குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

மனிதன் ஏன் முட்டை இடவில்லை? மனிதனுக்குத் தொப்புள் கொடி உருவாகிய வரலாறு!மனிதப் பரிணாம வளர்ச்சியில்

வைரசு(ஸ்)களின் பங்கு என்ன ? மனிதன் ஒரு வைரசு(ஸ்)

வந்தேறி மனிதன் 6:   24.05.2020...தொப்புள் கொடி உறவும், கலப்பினமும், வந்தேறி மரபணுவும் ,பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு தாய்மையை அளித்த அந்நிய மரபணு ? மனிதன் ஏன் முட்டை இடவில்லை? மனிதனு க்குத் தொப்புள் கொடி உருவாகிய வரலாறு மனிதப் பரிணாம வளர்ச்சியில் வைரசு(ஸ்)களின் பங்கு என்ன ?

மனிதன் ஒரு வைரசு(ஸ்)

இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் திரு. கா. விசய நரசிம்மன் உடன் பேசிக்கொண்டிருக்கையில் அறிவியலில் சில கோட்பாடுகளை புரிந்துகொள்ள அந்தக் கோட்பாடுகளை பற்றி நாம் நமது மூளையை முதலில் பழக வேண்டும் எனக் கூறினார். அவர் கூறிய எடுத்துக்காட்டு, ஒருவர் கார்ட்டூன் படங்களில் வருவதுபோல இரு பரிமாண உலகில் வாழ்பவர் என எடுத்துக்கொண்டால், அவரால் நாம் வாழும் முப்பரிமாண உலகைக் கற்பனை செய்து பார்ப்பது கூட சாத்தியமில்லை என்பதாகும்.

இதுவே அறிவியல் அறிஞர்கள் சில சிக்கலான கோட்பாடுகளை முதலில் புரிந்து கொள்ள உதவி சில சிக்கலான கோட்பாடுகளை புதிய அறிவியல் கோட்பாடுகளை (Scientific Theories) உருவாக்க உதவுகின்றது என்றார். அதாவது ஐசு(ஸ்)டின் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய அறிவியல் கோட்பாடுகளை, பல ஆய்வுகள் நடத்தி நாம் இன்று தான் உண்மை என உறுதி செய்திருக்கின்றோம்.

சரி இதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு?.

பொதுவாக நாம் பரிணாம வளர்ச்சியை ஒரு நேர்க்கோட்டு பார்வையிலேயே பார்க்கின்றோம். அதாவது மனிதன் குரங்கில் இருந்து நேரடியாக தோன்றி விட்டான் எனும் மிக எளிதான ஒரு பார்வையில் பார்க்கின்றோம். ஆனால் அறிவியல் கண் கொண்டு நாம் பார்க்கும் பொழுது ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்பட பல நூறு காரணங்கள் தேவைப்படுகின்றன. அதுவும் பலநூறு தலைமுறைகள் கடந்து தான் அந்த பரிணாம வளர்ச்சியின் வேறுபாடுகளை நாம் உணர முடிகிறது.

இதற்கு அடிப்படைக் காரணம் நாம் நமது பிறப்பு பற்றிய அறிவியலை ஒரு இனம் அல்லது ஒரு சாதி சார்ந்த பார்வையில் பார்க்கின்றோம். அதாவது ஒரே சாதியில் பிறந்த தாத்தா, அப்பா, மகன் மற்றும் பேரன் என நமது வரலாறு மரபுவழியில் ஒரே நேர்கோட்டு பாரிவையில் பார்க்கபடுகிறது. இயல்பாகவே, இந்திய சமூகத்தில் கடந்த காலம்வரை கலப்பு சாதி திருமணங்களை பெரிதும் கண்டிருக்க வாய்ப்பேயில்லை. அல்லது, அவை ஒரு பெரும் சமூகக் குற்றமாக கருதப்பட்டிருக்கும். எனவே தான் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று உருவாகி இருப்பான் என்ற கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பிறப்பிடம் என்பது நமக்கு ஒரு சமூக அடையாளத்தையும், பாதுகாப்பையும் அளிப்பதாகவே உள்ளது. எனவே தான் நமது தாத்தாக்கள் காலம் வரை ஒருவரை குறிப்பிடும் பொழுது, அவரது பெயரையும், சாதியின் பெயரையும், ஊரின் பெயரையும் குறிப்பிட்டே நாம் அழைத்து இருக்கின்றோம்.

