குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

வடகிழக்கு தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது? அவர்களுக்கு நடந்துள்ள தேர்தல்பரப்புரைகள்? மக்களின்

மனநிலைகள் என்ன?

வடகிழக்கு தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது?

29.07.2020.....இலங்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 05.08.2020 அன்று அறிவன்(புதன்) கிழமை நடைபெறவிருக்கின்றது. அதில் எப்படி வாக்களிக்வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத குமரிநாடு.கொம் இணையம் முனைகின்றது.

 

சிங்களமொழி அகரவரிசைப்படி கட்சிகளின் பட்டியல்கள் சின்னங்களுடன் மேலிருந்து கீழாக இடப்பட்டிருக்கும்,அதேதாளில் பத்து சதுரங்கள் அடங்கிய நீள்சதுரப்பெட்டியும் அதன் கீழே இருக்கும். இதில் வாக்காளர்கள் மிகக்கவனமாக தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடி இடவேண்டும்.

அதன் மூலம் தாம் விரும்பிய கட்சியை தெரிவுசெய்துவிட்டார். அடுத்து தாம் விரும்பும் வேட்பாளரை தெரிவு செய்ய விருப்பு வாக்களிக்க வேண்டும்.

கீழே உள்ள பெட்டியில் நீங்கள் விரும்பும் வேட்பாளர் 3 ஆம் இலக்கம் என்றால் மூன்றாவது பெட்டிக்குள் கவனமாக புள்ளடி வெளியில் செல்லாதபடி கவனமாக இடவேண்டும்.

உங்களுக்கு குழப்பமிருந்தால் சின்னத்திற்கு புள்ளடி இட்டு விட்டு விட்டு விடுங்கள்.

விரும்பின் இன்னும் இரண்டு இலக்கங்களுக்கும் இடலாம் எடுத்துக்காட்டாக 6 ஆம் இலக்கதத்திற்கும், 8 ஆம் இலக்கத் திற்குமிடலாம். அல்லது ஒருவருக்கு விருப்பு வாக்கிட்டு விட்டு நிறைவு செய்யலாம்.

எடுத்துக்காட்டாக நீங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் (மீனுக்கும்), விக்கினேசுவரன்  ஐயாவிற்கும் விருப்பு வாக்களிக்க விரும்பும் நபராயின் முதலில் கட்சிகளின் பட்டியலில் மீன் சின்னத்திற்கு புள்ளடி இட்டு விட்டு. கீழே இருக்கும் நீள்சதுரப்பெட்டியில் 6 ஆம் (ஆறாவது) பெட்டிக்குள்ளும் புள்ளடி இடவேண்டும்.

கட்சிகள் இனியும் பரப்பரை செய்கின்றோம் என்று வசைபாடி நேரத்தை வீணாக்காமல் மக்கள் எப்படி? வாக்களிக்கவேண்டும்  என்ற விள க்கத்தைகொடுத்து கற்ற சமூகத்திற்குரிய வாக்களிப்பு இடமாக யாழ் மாவட்டம் இருக்கவேண்டும். சனாதிபதித்தேர்தல் பிரதானமான இரண்டு சின்னங்களுக்கு வாக்களித்த போதே 25.000 வாக்குகளை கழிவுவாக்காக இட்டவர்கள் யாழ் மாவட்ட மக்கள்.

பல கட்சிகளின் சின்னங்கள் இந்தக் குழப்பமான சூழலில்  எப்படி சரியாக வாக்களிப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள் ஒரு வேட்பாளர் தெரிவாகக்கூடிய வாக்குகள் கழிவு வாக்குகளாக  மாறும் நிலைதான் உள்ளது!

இதனால் யாழ் மாவட்ட ஊடகங்கள் பொதுவாகத்தமிழ் ஊடகங்கள் உடனடியாக வாக்களிக்கும் முறையை நன்கு விளக்கவேண்டும்.

இதற்கான கணினி  தொழில் நுட்பக்காட்சிகள்,காணொளிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.

அதிகமான மக்களை  ஆர்வமுடன் வாக்களிக்கத்துாண்டவேண்டும் தேர்தலன்று  மக்கள் வீட்டிற்குள்  இருக்வை த்து படங்கள் , நாடகங்கள்  பட்டிமன்றங்கள்  மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தொலைக் காட்சிகளில்  காண்பிக்காமல் மக்களை வாக்களிகச்செய்வது நல்ல சமூகப்பணியாகும்.

