குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 2 ம் திகதி செவ்வாய் கிழமை .

மனோகனேசன் அவர்களின் கருத்துள்ள வார்த்தைகள்! பொறுமையாக வாசியுங்கள்.

22.05.2020....முள்ளிவாய்கால் அவலம் நடைபெறுகின்ற போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டை போடுகின்றோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க போராடுகின்றோம் என்றுதான் அன்றைய அரசு கூறிக்கொண்டது, அதுமட்டுமல் புலிபோராளிகள் எமது பிள்ளைகள், அவர்கள் தவறாக வழி நடாத்தப்படுகின்றனர்,அவர்களை மீட்பது எமது கடமை என்றும் கூறப்பட்டது.

 

அவர்கள் கூறியது உளப்பூர்வமானது உண்மையானது என்றால் போர் முடிவுக்கு வந்த பின்னர், தென் இலங்கையில் வெற்றிகளியாட்ட ங்கள். நடாத்தியிருக்க மாட்டார்கள்.....போர் முடிவுக்கு வந்தவுடன், அன்றையசனாதிபதி மகிந்த இராசபக்ச , வெற்றி களியாட்டங்கள் வேண்டாம், 30  ஆண்டுகாலம், இலக்கு எதுவுமின்றி நடந்த உள்நாட்டு போரை முடித்து வைக்க நிர்பந்திக்கப்பட்டோம். எம்மீது நிர்பந்திக்கப்பட்ட போரில் பல்லாயிரகணக்கான மக்களும் உயிரிழந்துள்ளனர். நாட்டின் ஒரு பகுதியில் வீடுகளில் அழுகை ஒலி கேட்கின்றது. இன்னிலையில் தென்னிலங்கையில் போரைவெற்றி களியாட்டங்கள் நடாத்த கூடாது அது தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும். எனவே கடந்த 30 ஆண்டு காலத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள், மூவினத்தையும் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துமுகமாக ஒரு வாரம் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்திருக்க வேண்டும் .....

அப்படி அவர் செய்திருப்பாரேயானால் இலங்கையின் மூவின மக்களின் தேசிய தலைவராக பரிணமித்திருப்பார்.தமிழ்மக்களும் அவருக்கு ஆதரவளித்திருப்பார்கள்.போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த இராசபக்சவின் சொல்லை சிங்கள மக்களும் கேட்டிருப்பார்கள். ஆனால் அதனை அவர் செய்ய வில்லை, தன்னை முற்று முழுதாக சிங்கள பேரினவாதிகளின் தலைவனாகவே காட்டி கொண்டார்.....

இதனை நான் சொல்வதற்கு காரணம் , முள்ளிவாய்கால் இரத்தவாடை போவதற்கு முன்னமே 2010 ல் இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் பேர்ரை நடாத்திய மும்மூர்திகளில் ஒருவரான இராணுவதளபதி சரத்பொன்சேகா அவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். பாரிய இழப்புக்களை சந்தித்து இருந்தாலும் தமிழ் மக்கள் வன்மத்தை மனதில் வைத்திருக்காமல் தமது அரசியல் சனநாயக கடமையை ஆற்றினார்கள். மகிந்த இராசபக்ச அவர்கள் சிங்கள மக்களின் மனதை கொள்ளை கொண்டாரே தவிர, தமிழ் மக்களினதும் சோனகமக்களினதும் மனங்களை கொள்ளை கொள்வதற்கான இருந்த சந்தர்பத்தை தவறவிட்டார்.

He just proved as leader of Sinhalese, not the leader of SRILANKA.

விடுதலை புலிகளின் தவறுகளையும்,மற்றைய ஆயுத போராட்ட இயக்கங்களின் நடைமுறை தவறுகளையும் மட்டும் கருத்தில் கொண்டு, தமிழர்கள் போராடியிருக்க கூடாது என வாதிட்டு, சிங்கள பேரினவாத அரசுக்கு முட்டு கொடுக்கும், அறிவுயீவிகளும், புதிதாக அரசியல் பேச ஆரம்பித்திருக்கும் பண்டிதர்களும். இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த நவம்பர்மாதம் இடம்பெற்ற சனாதிபதி தேர்தலுக்கு முன்பாக, மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமான தமிழ் அரசியல்வாதி ஒருவரை நான் தொடர்பு கொண்டு, தெற்கில் உள்ள சிங்கள மக்களின் நாடித்துடிப்பை புரிந்து கொண்டவன் என்ற வகையில் கோத்தபாய இராசபக்ச அவர்களே சனாதிபதி தேர்தலில் வெல்லுவதற்கு வாய்புகள் அதிகம், முற்று முழுதாக சிங்கள மக்களின் ஆதரவால் மட்டும் ஒருவர் சனாதிபதியாவது இலங்கையின் சனநாயகத்துக்கும், இன ஐக்கியத்துக்கும் நல்லதல்ல, எனவே நீங்கள் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளில், மே மாதம் 17,18,19,20 திகதிகளில் ஒன்றை, 30 வருட யுத்தத்தில் கொல்லப்பட்ட, அத்தனைபேருக்கும், அஞ்சலி செலுத்தும் முகமாக தேசிய துக்கநாளாக அறிவிக்கும் படி கூறுங்கள், அப்படி செய்யும் போது தமிழ்மக்களுன் மனம் ஆற்றுப்படுத்தலுக்கு உள்ளாகும், தமிழ் மக்களும் பெருமளவில் வாக்களிப்பார்கள் என கூறினேன்.......

