குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

பேராசிரியர் முனைவர் மு பி பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார் என்ற செய்தியை அவருடைய இரண்டாவது மகன்

அன்புச்செழியன் முகநூலில் பதிவு செய்திருந்தார்........

நண்பர்களே! வணக்கம்! 534

எல்லா புகழும் எம்பெருமான்

தலைவர் கலைஞர் அவர்களுக்கே!

நண்பர்களே!

இன்று காலை எழுந்ததும் முகநூல் பதிவுகளை பார்ப்பதற்காக முகநூல்பக்கத்தை திறந்தேன்

முகநூல்பக்கத்தைதிறந்ததுமே

கழகஇலக்கிய அணியின் முன்னாள் தலைவரும் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான

பேராசிரியர் முனைவர் மு பி பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார் என்ற செய்தியை

அவருடைய இரண்டாவது மகன் அன்புச்செழியன் முகநூலில் பதிவு செய்திருந்தார்.

"சற்றுமுன் எங்கள் தந்தை பேராசிரியர் முனைவர் மு பிபா திமுக மாநில இலக்கிய அணி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் பச்சையப்பன் கல்லூரி மரணம்

-மு.பிபா அன்புச்செழியன்

என்று பதிவு செய்திருந்தார்

அந்தப் பதிவை பார்த்த ஒரு வினாடி விக்கித்துப் போனேன்

பொதுவாகவே நான் ஏராள அதிர்ச்சிகளை சோதனைகளை சங்கடங்களை இழப்புகளை தொல்லைகளை துயரங்களை சந்தித்தவன் சந்தித்துக் கொண்டிருப்பவன் என்றாலும்

பேராசிரியர் மு.பி. பா அவர்களுடைய மறைவு செய்தி என்னை உண்மையிலேயே கண் கலங்க வைத்துவிட்டது

"என்ன கொடுமை இது

என் இதயம் நோகிறது

அண்ணல்

மறைந்துவிட்டார்

ஆற்றொணாத் துயரம் இது "

என்றுஅந்த மறைவுச் செய்தி பதிவுக்கு கீழே என்னுடைய கருத்தாக கவிதை வரிகளை பதிவு செய்து விட்டு

அவரோடு எனக்கிருந்த நட்பு தொடர்பு இவர்களை சிந்தித்தேன்

தானாக என் கண்களிலே கண்ணீர்

எத்தனை பெரிய மனிதர் அவர்

எப்படி எல்லாம் என்னோடு பழகியவர்

திருநெல்வேலி மாவட்டம்

தென்காசி வட்டம் குத்துக்கல் வலசை ஊராட்சி அய்யாபுரம் சிற்றூரில்1939ல் பிறந்தவர் மு.பி.பா

81 வயதில்இன்று மறைந்த

மு.பி.பாஇளைய வயதிலேயே மாணவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக முப்பத்தைந்து ஆண்டு காலம் பணிபுரிந்தவர்

1996- 97ல்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

திராவிட முன்னேற்றக் கழக கவிஞர்கள்கவிவேந்தர் வேழவேந்தன் கவிச்சுடர் கவிதை பித்தன்

கவிஞர் குடியரசு நிர்மலா சுரேஷ்

தமிழ்தாசன் சாவல் பூண்டி சுந்தரேசன் என்ற வரிசையில்

முதல் தலைமுறை வரிசையில் மூத்த கவிஞர்களில் ஒருவராக

கவிஞர் மு.பி. மணிவேந்தன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்

மு.பி.பா அவர்கள்

மாணவப் பருவத்திலேயே கவிதைகளை எழுதிய அவர் தொடர்ந்து எழுதிவந்தார் சமீபகாலமாக கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு கட்டுரைகளில் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்ஆர்வம் காட்டினார்

திராவிட முன்னேற்றக் கழகஇதழ்களான திராவிட நாடு காஞ்சி முரசொலி போன்ற பத்திரிகைகளில் அந்தக் காலத்தில் அவருடைய எழுச்சிமிக்க கவிதைகள் வெளிவந்தது

கல்லூரிபேராசிரியராக

கல்லூரி முதல்வராக பணிபுரிந்த மு.பி.பா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கழகப் பணியாற்றினார்