வாக்குகளை பிரிப்பதற்காக  அதிக வேட்பார்களை  உருவாக்கியது போல்  அதிகம் மக்கள் வாக்ளிக்காமல் இருப் பதை சில சனநாயக விரோதசக்கிகள் விரம்பியுள்ளன.

அதன் மூலம் இலகவாக தமது வெற்றிகளை  இலக்குகளை அடையலாம் அதனால்  தமிழ் மக்களை அரசியல் ஆர்வத்திலிருந்து அகற்றி தாம் எண்ணுவதைச் சாதிக்லாம் என எண்ணி உள்ளார்கள்.

யாழ்பாணத்தின் தற்போதைய  பண்பாட்டு சீர்கேடுகளை இல்லாதொழிகவெண்டும் என்றால்  உங்கள் பிள்ளைகள் நல்ல மனிதர்களாக வளர்ந்து நல்ல குடும்பவாழ்கையில் ஈடுபடவேண்டும் என்றால் தமது கட்சி யரசியலுக் காக எந்த கேவலமான வேலைகளையும் செய்து குட்டிச்சிவராக்கி  யாழப்பாணத்தை குட்டிக் கொழும்பு அல்லது வெளிநாட்டு நிலைகளுக்கு சமனான நிலைகளை உருவாக்கியவர்களை அகற்றுங்கள்.

உங்கள் இளையவர்களுக்கு வேலை தருகின்றோம் அது தருகின்றோம் இது தருகின்றோம் என்று அவர்களை போதைக்கும், மதுவுக்கும் இன்னும் கூடாத குழுச்சேட்டைகளுக்கும் இடடுச் சென்றவர்களை முதியவர்களாகிய நீங்கள் தான் புரிந்து கொண்டு அந்த தீய சக்கிகளை அகற்றவேண்டும்.

உலகிலே சிறிய நிலப்பரப்பில் கூடிய கல்விநிலையங்களைக்கொண்ட யாழ்ப்பாண மக்கள் மிக ஆர்வத்து டன் வாக்களித்தார்கள் என்ற நற்பெயரை உருவாக்குங்கள்.

நல்ல சனநாயக முறையை இளைய தலைமுறையினருக்கும் முன்னுதாரணமாகக்காட்டுங்கள்.

நோய் இடர்காலம் என்பதால்  மிகவேகமாக வாக்களித்து நேரத்தை மீதப்படுத்தி அதிகவாக்களார்களுக்கு இடமளிக்வேண்டிய  தேவையில் இருக்கின்றோம்.

இதனை எமது தமிழ் ஊடகங்கள் தேர்தல்கால அறிவுரைகளாக  வழங்கவேண்டும்.

அவர்களுக்கு நடந்துள்ள தேர்தல் பரப்புரைகள் ?

இலங்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 05.08.2020 அன்று அறிவன்(புதன்) கிழமை நடைபெறவிருக்கின்றது.

இதற்கான  பரப்புரைகளை வடக்கு கிழக்கில் எல்லாக்கட்சிகளும். முழு அளவில் செய்துள்ளன.

தமிழ்க்கட்சிகள் என்று சொல்லக்கூடிய தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்க்காங்கிரசு, அரசசார்புக் கட்சிகள் சிங்களக் கட்சிகள் என்பனவும் தமது முழு அளவிலான பரப்புரைகளை செய்துள்ளன. தாம்தாம் திறமையான பரப்புரைகளை செய்திருப்பதாக  நம்புகின்றார்கள்.

எதிரணி மீதான  குற்றச்சாட்டுகளே அதிகம்! அரிசிமாவில் வேறுவிதமாகச்செய்யப்பட்ட பலகாரங்கள்தான் தமிழக் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள்.

பலகாரம் எனப்பெயர் ஆனால் வேறு அரிசிமாவில் செய்யப்பட்டது ஒரேமாதிரியானது என்பதே உண்மை.

அரசசார்புக்கட்சிகள் வெளிப்படையாகவே  கூறிக்கொண்டன  தாம் உரிமைகளைவிட அபிவிருத்தி , சலுகை களை  உங்களுக்குப்பெற்றுத்தருகின்றோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கின்றார்கள்.

வீணைக்கட்சியும் ,மொட்டுக்கட்சியும் சலுகைகளும், உரிமையும் அபிவிருத்தியும்   என்ற பொருளில் நின்றன.

