குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 9 ம் திகதி வியாழக் கிழமை .

கருத்தியல் அரசியலும் அரசியல் கருத்தியல்களும்.

20.06.2020.....தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்படபெரியார் -இரயினி: குறுக்குச்சால் ஓட்டுபவர்கள் (குறுக்குசால் என்றால் என்ன என உழுவு செய்யம் பயிர்செய்கைகயாளரிடம் கேட்டறியுங்கள்) இரயினிகாந்தின் அரசியல் மற்றும் சமூக ஈடுபாடு குறித்தெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது என்றொரு பொறுப்புத் துறப்பை முன்வைத்துவிட்டு குறுக்குச் சால் ஓட்டுகிறவர்கள் நேரடியாக இரயினியின் பெரியார் விமர்சனத்தை ஆதரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் இப்போதில்லை; எப்போதுமே பெரியார் என்ற பெயரையும் அவரது அரசியல், சமூகப் பங்களிப்பையும் அச்சத்தோடு கவனித்து மறுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அவரை நாத்திகம் மட்டுமே பேசியவராகக் குறுக்குவதை முதன்மையாகச் செய்கிறார்கள்.

சனாதனச் சடங்குகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த   இடைநிலைச் சாதிக்கூட்டங்களை நோக்கி இடையறாது பேசியவர் பெரியார். அவர்களின் அறியாமையையும், சாதிப் பெருமைகளையும் தாங்கள் சாதி அடுக்கில் மேலே இருப்பவர்கள் என்ற எண்ணங்களை அர்த்தமற்ற வெட்டிப் பேச்சுகள் எனச் சுட்டிக்காட்டியவர்.

சமூக நீதிக்கான அவரது போராட்டங்களையும் பரப்புரைகளையும் வாசித்துவிட்டு அதற்கான மறுப்புரைகளை முன்வைப்பதற்குப் பதிலாகத் தலித் (தீண்டப்படாதவர்)களுக்கெதிராக முன்னிறுத்த விருப்பம் கொண்டவர்களாகச் சில முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள். இந்து சமயத்திற்கெதிராகப் புத்தமதத்தை முன்மொழிந்த அயோத்திதாசரைப் பெரியார் மறைத்துவிட்டார் என்பது முதன்மையானது முன்னெடுப்பு. பிராமணப்பெண்களின் அபத்தச் சீற்றங்கள் இன்னொன்று.இவ்விரண்டையும் வைத்துக்கொண்டு இப்படிச் சில கேள்விகளைக் கேட்கலாமா?

இந்த முன்னெடுப்பை வைத்துக்கொண்டு இப்படிச் சில கேள்விகளைக் கேட்கலாமா? நாத்திகர் பெரியாரால் மறைக்கப்பட்ட அயோத்திதாசரைச் சமூகவெளியில்   முன்னே கொண்டுவந்து நிறுத்தி இந்துமத அபிமானிகள் கொண்டாடியிருக்கலாமே? அவர்களைத் தடுத்தது எது? அவர்களும் சேர்ந்து அயோத்திதாசரை ஏன் மறைத்தார்கள்?

எதிரியின் எதிரிக்கு உதவும் தந்திரோபாயம் என்ற அளவில் கூட அப்போது செய்யவில்லையே?  உலக நிகழ்வுகளையெல்லாம் அடையாளப்படுத்திய சுதேசமித்திரன் இதழில்,  அயோத்திதாசர் என்ற பெயரையும் அவரது அறிவுக்கூர்மையையும் பாராட்டாமல் - சுட்டிக்காட்டாமல் தடுத்தது எது?

தன்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகளை - இந்திய/ உலக அளவுப் பெயர்களைக் கவிதைப்பரப்பில் சுட்டிக் காட்டிய பாரதியார் ஏன் அயோத்திதாசர் என்ற பெயரைச் சுட்டிக்காட்டவில்லை என்றெல்லாம் கூடக் கேள்வி கேட்கலாம். அப்படிக் கேட்பது ஒருவித அபத்தம், அவரவரின் நிகழ்காலத்தில் எதைப் பேசுவது? எதனை ஆதரிப்பது? எதனை மறுப்பது? எதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தேர்வும் நோக்கமும் சார்ந்தன. அவர்களின் அரசியல் நிலைபாடுகள் சார்ந்தன.  அவர்களின் இயங்குநிலை சார்ந்தது.

முகநூலிலும் சமூக ஊடகங்களிலும் செயல்படும் பிராமணப் பெண்களின் சாதீய ஈடுபாடு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களைத் தங்களைப் பெண்களாகக் கருதுவதைவிடப் பிராமணப் பெண்களாகவே கருதிக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு தலித் பெண்ணியத்தின் நிலைபாடுகளுக்கு நேரெதிரானது. பாலடையாளத்தை முதன்மையாக நினைக்காமல் சாதி அடையாளத்தை முதன்மையாக நினைக்கிறார்கள்.   நாங்கள் முதலில் பெண்கள்; பிறகு தலித்துகள். அதனால் நாங்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாகிறோம் என்று வாதிடுகிறார்கள் தலித் பெண்கள். தலித் ஆண்களின் ஒடுக்குதலையும் ஒதுக்குதலையும் சேர்த்தே எதிர்க்கும் நிலைக்குமாறாகப்  பிராமணப்பெண்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள்ளேயே நிற்கிறார்கள். அதனால் கிடைக்கும் புனிதங்களாலும் பெருமைகளாலும் தங்களின் இடம் உயர்வானது என நினைக்கிறார்கள். அதனாலேயே பிராமணியத்தைக் கேள்விகேட்ட பெரியார் மீது கோபங்கொண்டு சீறுகிறார்கள்.

இந்திய/ தமிழ்ப்பரப்பில் பெண்களின் பொதுவெளிப்பங்கேற்புக்கும், பெண்கல்விக்கும், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கலுக்கும் காரணமான சொல்லாடல்களைத் தீவிரமாக முன்வைத்தவர் பெரியார். பெரியாரின். கருத்துகளை உள்வாங்கிச் செயல்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே இங்கு பெண்களுக்கான வெளிகளைத் திறந்துவிட்டுள்ளன.  அவரளவுக்கு இந்தியப் பரப்பில்  பெண்ணியம் சார்ந்த பாய்ச்சலான கருத்தியலை

முன்வைத்தவர் ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. இதனை அறிந்திருந்தபோதிலும் அதனைப் பேச மறுக்கும் பெண்கள், சீதாப்பிராட்டியைத் தங்களின் அடையாளமாகக் கருதிக் கொண்டு, அவரை அசிங்கப்படுத்திவிட்டது பெரியாரியம் எனக் கொந்தளிக்கிறார்கள். நவீனப் பிராமணப் பெண்களின் அடையாளம் சீதாப்பிராட்டி தானா? இறங்கு என்றால் நெருப்பில் இறங்கிக் கற்பை நிரூபிக்கத்தயாரான சீதாதேவியாகத் தங்களை நினைத்துக்கொண்டால் விமோசனங்கள் பக்கத்தில் இல்லை.

பெரியாரின் இயங்குநிலைகள் தேர்தல் அரசியல் அல்ல. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவரை - அவரது கருத்துகளை- முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட நினைத்தால் தேர்தல் அரசியலில் வெற்றிகள் சாத்தியமில்லை என்பதை அறிந்ததால் தான் திராவிட முன்னேற்றக்கழகமே உருவானது; மாற்றங்களை மேற்கொண்டது. அதற்காக அவரை எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் இன்று அவர் பெயரை உச்சரித்துச்  சாடுபவர்களின் நோக்கம் தேர்தல் அரசியல். தேர்தல் அரசியலின் அணிதிரட்டலுக்காக அவரது செயல்பாடுகளைப் பெரும்பான்மைக்கெதிரானதாகக் கட்டமைக்கிறார்கள். தலித்துகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற தனி அடையாளங்களை மறுக்கும் கருத்தியலாளர்கள் அனைவரையும் மத அடையாளத்தின் வழி ஒன்றாக்கப் பார்க்கிறார்கள். ஒன்றாக்கிச் சமநிலை பேணுவதல்ல அதன் பின்னிருக்கும் நோக்கம். ஒன்றாக்கி அரசியல் அதிகாரம் பெறுவது மட்டுமே அவர்கள் தேவை. அதன் பிறகு சனாதன தர்மம் தலித்துகளுக்கு எந்த இடத்தைத் தருமோ அதையே தருவார்கள். பெண்களை எங்கே நிறுத்துமோ அதையே உறுதி செய்வார்கள்.

பெரியாரை வெறுத்து ரஜினிகாந்த் முன்வைக்கும் ஆன்மீக அரசியலை ஆதரிக்கத்  தொடங்கினால், அவரது படங்களில் பெண்களுக்குத் தரும் உன்னத இடங்களை நீங்கள் அடையலாம். பெண்களைப் பற்றிப் படங்களில் அவர் பேசிய பொன்(பஞ்ச்) மொழிகளில் சில:

பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பயாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.

- அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

- ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருசன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.

- பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும்

- பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்.

- பொண்டாட்டிய புருசனை மதிக்கலேன்னா நரகம். புருசனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு பிறப்பிற்க்கும் நரகம்.

- பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.’ (நன்றி: கவிதா இலச்மி- நார்வே)

பெண்ணுரிமை -பெண்ணியம்- பெண் விடுதலை போன்ற வரங்களுக்கான பாதைகள் வேண்டாம். சாபங்களே போதும் என்றால் பெரியாரைச் சபித்துக் கொண்டிருக்கலாம்.