பணி ஓய்வுக்குப் பிறகுமாநில அளவிலான திமுக இலக்கிய அணியில்பல்வேறு பொறுப்புகளை வகித்தார்

பேரறிஞர்அண்ணாஅவர்கள் ஆசிரியராக இருந்த காஞ்சி பத்திரிக்கைக்குஅண்ணாவின் மறைவுக்குப் பிறகு அண்ணாவின் இளைய மகன் இளங்கோ காஞ்சிபத்திரிக்கையை நடத்தியபோது பத்திரிக்கையின் ஆசிரியராக சிறிதுகாலம்

பணியாற்றியவர்

2006- 2011 கழக ஆட்சியில்

தமிழ் வளர்ச்சித் துறையில் அறிவியல் தமிழ் மன்றத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார்

இந்திய அரசின் தணிக்கை குழு உறுப்பினராகவும் தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்

இவருக்கு

முத்துச்செல்வி

கலையரசி

முத்தமிழ்ச் செல்வன்

அன்புச்செழியன்

என்ற நான்கு வாரிசுகள்

மூத்தமகள் முத்துச்செல்வி சில ஆண்டுகளுக்கு முன்னால் காலமாகிவிட்டார்

கலையரசி பச்சையப்பன்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார்

முத்தமிழ்ச் செல்வன் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்

அன்புச்செழியன் தமிழாலயம் பத்திரிக்கையையும்சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார்

அவர் இல்ல திருமணங்கள்புத்தக வெளியீடுகள் அவர் பேசுகிற கூட்ட நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் மறக்காமல் எனக்கு அழைப்பிதழை அனுப்பி வைப்பார் தொலைபேசியிலும் நினைவூட்டுவார்

திடீரென்று எப்பொழுதாவது அவர் ஏதாவது சொல்ல வேண்டுமென்று தோன்றினால் அல்லது எதைப்பற்றியாவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்று தோன்றினால் எனக்கு அவர் தொலைபேசியில் தொடர்பு கொள்வார் பேசுவார் என் கருத்தையும் கேட்பார்

நானும் பல நேரங்களில் அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டுபேசியிருக்கிறேன்

ஏராள கவிதை புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிய இவர்

தமிழாலயம் என்னும் பல்சுவை மாத இதழை தொடர்ந்து நடத்தி வந்தார்

தமிழாலயம் இதழில் தரமான கட்டுரைகள் தமிழ் அறிஞர்கள்

தமிழ்ச் சான்றோர்கள் வரலாறு

கவிதைகள் கட்டுரைகள் என மிக சிறப்பான முறையில் பத்திரிகையை நடத்தி வந்தார்

அவர் இறக்கிற வரையில் தமிழ் பணியாற்றி தமிழ் அறிஞராக

இயங்கி வந்தார்

இருபத்தைந்து ஆண்டுகளாக நான் சென்னைக்கு செல்கிற போதெல்லாம் முனைவர் மு.பி.பா அவர்களையும் முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்களையும்

சென்னையில் நடக்கிற இலக்கியநிகழ்ச்சிகள் அல்லது கழக நிகழ்ச்சிகளில்பொது கூட்டங்களில் கட்டாயம் சந்தித்துபேசிவிட்டு கூடியவரை சரவண பவன் ஹோட்டலில் காபி அல்லது டிபன் சாப்பிட்டுவிட்டு தான் வருவேன்

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முன்வரிசையில் நானும் அவரும் முன்னாள் மேயர் சா கணேசனும் அமர்ந்து விடுவோம்

நான் முன்னே போய் விட்டால் அவருக்கும் சா. கணேசன் அவர்களுக்கும் நாற்காலியை பிடித்து வைத்து விடுவேன்

அவர்கள் முன்னே போய் விட்டால் எனக்கு ஒரு நாற்காலியை பிடித்து வைத்திருப்பார்கள்

அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒருவருக்கொருவர் அந்த கூட்டத்திற்கு வருவோம் என்கிற நம்பிக்கையோடு இந்த 25 வருடங்களாக

அண்ணா அறிவாலயத்தில் முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள்நாங்கள்

மேயர் சா. கணேசன் அவர்கள் மறைந்த பிறகு மு.பி.பா .அவர்களும்நானும் வழக்கம் போல் முன்வரிசையில் அமருவோம்

