,725 மீட்டர், சராசரி ஆழம் 4 கி. மீ.) உள்ள நீரையெல்லாம் அகற்றினால், (உடனே மத்த கடலேருந்து தண்ணீ வந்துரும்னு சொல்லாதீங்க) தரை எப்படி இருக்கும். குமரிக்கண்டம்னு சொல்லப்படும் பகுதி எவ்வளவு பெருசா இருக்கும். அதையும்தான் பார்க்கலாமே. கடல் நீர் அகற்றப்பட்ட இந்தியப்பெருங்கடல் தரை.




இந்தியப்பெருங்கடலின் சராசரி ஆழம் 4 கி. மீ. ஆக இருந்தாலும் பல இடங்களில் 2 கி.மீ. க்கும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரியை ஒட்டி 300 கி. மீ. தூரம் வரை கடலின் ஆழம் அரை கி. மீ. தான்.




இந்தப்பகுதியில் குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் பகுதியில் எத்தனை தமிழ் நாடுகள் இருந்தன என்றால் மொத்தம் 49 நாடுகள்:


1. ஏழ்தெங்க நாடு,

2. ஏழ்மதுரை நாடு,

3. ஏழ்குணகாரை நாடு,

4. ஏழ்பின்பாலை நாடு,

5. ஏழ்குன்றநாடு,

6. ஏழ் முன்பாலை நாடு,

7. ஏழ்குறும்பனை நாடு

இவற்றின் அறிவியல் தன்மை பற்றி விளக்குகிறார் திரு. தென்காசி சுப்பிரமணியன்

இவை ஒன்றும் அறிவியல் தன்மை அற்றது அல்ல.


ஏழ்குணகாரை நாடு - கரை என்பதால் கீழக்குக்கடல் பகுதியில் இவை இருந்திருக்கும்.


ஏழ் குன்ற நாடு - குன்றம் என்பது மலையை சுற்றியுள்ள நாடுகள். குமரியில் மேரு என்றதொரு மலை இருந்ததை ஒப்பிட்டுப் பார்க்க.

இந்தியப்பெருங்கடலுக்குள் இரு பெரும் மலைத்தொடர்கள் இருப்பதைப்படத்தில் காணலாம். மேலே உள்ள படத்திலும் இது தெரியும்.



இந்த மலைத்தொடரில் எப்படி நாடுகள் இருந்திருக்கும் என்று நம்பாதவர்களுக்கு,


படத்தில் உள்ள மேற்குப்புற மலைத்தொடரில் தான், நம்ம ஊரு லட்ச தீவுகள், மினிகாய் தீவுகள், மாலைத்தீவு என்று தமிழ்ப்பெயரிலேயே உள்ள தீவுக்கூட்டம், அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படை கொண்ட டியூகோ கார்சிகா தீவு என இத்தனை நாடுகளும் உண்டு.


தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 66 மீட்டர். ஜப்பானின் சுனாமி உயரம் அதிகபட்சம் 3 மீட்டர். கி. மு. 10,000 ல் ஏற்பட்ட கடல் கோளின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்தது 120 மீட்டர். காண்க நாசா அறிக்கை: 1 அல்லது 2 முறை அல்ல, 3 முறை (500 மீட்டர்). கடல் மட்டம் 400 அடி (120 மீட்டர்) உயர்ந்த பின்னும் மேற்சொன்ன தீவு நாடுகள் இங்கு இருக்கிறது என்றால், 120 மீட்டர் குறைந்தால் எவ்வளவு பெரிய நாடுகள் கிடைக்கும்.

மாலைத்தீவுகளை செய்மதியிலிருந்து (satellite) எடுத்த புகைப்படத்தில் காணலாம்.




இந்த மாலைத்தீவின் தலைநகரம் மாலை (Male) ஒரே ஒரு சின்ன தீவு. சுனாமியில் எப்படி தப்பிச்சதுன்னு தெரியலையே. உசிலம்பட்டியாவது கொஞ்சம் பெரிசா இருக்கும் போல.





