குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தலைவர் வே. பிரபாகரன் - இராயீவ் காந்தி (இரகசிய ஒப்பந்த) சந்திப்பு இராயீவ் - யெயவர்தன ஒப்பந்தம்

21.05.2020....இராயீவ் - யெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்து இடுவதற்கு சில நாட்கள் முன் 1987 யுலை 24அன்று தலைவர் திலீபன் யோகரத்தினம் யோகி, ஆகியோருடன் ஈழத்தில் இருந்து சென்னை வந்தது இந்திய உலங்குவானூர்தி...சென்னையில் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களை சந்தித்த தலைவர் பிரபாகரன்.

" இராயீவ் நம்மை சந்திக்க விரும்புகிறார் என்று கட்டுப்படுத்தி இந்த இந்திய அரசு அதிகாரிகள் அழைத்துவந்தார் " என்று கூறினார், சற்று யோசித்தவாரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும் சேர்ந்து கிளம்பினார், பின் டெல்லி அசோக விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கரும்பூனைகள் சூழ அதியுயர் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அறைக்கு வெளியல் கரும்பூனைகள் சூழ்ந்து நின்றார்கள்.

இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் வந்து " நீங்கள் தடுப்பு காவலில் வைக்கபட்டுள்ளீர்கள் எந்த வகையிலும் வெளிவுலகை தொர்புகொள்ள முடியாது" என்றார். தலைவர் உட்பட அனைவரும் பொறிக்குள் சிக்கிவிட்டோம் என நினைத்தார்கள்.

பின்னர் இந்திய தூதர் டிக்சிட் வந்து " இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யபட்டுள்ளது விரைவில் இராயீவ் இலங்கை சென்று கையெழுத்து இடுகிறார். இது இலங்கை தமிழருக்கு நல்ல ஒரு தீர்வாக அமையும் நீங்கள் இதை ஏற்க வேண்டும்" என்று கூறி ஒப்பந்த நகலை கொடுத்தார்.

72 மணி நேரத்தில் ஆயுத ஒப்படைப்பு, உப்பு சப்பு இல்லாத மாகாண சபை திட்டம், மத்தியரசிடம் அதிகார ஒப்படைப்பு போன்றவற்றை அந்த ஒப்பந்த நகலில் இருந்து தலைவருக்கு தெளிவுபடுத்தினார் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்க போவதுகிடையாது என்று டிக்சிடிடம் உறுதிபட கூறினார் தலைவர். டிக்சிட் ஒப்பந்தத்தை ஏற்குமாறு வேண்டுகோளாக கேட்டு பின் மிரட்டினார்..

நீங்கள் இப்படியே தடுப்பு காவலில் இருக்க கூடும் என்று கூறினார்.

எம்மை எத்தனை ஆண்டுகாலம் தடுப்பு காவலில் வைத்தாலும் ஏற்க போவதில்லை ஆயுதங்களை ஒப்படைக்க போவதில்லை என்று உரத்த குரலில் கூறுகிறார் தலைவர்.

பின் பல அதிகாரிகள் பேசியும், மிரட்டியும் கூட ஒப்புக்கொள்ளவில்லை தலைவர். திரைமறைவில் நடந்தது இந்தநாடகம். பின் தமிழக முதல்வரை அழைப்பது என்று முடிவு செய்து அழைத்துவரப்பட்டார்.

26 யுலை அன்று இரவு டெல்லியில் உள்ள தமிழக முதல்வர் இல்லத்தில் எம் யி ஆரை தலைவர், பாலசிங்கம், யோகி ஆகியோர் சந்தித்தனர். எல்லாவற்றையும் விளக்கிய பின், புலிகள் தரப்பில் உள்ள நியாயத்தை புரிந்து ஏற்றுகொண்டார் எம் யி ஆர்.

"நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு துணையாக இருப்பேன், ஒப்பந்தத்தை ஏற்குமாறு வற்புறுத்த மாட்டேன். என்றும்

ஒரே உறுதியான முடிவுடன் இருந்த தலைவரையும் பாராட்டினார் எம் யி ஆர். பின் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

யுலை 28 நள்ளிரவு ஆழ்ந்து உறக்கத்தில் இருந்த தலைவரையும் அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் அவசர அவசரமாக எழுப்பினார் இந்திய புலனாய்வு அதிகாரி.

கரும்பூனைகள் சூழ இராயீவ் இருப்பிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை வாசலில் வந்து நின்று இராயீவ் வரவேற்றார். பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். உடனே பேச்சுவார்த்தை தொடங்கியது. "உங்களை பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன். இந்த ஒப்பந்த உடன்பாட்டில் அதிருப்தி உள்ளது என் சென்னார்கள் அதை தெளிவாக விளக்க முடியுமா" என கேட்டார் இராயீவ்.