இது பரமபத விளையாட்டு

ஒவ்வொரு  நாடும் தனது குடிமக்கள் யார்? என்பதை வரையறை செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் சொந்த நாட்டுக் குடிமக்களின் எண்ணிக்கை எவ்வளவு? பிறநாடுகளிலிருந்து வந்து இங்கே தற்காலிகமாக இருப்பவர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? இருசாராருக்கும் உரிமைகளிலும் சலுகைகளிலும் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன எனத் திட்டமிட்டுச் செயல்படுவது பொறுப்புள்ள அரசின் செயல்பாடுகளே. இதற்காக மட்டுமே  இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை மறுசீரமைப்பு வரைவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை ஏற்பதில் யாருக்கும் சிக்கல் இருக்கப்போவதில்லை. ஒருநாட்டின் குடியுரிமை பிறப்பு அடிப்படையிலேயே ஒருவருக்குக் கிடைக்கவேண்டும் என்பது பொதுவான நடைமுறை. அத்தோடு அந்நாட்டின் அரசின் அனுமதியோடு குறிப்பிட்ட காலம் வாழ்ந்தவர்களுக்கும் குடியுரிமை பெறும் உரிமை உண்டு என்பது உலகநாடுகள் செயல்படுத்தும் நடைமுறை. ஒருவரின் பணி காரணமாக ஒருநாடு இரட்டைக் குடியுரிமைகளையும் வழங்கலாம். பல நாட்டுக் குடியுரிமைகொண்ட மனிதர்கள் கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வேலைத்திறம், சிறப்பு நிலை, மதிப்பு காரணமாக அப்படி வாய்ப்புகள் கிடைக்கும். அவை  நிரந்தர உரிமைகளாகவும் தற்காலிக உரிமைகளாகவும் அமையும். இப்போது நமது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குடியுரிமை மறுசீரமைப்புச் சட்ட முன்வரைவு இதுபோன்ற நடைமுறைகளை உருவாக்கி நாட்டை மேலாண்மை செய்வதற்கான ஒரு வரைவுத்திட்டம் என்பதைத் தாண்டி, வேறுவேறு நோக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. அந்நோக்கம் நாட்டின் அமைதிக்கும் சமாதான வாழ்வுக்கும் சிக்கல்களை உண்டாக்கிவிடும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றது.

நிகழ்காலத்து இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளை அதிகரித்துக் கொண்டே இருக்கும்படி முன்வைக்கப்படுகின்றன. அதன் உச்சகட்டம் தேசத்தை வன்முறைக் களமாக மாற்றிவிடும் என்பதை ஆளுங்கட்சி அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. வன்முறையைத் தனது இருப்புக்கான கருவியாகப் பார்ப்பவர்கள் அதைக் கூர்தீட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களோடு தேர்தல் கூட்டணி என்ற அளவில் உறவு வைக்க நினைக்கும் சிறுகட்சிகளும்கூட அவர்களை அறியாமலேயே வன்முறைக் களமாக அவரவர் இயங்கும் மாநிலங்களை மாற்றிவிடப் போகிறார்கள்.

இந்தியாவில் ஒற்றைப் பெருஞ்சமயத்திற்கெதிராக இன்னொரு சிறுபான்மையினரின் சமயம் என்பதாகக் கணக்குப் போட்டு இந்து X இசுலாமிய முரண்பாடு கட்டமைக்கப்படுகிறது. இக்கட்டமைப்பு அடிப்படையில் தவறானது. இந்தியாவில் பெரும்பான்மை X சிறுபான்மை எதிர்வு சமய வாழ்க்கை என்னும் ஒற்றைத்தளத்தில் மட்டும் இயங்கும் தன்மை கொண்டதல்ல. ஒவ்வொரு நிலவியல் பின்னணியிலும் வெவ்வேறு பெரும்பான்மைகளும் சிறுபான்மைகளும் இருக்கின்றன. சமய வாழ்க்கை போலவே இனம், மொழி, பண்பாட்டுக்கூறு என விதம்விதமாக வேறுபாடுகள் நிலவுகின்றன. அவற்றையும் தாண்டிச் சாதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலவியலிலும் – கிராமங்கள், நகரங்கள், தேர்தல் தொகுதிகள் என ஒவ்வொன்றிலும் இந்தப் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடுகளை உருவாக்கிப்  பாரதூரமானவை ஆக்குகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளான பஞ்சாயத்துகள், வட்டங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் என ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை உணர்ந்து கொண்டேதான் வாழ்கிறார்கள் இந்தியர்கள்.

சமய அடிப்படையிலேயேகூட ஒவ்வொரு சமயப்பிரிவும் உள் முரண்பாடுகளால் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் வாய்ப்புகள் கொண்டவை. இந்துசமயமாக உருவகப்படுத்தப்படும் இந்தியப் பெருஞ்சமயம் எப்போது அகச்சமயங்கள்  புறச்சமயங்கள் என்ற முரணைக் கொண்டிருந்தன என்பதைச் சமயங்களின் வரலாற்றைப் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இசுலாமியமும் 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கிறித்தவமும் அயல் சமயங்களாகக் கருதப்படுகின்றன.

வேதங்களையும் இசுமிருதிகளையும் அடிப்படைக் கோட்பாட்டு நூல்களாகக் கொண்டுள்ள வைதீகச் சமயத்திற்கு வெளியே இருப்பனவாகவே சைவம், சாக்தம், கௌமாரம்,காணாபத்தியம், சௌரம், சு(ஸ்)மார்த்தம் ஆகியன நிற்கின்றன. அவற்றிற்கும் வெளியே இருப்பனவாகப் புத்தமும் சமணமும் இருந்தன. ஒருவர் இதில் ஒன்றில் இருப்பவராக இங்கே நினைக்கிறாரேயொழிய இவை எல்லாம் எனது சமயவாழ்வின் பகுதிகள் என நினைப்பதில்லை. பக்தி, கர்மம், ஞானம் என மூன்று வழிமுறைகளையும் புறச் சமயங்களையும் நம்புகிறவர்கள் ஒன்றுபோல ஏற்பதில்லை. ஏதாவதொன்றையே முதன்மையாகக் கைக் கொள்வார்கள். அதேபோல் வேதாந்தம், சித்தாந்தம், அத்வைதம், துவைதம், சைவ சிந்தாந்தம், மீமாம்சம், சாங்கியம், வைசேடிகம், நியாயம், சார்வாகம் போன்றனவெல்லாம் இங்கே சமயச் சொல்லாடல்களாக நின்று வேற்றுமைப்படுத்தும் பணியையே செய்துள்ளன. எப்போதும் ஒற்றை மதமாக ஆக்கும் வேலையைச் செய்ததல்ல. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றைப் புறச்சமயம் எனப் பார்த்தே விவாதித்துள்ளன. அதே நேரத்தில் எதிர்ச்சமயம் என நினைக்கவில்லை. அப்படிநினைக்கத் தூண்டியன அரசதிகாரங்கள் மட்டுமே.

சமய வாழ்வில் நிலவும் இந்த முரண்பாடுகள் போலவே இனம் சார்ந்த முரண்பாடுகளும் இங்கே நிலவுகின்றன. திராவிட இனம், ஆரிய இனம், மங்கோலிய இனம் என இந்தியப் பரப்புக்குள் முதன்மையான இனங்கள் எப்போதும் இருந்துள்ளன  ஏற்புடன் வாழ்ந்துள்ளன. அதே போல் மொழிக்குடும்பங்களும் இரண்டு மூன்று இங்கே இருக்கின்றன. எல்லாக்காலங்களிலும் இன்றுள்ள இந்தியப் பரப்பு முழுவதும் வணிக ரீதியாகவும் சமயவாழ்வு சார்ந்தும் பயணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்ப் புலவர்களே கூடப் பல நேரங்களில் வட இந்தியப் பயணங்கள் செய்திருக்கிறார்கள். பக்தி இயக்க காலத்திலும் பின்னிடைக் காலத்திலும் வட இந்தியக் கோவில்களுக்குச் சென்று வந்தவர்கள் அங்கு உறைந்திருந்த கடவுள்களைப் பாடியுள்ளனர். அதேபோல வட இந்தியாவிலிருந்து வந்த பயணிகளின் குறிப்புகளும் பக்திக் கவிதைகளும் அந்தந்த மொழிகளில் கிடைக்கின்றன. இலக்கிய வடிவங்களும்கூட கொண்டு கொடுத்து வளர்ந்துள்ளன. இசுலாமியக் கவிதைக்குள்ளும் இந்தக் கொண்டு கொடுத்தல் நிகழ்ந்துள்ளன. மொழிகளும்கூடப் பெயர்ச்சொற்களைக் கொடுத்துள்ளன; பெற்றுள்ளன.

இந்த வரலாறும் பெரும்போக்குகளும் புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் தான் விடுதலை பெற்ற இந்தியாவை ஒற்றைப் பெருஞ்சமய நாடாக உருவகித்து அரசியல் சட்டத்தை உருவாக்காமல் பல்சமயங்களும் பல்லினங்களும் பல்மொழிகளும் பல் பண்பாட்டுக்கூறுகளும் இணைந்த – ஏற்றும் விட்டுக்கொடுத்தும் வாழக்கூடிய சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அக்கருத்தியல் நீண்ட கால நன்மைகளைக் கொண்டது.  அந்நன்மைகள் சிறுபான்மைச் சமூகங்களின் நல வாழ்வுக்கு மட்டும் உறுதிசெய்யும் தன்மை கொண்டதல்ல. பெரும்பான்மை சமூகங்களும் அதன் மூலம் சமாதான வாழ்க்கையை உறுதி செய்துகொள்ளும்.

