குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாங்கள் வெல்வதற்கு வட்டுக்கோடைத்தீர்மானம்! யே.ஆருடன் அரசியலைத்தொடர்வதற்கு அபிவிருத்திசபை!! அதனால்

எரிந்தது யாழ்நுாலஏமாளிகளே. இன்றைய தமிழரசுக் கட்யான (த.தே.கூ) இரணில், மகிந்தவடன் அதேநிலை யில். இம்முறை தமிழினமே எரிக்கப்படுதம்.....

நிலாந்தன். ஏற்கனவே 1977இல் நிகழ்ந்த இன வன்முறையின் போது தமிழர்களுக்கு கொடுத்த அடி போதாது என்று தென்னிலங்கையிலிருந்த இனவாத சக்திகள் சிந்தித்தன. அதைவிட நோகக்கூடிய ஒரு அடி அதுவும் இதயத்தில் அல்லது உயிர் நிலையில் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு தருணத்துக்காக காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு தருணத்தை மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் களம் திறந்துவிட்டது. இது இரண்டாவது உண்மை.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் களம் எனப்படுவது தமிழ் தலைவர்களின் குத்துக்கரணத்தின் விளைவு. 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் தலைவர்கள் 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு கீழிறங்கி வந்தார்கள். ஏன் அப்படிச் சறுக்கினீர்கள் என்று கேட்டபோது அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சொன்னார் “மாவட்ட அபிவிருத்தி சபை ஒரு தங்குமடம்” என்று.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்களிடம் ஆணையைப் பெற்ற தலைவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபை என்ற தங்குமிடத்தை ஏற்கத் தயாரானார்கள்.இதை அவர்கள் 1979 இலேயே தொடக்கி விட்டார்கள். மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்குவதற்கான தென்னகோன் ஆணைகுழுவிலிருந்து இது தொடங்கியது. இது ஒருவிதத்தில் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுத்தமை தான். இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் நசியத் தொடங்கியதை அப்போதிருந்த ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெரும்பாலானவை எதிர்த்தன. அந்த எதிர்ப்பை அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிக் காட்டினார்கள். “தங்குமடம் வேண்டாம் விடுதலையே வேண்டும்” என்று இறைகுமாரன் உமைகுமாரன் உள்ளிட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குரல் எழுப்பினார்கள்.

பொதுவாக ஆயுதமேந்திய அமைப்புகள் தேர்தலை குழப்புவதற்கு ஒன்றில் வாக்குச்சாவடிகளை தாக்குவதுண்டு. அல்லது வேட்பாளர்களை தாக்குவதுண்டு. அல்லது பிரச்சாரக் கூட்டங்களை குழப்புவதுண்டு. அதைத்தான் தமிழ் இயக்கங்களும் செய்தன.புளொட் இயக்கம் யு.என்.பி வேட்பாளர் தியாகராஜாவை சுட்டுக் கொன்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் நாச்சிமார் கோவிலடியில் நடந்த ஒரு கூட்டத்தில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து இரண்டு பேரை கொன்றது. இவை தவிர யாழ் பல்கலைக்கழகத்தில் அப்போதைய எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் காவலரின் துப்பாக்கியை பல்கலைக்கழக மாணவர்கள் பறித்தார்கள்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் தான் நூலக எரிப்பு இடம்பெற்றது. இச் சம்பவங்களை ஒரு சாட்டாக வைத்து ஓர் உணர்ச்சிகரமான பழிவாங்கற் சூழலை உருவாக்கி நூலகம் எரிக்கப்பட்டது. பூபாலசிங்கம் புத்தகசாலை எரிக்கப்பட்டது. அதோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்டது. எனவே நூலகம் எரிக்கப்படுவததற்கான அரசியல் சூழல் என்று எடுத்துப் பார்த்தால் அதில் தமிழ்த் தலைவர்களின் நேர்மையின்மைக்கும் ஒரு பங்கு உண்டு. மக்களிடம் எந்த வாக்குறுதிகளை முன்வைத்து ஆணையை பெற்றார்களோ அந்த மக்கள் ஆணையை மீறி மாவட்ட அபிவிருத்தி சபை என்ற அற்பமான ஒரு தீர்வுக்கு அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் இழிந்து சென்றார்கள். எனவே நூலக எரிப்பை நினைவு கூரும்போது தமிழ் தலைவர்களின் அயோக்கியத்தனத்தையும் நினைவு கூரவேண்டும். இது மூன்றாவது உண்மை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.