பாலசிங்கம் அவர்களை விளக்கும் படி கூறுகிறார் தலைவர். எல்லாவற்றையும் விளக்கி கூறினார் பாலசிங்கம்.

அதற்கு இராயீவ்: " உங்கள் மக்கள் பிரச்சினைக்கு நீதியான ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் சொல்வது போல ஒப்பந்ததில் குறைகள் இருக்கதான் செய்கிறது. அதில் உள்ள குறைபாடுகளை பின்பு யெயவர்தனாவுடன் பேசி தீர்கிறேன். நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் "என்று கேட்கிறார் இராயீவ்.

"இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனை பேணவில்லை, மாறாக தமிழ்மக்களை பாதிக்கிறது எனவே இதை நாங்கள் ஏற்கமாட்டோம் " என்று உறுதிபட கூறுகிறார் தலைவர் பிரபாகரன்.

இராயீவிற்கு நிலைமை புரிகிறது. "நீங்க ஏற்க வேண்டாம் எதிர்க்காமல் இருந்தால் போதும்" என்று கூறுகிறார் இராயீவ்.

உடனே பண்ருட்டி ராமச்சந்திரன் " பார்த்தீர்களா பிரதமரே உங்கள் வழிக்கு வந்துவிட்டார் என்கிறார்.

தலைவரோ " ஏற்கவில்லை என்றால் எதிர்க்கிறோம் என்றுதானே அர்த்தம் " என்று பாலசிங்கம் அவர்களிடம் கூறுகிறார்.

"ஒப்பந்தத்தில் உள்ள மாகாண சபை திட்டத்தை உடனே செயல்படுத்த இயலாது. அதற்குள் வடக்கில் ஒரு இடைகால அரசை நிறுவலாம் அப்போது உங்கள் அமைப்பிற்கு முன்னுரிமை தருகிறேன் , இந்த இடைக்கால அரசு பற்றி ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொள்ள ஆயத்தமாக உள்ளேன்" என்றார் இராயீவ்.

"இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரும் முன் இராயீவ் - பிரபா ஒப்பதாம் வர போகிறது இதை ரகசியமாக வைத்துகொள்வோம்" என்றார் பண்ருட்டி.

இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடபட்ட நாடகம் என புரிந்துகொள்கிறார் தலைவர்.

எதிலுமே அவர் ஆர்வம் காட்டவில்லை.

அமைச்சர் பண்ருட்டியோ ஆர்வத்துடன் இராயீவ் - பிரபா உடன்பாட்டிற்கு வடிவம் கொடுக்க முயல்கிறார்.

" வடக்கில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுபட்டு புலிகளுக்கு பெரும்பான்மை , ஈரோசு(ஸ்) அமைபிற்கு குறைந்த பிரதிநிதித்துவம் வழங்குவது,

சிங்கள குடியேற்றம் நிறுத்துவது, புதிய காவல் நிலையம் திறக்கக் கூடாது, என்று தலைவர் கேட்டுக் கொண்டார். இடைச்செருகலாக..... இதில் இடைக்கால நிர்வாகசபைக்கு பத்மநாதனை புலிகள் அறிவிக்க இரச விசுவாசி சிவஞானத்தை அறிவித்தார் யே.ஆர் இதனால் சிக்கலெழுந்தது அன்றம் சிவஞானம் சிக்கலுக்குரியவர்  மாகாணசபையிலும்  அவரே!

"யாழ்பாணத்தில் வரி வசூலிப்பு செய்வதாக யெயவர்தனா குற்றம் சுமத்துகிறாரே அதை நிறுத்த முடியாத" என்கிறார் இராயீவ்.

"அந்த வரி பணம் எமது இயக்கத்தின் நிர்வாக செலவிற்கே பயன்படுகிறது.

அந்த பணத்தை இந்திய அரசு தருவதாக இருந்தால் வரி வசூலிப்பை நிறுத்தம் செய்கிறோம்" என்கிறார் தலைவர்.

"மாதம் எவளவு தொகை வாரியாக பெறுகின்றீர்கள் " என இராயீவ் கேட்க. " இலங்கை நாணயப்படி ஒரு கோடி ரூபாய்" என்கிறார் தலைவர்.

"அப்படியானால் இந்திய மதிப்பு படி 50 லட்சம் வரும், அதை நான் தருகிறேன்" என்கிறார் இராயீவ்.

