குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 9 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை

சுரேஸ்(சு) பிரேமச்சந்திரன் 16.06.2020....தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினு டைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேசு பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேசு பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்த்து கருத்து தெரிவிக்கையில், ”ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராயா ஆகியோர் ஒரு சில விடயங்களை கூறி இருக்கின்றார்கள்.

முக்கியமாக மீன்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிக அதிகபட்சமாக ஆசனங்களுடன்  நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றும் ஒரு மாற்று அணியோ மாற்று தலைமையோ தேவையற்ற விடயங்கள் என்ற என கூறியுள்னர். இகவே அதனடிப்படையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக சில கருத்துகளை நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம்.

முதலாவதாக கடந்த நான்கரை ஆண்டுகளாக அல்லது பேர்ரிற்கு பிற்பாடு தமிழ் மக்கள் ஒரு ஐக்கியத்தின்மேல் நம்பிக்கை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல விடயங்களை சாதியம் என்பது நம்பிக்கையாக கொண்டு அவர்களை நாடாளுமன்றம் அனுப்பி இருந்தார்கள்.

ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் இவர்கள் கூறியது போன்று அல்லது இவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆணை அல்லது நம்பிக்கை அதன் அடிப்படையில் அவர்கள் ஏதாவது விடையங்களை  சாதித்திருக்கிறார்களா என்று ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கிறது.

காணிகள் விடுவிப்பாக  இருக்கலாம் அரசியல் கைதிகள் விடுவிப்பாக இருக்கலாம்,  காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்களாக இருக்கலாம்,  ஒரு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவதாக இருக்கலாம். இவை எதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மையான விளக்கம்.

திரு சுமந்திரன் கூறுகின்ற போது ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது, ஒரு பகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள், அரசியல் சாசனம் நாங்கள் ஒரு மிக நீண்ட தூரம் போயிருக்கின்றோம் ஆனால் நல்வாய்ப்பின்மையாக அது சாத்தியப்படவில்லை போன்ற சில விடயங்களை அவர் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றார்.  யாழ்ப்பாணத்திலும் சரி கிழக்கிலும் சரி அவ்வாறான சில விடயங்களை சொல்லி வருகின்றார்.

ஆனால் ஒரு விடையத்தை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் முப்படைகளால் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.  இன்னம் எத்தனை ஆயிரம் ஏக்கர் காணி அரசாங்கத்தின் வசம் அல்லது முப்படைகளின் வசம் இருக்கிறது என்பதை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்கள்சனாதிபதியாக இருந்த போது மூன்று ஏக்கர், நான்கு ஏக்கர் என்ற அடிப்படையில் ஒரு சில தடவைகள் காணிகள் விடுவிக்கப்பட்டதே தவிர ஆனால் ஆயிரக்கணக்கான ஏக்கள் காணிகள் இன்னும் முப்படைகளின் வசம்தான் இருக்கின்றது என்பதுதான் உண்மையான விடயம்.

இதே போன்றே அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக அரசாங்கம் முன்வந்து அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான மன்னிப்பை கொடுத்து அவர்களை விடுவித்ததாக இல்லை.

பல பேர் விடுவிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் இருந்த அரசியல் கைதிகள் ஒன்றில் பினையில் வெளி வந்திருக்கிறார்கள்,  இல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது,  இல்லாவிட்டால் அவர்களுக்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு நடைமுறைதான்  நடந்து முடிந்துள்ளது.

இப்போதும் 91 அரசியல் கைதிகளுக்கு மேல் வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது அல்லது அங்கு இருந்துகொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் சில  அரசியல் கைதிகளை விடுவித்து விட்டோம் என்பது ஒரு அப்பட்டமான பொய்.

ஆகவே சுமந்திரன் வந்து நான் மீண்டும் நான் முன்னமும் சொல்லி இருக்கிறேன் ஒரு கூச்ச நாச்சம் இல்லாமல் ஒரு பொய் சொல்வதை தான் சொல்வது பொய் என்று தெரிந்தால் கூட மக்கள் அதை  ஏற்றுக் கொள்வார்கள் என்று பொய் பேசுவது என்பதை அவர் மிகத் திறம்படமாகவே செய்து வருகின்றார்.”  என தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.