ஏழ் மதுர நாடுகள் - தென்மதுரை குமரியின் கடைத் தலைநகரம் என்பதால் இந்நகர் சுற்றி அமைந்த நாடுகள் இவை.


ஏழ்தெங்க நாடு - தென்னை மரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.


ஏழ் குறும்பனை நாடு - மேற்சொன்ன தென்னை போலவே பனையும் தென்னகத்திலே அதிகம். ஏழ் பனை நாடு யாழ்ப்பானத்தைக் குறிக்கும் என்கிறார் இராம கி.

பனை மரம் தெற்கத்திய நாடுகளின் மரம். தெற்கே செல்லச்செல்ல எண்ணிக்கை அதிகரிப்பதாக விக்கிபீடியா சொல்கிறது.

"கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே."


குணகரை தெங்க பனை இவை எல்லாம் திசை குறித்திருக்க, பாலை நாடுகள் மட்டும் முன் பின் எனக்கூறுவானேன். அவற்றையும் குணப்பாலை குடப்பாலை தென்பாலை வடபாலை அல்லது நடுப்பாலை என கூறாமல் விட்டதன் அர்த்தம் என்ன?


இங்கு தான் நாம் இக்குமரி நில நடுக்கோடு தாண்டி பரந்திருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"


ஆக இங்கு முன் பின் பாலை நாடுகள் எனக்கூறியது


சூரியனின் மகர ரேகை பயண காலத்தில் ஒரு ஏழு  நாடுகள் வறட்சி கண்டு அவை முன்பாலை எனவும்,


சூரியனின் கடக ரேகை பயண காலத்தில் மற்றொரு ஏழு நாடுகள் வறட்சி கண்டு அவை பின்பாலை எனவும் கூறப்பட்டிருக்கலாம், கீழே உள்ள உலக உருண்டையில் காணப்படுவது போல.



குமரி முனைக்குத் தெற்கே 5,300 கி.மீ. தொலைவில் பிரான்ஸ் நாடு எடுத்துக்கொண்ட ஆம்ஸ்டர்டம் தீவில் (மேலே உலக உருண்டையில் குறியீடு காட்டும் தீவு) நடத்தப்படும் ஆராய்ச்சி, தொல் தமிழர் தொடர்பான மேலும் பல தகவல்கள் தரும் என்கிறார் இது தொடர்பான கடலாய்வு செய்துவரும் திரு. பாலு அவர்கள். காண்க: தீவு பற்றிய தகவலுக்கு:


2) சங்கத் தமிழ் இலக்கியக் குறிப்புகளில் குமரி நாடு:



8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள்எழுதிய சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி

வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

பாண்டியனை வாழ்த்தும் பொழுது

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த

முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"

"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர். காண்க :


இந்தக் குமரிக்கண்டத்தில்


பஃறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கோடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன!

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.


கோடு என்றால் மலை என்று பொருள். குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற மலை இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. வட தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்கோடு என்பதும் மலை உள்ள ஒரு ஊர்.







உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில்


மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.


1. தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், 39 மன்னர்கள் வழிநடத்த இணைந்து நடத்தப்பட்டுள்ளது.

இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.


2. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.


3. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. காண்க:


3) ஆடு மேய்ச்சான் பாறை:


குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை 'ஆடு மேய்ச்சான் பாறை' என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம் தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது. ஆடு மேய்ச்சான் பாறை





படத்தை உருப்பெருக்கிக்காண:





இன்னும் அருகில் சென்று பார்த்தால்: (படத்தில் இருப்பவர் கடலியல் ஆய்வாளர் திரு. பாலு )






4) தமிழகத்தின் கடலில் மூழ்கிய நிலப்பகுதி:


கன்னியாகுமரிக்குத் தெற்கே 300 கி.மீ தொலைவு வரை கடலில் மூழ்கிக் கிடக்கும் தமிழர் நிலம்.