எனவே,ந வீன மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து பல கண்டங்கள் தாண்டி இங்கு வந்தடைந்து, இங்கிருந்து பல இடங்களுக்குச் சென்றான் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது இங்குமட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் மனிதனின் தோற்றம் பற்றிய கருத்தில் இவ்வாறான ஒரே மாதிரியான எண்ணம் நிலவுகின்றது.

ஆனால் மனித வரலாற்றை, நாம் சூழியல், தொல்லியல், மரபியல் மற்றும் உடல்கூறு அறிவியல் அடிப்படையில் பார்த்தால் பல்வேறு கலப்புகள் நம்மிடையே காணப்படுகின்றன. உடலமைப்பு மாற்றத்திற்கு அந்தந்த பகுதியில் வாழும் சீதோஷ்ண நிலையே காரணம் என நாம் மேம்போக்காக கூறினாலும், மரபணு அடிப்படையில் இன்று நாம் பல்வேறு மனித மரபு கூறுகளின் தொகுப்பாகவே இருக்கின்றோம். குறிப்பாக இந்திய துணை கண்டமானது கிழக்கு மற்றும் மேற்குலகை இணைக்கும் ஒரு முக்கியப் பெரு நிலப்பகுதியாகும். இங்கே பல தொல்மாந்தர் இனங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வந்து, தங்கி, கூடி, பெருகி, கடந்து சென்றிருக்கின்றன.

ஆப்பிரிக்காவில் தோன்றிய முதல் மனிதன், மத்திய தரைக்கடல் வழியாக இங்கே நேரடியாக வந்துவிடவில்லை. பல இடங்களில் தங்கி பல தலைமுறைகள் கடந்து, அங்கே இருந்த ஆதி மனிதர்களுடன் கலந்து புதிய தலைமுறைகளுடன் கலப்பினமாக உலகின் பல மூலைகளுக்கும் சென்றான். இதனால் தான் மனித இனங்கள் இடையே உடற்கூறு அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் இந்த கலப்பினங்கள் நம் பொதுச் சிந்தனை பொருத்தவரை ஏதோ எங்குமே நடக்காது போல தோன்றும்.  (ஆபிரிக்கா  குமரிக் கண்டத்தி லிருந்த ஒரு பகுதி) இதை வைத்து எண்ணுதல் சரியாகும்  என  இடைச்செருகல் செய்யலாம்.

வரலாற்றை திரும்பி பார்த்தோமானால், மனிதன் விவசாயம் என்ற ஒன்றை கண்டுபிடிக்கும் வரை நகர்ந்து கொண்டேதான் இருந்தான். அவன் நகரும் பாதையில் பலரை சந்தித்து கொண்டேதான் இருந்தான். இதனால் தொடர்புகள் ஏற்பட்டு பல கலப்பினங்கள் உருவாக வாய்ப்பு அதிகமாக ஏற்பட்டது. நிலையான உணவு விவசாயம் மூலம் ஏற்பட்டவுடன், இடப்பெயர்வு நடைபெறுவது நின்று இந்த இனக்கலப்பு பெரிதும் நின்றுவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆதிமனித வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் சிக்கலான மனித இனக்கலப்பு ஆப்பிரிக்காவில் பல இலட்சம் ஆண்டுகள் நடந்துள்ளதாக கூறுகின்றனர். அதுவும் பல்வேறு மாந்தர் குரங்கு இனங்களுக்கு இடையே யும் நடைபெற்றதாக கூறுகின்றனர். நாம் இன்று நவீன மனிதனாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த பல்வேறு இனங்கள் தங்களுக்குள்ளேயே இடப்பெயர்வு செய்ததும் கலப்பினங்கள் உருவாக்கியதும், அதன் மூலம் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்கள் மனிதப் பரிமாண வளர்ச்சிக்கு உதவியது.