குடியுரிமை வழங்குவதற்குக் கால அளவை அடிப்படைக் கூறாகக் கொள்ளாமல் ஒரிடத்திற்குச் சமயத்தை அடிப்படை அலகாகவும் இன்னோரிடத்தில் மொழியை  அடிப்படை அலகாகவும் வைப்பது இப்போதிலிருந்தே முரண்பாடுகளைக் கட்டியெழுப்பவே பயன்படும்.  இப்போது தோன்றும் அச்சவுணர்வு எதிர்காலத்தில் வாக்கு அரசியலிலிருந்து விலக்கிவைக்கும். பிரிவினை அரசியலுக்கு வழிவகுக்கும். இதனைப் புரிந்துகொண்டு முன்மொழிவில் மாற்றங்கள் செய்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதே  உலக சமுதாயத்திடம், மனிதாபிமான  அரசு என்ற பெயரை இந்திய அரசுக்குப் பெற்றுத்தரும். நாம் சகிப்பை -அகிம்சையை ஏற்றுப் பேசிய காந்தியின் தேசத்து மனிதர்கள் என்பதைத் திரும்பவும் உலகத்திற்குச் சொல்லவேண்டும்.  அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

திராவிட அரசியலின் இருப்பும் இயக்கமும்.

சாதி என்பது உருவாக்கப்பட்ட ’கருத்து’ என்பதைச் சொல்லிக்கொண்டே அதனை ”இருப்பாக”க் கருதிச் செயல்படுவதில் திராவிட அரசியல் தேர்ச்சிபெற்றுள்ளது. சென்னை இராயதானி உருவாக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது இந்தத் திராவிட அரசியல். அதன் பகுதிகளாக இருந்து மொழிவாரி மாநிலப்பிரிப்பிற்குப்பின் தனிமாநிலங்களாக மாறிவிட்ட தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட ஆந்திரம் என ஒவ்வொன்றிலும் நடப்பது திராவிட அரசியலின் பரிமாணங்களே.

திராவிட அரசியலைப் புரிந்துகொள்வதென்பது மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் உள்ளடக்கிய இடைநிலைச் சாதிகளின் மோதலையும் விட்டுக்கொடுத்தலையும் புரிந்துகொள்வதாகும். மனுசுமிருதியின் அடிப்படையிலான வகைப்பாட்டில் சத்திரிய, வைசிய சாதிகளாகக் கருதப்படும் இடைநிலைச்சாதிகள் அரசியலதிகாரத்தின் வழி பொருளியல் மேலாண்மையைப்பெற நடத்தும் போராட்டங்களில் அந்தந்தச் சாதிகளில் இருக்கும் ஏழைகளின் துயரத்தைப் பணயம் வைக்கின்றன.

தொடக்கத்தில் தங்களுக்கு மேலே இருப்பதாகப் பிராமணர்களைக்காட்டிக் கிண்டலும் கேலியும் பேசி அரசியல் செய்தன. இடைநிலைச்சாதிகளின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டபின் தங்களுக்குக்கீழே இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னச்சின்ன வளர்ச்சியை/ மேம்பட்ட வாழ்க்கையை முன்வைத்து வன்மத்தைத் தூண்டிவருகின்றன.

கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்றவற்றில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சாதிகள் எதிரெதிர் கட்சிகளில் தங்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்துச் சேர்ந்துகொள்வதைப்போலத் தமிழ்நாட்டில் நடப்பதில்லை. இதன் நிலைமை மாறானது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளின் அரசியல் தலைமையை எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சாதிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பொருளியல் வலிமையைக் கைப்பற்றிக்கொள்கின்றன பெரும்பான்மை எண்ணிக்கைச் சாதிகள்.

சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.யி.இராமச்சந்திரன், யெ.யெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் பொருளியல் வலிமைபெற்ற சாதிகளின் தேர்தல் இயக்கத்தைச் சமாளிப்பதற்கு இப்போதிருக்கும் தேர்தல் சட்டவிதிகள் போது மானவையல்ல என்பதைமட்டும் இப்போ தைக்கு உறுதியாகச் சொல்லலாம்.

உலகமயம் -காங்கிரசும் பா.ய.க.வும்.

உலகமயம் இந்தியாவில் ஒத்துக்கொள்ளப்பட்ட பொருளியல் உறவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட  பொருளாதார உறவுகள் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது.  அரசு தன்னைப்பெருந்தொழில் களில் முதலீடு செய்யும் முதலாளியாக நினைத்துகொண்டு முதலீடு செய்தது. அவை பெரும்பாலும் கனரகத் தொழில்களாக இருந்தன. சிறு மற்றும் குறுந்தொழில்களில் தனியார் துறைக்கு அனுமதிகளை வழங்கியது. அனுமதிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளும் தேக்கநிலையும் இருந்தன.ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஒரே அனுமதி என்பதைத் தாண்டிப் பல்வேறு கட்டங்களில் அனுமதிக்காக அரசு நிர்வாகத்திடம் தனியார் செல்லவேண்டியதிருந்தது.

தொழில் தொடங்குவதையும் உற்பத்தி செய்வதையும் ஒவ்வொரு கட்டத்திலும்  கட்டுப்படுத்திய அரசாங்க நடைமுறைகள் தேக்கத்திற்கு வழிசெய்வதாக இருந்தது. நிர்வாகம் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், பயன் அடைந்த மக்கள் என அனைவரிடமும் தேக்கம் நிலவுவதாக நம்பப்பட்டது. நடைமுறைகளின் மேல் அதிருப்தியும் நம்பிக்கை இன்மையும் ஏற்பட்ட நிலையில் தோன்றிய மாற்று முயற்சிதான் திறந்த பொருளாதார நடைமுறை.  இந்த நடைமுறைகள் திரு இராயவ்காந்தியின் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றாலும் திரு நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னணியில் உலகவங்கியில் பணியாற்றிவிட்டு நிதி அமைச்சராக வந்த முனைவர் மன்மோகன் சிங் இருந்தார். பின்னர் அவரே நாட்டின் முதன்மை அமைச்சரானார். உலகமயத்தைப் புரிந்து வைத்திருந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். புரியாத  அமைச்சர்களுக்குப் புரியவைக்கும் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கக் கூடும். அந்தப் புரிதலை மாநில முதல்வர்களுக்கும் மாநிலங்களில் ஆட்சியிலிருந்த மாற்றுக் கட்சியினருக்கும் புரியவைக்கும் முயற்சி அவ்வளவு விரைவாக நடந்தன என்று சொல்லமுடியாது.

திறந்த பொருளாதார முறைக்கு முன்பிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார முறையினால் விளைந்த நன்மைகளைவிடத் தீமைகளும் தடைகளும்தான் அதிகம் எனப் பொருளாதார வல்லுநர்களும் புதிய சிந்தனையாளர்களும் எழுதினார்கள்; பேசினார்கள். அதனை மறுத்துப் பேசிய - எழுதிய சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளில் ஒருசாராரும் -குறிப்பாக இடதுசாரிகள்- தங்கள் கருத்துக்களை வலுவாகச் சொல்லி மக்களை நம்பச் செய்ய முடியாமல் தவித்தார்கள்.அந்தப் பின்னணியில் தான்  திறந்த நிலைப் பொருளாதாரம், இந்திய அரசின் மையக் கொள்கையாக மாறியது.

அந்த நேரத்தில்  உலக அளவில் சோசலிசப் பொருளியல் உறவுகளையும் கட்டுமானங்களையும் கொண்டிருந்த இரச்யா, போலந்து, உக்ரைன், கங்கேரி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் உலக ஊடகங்களால் விரிவாகப் பேசப்பட்டன. இந்தியாவின் தேசிய ஊடகங்களும் ஊதிப் பெருக்கின. அவை  பெரும்பான்மை  மக்களைத் திசைமாறச் செய்தன. மனதளவில் இந்தியர்கள் தாராளமயத்தையும் உலக மயத்தையும், பெருமுதலாளிகளை மையமிட்ட உற்பத்தி மற்றும் விநியோக முறைமைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். மாறத் தயாரானார்கள்.

உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகிப் பரவிக் கொண்டிருந்த திறந்தநிலைப் பொருளாதாரம் இந்தியப் பரப்பில் ஏற்படுத்திய சாதகங்களும் பாதகங்களும் எத்தகையன என்று விவாதங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கின, விவாதங்களும் விமரிசனங்களும் இரண்டு வகையாக இருந்தன.  இடதுசாரிகள் உலகமயம் ஆபத்தானது என்ற கோணத்தில் விமரிசனங்கள் வைத்தார்கள். அதைத் தடுக்க நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற சொல்லும் தெம்பும் கட்சிப்பலமும் அவர்களுக்கு இல்லை. இதற்கு மாறாகப் பா.ஜ.க.வினர் உலக மயம், தாராளமயம், தனியார் மயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழல் நடக்கிறது என்று விமரிசித்தார்கள். அத்தோடு இந்தியத் தன்மை பொருளியல் நடவடிக்கைகளின் ஆதரவாளர்கள்போலக் காட்டிக்கொண்டார்கள். . நாங்கள் வந்தால் அந்த ஊழ்ல்கள் நடக்காது என்றார்கள்; இந்தியப் பண்பாடு, இந்தியக் கல்விமுறை, இந்தியச் சிந்தனை முறை போன்றனவற்றைத் திரும்பக் கொண்டுவந்து விடுவோம். அந்நிய அடையாளங்கள் இல்லாமல் ஆக்கப்படும் எனப் பொருளியல் மற்றும் பண்பாட்டுப் பாதைகளைப் பற்றிப் பேசினார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மை மக்களின் ஏற்புடன் நுழைந்த அல்லது நுழைக்கப் பட்ட திறந்த நிலைப் பொருளாதாரம் அதன் சாத்தியங்களைப் பலவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பெருநகரங்களில் முழுமையாகவும், சிறுநகரங்களில் ஒன்றுக்குப் பாதியாகவும் காணலாம். வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் எதாவது ஒரு ரூபத்தில் தனது அடையாளத்தைக் கிராமங்கள் அளவிற்கும் கொண்டு போய்விட்டது உலகமயம்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் உரிமங்கள் பெறுவது எளிதாக்கப்பட்டதாலும் தொழிற் பேட்டைகளுக்குப் பதிலாகப் பதிலாகத் தொழிற்பூங்காக்கங்கள் அமைக்கப்பட்டு அரசின் நேரடிக்கவனிப்பில் சலுகைகள் தரப்பட்டு உற்பத்தியும் பங்கீடும் நடக்கின்றன. அவற்றிற்குப் பெறப்பட வேண்டிய வரிவிதிப்பு முறை தேசந் தழுவிய முறையாக ஆக்கப்பட்டிருக்கிறது. சில பிரிவுகளில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அரசின் தேர்வு வாரியங்களும் கூட இன்னும் சில ஆண்டுகளில் தேவையில்லாமல் போய்விடக் கூடும். ஏனென்றால் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்திக் காட்டித்தான் மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தின் பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.