ஒரு முறை என்னை அவருடைய பிறந்த ஊரான அய்யா புரத்திற்கு அழைத்துச் சென்றுஅவர் பிறந்த வீட்டை ஊரை தெருவை எல்லாம் சுற்றிக்காட்டினார்

அதன்பிறகு நாங்கள் இரண்டு பேரும் குற்றாலத்திற்கு சென்று அங்கு ஒரு நாள் ஓய்வு எடுத்தோம்

அங்கே அவருக்கு சொந்தமாக ஒருகாலிமனை இடஇருந்தது அதை கூட விற்றுவிடப்போவதாக என்னிடத்திலே சொன்னார்

மிக எளிய மனிதர் அளவுக்கு அதிகமாகஆசைப்படாதவர்

யாரிடத்திலும் போலியாக நட்பு கொள்வது போலியாக அவர்களை புகழ்வது பாராட்டுவது அவர்களுக்கு முகஸ்துதி செய்து காரியங்களை சாதித்துக் கொள்வது என்பது போன்றபழக்கங்கள்அவரிடத்தில் இல்லை

என்னுடைய 25 ஆண்டுகால நட்பில் ஒருநாளும் அவர் என் மனம் நோகும் படியோ அல்லது அவர் மனம் நோகும்படியோ நாங்கள் நடந்து கொண்டதில்லை பேசிக் கொண்டதில்லை

என்னுடைய சுய மரியாதைஉணர்வை என்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையை மிகவும் பாராட்டுவார்

எதையும் வெளிப்படையாக நான் பேசுவதை இரசிப்பார்

இயக்கம் குறித்து பல விஷயங்களில் நானும் அவரும் ஒரே மாதிரியாக சிந்தித்தது எங்களுக்கு உள்ள நட்பை இன்னும் நெருங்கச் செய்தது

மேல்மட்ட கழக முன்னணியினர் சிலருடைய நடவடிக்கைகளை என்னிடத்திலே விமர்சிப்பார்

அதே விமர்சனத்தை நான் கொஞ்சம் வேகமாக வைக்கும்போது உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான் என்று என்னை பாராட்டுவார்

சுயமரியாதைக்காரர்

சாவல் பூண்டியில் நான் மாதாமாதம் நடத்துகிற சாவல் பூண்டி சங்கப்பலகை அழைப்பிதழை அவருக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பிவைத்தேன்

ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதுமான இலக்கிய அமைப்புகள் கழக நிர்வாகிகள் கழகமுன்னணியினர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பத்திரிக்கை ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் அறிஞர்கள் கவிஞர்கள் புலவர்கள் ஊர் அறிந்தவர்கள் எனஆயிரம் பேருக்குமேல் அந்த அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கிறேன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிற முக்கிய திமுக பிரமுகர்களுக்கும்மாவட்ட முழுவதுமான இலக்கிய ஆர்வலர்களுக்கும் கூட அழைப்பிதழை அனுப்பிவைக்கிறேன்

மொத்தமாக எல்லோருடைய முகவரியும் ஒவ்வொரு மாதமும் டைப் செய்து அவைஅனுப்பி வைப்பதற்கு என்று சாவல் பூண்டி சங்கப்பலகையின் காப்பாளர்களாக இருக்கிற தம்பிகள் இடத்திலே அந்த பொறுப்புகளை ஒப்படைக்கிறேன்

ஆயிரம் அழைப்பிதழ்களள் என்பதால் என்னால் ஒவ்வொரு மாதமும்

யார் யாருக்கு போகிறது என்று ஒவ்வொரு பிரமுகரையும் பார்த்துஅடையாளம் கண்டுமுகவரியை ஒட்டி அனுப்புவதற்கான வாய்ப்பு எனக்கு இல்லை

ஆரம்பத்தில் ஓரிரு மாதங்கள் சரியாக போக வேண்டுமே என்பதற்காக அந்த ஆயிரம்கடிதங்களையும்

ஒவ்வொன்றையும் பார்த்துதான் அனுப்பினேன்

அதற்குப் பிறகு அந்த தம்பிகள் முறையாக அனுப்பி வைத்த காரணத்தினால் சரியாகப்போகிறது பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் விட்டுவிட்டேன்

