குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்.

மணி மணிவண்ணன் 06.022020·....24.06.2020 தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் (Triplicane, Tuticorin, Sadras, Trichy என்பது போல்) குதறியிருந்ததைப் பார்க்கும்போது எரிச்சலாக இருக்கும். அமெரிக்காவில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு பல பத்தாண்டுகள் வாழ்ந்த பிறகுதான் அவர்கள் பிறமொழிப் பெயர்களை ஆங்கிலத்தின் தன்மைக்கு ஏற்ப, தமக்கு இயல்பாக வரும் ஒலிப்பில் பலுக்குகிறார்கள் என்பது புலப்பட்டது. Triplicane, Tuticorin, Sadras, Trichy போன்ற பெயர்கள் ஆங்கிலேயர் பிற ஆங்கிலேயர்களுக்குப் புரியும் வகையில் எழுதிய ஆங்கிலப் பெயர்கள். ஆம், அவை தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்கள்தாம். ஆனால், அந்தப் பெயர்கள் ஆங்கிலத்தின் ஒலிப்பியலைப் பின்பற்றி, அவர்கள் நெடுங்கணக்கில் எழுதப்பட்டவை.

ஆனால், ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்டு ஆட்சி நடத்தும் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு, இந்த ஆங்கிலப் பெயர்கள் உறுத்துகின்றன. இவற்றைத் தத்தம் மொழிக்கு நெருக்கமாக மாற்ற முயல்கிறோம். Thiruvallikeni, Thoothukkudi, Cathurangappattinam, Thiruchirappalli என்ற பெயர்கள் தமிழர்கள் தமக்கும் பிற இந்தியர்களுக்கும் தமிழை ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கு நெருக்கமான முறையில் எழுத முயன்றதன் விளைவு. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் இயல்பாகப் பலுக்கவும் முடியாது, பலுக்கினாலும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிறராலும் புரிந்து கொண்டு எழுத முடியாது. இது மொழி மரபு புரிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான்.

பெயர்ச்சொற்களை, அதுவும் தனியாள் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், நாட்டுப் பெயர்களை மூல மொழியைப் போலவே எழுத வேண்டும், பேச வேண்டும் என்று சில தமிழர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் மூலமொழிகளைப் பற்றி அக்கறையற்றவர்கள். உலகில் உள்ள பிறமொழிப் பெயர்களை ஆங்கிலக் கண்ணாடி வழியாகத்தான் பார்த்துப் பழகியவர்கள். அவர்களுக்கு எந்த நாட்டின் பெயராக இருந்தாலும், எந்த மொழியில் உள்ள பெயராக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளில் தமிழைப் போல் படித்துத் தமிழில் எழுத முயல்பவர்கள். உண்மையில் இவர்களுக்குத் தாய்மொழியிலும் புலமை இருக்காது. ஆங்கிலத்தையும் தாய்மொழியைப் போல் அறிந்தவர்களல்லர். ஆனால் 'நான் பிறந்திருக்க வேண்டியது இங்லேண்ட்' என்று பாடிக் கொண்டு தம்மை ஆங்கிலேயராய், அமெரிக்கராய், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவராய்க் கருதித் தமிழையும் தமிங்கிலமாக்கத் துடிப்பவர்கள்.

சிரியா நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது! அந்த நகரம் 3500 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் அக்கேடியன் மொழியில்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.