தமிழ்க்கட்சிகளின் கொள்கை!  தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெறுதலுடன்,இறுதித்தீர்வு என்ற பரப்புரைகளுடன் தமது சரிபிழைகளை வேலிச்சண்டைமாதிரி ஆக்கினார்களே தவிரவும் நலமான பரப்பரைகள் நடக்கவில்லை.

உரிமைகளை எப்படிபெறலாம் என எண்ணுகின்றோம், நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பன எந்தக்கட்சியாலும் சொல்லப்ட்டதை விட மற்றக்கட்சியினரின் தவறை திரும்பத்திரும் பச்சொல்லி செத்தபாம்படித்தார்கள் என்று மக்கள்  அலுத்துப்போய் உள்ளார்கள்.

உண்மையில் வடகிழக்கு மக்களுடைய  இருப்பை எப்படி காப்பாற்றுவது? எமது இனமரபு  எத்தகையது, எமது மொழி எத்தகையது,எமது பண்பாடு எத்தகையது  இவற்றுக்கு  ஏற்பட்டிருக்கும் சவால்கள் என்ன? எதிரிகளால் உள்ள பாதிப்புகள் என்ன? நாம் கவனிக்காமல் விட்டிருப்பது என்ன? எவற்றை இனிமேலாவது நாங்கள் கவனி க்கவேண்டும். இவைபரப்புரைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லப்படவில்லை .

ஒரு கற்ற வளர்ச்சியடைந்த இனத்திற்குரிய பரப்புரைகளாக இல்லாது வேலிச்சண்டைகாரரின் குதர்க்கமான பரப்புரைகள், இவை போக தென்பகுதிக்கட்சிகள்,அரச ஆதரவுக்கட்சிகள்  தமிழ்மக்களின் இன்றைய வறுமை நிலை, தீயநுண்மி (கொரோனா) இவற்றை நன்றாகப்பயன்படுத்தியுள்ளன.

புலம் பெயர் தமிழர்கள் பணம் அனுப்ப  கட்சிப்பிரமுகர்களின் பெயர்களை மக்கள் மனதிலிருத்தும் விதமாக அவற்றை தமது கட்சி வழங்கியமாதிரி செய்திருப்பதுடன் ,கோவில்களுக்கும் பணங்கள் வழங்கப்ட்டிருக்கி ன்றது.

அவ்வாறு சில தமிழ்க்கட்சிகளக்கும் புலம்பெயர் நாடுகளிலிருந்து அரசியல்சார் அமைப்புகளிடமிருந்து பணங் கள் அனுப்புப்பட அவற்றைப்பெற்றுக்கொண்டு உங்கள் விளையாட்டுக்கழகத்திற்கு 10 இலச்சம், உங்கள் நுால் நிலையத்திற்கு 15 இலச்சம் இவ்வாறு வழங்கியுள்ளார்கள்.

இதனை எந்த வகையான கொள்கைப்பரப்புரையாகப்பார்ப்பது. அது போன்று வெளிநாடுகளிலிருந்து வறிய ஊர் மாணவர்களுக்காக  கல்விநலன்களை  விருத்தியடையச்செய்ய  ஊர் அமைப்புகளால் அனுப்பப்பட்ட பணங்க ளில் 25 க்கும் குறைவான மாணவர்களுக்கு  கற்பித்துக்கொண்டு  பெரும்தொகை பணத்தினை  தாம் சார்ந்த கட்சியின் அரசியல்பரப்புரைக்காக  பயன்படுத்தி கட்சியினால் மக்களுக்கு உதவிகள் கிடைப்பது பேர்லும்  தாம் இடையறாத  மக்கள் நலத் தொண்டாற்றுவது போலவும்  காணொளிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பெருந்தொகை நிவாரணப்பணங்களை அனுப்பியிருந்தார்கள் வாகச்செலவு ,பிரித்தசெலவு, அடுக்கியசெலவு,ஏற்றியசெலவு  இறக்கிய செலவு போக ஊணவுப்பொருட்களாக வழங்கப்பட்ட அளவுகள் குறைவாக இருந்தன இதனால் மக்களை விட சில பாரம்பரிய கட்சிகளும் அதனாதர வாளர்களும்தான் அதிக  பயனடைந்தார்கள் என்று மக்கள் திட்டிக்கொண்டார்கள்.