உலகமயப் பொருளாதாரம் சில புதிய துறைகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்கென உருவாக்கப்பட்ட நபர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. மின்னணுவியல் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு, சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான் ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பு போன்றன வளர்ந்துள்ளன, தகவல் தொழில் நுட்பம், தொடர்பியல்துறை, நுகர்வோர் வணிகம் ஆகிய ஏராளமான இளைஞர்களுக்கும் ,இயுவதிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதோடு கூடுதலான சம்பளத்தையும் வழங்கு அவர்களை நுகர்வுக் கலாசாரத்தின் பங்காளிகளாகவும் ஆக்கி விட்டது.

இதன் அடுத்த கட்டத்தை அரசியல் கட்சிகள் எடுத்துக் கொண்டு விட்டன. மக்களிடம் தங்கள் அரசியல், பொருளாதார, சமூகக்கொள்கை களைப் பேசுவதற்காகத் தெருமுனைப் போராட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்த அவை இப்போது  வேலை வாய்ப்பு முகாம்களைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதன் மூலம் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் திருப்பி விட முடியும் என நம்புகின்றன.

நகரங்களை மையமிட்டுத் தொடங்கப்பட்ட புதுவகைக் கல்வி நிறுவனங்கள்  விளிம்புகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வகவகையான பாடங்களை அவை அறிமுகப் படுத்துகின்றன. இவையெல்லாம் வியாபார உத்திகளின் நீட்சி எனக் குற்றம் சாட்டப்படும் வாய்ப்புகள் என்றாலும் அவை நடக்கின்றன. ‘வழிகளைப் பார்க்க வேண்டாம்; விளைவுகளைப் பாருங்கள் ’ என்று சொல்லும் அற மறுப்புவாதிகளின் பேச்சு என்றாலும் மாற்றங்கள் நடந்துள்ளன. மாற்றங்களே நடக்கவே இல்லை என்று வாதிட்டால்  உண்மையின் பக்கம் இல்லாதவர்கள் என்பதாகிவிடும்.

இந்தியக் காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் மைய, மாநில அரசுகள் இரண்டுமே- பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கி அவற்றை வளர்த்த பின்னர் அவர்களிடமிருந்து வரிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கி மக்கள் நலனுக்குப் பயன்படுத்த முடியும் என நம்புகின்றன. அந்த நம்பிக்கை ஓரளவு நிறைவேறவே செய்துள்ளது. பெருநகரங்களில் தொடங்கும் நான்கு வழிச் சாலைகளும்,அவற்றில் கட்டப்படும்  பெரும்பாலங்களும் கிராமங்களுக்கும் போகின்றன. வண்ணத் தொலைக்காட்சிகளை விளிம்பு நிலை மக்களும் பார்க்கவே செய்கின்றனர். புது வகை ஆடைகளையும் கல்வியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளத் தடைகள் எதுவும் இல்லை. ஆனால் எப்படிப் பெறுவார்கள் என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாது.ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்யும் கடந்த 6 ஆண்டுகளிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருமுதலாளிகளை உருவாக்குவதற்குப் பதிலாக எண்ணிக்கை குறைவான முதலாளிகள் இருந்தால் போதும் என்று பொருளியல் நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. அதானி, அம்பானி என்ற பெயர்கள் எல்லாவற்றிற்கும் பரிசீலிக்கப் படுகின்றன.

விடுதலைக்குப் பிந்திய 50 ஆண்டுகள் நடந்த வளர்ச்சிகளைக் கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிட்டு அண்மைய வளர்ச்சியே வேகம் கொண்டது என வாதிட முடியும். ஆனால் அந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்ட உள்கட்டுமானங்கள் இல்லாமல் இப்போதைய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மாற்றங்களும் வளர்ச்சியும் உலகமயப் பொருளாதாரத்திற்குப் பின் ஏற்பட்டுள்ளன என்றாலும் அவை எல்லாம் ஓர்மைப்பட்டனவாக இல்லை.ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் ஒன்றாகக் கருதாமல் குறிப்பிட்ட வகை மனிதர்களை மட்டும் மேன்மைப் படுத்தும் ஒரு கொள்கையை ஏற்கமுடியவில்லை என்பதால்  அதன் வெளிப்பாடுகள் பாதகமானவை என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.  இதையெல்லாம் விட  இந்தியாவில் உலகமயம் எல்லா வகையிலும் தோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல வலுவான ஒரு காரணம் இருக்கிறது.

உலகம் தழுவிய நோக்கம், அமைப்பு, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு என வளர்த்தெடுக்க வேண்டிய உலகமயப் பொருளாதாரம் இவை எல்லாவற்றிலும் எதிர்த் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அதன் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?

உலக அரசுகளின் ஒரு கிளையாக இந்திய அரசும் இருக்கிறது; எனவே உலகத்தின் சட்ட திட்டங்களுக்கு இந்தியர்களும் கட்டுப் பட வேண்டும் எனப் பேசும் அதே நேரத்தில் நமது அரசு அமைப்பின் கடைக்கோடியான உள்ளாட்சி நிர்வாகங்களும் மாவட்ட நிர்வாகங்களும் எந்தவிதச் சுதந்திரமும் இல்லாமல் தனிநபர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகிக் கொண்டிருப்பது நன்றா? தீதா?

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாகப் பல கேள்விகளை எழுப்பலாம்

1.இங்கே தோன்றிக் கொண்டிருக்கும் வட்டார ஆதிக்க மனோபாவமும் அதன் தொடர்ச்சியாகப் பழைய சாதிப்பெருமைகளின் வளர்ச்சியும் நன்றா? தீதா? இதற்கும் உலகமயப் பொருளாதாரத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி விட முடியுமா?

2. நவீனத்துவ வரவின் மூலம் விடுதலை அடைந்தவர்களாகக் கருதிய பெண்கள், ஒடுக்கப்பட்ட குழுவினர், இடம் சார்ந்த சிறுபான்மைக்குழுவினர் தங்கள் விடுதலை உணர்வைத் தொலைத்து விட்டு அச்ச உணர்வில் வாழ நேர்ந்துள்ளதற்கும் உலகமயத்திற்கும் தொடர்பு இல்லையா?

3. அரசியல் தளத்தில் புதுவகைப் பண்பாடு எதுவும் நுழைந்து விடாமல் தடுக்கும் வாய்ப்பே உலகமயப் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னும் தொடரும் என்றால் எதற்காக அதனை நாம் வரவேற்க வேண்டும்?

4, கல்வி, வேலைவாய்ப்பு, தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்ளத் தேவையான அடையாளங்களை உருவாக்குதல் போன்றவற்றை மறுப்பதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புவதாக மாறிப் போனால் உலகமயத்தின் பின் விளைவுகள் எத்தகைய ஆபத்தைச் சந்திக்கும் என்பதை உணரவேண்டியது அவசியமில்லையா?

இப்படிப் பல கேள்விகளை எழுப்பி நம் காலத்தை விசாரிக்கும் போது நன்மையும் தீமையும் எதுவெனப் புரியவரலாம்.

எண் விளையாட்டு இந்தியாவில் எப்போதும் பேசுபொருளாக இருப்பது இட ஒதுக்கீடு என்னும் எண் விளையாட்டு. மைய அரசுப் பங்கீடு 1 +1 . ஒதுக்கப்படும் பங்கீடு 50 சதவீதம். ஒதுக்கப்படாத பங்கு 50. ஒதுக்கப்படாத 50 சதவீத இடங்களில் அனைவரும் போட்டியிட்டுத் தங்களின் திறமையின் அடிப்படையில் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடங்களில் பழங்குடியினருக்கு 7.5% , சமூக ஒதுக்குதல் அடிப்படையிலான பட்டியல் இனத்தவருக்கு 15%, பிற பிற்பட்டோருக்கு 27.5 %.