ஆனாலும் முறையாக அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள்

ஒரு நாள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த மு.பி.ப அவர்கள்

சாவல் பூண்டி சங்கப்பலகை அழைப்பிதழை அனுப்புகிறீர்கள் முகவரியை நீங்கள் சரியாக அனுப்பாமல் இருக்கிறீர்கள் பார்த்து அனுப்புங்கள் என்று சொன்னார்

அடுத்தமாதம்சாவல் பூண்டி சங்கப்பலகைஅழைப்பிதழ்களை அனுப்புகிற போது

நினைவு வைத்து அய்யாமு.பி.பா அவர்களுக்கு கடிதம் போகிறதா என்று கேட்டேன் போகிறது என்று அவருடைய முகவரியை காட்டி அந்த தம்பிகள் சொன்னார்கள்

அழைப்பிதழை அனுப்பி வைத்தார்கள்

ஓரிரு நாட்கள் பொறுத்து அவரிடமிருந்துஎனக்கு ஒரு கடிதம் வந்தது

சாவல் பூண்டி சங்கப்பலகை அழைப்பிதழ் கிடைத்தது

நாம் 35 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணி புரிந்தவன் முனைவர் பட்டம் பெற்றவன் எனக்கு அனுப்புகிற அந்த கடிதத்தில்

மு.பி.பாலசுப்பிரமணியம்

ஆசிரியர்

தமிழாலயம் திங்களிதழ்

சென்னை அண்ணாநகர்

பாரதி காலனி என்றுஎன்று முகவரியிட்டே அனுப்புகிறீர்கள்

நான் கற்ற கல்விக்கும் வகித்த பதவிக்கு நீங்கள் மரியாதை கொடுக்கவில்லைஇனி இதுபோல பெயர முகவரியிட்டு மட்டும் அழைப்பிதழ் அனுப்புவதாக இருந்தால் எனக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம் என்று அவர் கடிதம் எழுதி விட்டார்

எனக்கு மனது நொந்தது

தவறுதான்

75 வயதுக்கும் மேற்பட்ட பெரியமனிதர்

தமிழ் கவிஞர் தமிழ் அறிஞர்

நல்ல எழுத்தாளர் பத்திரிக்கையாசிரியர்

அவரை வெறும் மு பி பாலசுப்ரமணியம் ஆசிரியர் தமிழாலயம் என்று மட்டும் குறிப்பிடுவது என்பது சரியான முறை இல்லைதான்

எனக்கு அது தெரிந்தது

ஆனால் ஆயிரம் கடிதங்களுக்கு முகவரியை ஓட்டுகிற எங்கள் ஊர்

சாவல் பூண்டி சங்கப்பலகை பிள்ளைகளுக்கே அவரைப்பற்றி

தெரிய வாய்ப்பில்லை

நானும் கூட அப்பொழுது தேர்தல் காலங்களாக இருந்ததால் அழைப்பிதழ் அனுப்புவதில் அதிக சிரத்தை காட்டாமல் வழக்கமாக அழைப்பிதழ் போய்விடுகிறது என்று விட்டுவிட்டேன்

அடுத்த மாதம் அவருக்கு அழைப்பிதழ்

அனுப்பப்பட்டது

சாவல் பூண்டி சங்கப்பலகை தம்பிகள் வழக்கம்போலவேடைப் செய்யப்பட்டமுகவரியை எந்தவித பட்டமும் இல்லாமல் அனுப்பிவிட்டார்கள்

அவர் அந்த அழைப்பிதழை தபால்காரரிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல்" வாங்க மறுத்துவிட்டார்" என்கிற அடிக்குறிப்போடு எனக்கே திருப்பி வந்துவிட்டது

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது தவறு நம் மேல் தான்

ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான தமிழாலயம் இதழை தமிழ்நாடு முழுவதும் ஏன் மலேயா சிங்கப்பூர் வெளிநாடுகளுக்கெல்லாம் கூடஅனுப்புகிற அவருக்கே தெரியும்

யாராவது ஒருவரி டத்திலே பொறுப்பை ஒப்படைத்து முகவரியை ஒட்ட சொல்ல கூடிய சூழ்நிலைதான் ஒவ்வொருவருக்கும்

