குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

300 ஆண்டுகள் பிழையான தகவல்: மனித விந்தணுக்கள் பாம்பை போல் நீந்துவதில்லை

02.08.2020...மனித விந்து கருமுட்டையை நோக்கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும்மேலா ன கருத்து தவறானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித விந்தணுக்கள் (Human sperm) கருமுட்டையை நோக் கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் நம்பிய கருத்து தவறானது எனவும், அவை நீர்நாயை போல் சுழன்று சுழன்று கருமுட்டையை அடைகிறது எனவும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த புதிய வெளிப்பாடு பிரிசுடல் பல்கலைக்கழகம் மற்றும் மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்து வந்தது. இந்த விஞ்ஞானிகள் முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்தி விந்தணு வால் இயக்கத்தை புனரமைத்தனர்.

மனிதனின் விந்தணு பற்றிய முதல் கண்டுபிடிப்பு 1678 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதை கண்டறிந்தவர்கள் அந்தோணி வான் லியூவான்கிக் என்ற டச்சுக்காரர். இவர், ஆற்றல் மிகுந்த மைக்ராசுகோப் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதில், தற்செயலாக பாக்டீரியாவையும் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர், மைக்ராசுகோப்பை வைத்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் ஒருநாள், விந்துவையைம் ஆய்வு செய்தார். அப்போது, மிகவும் நுட்பமான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டறிந்தார். அந்த விந்தணுக்கள் தலை, வாலுடன் இருப்பதாக கூறினார்.

ஆணின் விந்தணுக்கள் ஒரு பாம்பினைப் போல் வளைந்து நெளிந்து நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டையுடன்  இணைவதாகவும் அவர் கூறினார். UK ராயல் சொசைட்டியில் 1678 ஆம் ஆண்டு கூறப்பட்ட கீக்கின் கருத்து இதுவரை மறுக்கப்படவில்லை. அவரைத் தொடர்ந்து வந்த அறிவியலாளர்கள் மைக்ராசுகோப் வழியாக விந்தணுவை பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தபோதும் அதில் எந்த மாறுபட்ட கருத்தையும் தெரிவிக்கவில்லை.