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுப் பிரிப்பு இதிலிருந்து மாறுபட்டது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு முழுமையும் சாதிப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் நோக்கம் இட ஒதுக்கீட்டின் வழியாக சமூக நீதியைக் கொண்டுவருவது என விளக்கப்படுகிறது. முழுமையாக அது நடக்கவில்லை என்றாலும் ஒருவிதப் பரவலாக்கம் நடக்கும் சாத்தியங்கள் அதில் உண்டு. அதற்காக 31 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படாத பொதுப் போட்டிக்குரிய பங்கு என வரையறுக்கப் பட்டுள்ளது.  69 % இடங்கள் ஒதுக்கப்பட்டவை பிற்படுத்தப்பட்டோருக்கு 30 %.  இதற்குள் இசுலாமியருக்கு உள் ஒதுக்கீடு 3.5 %. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 %. பட்டியலினத்தவருக்கு 15%. அதற்குள் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு 3%. பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 1 %.

இருவகை இட ஒதுக்கீடுகளும் இரண்டு இடங்களில் -கல்வி நிறுவனங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்புகளில் தான் கவனமாகப் பார்க்கப்படுகின்றன. அரசுத் துறையால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கக் குழுக்கள் இருக்கின்றன. அதேபோல் பொதுத்துறை மற்றும் அரசுத்துறைகளில் இருக்கும் வேலைகளைப் பெறுவதற்கு நடக்கும் போட்டிகளிலும் கவனமாகப் பார்க்கப்படுகின்றன.

இட ஒதுக்கீடு திறமை, தகுதி போன்றவற்றைக் கவனிக்காமல் சாதியை மட்டுமே கவனத்தில் கொள்கின்றது. அதனால் இந்திய அறிவும் திறனும் இந்தியாவுக்குப் பயன்படாமல் போகின்றது. எனவே இட ஒதுக்கீட்டுமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பல காலமாகப் பல அமைப்புகள் பலவிதமான சொல்லாடல்களில் முன் வைத்துக்கொண்டிருந்தன. அவர்களின் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக பா;ஜ.க. இருந்தது. இப்போது மைய அரசியல் அதிகாரத்தில்  இருக்கிறது. தேர்தல் அரசியலின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால் இட

ஒதுக்கீட்டை உடனடியாக நீக்க முடியாது. அதற்கு ஒரு மாற்றுத் திட்டமாக வந்ததே பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய பிரிவுகளுக்கு 10% சதவீத இட ஒதுக்கீடு என்பது.  இந்தச் சொற்களுக்குச் சரியாக அர்த்தம் கொடுத்தால் இந்தியாவில் இருக்கும் அனைத்துத்தரப்பினரிலும் - சாதி, மதம் பார்க்காமல் அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் ஏழைகளுக்கு இந்த ஒதுக்கீடு எனப் பொருள் தரும். ஆனால் இதனை விளக்குபவர்கள் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் பலன் அடையாத மேல்நிலை சாதிகளுக்கு என அர்த்தமும் மறுவிளக்கங்களும் கற்பிக்கின்றனர்.

தங்கள் சாதியை முன்னேறிய சாதிகள் என்று பட்டியலில் வைத்துக் கொண்டே  இட ஒதுக்கீட்டில் இடம் கேட்பது எவ்வளவு அபத்தம் என்பதை இவர்கள் உணராமல் இருக்கிறார்கள் என்பது உண்மையில்லை.  அறிவாளிகள் எனச் சொல்லிக் கொள்ளும் பிராமணர்கள், இந்த ஒதுக்கீடு முழுமையும்  தங்களுக்கானது எனவே நினைக்கிறார்கள். இப்போது சொல்லவில்லையென்றாலும்  நெருங்கிநெருங்கிப் போகும்போது  சொல்லக் கூடும். இப்போதே வாதங்களும்  உதாரணங்களும் அவர்களிடமிருந்துதான் வருகின்றன.

இந்த ஒதுக்கீட்டிற்குப் பின்னால் இந்திய ஏழைகளை வரையறை செய்வதில் விநோதமான பார்வைகள் வைக்கப்படுகின்றன. சாதியடிப்படை இட ஒதுக்கீட்டில் ஏழைகளின் ஆண்டு வருமானத்திற்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஏழைகளின் ஆண்டு வருமானத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கின்றன. இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கண்களைக் கட்டிக் கொண்டு விவாதிக்கிறார்கள்  10 % ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தாராளவாத முகங்களையும் காட்டுகிறார்கள்

இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் கல்வித்துறை குழுக்கள் பலவற்றில் நான் இருந்துள்ளேன். அக்குழுவினர் முதலில் செய்ய வேண்டியது பொதுப் போட்டியில் இடம்பெறுபவர்கள் யார்?யார்? என்பதையே. மொத்த விண்ணப்பத்தில் அதை நிரப்பிய பின்பே சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளுக்கு வரவேண்டும். அதையும் கீழிருந்து தொடங்க வேண்டும்.  உரிய இடங்களுக்கு ஆட்கள் வரவில்லையென்றால் காத்திருப்புக் காலம் ஒன்றைத் தர வேண்டும். பின்னர் மற்றப் பிரிவுகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். அப்படி நிரப்புவதற்கும் விதிகளும் முறைகளும் இருக்கின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமாக விதிமீறல்கள் நடக்க வாய்ப்பில்லை. இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்கப் போதுமான குழுக்களும் முறைகளும் அங்கே இருக்கின்றன. அதையும் தாண்டிச் சில இடங்களில் முறைகேடுகள் நடக்கவும் செய்யும். அப்போது தன் சமூகத்திற்குத் துரோகம் செய்யும் நபர்கள் அங்கே குழுக்களில் இருந்து சம்மதம் - ஒப்புதல் தெரிவித்திருப்பார்கள். ஆனால் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களிலும் துறைகளிலும் தெரிந்தே மீறல் நடக்கின்றன என்பதுதான் உண்மை. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும்போது விதிமீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.

இடஒதுக்கீடு என்னும் எண் விளையாட்டு இப்போது கூர்மைப் பட்டிருக்கிறது .பாரதடேட் வங்கியின் - பொதுத்துறை வங்கியின் முதல்நிலைப் போட்டித் தேர்வு முடிவுகள் ஏவியவர்களை நோக்கிப் பாயும் அம்பாக மாறியிருக்கிறது.. இரண்டாம் நிலைத் தேர்வில் கலந்துகொள்வதற்கான குறைந்த அளவு மதிப்பெண்களாக ஒரு எண் விளையாட்டைத் தந்துள்ளது. பிற பிட்டோருக்கு 61.25; பட்டியலினத்தவருக்கு -61.25, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு -53.75. ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பாருக்கு 28.5. பொதுப்போட்டியில் இடம் பெற வேண்டியவர்களுக்குக் கடைசியில் இருக்கும் 28.5 மதிப்பெண்கள் பெற்றால்  போதும் எனச் சொல்வது மோசடியான வாய்ப்பளிப்பு எனக் குற்றம் சாட்டுபவர்கள் தேர்வு முறையையும் விதிகளையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். அந்தப்பிரிவில் இருந்தவர்கள் அறிவும் திறனும் கொண்டவர்கள் என்று இதுவரை சொல்லப்பட்டதே? அது உண்மையில்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கலாம். அப்படியான ஒரு பதிலைத் தினமலர் ஆசிரியர்கள் குழுவில் இருக்கும் வெங்கடேஷ் இன்று காலை ஒரு தொலைக்காட்சி விவாதித்தில் தந்தார். விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் பின்பற்றப்பட்ட நடைமுறையால் முன்னேறிய சமூகத்தவர்கள் கல்வி கற்க முடியாமல் போய்விட்டார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதின் விளைவுதான் இது என்றார். அவரது வாதம் அபாரமான வாதம் ஆனால் , கொஞ்சம் யோசித்தால் அபத்தமான வாதமும்கூட. தீண்டாமையின் பெயராலும் வாய்ப்புகள்உருவாக்கப் படாததின் காரணமாகவும் பின் தங்கியவர்கள் பட்டியலின, பழங்குடியின மக்கள். அவர்களை விடவும் பாதிக்கப்பட்டவர்களாக முன்னேறிய ஏழைகள் இருக்கிறார்கள் எனச் சொல்வது நெஞ்சறிந்து சொல்லும் பொய். சென்னையைத் தாண்டி ஒரு கிராமத்தின் தெருக்களை ஒரேயொரு தடவை நடந்து பார்த்தால் கூட இப்படிச் சொல்ல மனம்வராது.