அதற்கு அவர், அப்படி அவர்கள் கூறினால் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பார்கள் என கூறினார். அதற்கு நான் 1994 ம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா பிரபாகரனுடன் பேசுவேன் என கூறித்தானே தேர்தலில் நின்று இலங்கையின் வரலாற்றில் அதிகளவு வாக்குகளை பெற்று சனாதிபதியானார். (62.3 %) ஆகவே நியாயமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் நிட்சயம் ஆதரவளிப்பார்கள் எனவும் கூறினேன். ஆனால் அவர் எனது ஆலோசனையை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார். இது தொடர்பாக கொழும்பில் பல காலம் வாழும் எனது நண்பர் ஒருவரிடம் பேசிய போது, அவரும் கூறினார் எனது கோரிக்கை தவறானது என்றார். காரணம் கேட்ட போது அவர் கூறிய பதில்தான் விசித்திரமானது முள்ளிவாய்கால் சம்பவத்தை மறந்து விடவேண்டும், அந்த வடுக்களை அடுத்த சந்ததிக்கு கடத்த கூடாது என்றார். அவரது தமிழினப்பற்றையிட்டு சிரிக்கதான் தோன்றியது......

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை, 2020 பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னராவது , அடுத்த ஆடுத்த ஆண்டு மே மாதம் போர் முடித்து வைக்கப்பட்ட நாளை தேசிய துக்க தினமாக அறிவிக்க கோரி , சனாதிபதி கோத்தபாய இராயபக்சவிடமும், பிரதமர் மகிந்ந இராயபக்சவிடமும், அனைத்து அரசியல் தரப்புக்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழர்கள் தமது நியாயமான உரிமைகள் பற்றி பேச கூடாது, அப்படி பேசுபவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என புலம்பெயர் தேசங்களில் வசதியாக வாழ்ந்து கொண்டு கருத்துரைக்கும், அறிவுயீவிகள் என சொல்லப்படுபவர்கள், வரலாற்று ரீதியான தொடர் நிகழ்சிகளை தொகுத்து பார்த்து எது சரி எது பிழை என்ற பகுத்தறிவு இல்லாமல், விடுதலை புலிகளின் தவறுகளை மட்டும் கணக்கிலெடுத்து சிங்கள பேரினவாத அரசுகளுக்கு முட்டு கொடுத்து கொண்டு வருகின்றனர்.இவர்களும் புலம் பெயர் தேசத்தில் இருந்து போலி தமிழ் தேசியம் பேசுபவர்களை போல அபாயகரமானவர்களே ......

இலங்கையில் தமிழ், சோனக மக்கள் தமது இருப்பை காப்பாற்றி கொண்டு, உரிமைகளையும் படிப்படியாக பெறுவதற்கான, சனநாய போராட்டங்களும் செயற்பாடுகளும், பேச்சு வார்த்தைகளையும் அவசியம். அதற்கான புதிய வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும். எதிர்பு அரசியல், அபிவிருத்தி அரசியல் என்ற இரண்டு சொற்களுக்கிடையில் தமிழ், சோனக மக்களின் இருப்பையும், உரிமையையும் அடக்கிவிட முடியாது, நீதி நியாயம் மூவின மக்களின் அபிலாசைகளை பேணுவது, தீர்வுகளை எட்டுவது என்பது இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள விடயம். வெறுமனே எமது பாண்டியத்தை காட்டிகொண்டிருப்பதற்கு, போராட்டம் தோற்று போய்விட்டது என்ற காரணத்துக்காக விமர்சித்து கொண்டிருக்காமல், எமது அனுபவங்களின் பெறுபேறாக, மேற்குறிப்பிட்ட நிலையை எய்துவதற்கு காத்திரமான பங்களிப்பு எதையும் வழங்குகின்றோமா என்பதே தற்போதைய கேள்வியாகும்......

இன்னிலையில், பெரும்பான்மை சிங்கள கட்சிகளில் இணைந்து, தம்மை அடையாள படுத்தி செயற்படும் நண்பர்கள் ஏதோ தம்மால் இயன்ற காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றார்கள் என்றே சொல்வேன் .....

மீனைக்கு தலையும் பாம்புக்கு வாலையும் காட்டி கொண்டிருப்பது நலமானது அல்ல ....

அன்பே இறைவன்

யோவதியார்

19.05.2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.