இந்த கலப்பினங்களால் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் ஒன்று அந்தந்த புவியல் அமைப்புக்கு ஏற்ப தகவமைப்பை, ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை ஆதி மாந்தரிடமிருந்து பெறுவதுமாகும். எடுத்துக்காட்டாக இமாலயப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் குறைந்த காற்றழுத்த நிலையிலும் வாழக் கூடிய தகவமைப்பு உருவாகியுள்ளது. ஆப்பிரிக்க காடுகளிலிருந்து தோன்றிய அந்த மனிதனுக்கு எவ்வாறு இந்த தகவமைப்புக் கிடைத்தது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நவீன மனிதன் இமாயலப்பகுதியில் வாழ்ந்து வந்த ஆதி மாந்தரான தெனசோவியனுடன் இணைந்து, சீன மக்கள் போன்ற ஒரு கலப்பினத்தை உருவாக்கியுள்ளான்‌. இதனாலயே மலைகளில் வாழும் தகவமைப்பினை நவீன மாந்தர்கள் பெற்றனர். நம்மை விட ஆப்பிரிக்க மனிதருக்கு மலேரியா நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக அதிகம்.

எனவே கலப்பினம் என்பது பரிணாம வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருக்கின்றது. மேலும், ஆப்ரிக்கர்களும், இந்தியர்களும், சீனர்களும் பல வியாதிகள் தாக்காத வண்ணம் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்றவர்களாக உள்ளனர். இதற்க்கு காரணமும் கலப்பினங்கள் தங்களது நோய் எதிர்ப்பு ஆற்றலை இருவேறு இன பெற்றோரிடமிருந்து பெற்றதேயாகும்.

சரி மனிதரிடையே ஏற்படும் கலப்பினம், பரிணாம வளர்ச்சியில் இவ்வாறு உதவியது என்றால், மனிதனு டைய மூதாதையர்களுக்கு, வைரஸ்களுக்கு ஏற்பட்ட கலப்பினம் நமது பரிமாண வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றது.

ஆம், மனிதனிடமுள்ள 8% டி என் ஏ க்கள் மனிதனுடையது அல்ல. அவை, இன்று உலகமே அஞ்சி நடுங்கும் வைரசுகளுடையது.

நமக்கு ஏற்படும் பல கேன்சர் வியாதிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது வைரஸ்கள் தான். வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது அவர்களின் செல்களை பாதித்து தனது அர்.என்.ஏ மூலக்கூறை அதனுள் செலுத்துகின்றது. இந்த ஆர்.என். மூலக்கூறின் சிறு பகுதிகள் நமது உடலிலேயே யீன்களில் தங்கிவிடுகின்றன. அடுத்த அடுத்த தலை முறைகளில் ஒரு மனிதனின் செல்களில் உள்ள யீன்கள் பாதிக்கப்பட்டு அவை வித்தியாசமாக செயல்பட ஆரம்பி க்கி ன்றன. இதுவே பலவிதமான கேன்சர் உருவாக முக்கிய காரணமாக அமைகின்றது. இவ்வகை மாற்றமடைந்த டிஎன்ஏ மூலக்கூறுகள் கருவுறுதலின் போது ஏற்பட்டால் அவை பிறக்கும் குழந்தைகளிடையே சில யீன் மாற்றங் களை உருவாக்குகின்றன.

இதேபோலத்தான் சுமார் நாலு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த திமிங்கிலத்திற்கு ஒருவகை வைரசு தொற்று ஏற்பட்டு முட்டையையும், தாயும் இணைக்கும் ஒரு அமைப்பு உருவாக்கி அதன் வழியாக குட்டிக்கு தேவை யான உணவு, மற்றும் சுவாசப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. எனவே அவை முட்டையிடுவதற்கு பதிலாக வயிற்றிலே யே அடைகாத்துக் குட்டிகளை ஈன்றன.அதாவது இன்று கருவுற்ற தாய்க்கும் குழந்தைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் பிளசண்டா என்ற அமைப்பானது மனிதரிடமிருந்து தோன்றியதில்லை. அவை வைரசுகளின் உதவி யால் நமக்கு உருவாகியுள்ளன என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

இது எவ்வாறு உருவாகியது?