நீண்ட கால வரலாறு சொல்வது என்ன? வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்பது உண்மைதானா? பல்லவர்கள் தொடங்கிப் நாயக்கர்கள் காலம் வரை வழங்கப்பட்ட பிரமதேய இனாம் நிலங்களில் இறங்கிக் காளைகளையும் எருமைகளையும் பூட்டி உழுது, பயிரிட்டு, அறுத்துக் காய வைத்து அக்கிரஹாரத்தில் மூடைகளை அடுக்கி வைத்திருக்கலாமே. அதைச் செய்யாமல் தடுத்தது யார்? நிலத்தின் விளைச்சலைப் பங்கிட்ட முறைகளைப் பேசும் பள்ளுநூல்கள் பிராமணர்களுக்கு நெல்லை வீட்டிற்கே அனுப்பி வைத்ததாகச் சொல்கின்றனவே . அவையெல்லாம் உண்மையில்லையா? பண்ணைவிசாரிப்பான்களாகக் கூட வயல் வரப்புகளில் நின்றறியாத கூட்டம் அது. உடல் உழைப்பைக் கேவலமாக நினைத்து ஒதுங்கிப் போன கூட்டம் வாய்ப்புகள் தரப்படவில்லை என்கிறது. உடல் உழைப்பில் ஈடுபடாமல் மூளையால் வாழும் வாழ்க்கை யைத் தேர்வுசெய்துகொண்டு அரண்மனைகளிலும் கோயில்களிலும் குருகுலத்திலும் பள்ளிகளிலும் இசைக் கூடங்களிலும் அலுங்காமல் குலுங்காமல் திரிந்தவர்கள் யார்? அரசுப் பள்ளிகளில் பயில்வதைவிடத் தனியார் பள்ளிகளிலும் மத்திய வாரியப்பள்ளிகளிலும் பயில்வதே மேலானது எனத் திசைமாறிய கூட்டம் 1960 களுக்குப் பின்னர் தானே உருவானது. விண்ணப்பித்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பதை முன்வைத்திருக்கலாமே. உங்கள் விண்ணப்பங்கள் எல்லாம் தொழில் கல்வியை நோக்கி நகர்ந்தபோது தானே 69 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவில் இருப்பார்கள்; இல்லையென்றால் அடுப்பங்கரையில் அப்பளம் போடுவார்கள் என்று சொன்ன சுயாதாவை மேற்கொள் காட்டும் வெங்கடேச் போன்ற பத்திரிகையாளர்களுக்கு என்ன வாய்ப்பு மறுக்கப்பட்டது.  தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் கூட்டம் எந்தக் கூட்டம்?. கருத்துருவாக்கிகளாகவும் கணக்குக் காட்டுபவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கும் நபர்கள் எங்கிருந்து வந்தவர்கள். அவர்களின் புத்திசாலித்தனத்தை யாரால் நிரப்ப முடியும்?  கலை, இலக்கியங்களில் உன்னதக் கலை என்று  ஒற்றைப்பரிமாணத்உதை வலியுறுத்திச் சல்லியடிக்கும் நபர்களின் வாய்ப்புகளை யாராவது தட்டிப் பறிக்க முடியுமா?  அவர்களின் கொள்கைகளும் பனுவல்களும் தானே விருதுகளைப் பெறுகின்றன.

தரகு வேலையைத் தாண்டி ஒரு தார்ச்சாலைப் பணியாளராக யாராவது போட்டியிட்டு வருகிறார்களா? போக்குவரத்துத்துறையில் அலுவலகப் பணிக்குப் போட்டிபோடுபவர்கள் கனரக வாகனங்களை ஓட்டும்  ஓட்டுநர் பணிக்கு வராமல் ஒதுங்குவது ஏன்? உடலைக் கேவலமாகவும் உடல் உழைப்பைக் கேவலமாகவும் நினைக்கும் கூட்டம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகக் கூறுவது என்ன நியாயம்? இந்த ஆட்சிக்காலம் குப்தர்காலம் போன்றதொரு - சோழர்காலம் போன்றதொரு பொற்காலமாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் காலத்தில் கிடைத்தது போன்றதொரு பாதுகாப்பும் நூறு சதவீத வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். நடக்கட்டும் திருவிழாக்கள்.இரட்டை எதிர்வு

எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக் கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது

அண்மைக்கால நிகழ்வுகளான மாடுபிடிப் போட்டி தொடங்கி மாவுப்பொட்டலம் வரை எதிரெதிர் முனைகளாகப் பிரிந்துவிடும் லாவகம் இங்கே தன்னெழுச்சியாக உருவாகி விடுகிறது. ஆண்டாள் பாடல், இராயராய சோழன் எனப்பண்பாட்டுக் குறியீடுகள் மட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர், முல்லைப் பெரியாரில் அணை, மருத்துவக் கல்விக்கான மையப்படுத்தப்பெற்ற பொதுத்தேர்வு, நாடு தழுவிய வரிவிதிப்புக் கொள்கை, சென்னையில் தொழிற்பெருக்கம், மதுரையில் ஆய்வுக் கூட மருத்துவமனை, திருப்பூரில் சாக்கடைப் பெருக்கம், வரப்போகும் கல்விக் கொள்கை, வேளாண்மையைக் கைவிட்டுவிட்டுத் தொழிற்சாலைகளைச் சார்ந்த வாழ்க்கை எனப் பொருளியல், கல்வி, உடல்நலம், சூழல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு என்றாலும் இந்த இரட்டை எதிர்வு தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. உருவாக்கப்படும் இரட்டை எதிர்வில் எப்போதும் ஒரு தரப்பாகப் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் அவர்கள் பலம் வாய்ந்த தரப்பாக - கருத்தியல் பலம் வாய்ந்த தரப்பாக இருக்கிறார்கள். அந்தத் தரப்பின் முன்மொழிவுகளை விவாதிக்கும் தரப்புகளாகவே மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்க வேண்டிய சார்பைத் தீர்மானித்த இடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நிலைபாடு முன்னி ற்கிறது. பிராமணர்கள் எதனை ஆதரிக்கிறார்களோ, அதற்கெதிரான நிலைபாட்டை மற்றவர்கள் எடுக்கவேண்டும் என்று கற்றுத் தந்து விட்டுப் போயிருக்கிறார்.

அதுவே பெரியாரின் மண் என்ற சொல்லாடலின் பின்னிருக்கும் எடுகோள். இதனை உள்வாங்கிய நிலைபாட்டோடு பேசும் பேச்சுகள்தான் ‘பெரியார் மண்’ என்ற சொல்லாடலின் தளவிரிவு. அதல்லாமல் கடவுளை மறுத்ததையும் சமய நடவடிக்கைகளுக்கெதிராகப் பேசியனவற்றையும் பெரியாராகக் கணித்தால் திசைமாற்றமே ஏற்படும். பெரியாரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் முன்வைப்பதில் இருக்கும் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 60 ஆண்டுகாலத் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கோயில்களும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கூடியுள்ளன. அதுவே பெரியாரின் தோல்வியைக் காட்டுகின்றன என்று பேசி இது பெரியாரின் மண் அல்ல என்ற கருத்தை உருவாக்கும் முயற்சிகளின் பரப்புரைகள் அவை.

மாநிலக் கட்சியா? தேசிய கட்சியா? என்ற பார்வையை விடவும் இதன்வழி உண்டாகும் பலனை அடையப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வியை முன்வைத்தே சொல்லாடல்கள் தமிழ்நாட்டில் உருவாகிறது. நிகழ்வொன்றைக் கணிக்கும்போது எந்த வர்க்கத்தின் சார்பாக இருக்கப் போகிறது என்று கணிக்கவேண்டும். அதில் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் பக்கம் நிற்பது முக்கியம் என்று பாடம்படித்த பொதுவுடைமை இயக்கங்கள் சார்புநிலை எடுக்கமுடியாமல் தவிக்கக் காரணம் அவை பொருளியல் நடவடிக்கைகளை மட்டுமே கணக்கில் எடுக்கின்றன. பிராமணியம் ஒரு வர்க்கம்; அது பொருளியல் நடவடிக்கைகளை வெளிக்காட்டாமல் பண்பாடு, கலை, அழகியல், தத்துவம் என மேற்கட்டுமானங்களில் மட்டுமே இயங்குவதாகப் பாவனை செய்யும் வர்க்கம். பிராமணியம் என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரக்கண்ணி எனப் புரியத்தொடங்கினால் குழப்பங்களின் மீது வெளிச்சம் பரவலாம்.

நாடெங்கும் தவளைக்கூச்சல்

இன்னும் ஒருவாரத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்தத் தேர்தல் எதற்காக நடந்தது; எதனை இந்திய மக்கள் ஆதரித்தார்கள் என்பதும் தெரிந்துவிடும். மக்களாட்சி முறைமையின் தர்க்கங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையற்ற அரசமைப்பைக் கொண்டது இந்தியா. இதனைத் தேர்தல் காலங்கள் மட்டுமே புலப்படுத்தி வருகின்றன. அரசியல் சொல்லாடல்களில் இந்தியர்களாகிய நாம் அல்லது வாக்களிக்கும் பெரும்பான்மையர்களாகிய இந்தியர்கள் எங்கே இருக்கிறோம் . மரபுக்குள்ளா? நவீனத்திலா...?, பின் நவீனத்துவ விளையாட்டிலா..?

கற்பிதமான அகண்ட பாரதத்தை முன்மொழிந்த மரபின் பிடிமானத்தை ஆதரித்தார்களா? பெருந்தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட நவீனத்துவ நகர்வை விரும்புகிறார்களா? இவ்விரண்டின் கலவையான பின் - நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப்போகிறார்களா? இதையெல்லாம் தெரியாமலேயே எனது வாக்கின் விலை இவ்வளவுதான் எனக் கையளிப்புசெய்துவிட்ட இந்தியனின் அடுத்த ஐந்தாண்டுக்காலம் என்னவாக இருக்கப் போகிறது.

300 ஆண்டுகளுக்கு முந்திய மரபான வாழ்க்கையின் எச்சங்களை நடைமுறைப்படுத்தும் அரசை அமைப்பதற்காக இந்திய மக்கள் விரும்பினார்கள் என்பது உறுதிப்பட்டால் வேகமாக நாம் பின்னோக்கி நகர்ந்தாக வேண்டும். இப்போது மைய அரசில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அதைத்தான் செய்யப்போகிறது. கடந்த தேர்தலில் ஸ்ரீமான் நரேந்திர தாமோதரர் மோதியைக் காட்டி வாக்குகள் வாங்கிய அந்தக் கட்சி இந்தமுறை காட்டியுள்ள முகங்கள் அதைவிடப் பின்னோக்கி இழுக்கும் முகங்கள். யோகிகள் என்றும் சாமியாரினிகள் என்றும் சாதுக்கள் என்றும் குருமார்கள் என்றும் அழைக்கப்படும் பெயர்களுக்குப் பின்னால் புனித வட்டங்கள் இருப்பதாக நம்பி வாக்களித்திருந்தால் மத்தியகால வன்முறை வாழ்க்கையை இந்தியர்கள் நேசிக்கிறார்கள் என்பது வெளிப்படை.

