குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பத்தாண்டாய் பாத்த பாராளுமன்றம்! 25.07.2020...

பாராளுமன்றில்  முழங்கும் மனங்களிற்கு

மாதம் முடிந்ததும் பாராமாய்சம்பளம் வரும்!

ஓட வாகனம் ஓட்டச் சாரதி

விட்டோட எரிபொருள் சலுகை வேறு!!

உலகெல்லாம்  உண்மைக்குப்பபுறமபாய்

பேசி ஏமாற்ற தொலைபேசிச்செலவிற்கு

சலுகை அதுவேறு!!!

பாராளுமன்றில் மதிய உணவு புரியாணி

ஐந்தே ஐந்து ரூபாவிற்கு!!!!

வாகனம் விக்க சிறப்புப் பத்திரம்!!!!!

சிறப்புச்சலுகை கள்  பட்டியல் நீளும் !!!!!!!!!!!

விற்று விட்டால் கொடீசுவரர்.

இனி மக்கள் பிரதிநிதியா பணக்காரனா?

பணக்காரனுக்குரிய அத்தனையும் தொடங்கும்!

 

அப்ப அப்ப அனுப்பிய மக்களுக்காய்

நுனிப்புல் மேய்ந்து  அக்கறையில்லாது

அரைகுறை மனதுடன் ஊடகங்களுக்காய்

உளறிவிட்டு உல்லாசமாய் உண்டுகொழுத்து

பணம் பண்ண என்ன பண்ணலாம் என

எண்ணுமிடமாய் பாராளுமன்றத்தை

மாற்றிய தலைவர்கள் உருவாகிய

பாராளுமன்றம் தமிழர் செல்லும்

மக்கள் மன்றம்!


சாகும்வரை கிடைத்த இருக்கையாம் அது

தவறியும் இளையவர் இதில் இருந்து விடக்கூடாதாம்!

முடிந்தால் உயிர்கூட அதில் போவதே

துாய்மையான சனநாயகமாம்

என்று கருதும் தாத்த சம்மந்தர்!


இனவுரிமைக்காய் தேசியக்கொடியை

மறுத்த தந்தை செல்வா அரசை விட்டு

வெளியேறினார்!


சிங்களச்சிறி, தனிச்சிஙகளமொழி

எதிர்த்து காலி முகத்திடலில்

செங்குருதி சிந்தி

குருதி வழிந்த உடலுடன் உடையுடன்

அவைசென்ற  தலைவர்கள் என்னே!!!!!


உயிர்ப்பலிகள் பல.... தேடப்படுவோர் பலர்

கையில்லாதோர் பலர் சிறையிருப்போர் நுாற்றுக்கணக்கில்

ஈழத்தில் நிறைவான உறுப்பபுடையோர் சிலர் !!!!!

மக்கள் உறுப்பினராய் சென்றவர்

என்ன செய்கின்றார்?

அரசு உதவவில்லை என்று

உளறுகின்றார்

தனக்கு வந்த பணத்தில்

என்ன செய்தார்?


மாவட்டத்திற்கோர் வீடு(மாளிகை)

வளர்ந்த ஊரில் கண்ணுக்கெட்டிய

துாரங்கள் வரை காணிகள்!

நகர மலர்த் தோட்டமும்

கையகம், திரையரங்கமும்

வாங்கிக் குவித்த குபேரங்கள்!!


இழந்தவர் பெயர்சொல்லிப்போய்

பணப்பேயாய் பிணம்தின்னும்

நாய்களாய் அலைவோர்

தமிழ் என்னும்

சொல்லை உச்சரிப்பேதே

தப்பன்றோ!


ஆச்சிரமங்களுக்கு காணிகள்

சொத்துகள் கொடுத்த

நல்லோர் இருக்க

ஆச்சிரமம் வளர்த்து

நற்பயன் ஆற்றியோர்

பெயரிருக்க அவர்சிலைக்கே

ஆட்களை வைத்து

கல்லெறிந்த கதைகளும் அறிந்ததே!


ஆச்சிரமத்தை எப்போ

விழுங்கலாம் என

ஊரும் மலைப்பாம்பு

பால் வைத்த வருக்கே

பல்லுப்போடும்

நச்சுப்பாம்பு!


