குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 31 ம் திகதி சனிக் கிழமை .

இறுதித் தீர்வு தொடர்பில் சர்வrன வாக்கெடுப்பை நடத்துங்கள் : தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தேசிய

28.07.2020....இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு பொதுசன வாக்கெடுப்பை (Referendum) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் கோருவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நீதியரசர் விக்னேசுவரனினால் வெளியிட்டுக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெரும் எண்ணைக்கையில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

“வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற் காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிசுதுவுக்கு முன் 28.000 ஆண்டுகள் கால நீண்ட இருப்பைக் கொண்டது ” என்று ஆரம்பிக்கும் இலங்கையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றை ஆதார தகவல்களுடன் வெளிப்படுத்தும் ஒரு அறிமுக குறிப்புடன் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் ஆரம்பிக்கிறது. இந்த அறிமுக குறிப்பினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் வழங்கியிருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றின் முக்கிய சம்பவங்களை குறிப்பிடும் நீண்ட ஒரு வரலாற்று குறிப்பும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு தேசம், இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம், பராதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவற்றின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமசுடி(அதிகாரப்பகிர்வு) அடிப்படையில் பெற்றுக்கொள்வதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நோக்கம் என்றும் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் இந்த சமசுடி(அதிகாரப்பகிர்வு) தீர்வும் ஒரு தெரிவாக இருக்கும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுசன வாக்ககெடுப்பு ஒன்றின் மூலம் இறுதி தீர்வை எட்டும்வரை யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு பிரதே சங்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இடைக்கால தீர்வினை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன் ஏற்படுத்துவதற்கு அரசியல், இராயதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் குறிப்பாக முன்னைய சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் ஆகியவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வைப்பெற ஆராயும் விதத்தில் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்த நிலையில், இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தேவையில்லை என்று அவர்கள் தட்டிக்கழித்துவிட முடியாது என்று இந்தியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ. நா ஆகியவற்றின் தார்மீக பொறுப்பை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அழுத்தியுரைத்துள்ளது.

“சமசுடி(அதிகாரப்பகிர்வு) போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான எந்த ஒரு அரசியல் தீர்வினையும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களுக்கு முன்வைப்பதற்கோ அல்லது கைச்சாத்திட்ட எந்த ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கோ இலங்கை அரசானது கடந்த 70 ஆண்டுகளில் முழுமையாக தவறிவிட்டுள்ளதுடன் அவற்றுக்கு தயாரற்ற தனது தன்மையையும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, அரசாங்கம் தனது அண்மைய நிலைப்பாடாக இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும் பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்றும் மிகவும் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டது.

இதன்காரணமாக, ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு பொதுசன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு எந்தத் தெரிவுமே இல்லை” என்று பொதுசன வாக்கெடுப்பை கோருவதற்கான தமது நியாயத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முன்வைத்துள்ளது.

“எரித்திரியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் பிரித்தானியாவில் சு(ஸ்)கொட்லாந்து, கனடாவில் கியூபெக், கிழக்கு திமோர், தென் சூடான், கற்றலோனியா, ஈராக்கிய குருத்தி என்று பல நாடுகளில் சர்வதேச சமூகம் பிணக்குகள் மற்றும் தேசிய இனங்களின் அதிகாரங்களை தீர்மானித்துக்கொள்வதற்கு பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருக்கின்றன. வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் ஏற்கனவே இத்தகைய ஒரு மக்கட் தீர்ப்பெடுப்பு வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருக்கின்றன. அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வாறானதொரு மக்கட் தீர்ப்பெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற ஒரு மனுவில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.

இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கம் உட்பட உலகின் பல மாநகர சபைகளிலும் இவ்வாறான மக்கட் தீர்ப்பெடுப்பின் மூலமே இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட முடியும் என்று தீர்மானங்களை எடுத்துள்ளனர். ” என்று குறிப்பிடும் இந்த தேர்தல் விஞ்ஞாபனம், இந்த அடிப்படையில் இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.