இறுதியாக ஆயுத கையளிப்பு எழுந்தது. "எல்லாவற்றையும் ஒப்படைக்க வேண்டாம். நல்லெண்ண அடிப்படையாக சிறிதளவு ஒப்படையுங்கள் போதும். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப்படை வடகிழக்கில் நிற்கும், போர் நிறுத்தம் தொடர்ந்து இருக்கும்" என்கிறார் இராயீவ்.

பதில் எதுவும் கூறாமல் சிந்தித்தபடி  இருக்கிறார் தலைவர்.

பண்ருட்டியார் குறுக்கிட்டு " எதற்கு யோசிக்க வேண்டும் இந்தியா கொடுத்த இயக்க முடியாத ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போகிறது" என்றார்.

"இந்தியா கொடுத்த அனைத்துமே அப்படித்தான் " என்று நக்கலாக பதில் கொடுத்தார் தலைவர்.

"சரி அதை கொடுங்கள் பின் வாய்ப்புவரும் போது புதிய ஆயுதங்களை இந்தியா தரும்" என்றார் பண்ருட்டி...

அப்போது அதிகாலை 2 மணி. காலை 9 மணி விமானத்தில் இராயீவ் கொழும்பு செல்கிறார். மதியம் 3 மணிக்கு அங்கு ஒப்பந்தம் கையெழுத்திட முடிவாகி இருந்தது.(அவசரத்தில் அள்ளித்தெளிக்கப்பட்ட கோலம் அரங்கோலமானதுடன் இரு பகுதியினருக்கு அவலங்களையும் அழிவையும் தந்தது  இதில் அரசியல் இலாபமடைந்தது சிங்களவர்களே இதுவா  இராயீவ் கநாந்தியின் மதிநுட்பம்?

தலைவர் பிரபாவுடன் சுமுகமான இணக்கபாட்டிற்கு வந்தது போல மகிழ்ச்சிவுடன் காணப்படுகிறார் இராயீவ்.

ஆனால் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன் எதோ பெரிய சாதனை செய்தது போல திருப்தியுடன் இருக்கிறார்.

"ரகசிய உடன்பாடு என்று பலவற்றை பேசினோம் எல்லாவற்றையும் சுருக்கமாக எழுதி பிரதமர் கையெழுத்திட்டால் என்ன" என்று பண்ருட்டியிடம் பாலசிங்கம் அவர்கள் கேட்க.

"இதில் பல சர்ச்சைக்குரிய பணம் விகாரம், ஆயுத கையளிப்பு என்று உள்ளது. இது இந்தியா இலங்கையில் தெரிந்தால் பெரிய பிரச்சினையாகும். இரு பெரும் மனிதர்கள் எழுதபடாத "Gentleman Agreement" ஒப்பந்தமாக ஒருக்கட்டுமே" என்கிறார் பண்ருட்டி.

"நீங்கள் எதற்கும் தயங்க தேவையில் கொடுத்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன்" என்கிறார் இராயீவ்.

இறுதியாக தலைவர் முரண்பட வரும்பவில்லை. தடுப்பு காவல் பற்றி வினவியபோது. தலைவரை தமிழீழம் அனுப்புவதாக கூறுகிறார் இராயீவ்.

பின்அசோக விடுதிக்கு வந்தார்கள். "அண்ணா இருந்து பாருங்கோ இந்த ரகசிய ஒப்பந்தம், வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப் போவதில்லை இது எல்லாம் ஒரு ஏமாற்று வேலை" என்று பாலசிங்கம் அவர்களிடம் கூறிவிட்டு அவர் அறைக்கு போகிறார் தலைவர்.

இவர்கள் வரும் வரை தூங்காமல் விழித்து கொண்டு இருந்த அண்ணன் திலீபன், அந்த சந்திப்பு பற்றி விடியும் வரை பாலசிங்கம் அவர்களை தூங்கவிடாமல் அவரிடம் ஆர்வமாக எல்லாவற்றையும் கேட்டுள்ளார் திலீபன்.

திலீபன் "அண்ணா என்ன சொல்கிறார் " என்று கேட்க. " பிரபாவுக்கு திருப்தி இல்லை, ஒன்றும் நிறைவேற போறது கிடையாது " என்றார் என பாலசிங்கம் கூற.

அழமாக யோசித்துக் கொண்டிருந்த திலீபன் " அண்ணை கூறுவது தான் நடக்கும்" என்றார்.

அதே போல் எதையுமே நிறைவேற்றவில்லை இராயீவ் காந்தி.

ஆத்திரமடைந்த திலீபன் இந்திய அரசு செய்த வரலாற்று தவறை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கோடு உண்ணா விரதம் மேற்கொண்டு தன்னுயிரை தந்து உலகிற்கு உண்மையை உணர்த்தினார். தமிழீழத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டுபன்னியது....


தஞ்சை கௌதம்