நல்லவர்களை ஒரங்கட்டி

அடியாட்களை திரட்டி

நல்லவழி அரசியலை நாசமாக்கி!

இனத்திற்காய் என்று பொய்யே

இடியாய் முழங்கி

போராடிய

பெண்களை தெருவுக்கு

கொண்டுவந்த  செருக்குச்

செயல்கண்டு பண்பிழந்த

இனமா நாம் என்று?

ஏங்குகின்றோம்!


இரண்டாயிரத்தி ஒன்பதில்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு

கைகால்கள் கட்டப்பட்டு

அவர்களுக்கு என்னென்ன

நடந்ததோ அந்த முனகல்

ஒலிகள்

பல பதில்கள் சொன்னது!

அவை நீங்கள் நடத்திய

இணையங்கள் வழி

வெளிவந்தது

அந்த  அவல ஒலிகள்

இன்றும் எங்கள் காதுகளில்

ஒலிக்கின்றது!

ஆண்கள் கடலுக்கு

பெண்கள் உங்களுக்கு

என்று அறிவித்ததாய்

தலைப்கபுச்செய்திகள் பல!

தமிழ் மக்களின் மனங்கள்

வெந்தன, நொந்தன

ஆறாதவடுவாய்

அவையிருக்க

மக்களவைசெல்வோர்

கறையேதும் இல்லாதோர் போன்று

அரசைக்காப்பதே எம்பணியென

தமிழின் தனித்திறனை தன்னினத்திற்கு

பயன்படுத்தாது எதிரினத்திற்கு

வக்காளத்து வாங்கி

எதிர்கட்சி நிலையிழந்து

போனாலும்

எதிர்க்கட்சி வீடு வேணும்

என்ற உயர் தலைவர்

கொண்ட இனமாம்

ஈழத்தமழினம்!

சீச்சீ வெட்கக்கேடு

இத்தோடு மதிகெட்டோர்

ஒப்பீடு!

சின்னப்பிள்ளையும்

சிரிக்குது.



தண்ணி கொடுத்தார்களா ?

கழிவுகழிய முடியுமா??

மாதக்கணக்கிருந்தவர்

எப்படி மானமிழந்திருப்பார்?

மனது எப்படி வலிக்கிறது!துடிக்கிறது!!


துளியும் அவற்றை எண்ணாது

பணத்தை பதவியை

அவசரமாய் தலைமையை

குறுக்கு வழியில் அபகரிப்பவருக்கு

பக்க பலமாய் வலது கையாய்

வலம் வருவது வெட்கமாய்

இருக்கின்றது.


பால் வைத்தவர்

பலரை இரையாக்கிய ஈனச்செயல்

இழிவாகவே பார்க்கப்படுகின்றது.

இதனை திறமை எனப்பாரத்திருக்கும்

அறம்தெரியா அப்பாவிகள்!


தற்செயலான தவறுகளைத் திருந்தலாம்!

திட்டமிட்டுச் செய்யும் தவறுகளை

மன்னிக்கலாமா?

எமக்கு பதவிகள் வரும் என்னபதனால்

தவறானதைச் சரியென எண்ணி வாழலாமா?

மக்களே மனதுகளில் அலசுங்கள்

மனச்சாட்சியுள்ள இனமாக

நாம் வாழப்பயில்வோம்.

நடந்ததை திருத்தவும்

அகற்றவும்

வாக்களிப்போம்.

இந்த ஈனங்களிடையே

தமிழன் என வாழ்வதைவிட

கொரோனா(தீயநுண்மி) வந்தே

செத்துப்போகலாம்

என்ற ஓர்மங்கொண்டு

ஒருவரும் வீட்டில் இருக்காது

வீடடிற்கெதிராய்

வாக்களிக்க சன்னதம்

கொண்டே காத்திருப்பீர் !

ஆவணி(ஓகசுட்டு)  ஐந்தாம் பக்கல்(திகதி)

எப்போ வரும்  அன்றே

நல்லது நன்றாக நடக்கும்.

 

தோற்றாலும் மக்கள் பணிதொடரும்!

வென்றாலும் மக்கள்பணி தொடரும்

வென்றவரும் நல்லோராய் தொடரவேணும்

இல்லையேல்  அவர்க்கெதிராயும்

நம் சனநாயகம் தொடரும்.





 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.