அதன் ஆசிரியரரோஅல்லது விழா நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களோஒவ்வொரு மாதமும் அதை செய்து கொண்டிருக்க முடியாது ஒவ்வொரு அழைப்பிதழையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது

பல நேரங்களில் முகவரிகள் மாறியவர்கள் இயற்கை எய்தியவர்கள் முகவரியில் ஆட்கள் இல்லாதவர்கள் என பலருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்கள் திரும்ப வரும்

அப்படிதிரும்ப வரும் முகவரிக்குஅழைப்பிதழ்களை திருப்பிஅனுப்பி விடாதீர்கள் என்று நான்பொதுவாக சொல்லி இருக்கிறேன்

அதன்படி அய்யா மு. பி.பா அவர்களுக்கு அனுப்பப்படும் அழைப்பும் நிறுத்தப்பட்டுவிட்டிருக்கிறது

அதன்பிறகு சென்னையில் என்னை அவர் பார்க்கிற போதெல்லாம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார்

அவர் மிகப்பெரியர்

வயதானவர்

அறிஞர்

கவிஞர்

மூத்தவர்

நான் அவரிடம் வருத்தம் தெரிவித்திருக்கலாம் ஏன் மன்னிப்பு கூட கேட்கலாம் தவறில்லை

ஏனோ எனக்கும் நான் தவறு செய்யவில்லை இயல்பாக நடக்கிற ஒரு நிகழ்ச்சி அதிலே நான் மன்னிப்பு கேட்பதற்கு வருத்தம் தெரிவிப்பதற்குஒன்றுமில்லை என்பது போல எனக்கும் சுயமரியாதை முன்னால் நின்றது

அதற்கு பிறகு சென்னையில் அவரை பார்க்கிற போதெல்லாம்

அவருக்குசங்கடத்தை கொடுத்து விடக்கூடாது என்பதற்காக நானும் அவரை பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் வேறு பக்கம் போய் உட்கார்ந்து விடுவேன்

25 ஆண்டுகளாக பழகிய நட்பு அன்பு இன்றைக்கு அவர் பக்கத்திலேயே அல்லது எதிரிலேயேஉட்கார்ந்து இருந்தாலும்

அவருக்கும் எனக்குமான உறவுவெகுதூரம் போய்விட்டதே என்ற வேதனை இருந்துகொண்டேதான் இருந்தது

அவரை கடைசியாக அண்ணா அறிவாலயத்தில் ஒரு நிகழ்ச்சியில் எனக்கு முன் வரிசையில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்

நிகழ்ச்சி முடிந்து அவர் எழுந்து போகிற போது அவர் உட்கார்ந்து இருந்த நாற்காலி முழுவதுமாக சிறுநீரால் நனைந்து போயிருந்தது

அவர் நடந்து போகும் போது அவர் வேட்டியின் பின்புறம் முழுவதுமாக நனைந்து போயிருந்தது

என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது அந்த காட்சியைப் பார்த்தபோது

பாவம் மூப்பின் காரணமாக வெகுநேரம் கூட்டத்தில்உட்கார்ந்திருந்தஅவருக்கு

சிறுநீர் போவது கூட தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார்

அப்போதே அவருக்கு உடல்நிலை சரியில்லை இதுபோன்ற சூழ்நிலையில் அவர் பாவம் வருகிறாரே என்று வேதனைப்பட்டேன்

அதுக்குப் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை கொரோனாகொடுமைக்குபிறகு சென்னை பக்கமும் நான் போகவில்லை

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்றான் வள்ளுவன்

அய்யா மு.பி.ப அவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்தோடு என்னை வரவேற்று பேசியவர்

எனக்கும் அவருக்குமான வயது வித்தியாசத்தை எல்லாம் பார்க்காமல் அரசியல் கலை இலக்கியம் என எல்லா செய்திகளையும் என்னோடு பகிர்ந்து கொண்டவர்

என் பேச்சை காது கொடுத்து கேட்டவர்

என்கருத்துக்களோடு ஒத்துப் போனவர்

அவர் கற்ற கல்விக்கு

அவருக்கு தலைவரிடமிருந்த அறிமுகத்திற்கு

அவருக்கு இருந்த பின்னணிக்கு

இன்னும் சில மேற்பதவிகளுக்காகபொறுப்பு களுக்காக அவர் முயன்றிருக்கலாம் முயற்சி செய்திருந்தால் ஒருவேளை கிடைத்து கூட இருக்கலாம்