எவரும் கூகுள் நிலப்படத்தில் (Google Earth) பார்க்கலாம்.





5) பூம்புகார் சமீபத்திய ஆய்வில்  கிரஹாம்: காண்க:




1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்து தமிழர்களின் சிந்தனைக்கு:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற காரணம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. உண்மையில்  துவாரகை என்பதும் என்பதும் தமிழர் வாழ்ந்த பகுதி தான். அதுபற்றி பின்னர் பகிர்வோம்.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.




1. பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2001-02ல் ஆய்வு மேற்கொண்டார்.


2. அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.


3. பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

காண்க: மலையமான்: நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010.


4. மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. அந்தக் கடலில் மூழ்கியுள்ள மகாபலிபுரம் கோயில் உச்சிப்பகுதி:




பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது நிறைவேறினால் தொல் தமிழரின் தொன்மை தெளிவாகும்.


5. "Underworld: The mysterious origins of civilization" என்ற நூலில் பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் (Graham Hancock) தன் பட்டறிவை பகிர்ந்துள்ளார். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும் என்றார். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும், அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.


6. இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார்.


7. மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.  “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது.


8. பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 11, 18, 25 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.


9. பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை  வெளியிட்டது.


10. அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.


“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர்.





கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.


அப்படியென்றால், 11,500 ஆண்டுகளுக்கு  முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது.


12. 1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.


15000-14000 ஆண்டு முன்பும்,

12000-11000 ஆண்டு முன்பும்,

8000-7000 ஆண்டு முன்பும்

முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது.



13. துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்?



6) தமிழகத்தில் உள்ள மிக முக்கிய தொல்லிடங்கள்


தமிழகத்தில் மட்டும் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட தொல் இடங்கள் அகழ்வாய்வில் இருக்கிறது. காண்க:

அணைத்து இடங்களையும் விளக்கினால் ஆயுள் முடிந்துவிடும்.

மிக முக்கிய 3 இடங்கள் மட்டும்:


1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்

2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு

3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல்




1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்





உண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் காலம் கி. மு. 10,000. காண்க:  பல தொல்லியல் சான்றுகளை ஐரோப்பியர் கொண்டு சென்றுவிட்டனர்.  முதன்  முதலில் இங்கு ஆய்வு நடத்தியவர், ஜெர்மானிய Zuckerman என்பவர். 1876 ல் கண்டுபிடித்த அவர் பலவற்றை தனது ஜெர்மன் நாட்டிற்கு எடுத்து சென்று பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். Louis Lapique என்ற பிரெஞ்சு நாட்டவரும் 1904 ல் ஆய்வு செய்ய வந்து நமது தமிழ் மக்கள் 10,000 வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்களை பாரீசுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இழப்பதே தமிழன் வரலாறாகிவிட்டது. இன்னும் இருப்பதையாவது பாதுகாப்போம்.



ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 8000-ஆம் ஆண்டு காலத்தில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள், தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் அப்போதைய கல்வி நிலையைக்  காட்டுகிறது.


2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு


முதலாம் நூற்றாண்டு வரை ரோமானியர்களோடு கடல் வணிகம் செய்த மிகப்பெரிய துறைமுக நகரம் இன்று சிதிலமடைந்து கிடக்கிறது. இதையும் ஐரோப்பியர்தான் வந்து கண்டுபிடித்து சொல்லவேண்டி இருந்திருக்கிறது.


Excavations at Arikamedu, the once flourishing port town near Pondicherry (now renamed as Puducherry), for the first time provided datable evidences to confirm trade links with Rome that arched back to the first century CE and helped construct a proper chronology of south Indian history.The credit for establishing Arikamedu's significance is often attributed to British archaeologist Mortimer Wheeler and his 1945 round of excavations.