செல்களை தாக்கும் வைரசுகள் தனது ஆர்.என்.ஏ மூலக்கூறை செலுத்தி செல்களின் அமைப்பை மாற்றி அவை மற்ற செல்களுடன் எளிதில் இணைவதற்கு உதவிகரமாக ஒருவித புரத அமைப்பை உருவாக்கியது. இதனால் செல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு தங்களுக்குள் ஆர்.என்.ஏ களை எளிதில் பங்கிட்டு வேகமாக பரவுகி ன்றது. இதனை Syncytin என அழைகின்றனர்.

இதே அமைப்புகள்தான் கருவுக்கும் பெண்ணுக்கும் இடையேயான பிளசன்டா உருவாக முக்கிய காரணமாக அமைகின்றது. இதனை இருவாகும் அந்த மரபணுக்கு ககீமோ என பெயரிட்டுள்ளனர். இந்த புரத்தை உருவாக்கும் தன்மை மனித மரபணுவை சேர்ந்ததல்ல. ரெட்ரோ வைரசுகளின் ஆர். என். ஏ மூலக்கூறின் ஒரு சிறுபகுதி இதனை உருவாக்க நமக்கு உதவுகின்றது. இதன்மூலம் தாயிடமிருந்து ஊட்டச்சத்துக்களும் ஒக்சிசனும் குழந்தையை வந்தடைகின்றன. ஆனால் ரத்தம் இதன் மூலம் கடத்தப்படுவதில்லை.

வைரசுகள் உருவாக்கி இந்த அமைப்பு தான் குழந்தையின் செல்களைப் பாதிக்கும் தாயின் ஆன்டிபாடிகள் எனப்படும் நோயெதிர்ப்பு சக்திகள் கருவை அழித்து விடாமல் காப்பதற்கும் உதவுகின்றன. அதவாது இந்த வைரஸ் மூலக்கூறு நம்மிடம் இல்லை என்றால் தாயின் இரத்த அணுக்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளை, பாக்டீரியா போன்ற அந்நிய பொருள் என்று எண்ணி அழித்துவிடும். மகப்பேறு காலத்தில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பெண்களிடையே இந்த சிறப்பு அமைப்புகளில் syncytins புரதக் குறைபாடு இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படுகின்றன என அறிஞர்கள் கூறுகின்றனர்.


இவ்வகை வைரஸ் "ரெட்ரோ வைரசு" என அழைக்கப்படுகின்றன. இன்று உலகத்தையே அச்சுறுத்தி வரும் எச் ஐ வி வைரச இதே போன்ற ரெட்ரோ வைரசு தான். இவ்வகை வைரசு கடலில் வாழ்ந்த நமது முன்னோர்களைத் தாக்கி யிருக்காவிட்டால், நாம் இன்றும் முட்டையிடும் மனிதர்களாகவே இருந்திருப்போம். இன்றும் சில வகை பல்லி இனங்கள் முட்டையிடுவதற்கு பதிலாக குட்டிகளை ஈனுகின்றன. அவற்றிலும் இவ்வகை வைரசு மூலக் கூறுகள் உள்ளன.


இந்த "வந்தேறி ரெட்ரோ வைரசு" இல்லையென்றால் மனிதனுக்கு தொப்புள் கொடி என்ற அமைப்பே உருவாக வாய்ப்பில்லாமல் போயிருக்கும். தொப்புள் கொடி உறவுகள் என்ற சென்டிமென்ட்டுக்கும் இடமில்லாமல் போயிரு க்கும். மனிதனிரிடையேக் கலப்பு இனங்கள் உருவாகாமல் போயிருந்தால், நவீன மனித இனம் என்றோ அழிந்துவிட நேர்ந்திருக்கும்.

சுமார் கி .மு. 10,000 ஆண்டு முதல் கிபி. 500 வரையில்

உருவாகிய விவசாயப் பண்பாடும், பேரரசுகளின் தோற்றமும் இந்த இனக்கலப்பைக் கட்டுப்படுத்தி ஒரே இனக்குழு வழி மண உறவை நிர்பந்தம் செய்து, இயற்கைக்கு மாறாக செயல்பட்டது. இதனாலே மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒரு பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.


வந்தேறி_மனிதன் தொடரை இங்கு படிக்கலாம்: https://tamil.pratilipi.com/series/gx0a7tsueq5j