ஆனால் அவர் யாரிடமும் போய் எதற்காகவும் நிற்க வேண்டும் என்று நினைக்காதவர்

அப்படியே வாழ்ந்தவர்

அவருடைய தமிழாலயம் பத்திரிக்கைக்கு சந்தா கேட்கும் போது கூட மற்றவர்களைப் போல கெடுபிடியாக அல்லது விடாப்பிடியாக எல்லாம் கேட்கமாட்டார்

ஒருமுறை கேட்பார் கொடுத்தால் வாங்கிக் கொள்வார் இல்லை என்றால் அதற்காக கீழே இறங்கி தன்னை வருத்திக் கொள்ள மாட்டார்

அவரோடு நான் பழகிய நாட்களில் பெரியார் திடலில் நானும் அவரும் பேசியது

அண்ணா அறிவாலயத்தில் நானும் அவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது

ஒவ்வொரு ஆண்டும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் அவரும் நானும் கலந்து கொண்டது

இப்படி ஏராள நிகழ்ச்சிகளில் பொதுக்கூட்டங்களில் ஒரே மேடையில் நானும் அவரும் பேசியும் இருக்கிறோம்

அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக இப்பொழுது என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது

தமிழ்நாடு முழுவதுமாக அவருக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தார்கள்

நான் சந்தித்த அவருடைய பல மாணவர்களும் அவரைப்பற்றிய மிக நல்ல அபிப்பிராயங்களை தான் சொன்னார்களே தவிர யாரும் அவரை சிறிது கூட குறை சொல்லவில்லை

அந்த அளவுக்கு ஒரு சிறந்த ஆசிரியராக சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்த பெருந்தகையாளர் அவர்

இந்த உலகில் இயற்கை மட்டுமே நிலையானது மாறாதது

நிலவும் கதிரும் என்றும் போல் மாறாமல் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன

ஆனால் மனிதர்களும் இளமையும்

அப்படி அல்ல ஒருநாள் சென்றால் கூட வாழ்நாளில் ஒன்று குறைந்து விட்டது என்று பொருள் இளமையும் அப்படியேதான்

யாக்கையும்இளமையும் செல்வமும் நிலையில்லாதவை

நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே நல்ல செயல்களை விரைவாகச் செய்துவிட வேண்டும் என்றான் வள்ளுவன்

அவருடைய வாழ்க்கையில்

ஏராளமான மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்

அரசியலில் நல்ல நண்பராக எத்தனையோ பேருக்கு இருந்தவர்

அவரைப் போல் எத்தனையோ பேர் ஆசிரியர்கள் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள்

அத்தனைபேரும் மு.பி.பா போல் ஆகிவிடுவதில்லை

என்னோடு கூட்டங்களில் பக்கத்தில் ஒன்றாக அமர்ந்து இருந்தவர்

என்னோடு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பேசியவர்

என்னோடு கருத்தில் ஒன்றுபட்டு இருந்தவர்

எனக்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கையை பிடித்து வைத்திருந்தவர்

இன்று இல்லை இனி அவரை காண்பதற்கான வாய்ப்பே இல்லை

இனி நான் சென்னை போகும் போதெல்லாம்

அறிவாலயம் போகும்போதெல்லாம் அந்த மாமனிதரை என் கண்கள் தேடும் ஆனால் அவர் வர மாட்டார்

நேற்று அவர் இருந்தார்

இன்று அவர் இல்லை

......இப்படித்தான் எல்லா மனிதர்களும் ஒரு நாள் காணாமல் போகப் போகிறவர்களே....

வாழ்ந்த நாட்கள் வரை

குறையேதுமின்றி நல்ல மனிதராக வாழ்ந்த மு.பி.பா.அவர்களை போற்றுவோம்

அவரை போல் வாழ சபதம் எடுத்துக் கொள்வோம்

நாளை சந்திப்போம்

அன்புள்ள

சாவல் பூண்டி மா சுந்தரேசன்

28-06-2020

ஞாயிறு

அறியாமை அடிமைத்தனம் விலக்கு பகுத்தறிவு சுயமரியாதை பழக்கு

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.