இதற்குப் பதிலாக 1950 -க்குப் பின் ஒவ்வொரு அடியாக முன்வைத்து நடந்து நடந்து அடைந்த இலக்குகளைக் காக்கும்படி வாக்களித்து விட்டார்கள் என்றால் நிதானமான பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ளலாம்.ஆனால் அந்தப் பெருமூச்சும் வெக்கையோடு கூடிய பெருமூச்சுதான், மரபை விரும்பினாலும் நவீன வாழ்க்கையை நேசித்தாலும் பின் நவீன வாழ்முறையிலிருந்து எவரொருவரும் தப்பிவிட முடியாது. ஏனென்றால், நமது காலம் பின் நவீனத்துவக் காலம். தேசம், மொழி, மதம், போன்ற பேரலகுகளின் அடையாளங்கள் கற்பனைகளாக ஆக்கப்பட்டுள்ள காலம். பருண்மையான எல்லைகளைச் சொல்லி இவற்றை அடையாளப்படுத்திவிட முடியாது.

பொருளியல் நிலைபாட்டிலும் கூட தேசிய முதலாளிகள் என்ற வரையறைகளும் முடிந்துவிட்டன. திருநெல்வேலி நகரத்தின் சுற்றுச் சாலைக்குப் பக்கத்தில் காற்றுப்புகாத -குளிரூட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் தான்சானியாவிற்கான புள்ளியியல் தரவுகளை அடுக்கி, கொண்டாட்ட நிகழ்வுகளின் காட்சிப் பதுமைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கும் குழுவில் தான்சானியக் காட்சி ஊடக வல்லுநனரோடு சீனப்பெண்ணும் தமிழ்ச் சைவ இளைஞனும் கொரியாவின் நடுத்தர வயதுக்காரும் சேர்ந்து வேலைசெய்கிறார்கள்.

பெருமுதலாளிகளும் பெரும் வணிகளும் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும் மாவடுவை இரண்டாண்டு தாக்குப்பிடிக்கும் டப்பாக்களில் அடைத்துக் காப்பது எப்படி என்று ஆய்வுக்கு உதவுகிறார்கள். பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் பன்னாட்டு நிதியங்களின் உதவியோடு ஆய்வுத் திட்டங் களை மேற்கொள்கின்றன. அதற்குத் தேவையில்லாத - தயாரில்லாத - ஒத்துப் போகாத சமூகவியல் புலங்களும் மொழிசார் துறைகளும் மூடப்படுவதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை.

பின்- நவீனத்துவம் கருத்தியல் ரீதியாகச் சிற்றலகுகளை உருவாக்கும்; கொண்டாடும். ஆனால் இந்தியாவில் முற்றிலும் எதிர்நிலையில் இருக்கிறது. மரபைக் கைவிடாமல் நவீனத்துவத்திற்குள் நுழைந்த இந்தியப் பரப்பு அதே கோலத்தோடு பின் நவீனத்துவக் கட்டமைப் பையும் உள்வாங்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான சிற்றலகுகள் நவீனத்துவத்தை மறுக்கும் மரபு அமைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உருவாகும் சிற்றலகுகளை- சிற்றலைக் கதையாடல்களாகக் (LITTLE NARRATION ) கருதமுடி வில்லை. இந்தியச் சூழலில் தோன்றும் அல்லது தோற்றுவிக்கப்படும் சிற்றலைக் கதையாடல்கள் ஒருவிதமான தொங்குதசைகளாக மாறி, தாங்கும் உடலுக்கு நோய்மைகளையே உண்டாக்குகின்றன. தமிழ்நாட்டுத் தேர்தல் அணிச்சேர்க்கைகளைத் திருப்பிப் பாருங்கள். இருபெரும் அணிகளிலும் வட்டார, சாதி, மத அடையாளங்களோடு கூடிய அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அமைப்புகளே இல்லை யென்றாலும் தனிநபர்களான கல்வித் தந்தைகள், ஊடக முதலாளிகள் இடம்பெற்றுவிட முடிகிறது.

இது தான் பின் நவீனத்துவ நெருக்கடி. ஒவ்வொரு அமைப்பும் நபர்களும் தங்களின் இருப்பைத் தக்கவைக்கப் பேரமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு நிகழ்வைக்கூடப் பெருநிகழ்வாக மாற்றி, அதன் காரணிகளை அல்லது காரணமான நபர்களைக் கொண்டாடும் நிலைபாட்டை எடுக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடாமலேயே பால் தாக்கரே குடும்பத்தின் ஆள் மகாராஷ்டிராவில் தேர்தல் அரசியலின் காய்களை நகர்த்த முடிகிறது. ஒருவார இடைவெளியில் குற்றப்பட்டியல்களைச் சாதனைப் பட்டியல்களாக மாற்றிவாசிக்க முடிகிறது பாமகவின் குடும்ப அரசியலில். தினகரனைச் சந்தித்துக் கைகுலுக்கிவிட்டு வரும் வழியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை வழிமொழிய வேண்டியிருக்கிறது தொல்.திருமாவளவனுக்கு. சீமானின் அங்கதக் கதையாடல்களின் எகத்தாளமும் உச்சத்தொனிக் கொக்கரிப்பும் கவனிகப்படும் ஒன்றாக எழுதப்படுகிறது. சிறுநகரான எடப்பாடியைத் தன் அடையாளமாகக் காட்டிக்கொண்ட பழனிச்சாமியையும், சொன்னதைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாகக் காட்டிக் கொண்ட ஓ.பி.எசு ஐயும் ஓரங்கட்டிப் பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வருகிறார் இராயேந்திர பாலாயி. கமல்காசனின் ‘இந்துதான் முதல் தீவிரவாதி’ என்ற சொல்லாடல் கொண்டாடப்பட்டது கடைசிக் கொண்டாட்டம் என்றால், குகைக்குள் யோக நிலையைக் காட்டித் தானே முதன்மைப் பாவனையாளர் என்கிறார் பிரதமர் மோதி.

எல்லா நிலைபாடுகளும் செயல்பாடுகளும் தங்களுக்கீழ் உள்ள கூட்டத்தை வழிநடத்த மட்டுமே என்பதில் தொடங்கி, தமிழ்/இந்திய நிலப்பரப்பின் வெகுமக்களுக்கான கருத்தியலாக மாறிவிடுகிறது. அப்படி மாற்றிவிடுவதில் பெருகிவழியும் செய்தி அலைவரிசைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மரபிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தை நகர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டிய ஊடகங்கள் எதிர்நவீனத்துவத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

அடிப்படைவாதச் சிற்றலகுகளோடு ஒத்துப்போகும் கருத்தியலை விமரிசனமின்றி ஏற்று நகரும் ஊடகங்களின் இந்தப் போக்கு, அவற்றின் பொருளாதார அடித்தளமான பன்னாட்டு முதலீட்டியத்தையே காவுவாங்கும். இதைப் புரிந்துகொள்ள ஊடகங்களும் ஊடகப் பேரமைப்புகளும் இன்னும்சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.

ஏன் குறைந்தது வாக்குப்பதிவு

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 1.6 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 2 சதவீதம் குறைவு இந்த முறை. காரணம் என்ன? புதிய தலைமுறை இதழாளரின் கேள்வி:

எனது பதில்:

பொதுத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கும் விதம் அச்சமூட்டுவதாக இருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்தியாவிற்குத் தேர்தல்களே வேண்டாம்; நிர்வாகம் செய்யத் தேவையான ஒரு அமைப்பு இருந்தால் போதும் என்றொரு முடிவை எடுத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிவித்தால் கூட இந்தியர்கள் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நினைப்புதான் இந்த அச்சத்திற்குக் காரணம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் அளித்துள்ள வாக்குசதவீதம் இந்த அச்சத்தை அதிகமாக்குகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற பெரு/ தொழில்நகரங்களில் வாக்களிப்பு விகிதம் எப்போதும் குறைவாகவே இருக்கின்றன. இதன் பின்னணியில் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருக்கிறது என்பது எனது அனுமானம். வேலை காரணமாக நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் வாக்குகளை எங்கே பதிவுசெய்கிறார்கள் என்பது எப்போதும் கேள்விக்குறி. வாய்ப்புக் கிடைத்தால் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று வாக்களிப்பதையே விரும்புகின்றனர். இந்த முறை தொடர்ச்சியாகக் கிடைத்த விடுமுறையால் வாக்காளர்கள் குடும்பத்தோடு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல விரும்பியதைப் போக்குவரத்து நெருக்கடிகள் காட்டுகின்றன. இலத்திரனியல் (டியிட்டல்மயமான) கணக்கெடுப்பு, ஆதார் அட்டை வழங்கல் போன்றன வந்தபிறகும் ஒருவருக்கு ஒரு ஓட்டுதான் இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையம் இன்னும் உறுதிசெய்யவில்லை.

பெருநகரங்களின் வாக்களிப்புக் குறைவுக்கு அப்படியொரு காரணத்தைச் சொன்னாலும் கன்யாகுமரி போன்ற கல்வி வளர்ச்சி பெற்ற மாவட்டங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பது இன்னொரு உண்மையை -குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. கற்றவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள்; அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் மேல்நடுத்தரவர்க்கமும் பொதுநல உணர்வற்றவர்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதை உறுதிசெய்யும் விதமாகவே ஒவ்வொரு பொதுத்தேர்தல் வாக்களிப்பு விகிதங்களும் இருக்கின்றன. இதில் வயதானவர்கள், இளையோர் என்ற வேறுபாடுகளைக் காணமுடியவில்லை.