3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல்











இவைகளோடு ஒரு பின்னிணைப்பு 2000 ஆண்டுக்கு முந்தைய திருபெரும்புதூர் இரும்பு தொழிற்சாலை




7) தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில்


18 மீட்டர் கடல் நீர் குறைந்தால் போதும் கிடைக்கும் நிலப்பரப்பைப் பாருங்கள். வாடகை சைக்கிளில் இலங்கை சென்று விடலாம். 20 கி. மீ. தூரம் தானே.





மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 21 தீவுகள் இருக்கின்றன. இவை பழைய தமிழகம் கடலில்   மூழ்கியது போக மீதமுள்ள பகுதிகள்.











மேலும் தனுஷ்கோடியிலிருந்து ஈழ தலைமன்னாருக்கு தரைவழித்தொடர்பே இருப்பதைக்காணலாம். இதை ராமர் பாலம், ஆடம்ஸ் பிரிட்ஜ் என எப்படி சொன்னாலும் அது இணைந்திருந்த தமிழ்-ஈழ நாட்டின் நிகழ்கால சாட்சியம்.

கீழ்க்காணும் அந்த மண் திட்டுப்பாலத்தின் நீளம் 30 கி. மீட்டர். காண்க:

சேது கால்வாய் என்று வெட்ட நினைப்பது இந்த மண் திட்டைத்தான். கப்பல் செல்ல வழி ஏற்படுத்த நினைக்கிறார்கள்.


1. உண்மையில் கால்வாய் வெட்டப்பட்டாலும் அவ்வழியே பெரிய கப்பல் செல்ல வழியில்லை.

2. வெட்ட வெட்ட கடல் திரும்பத்திரும்ப மண்ணை கொண்டுவரும். மண் அகற்றுபவர்களுக்கு நல்ல வருமானம். திரும்பத் திரும்ப சாலை போடும் வகையில் அரைகொறை சாலை போடுவாங்கள்ளே அது மாதிரிதான்.

3. கப்பல் நிறுவனம் வைத்திருப்பவர் தி.மு.க. T.N. பாலு. காசு கொட்டும் தொழிலைக் கைப்பற்ற நினைக்கிறார்கள், அவ்வளவு தான்.





8) தனுஷ்கோடி


1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுஷ்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது. இந்தியப்பெருங்கடலில் 12,000 வருடங்களுக்கு முன் நிலப்பரப்பு மூழ்கியதை நம்பாதவர்கள் 50 வருடங்களுக்கு முன் மூழ்கிய தனுஷ்கோடியையாவது நம்புங்க.


தனுஷ்கோடியின் இன்றைய நிலை.






இதே தனுஷ்கோடி 1964 க்கு முன்னாடி எப்படி இருந்தது தெரியுமா ? தனுஷ்கோடி ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்ற ஒரு துறைமுக நகரம். தென்னந்தோப்புகளோடு இருந்த ஒரு ஊர். படத்தைப் பார்த்தாவது நம்புங்க.

காணும் தொடர்வண்டியின் பெயர் போட் மெயில் (Boat Mail).








அந்த போட் மெயில் 1964 கடும்புயலில் பயணிகளோடு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது. எஞ்சியது இதுதான்.








9)  கடலாய்வுகள்


இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை

1. 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது.

2. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கடலாய்வு செய்தது.

3. இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது.


அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன  மத்திய மாநில அரசுகளால்.


சிறிதளவே செய்யப்பட்ட கடலாய்வு பூம்பூகார் நகரத்தின் பழைமையை கி. மு. 9,500 என்று சொல்லும் போது, குமரிக் கண்டத்தில் கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும்.


இத்தோடு முடிவதில்லை நமது தேடல். ஏன் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதி மட்டும் தான் கடலில் மூழ்கியதா? இல்லையே. அந்த மூழ்கிய உலகின் பிற நாட்டு பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகள் ஆச்சரியமானவை.


அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்.