தோட்டம் செய்பவனை விட அங்காடியிலிருந்து விற்றவனையும்  ,வாங்கியவனையும் விட இடைதரகர் அதிகபணம் சம்பாதித்த கதையை மக்கள் எடுத்துக்காட்டிற்கு பேசிக்கொண்டார்கள். வறிய மக்ள் அடைந்த பயன்கள் குறைவு இதனால்கட்சிகள்தான் நன்மையடைந்தன என மக்களால் உணரப்பட்டது.

இதைவிட தென்னிலங்கைகட்சி ஆதரவாளர்கள்  வீடு வீடாகச் சென்று வீட்டார் விபரங்கள் சேகரித்துக் கொள் வதுடன் இளைஞர்கள் ,பெண்பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகள் தருவோம் என்ற வாக்குறுதி வழங்கி நாங்கள் வென்றால் என்ற பேரம்பேசல்களும் இடம்பெற்றதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

இத்தகைய  சூழ்நிலைகளால் மக்கள் மிகவும் கவனமாகவே தாங்கள் நடந்துகொள்வதுடன்  மறைத்து (இரகசிய வாக்கெடுப்பாக இருந்தாலும் எப்படி அச்சமின்றி வாக்களிகவுள்ளனர்?

தற்போது ஒரு மூன்று நாட்களாகத்தான் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்பரைகள் விறுவிறுப்பாக மக்கள் மயப் பட்டதாகக்காணப்படுகின்றது.

அதுவும் மிகவும் சிறிய பையன்கள் ,பெண்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நின்று கட்சிகளின்பரப்புரை த்தாள்களை வழங்ககின்றார்கள், கதவுகளின் (சங்களைகளின்,படலைகளின்) மேலாக வீசிவிட்டுச்செல்கின்றார் கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

சிலவேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்ற எதிர்பரப்பு பரப்புரைப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக சில ஊடகங்களும், முகநுால்கள்,போன்ற சமூகவலைத்தளங்களும் செய்திகளைப்பதிவுசெய்துள்ளன தொலைக் காட்சி, வானொலி,பத்திரிகை விளம்பரங்கள்,நேர்காணல்கள் எனத்தேர்தல் பரப்புரைகள் இடம் பெறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில்  அவுசுரேலியா  கனடா போன்ற  நாட்டு புலம்பெயர் தமிழர்கள்  திட்டங்களுக்காகவும், நிவாரண உதவிகளுக்காகவும்  அனுப்பிய பெரும்தொகைகளையும்  கட்சியினரும், அதிகாரிகளும்  இணைந்து கட்சியால் வழங்குவது போன்று வழங்கிய சம்பவங்களும் இடம்பெற்றது மட்டு மல்லாமல்  மாற்றுக்கட்சிக்காரர் சில ஊர்ளுக்குள்  அரசியல்காரணங்களுக்காக உள்செல்ல முடியாத வாறும் கவனமாக நடந்துகொண்டதாவும் கிழக்கு மாகாணத்தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இந்த நிலைகளாலும்  வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக கட்சிகளின் எண்ணிக்கையின் தொகையால் வெறுப் படைந்துள்ளார்கள். ஒரு வீட்டில் எல்லாரும் வேட்பாளர்களாகிவிட்டார்கள் நாங்கள் எப்படி வாக்களிப்பது?

தென்னிலங்கைகட்சிகள் வேறு, சுயேட்சைக்கட்சிகள் வேறு, சமயக்கட்சிகள் வேறு  எங்களுக்கு ஒன்றுமாக விளங்கவில்லை வாக்களிக்க விருப்பமில்லை  வாக்களிக்கச்சென்றால்  வாக்குச்சீட்டை கிழித்தெறியும் மனநிலையில் இருக்கி்ன்றோம் என்று சலிப்படைகின்றார்கள். தேர்தல் அறிவிற்புக்கு பின் நிகழந்தவை  கட்சிகளின்  தவறுகளுக்கான காலங்களாக இருந்ததால்  இத்தேர்தல் மக்களின் மனதில் வெறுப்பு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

பணம் ,பண்டம்,அதிகாரம்,கபடங்கள் தான் கட்சிகளின் வெற்றி தொல்விகளை  நிர்ணயம் செய்ய இருப்பதாகவே  மக்கள் எண்ணுகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.