குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உள்ளங்கையில் உங்கள் தமிழ்.

25.05.2020....செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.. வேர்ச்சொல் அடிப்படையில் தேவநேயப்பாவாணரால் தொடங்கப்பட்ட சொற்களை தொகுத்து பொருளை விளக்கும் மாபெரும் அகராதி. கிட்டத்தட்ட 33 புத்தகங்களாக பிரித்து வெளியிடப்பட்டது. பதினையாயிரம் பக்கங்களுக்கு மேல் இதில் அடங்கும். காகித வடிவில் இருக்கும் 33 புத்தகத்தை எந்த ஒரு ஆராய்ச்சியாளராளும் எளிதில் பயன்படுத்த முடியாது.

தமிழில் சொற்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்த நாம் நிகண்டியம் பணியை தொடங்கும்போது. தென்புலத்தார் குழுவில் நண்பர் ஒருவர் நம்மிடம் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதி இருக்கிறது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதில் 10 லட்சம் சொற்களுக்கு மேல் இருக்கும் என்று கூறினார். அதுவே இந்த அகராதியை எப்படியாவது டிஜிட்டல் செய்துவிடவேண்டும் என்ற பேர் ஆர்வத்தை தூண்டியது. ஆனால் இதனை செய்து முடிக்கும் போது நமக்கு தெரிந்த உண்மை இதில் இருப்பது 1,22,413 சொற்கள் மட்டுமே. ஆனால் அதன் விளக்கங்கள் மிக ஆழமாக இருக்கும். அகராதிகள் தலைசொல் விளக்கச் சொல் என அனைத்தையும் சேர்த்தால் 37,80,672 சொற்கள் வருகிறது.

சிலர் இது ஏற்கனவே டிஜிட்டல் செய்யப்பட்டுவிட்டது என்றார்கள். ஆனால் கூகுளில் தேடினால் அது கிடைக்கவில்லை. RTI போட்டு இதன் நிலவரம் என்ன என்று விசாரித்தபோது. கிட்டத்தட்ட 2014ஆம் ஆண்டிலேயே 98% முடிந்துவிட்டது.. ஆயிரம் பக்கங்கள் மீதமிருக்கிறது அதனை முடித்த பிறகு வெளியிடுவோம் என்ற தகவலை அரசு கொடுத்தது. 2014ஆம் ஆண்டு முடித்த அகராதியை வெறும் ஆயிரம் சொல்லை காரணம் காட்டி வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

பேராசிரியர் தமிழ்ப்பருதி இதுவரை தொகுக்கப்பட்ட சொற்களின் டெமோ வெப்சைட்டின் தகவலை பகிர்ந்தார். அதன் உருளி (http://218.248.16.22/) வெறும் எண்களால் கணினி ஐபி அட்ரஸ் போலவே இருக்கும். எந்த கூகுள் தேடு முறையிலும் வராது. பல நேரங்களில் தளம் செயல்படுவதில்லை.

அதில் தமிழ் தலை சொல்லை கொடுத்தால் பொருள் வருகிறது ஆனால் தலை சொல் அல்லாத மற்ற சொற்களை கொடுத்தால் அது இயங்காது குறிப்பாக ஆங்கிலச் சொல்லை கொடுத்தால் அதற்கு நிகரான சொற்பிறப்பியல் தமிழ் சொல்லை கொடுக்காது. அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த தளம். ஏன் இப்படி என்று காரணங்களை யோசித்தாள் நமக்கு பல தோன்றும். ஆனால் உண்மை என்ன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

ஒருவழியாக கிட்டத்தட்ட சில மாத உழைப்பில் அந்த அகராதியை மிகவும் சிறிய வடிவில் ஒற்றை ஆவணமாக மாற்றிவிட்டோம். இதனை யார் வேண்டுமானாலும் மிக எளிதாக பயன்படுத்தலாம்.

நீங்கள் தமிழுக்காக எந்த ஆராய்ச்சி செய்தாலும் உங்களுக்கு அடிப்படை தேவையாக இந்த அகராதி இருக்கும். இது தமிழ் துறை சார்ந்த வல்லுநர்கள் அனைவருக்கும் தெரியும். அனைவரும் இதனை தங்கள் கைப்பேசியில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். பல சவால்களைத் தாண்டி உங்களை இது வந்தடைந்துள்ளது.. இது தமிழ் சொல்லா இதன் பொருள் என்ன என்று யாரையும் நீங்கள் வேண்டி நிற்க வேண்டிய அவசியமில்லை.

இத்தனை காலம் சிறை பட்டிருந்த இந்த ஆவணத்தை மீட்டெடுத்து சிறகை விரித்து பறக்க விட்டுள்ளோம்.

தேவநேய பாவணர் இதனைப் பார்த்து மகிழ்வார் என்று முழு நம்பிக்கையோடு இதனை உங்களுக்கு பகிர்கிறோம்.

வள்ளுவர் வள்ளலார் வட்டம் தொடங்கி சரியாக ஓராண்டு ஆகிறது அதன் கொண்டாட்டமே இந்த பகிர்வு

https://drive.google.com/open…

வள்ளுவர் வள்ளலார் வட்டம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.