குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்தியீவிகள் எச்சரிக்கை!! சுமந்திரன்

சினையாகுபெயர் அவர்அங்கம்வகிக்கும் கட்சி அகற்றப்படவேண்டும்  ஒருசிலர்ஏற்கப்படலாம்! 19.06.2020.....இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்தியீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.

அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்பார்ந்த யாழ் மக்களே!

இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல்.

சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள சிறிலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்களின் ஆதரவை சர்வதேச சமூகம் வேண்டி நிற்கும் தருணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான ஒரு தேர்தல்.

தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்து தமது தலைமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு காலம் இது.

யார் தமிழ் மக்களின் தலைவராக வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, யார் யாரெல்லாம் தமிழ் மக்களின் தலைவராக வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் இது.

அந்தவகையில் சுமந்திரன் என்ற நபர் விடயத்தில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என்று இந்தப் பிரசுரத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கின்றோம் என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ் மக்கள் எதற்காக சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் பல தகவல்கள் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.