குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 27 ஆயிரத்து 654 ஆகவும் குயராத்தில் 20 ஆயிரத்து 70 ஆகவும் ராயசுதானில் 10 ஆயிரத்து 599 ஆகவும்

உத்தரப் பிரதேசத்தில் 10 ஆயிரத்து 536 ஆகவும் மத்திய பிரதேசத்தில் 9 ஆயிரத்து 401 ஆகவும் மேற்கு வங்காளத்தில் 8 ஆயிரத்து 187 ஆகவும் கர்நாடகாவில் 5 ஆயிரத்து 452 ஆகவும் பீகாரில் 5 ஆயிரத்து 88 ஆகவும் ஆந்திராவில் 4 ஆயிரத்து 708 ஆகவும் அரியானாவில் 4 ஆயிரத்து 448 ஆகவும் யம்மு காசுமீரில் 4 ஆயிரத்து 87 ஆகவும் தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 580 ஆகவும் ஒடிசாவில் 2 ஆயிரத்து 856 ஆகவும் பஞ்சாப்பில் 2 ஆயிரத்து 608 ஆகவும் அசாமில் 2 ஆயிரத்து 565 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கேரளாவில் ஆயிரத்து 914 பேரையும் உத்தரகாண்டில் ஆயிரத்து 355 பேரையும் யார்கண்டில் ஆயிரத்து 99 பேரையும் சத்தீசுகாரில் ஆயிரத்து 73 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மற்றைய மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

முழுவதும் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது.

2 இலட்சத்து 66 ஆயிரத்து 598 பேர் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.