குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 3 ம் திகதி திங்கட் கிழமை .

அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்ட மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள்.! தமிழுக்குப்பாதகமாகவே இந்திய தொல்லி

யல் நடந்துகொள்வது  எல்லோரும் அறிந்தது! கீழடி ஆய்வில்....கனிமொழி, யகத்_கசுபர் தலையீடு - அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்ட மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள்.! சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட....தொல்லியல் ஆய்வாளரும், சிம்லாவில் உள்ள‌ இந்தியன் இன்சுடிட்யூட் ஆஃப் அட்வான்சுட் சுடடீசு கல்விக் குழு உறுப்பினருமான Dr B S கரிசங்கர்....

கீழடியில் நடக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் வரலாற்றைத் திரிக்கும்‌ முயற்சி நடைபெறுவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.


மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகளும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி அனாவசியமாக கீழடி அகழாய்வில் தலையிட்டு ஆய்வு முடிவுகளை‌_மாற்ற முயற்சி செய்வதாக அவர்‌ குற்றம் சாட்டியுள்ளார்.


அவருடைய ஆய்வுக் கட்டுரையில்....,

"தங்களைத்_தாங்களே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக்கொண்டு கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டு‌ இருக்கும் நபர்கள் அகழ்வாய்வின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிகள் அனைத்தையும் மீறி செயல்பட்டு‌ வருகிறார்கள்.


ஒரு முன்னாள் ASI இயக்குனரையே அங்கே தோண்டி எடுக்கப்பட்ட தொல் பொருட்களை பார்க்க விடாமல் மர்மமாக ஏதோ செய்து வருகின்றனர்.


நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் அகழ்வாய்வுகள் எல்லாம் திறந்த புத்தகமாக இருக்கும் போது....

இங்கு மட்டும் இப்படி ரகசியமாக செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


'கீழடி அகழாய்வில் உலகளவிலான தலையீடு' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் கீழடி அகழ்வாய்வின் பின்னணியில் இருப்பவர்கள்....

வட இந்தியாவில் இருந்த நாகரிகத்திலிருந்து வேறுபட்ட ஒரு நாகரிகம் தென்னிந்தியாவில் இருந்தது என்று நிறுவ முயற்சிப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.


முன்னாள் ASI இயக்குனரான Dr T சத்யமூர்த்தி போன்றவர்களை கூட அனுமதிக்காமல் தோண்டி எடுக்கப்பட்ட தொல் பொருட்களின் பழமையைக் கண்டறிய அவற்றை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துள்ளனர்.


இந்தியாவிலேயே அந்த பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன.

ஆனால்....

அவை இவர்கள் எதிர்பார்க்கும் முடிவைத் தராது.


பிரிவினைவாதத்தை தூண்டி‌ விடுவதற்காக திராவிடர்கள் என்ற ஒரு தனி இனம் இருந்தது என்று....

செயற்கையாக நிரூபிக்கும் DNA முடிவுகளை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்" என்பது உள்ளிட்ட பரபரப்பான தகவல்களை ஆய்வாளர் கரிசங்கர் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இயக்குநர் சத்யமூர்த்தி கூறுகையில்...,

"தோண்டப்பட்ட பொருட்களில் ஒன்றுக்கு_கூட தோண்டி எடுக்கும்‌ போது எப்படி இருந்ததோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்றைக் கூட அவர்கள் வெளியிடவில்லை. தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில் கீழடியில் நடந்து வரும் மோசடியைப் பற்றி முழு விசாரணை தேவை.


புகழ்பெற்றவர்கள் என்பதற்காக யாரையும் வரலாற்றைத்_திரிக்கவோ புதிதாக எழுதவோ அனுமதிக்க_கூடாது" என்றும்....

கரிசங்கர் எழுப்பியுள்ள அச்சங்கள் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


திடுக்கிடச் செய்யும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளி உலகத்துக்கு அறிவிக்கப்பட்ட உடன்...

முதலில் கீழடி ஆய்வுக் களத்துக்குச் சென்றவர்கள் கனிமொழியும் அவருடைய நீண்டகால நண்பர் பாதிரியார் ஜகத் கஸ்பர் ராஜும் தான்‌.


கத்தோலிக்க பாதிரியார்  யகத் கசுபர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமீழ் ஈழப் புலிகள் (LTTE) அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ASI கட்டுப்பாட்டில் இருக்கும் ஆய்வகங்களுக்கு கீழடியில் கிடைத்த பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்குமாறு கனிமொழி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

முதலில் இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டாலும் பின்னர் ASI தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்த போது தடையை நீக்கியது.

ஆனால்....

சில  கிறிசுதவ மதவாதிகள் நுழைந்து சூழலைக் களங்கப்படுத்தி விட்டனர் என்று கூறப்படுகிறது.

"கீழடி ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்கள் என்று கூறி அதை துணைக் கொண்டு யகத் கசுபரால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்பு (NGO) தமிழ்நாட்டில் பிரிவினைவாத இயக்கங்களைத் தொடங்க முயற்சி செய்தது" என்று அந்த அமைப்புக்கு வரும் வெளிநாட்டு நிதியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரும் புலனாய்வுத் துறை அதிகாரி கூறியதாக தி பயனியர் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கேரளாவில்...

பட்டணம் என்ற இடத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்விலும் தென்னிந்திய வரலாற்றைத் திரிக்கும் பணியில் இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளதாக ஆய்வாளர் ஹரிசங்கர் மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் பேராசிரியர் C I ஐசக் ஆகியோர் கூறுகின்றனர்.


"பட்டணமும் கீழடியும் பொதுவான விசயங்களால் இணைக்கப்பட்டு இருந்தன என்றும்....

உரோமுடன் தொடர்பிருந்தது என்றும் நீரூபிப்பதில் மட்டும் அவர்கள் வெற்றியடைந்தால் இந்த நிலப்பகுதியின் வரலாறு முழுவதுமே கட்டுப்படுத்தப்படலாம்" என்று பேராசிரியர் ஐசக் தி பயனியர் நாளிதழிடம் கூறியுள்ளார்.


கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும்....

என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது கூட....

கிறிஸ்தவ பின்புலத்துடன்...

திமுகவின் திராவிடநாடு திட்டம்தான் என்றும் பேராசிரியர் ஐசக் குறிப்பிட்டுள்ளார்.


Courtesy

Kathir news

copyright reserved ©®

செய்தியை உள்ளிடவும், @name...