வாக்களிப்புக் குறைவுக்கு அரசியல் கட்சிகளும் ஒருவிதத்தில் காரணம் என நினைக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அதன் வாக்கு வங்கி எது என்பதைத் தீர்மானித்து வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்களை மட்டுமே தேர்தல் காலத்தில் நேரடியாக அணுகுகின்றனர். குறிப்பாகப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நம்பும் பெரிய கட்சிகள் ஒரு தெருவுக்கு ஒருவரை – 100 இலிருந்து 200 பேருக்கு ஒருவரைப் பொறுப்பாக்கிவிடுகின்றன. அவர் அந்த நபர்களை மட்டுமே கண்காணிக்கின்றார். கவனிக்கின்றார். இதே நிலையை இன்னொரு பெரிய கட்சியும் எடுக்கின்றது. இந்நிலையில் பெரிய கட்சிகளின் கவனிப்பைப் பெறாத பொதுவாக்காளர்கள் தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அவர்களின் பூத் சுலிப்பைக் கொண்டுவந்து தரும் ஆர்வலர்கள் கூட இல்லாததால் நாம் அளிக்கும் வாக்குக்கு மதிப்பு இல்லை என்று நம்புகின்றனர். அதனால் அவர்கள் வாக்குச் சாவடிப்பக்கம் போகாமல் தவிர்க்கின்றனர். இதுவரையிலான தேர்தல்களைவிட இந்த முறை இந்தப் போக்கை அதிகம் காணமுடிந்தது. வாக்களித்தே ஆகவேண்டும் எனப் பொறுப்போடு வந்தவர்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர் பட்டியலில் தாங்களே தேடிக் களைத்ததையும் பார்க்க முடிந்தது.

மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மக்கள் பங்கேற்பு என்பது அவர்களின் வாக்களிப்பின் வழியாகவே நடக்கிறது. தாங்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் தங்களின் பிரதிநிதி நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் பங்கேற்றுச் சட்டங்கள் இயற்றுகிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்களாட்சியின் இயங்கியலும் நடைமுறைகளும் இருக்கின்றன. இதனை ஒவ்வொரு வாக்காளர்களும் புரிந்துகொண்டிருக்கிறார்களா? என்ற ஐயம் ஒவ்வொரு தேர்தலின் போது தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றது.

இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றத்தைப் பள்ளிக்கல்வியில் தொடங்கவெண்டும்.

அச்சமூட்டும் அடையாளங்கள்

இன்றைய காலை நடையில் அந்தக் குரல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த மூன்றுபேரும் நின்று உரக்கவே சொன்னார்கள். இந்தப் “ பாய்களெ.. பார்த்தாலே பயமா இருக்கு. வெடிகுண்டெ மறைக்கிறதுக்காக்வே பாவாடை மாதிரி கைலியெ விரிச்சிக்கிட்டு தாடியெத் தடவிக்கிட்டு அலையறுனாங்க.. ” எனக்குக் கேட்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் அவர்களை நெருங்கியபோது பேச்சை நிறுத்திகொண்டார்கள். ஏன் நிறுத்தினார்கள் என்று யோசித்தபடியே தாண்டிப்போய்விட்டேன். நறுக்கப்பட்ட அளவான தாடி என்னை ஒரு முசுலீமாக நினைக்கச் செய்திருக்கலாம். ஆனால் நான் பெரும்பாலும் காலை நடையில் அரைக்கால் டவுசரும் டீ சர்ட்டும் சுவோடு முழுமையாகக் காலை நடைக்காகச் செல்பவன்.இன்றும் அப்படித்தான் போனேன். ஒரு முசுல்மான் இப்படி வருவதில்லை. இந்த உடையைத் தாண்டி எனது தாடி அவர்களுக்கு என்னை ஒரு முஸல்மானாக அடையாளப் படுத்தியிருக்க வாய்ப்புண்டு. இம்மூவரும் ஒருவேளை கிறித்தவர்களாக இருக்கலாம். ஏனென்றால் நானிருக்கும் கட்டபொம்மன் நகரின் புறநகர்ப்பகுதி மூன்று முதன்மைச் சமயத்தினரும் - இசுலாமியர், கிறித்தவர், இந்துக்கள் - சம அளவில் இருக்கக் கூடிய பகுதி. கட்டபொம்மன் நகர் மட்டுமல்ல; அதனை உள்ளடக்கிய பாளையங்கோட்டையே இசுலாமியர்கள் அதிகமாகவும் கிறித்தவர்கள் அடுத்தும் இந்துக்கள் மூன்றாமிடத்திலும் இருக்கக்கூடிய பகுதிதான். ஆனால் மொத்தத் திருநெல்வேலி மாவட்டம் இந்த அடுக்கைத் தலைகீழாகக் கொண்டது. பெரும்பான்மையர்கள் இந்துக்கள்தான்.

” இன்சா அல்லா....” “ அசுலாம் அலைக்கும்” என்ற குரல்களுக்குத் திரும்பினால் வலதுகை வாய்வரை வந்து வணக்கம் சொல்பவர் என்னைப்போலவே தாடிவைத்தவராக இருப்பார். நீளமாகத் தொங்க விடாமல் எப்போதும் வெட்டிச் செதுக்கிய என் தாடியில் இசுலாமிய அடையாளம் இருக்கிறது என்பதைப் பாளையங்கோட்டையில் குடியிருக்கும் இந்த 22 ஆண்டுகளில் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக இரம்லான் நோன்புக்காலத்தில் நாளொன்றுக்கு இரண்டு மூன்றுபேராவது ’’சலாம் சொல்வார்கள். இரவு உணவுக்குப் பின் கைலி கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து போனால் எதிரே வரும் முஸல்மான் நிச்சயம் சொல்வார். இப்படிச் சொல்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் சொல்லையே திரும்பச் சொல்வேனே தவிர கையை உயர்த்தி வாய்வரை கொண்டு போய்ச் சலாம் சொன்னதில்லை.

பல்கலைக்கழக வளாகங்களில் குட் மார்னிங் சொல்பவர்களுக்குத் திருப்பிக் குட்மார்னிங் சொல்வதுபோல, காலை வணக்கம் சொல்பவர்களுக்குத் திருப்பிக் காலை வணக்கம் சொல்வதுபோல சலாம் மட்டுமே சொல்வதுண்டு. கையை நீட்டிக் குலுக்க நினைத்தால் கையை நீட்டிக் குலுக்குவேன். கையை குவித்து வணக்கம் சொல்பவர்களுக்குத் திருப்பிக் கைவித்து வணக்கம் சொல்வதற்கு மனம் எப்போதும் தடைபோடும். ஒரு புன்சிரிப்பைக் காட்டி வணக்கத்தோடு நிறுத்திக்கொள்வேன். குறிப்பாகப் பெண்கள் வணக்கம் சொல்லும்போது புன்சிரிப்பு ஆழமானதாக வெளிப்படும். அந்த ஆழம் கைகுவித்து வணங்கவில்லை என்பதை மறக்கடிக்கும் உத்தி.கைகுவித்து வணங்குவதோ, சிலுவைக்குறியிட்டுக் காட்டுவதோ, வாய்வரைக் கை உயர்த்தி சலாம் சொல்வதோ என்னுடைய பழக்கம் இல்லை என்று என் உடல் சொல்கிறது.

எனது உடல் அடையாளம் இசுலாமிய அடையாளத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்பதில்லை. போடிக்கலவரத்தின்போதும் திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு தேடியபோது குறிப்பான ஒருவரின் உடல் அடையாளத்தோடு பொருந்துகிறது நம்பினார்கள். அவர் திரு. யான் பாண்டியன். அவரது தலையை மட்டும் படமாகப் பார்த்திருந்தவர்கள் நான் அவரது உறவினராக இருக்கக்கூடும் என நினைத்து வீடு தர மறுத்தார்கள் என்பது இன்னொரு அச்சமூட்டிய கதை.

சமயங்கள் இந்தப்பூமிப் பரப்பைத் தங்களின் ஆதிக்கத்தை - அதன் பண்பாட்டு அடையாளங்களைப் பின்பற்றும் மனிதர்களால் நிரப்பிவிட நினைக்கின்றன. அன்பு, அருள், இரக்கம், கருணை, ஒழுக்கம், கட்டுப்பாடான வாழ்க்கை பற்றிய போதனைகளைச் சொன்ன இறைத்தூதர்கள், தேவதூதர்கள், இறையடியார்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே ஆயுதங்களைக் கையாளும் அரசுகளின் பின்னணியில் மறைந்துகொள்கின்றன. மக்களாட்சி என்னும் சகிப்புத்தன்மையைப் போதிக்கும் கருத்தியல் காலத்தில் அரசுகள் மதம் சார்ந்த பேரரசுகளை நிறுவப் பல வழிகளைக் கையாளுகின்றன. அதற்காகச் சமய அடிப்படைவாத அமைப்புகளைக் கூடத் தீனிபோட்டு வளர்க்கின்றன. தீனிபோட்டவர்களின் ஆணைக்கு அடிபணிந்து வெடிக்கும் ஓசைகள் அடிப்படைவாதச் செயல்களுக்கு மட்டுமே ஆபத்தானதாக இருப்பதில்லை. ஆன்மீக நம்பிக்கையோடு சமயச் சடங்குகளையும் அடையாளங்களையும் பேணும் அப்பாவிகளையும் அச்சமூட்டுகின்றன. ஆன்மீகத்தை விரும்புபவர்கள் எந்தக் காரணம்கொண்டும் அடிப்படைவாதிகளை அண்டவிடக்கூடாது என்பது மட்டுமே இப்போதைய தேவை

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.