குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 2 ம் திகதி செவ்வாய் கிழமை .

கொரோனா போர்…அமெரிக்கா தோற்ற நிலையில் கனடா வென்றது எப்படி?

15.05.2020...கனடா, அமெரிக்கா, இரண்டு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள்! இரண்டும் வட அமெரிக்க நாடுகள், இரண்டிலும் ஒரே வயதுடைய மக்கள், கொரோனா அதிகம் காணப்பட்ட ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுக ளிலிருந்து இரண்டுமே ஒரே தொலைவிலும் அமைந்துள்ளன!

ஆனால், கனடாவை விட அமெரிக்காவில் கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மடங்கு அதிகம் மற்றும், கனடாவை விட 30 சதவிகித அதிக உயிரிழப்பு அமெரிக்காவில்.

இது குறித்து இரு நாட்டு நிபுணர்களையும் கலந்தாலோசித்தபோது, அவர்கள் ஒரு விடயத்தில் ஒத்துப்போகிறார்கள். கனேடிய மாகாணங்களை ஆதரிக்கும் ஒரு பெடரல் அரசு கனடாவில் இயங்கும் நிலையில், அமெரிக்காவில் தலைமை நிர்வாகி ஒருவர் நேரடியாக பொது மக்களின் சுகாதாரம் தொடர்பான விடயங்களை கையாள்கிறார்.

நாட்டின் தலைமை இரு நாடுகளுக்குமான கொரோனா பாதிப்புகளின் வித்தியாசத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கனடாவில் பிரதமர் யசுடின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது, தானும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வது முதல், சமூக விலகலைக் கடைப்பிடித்து தனது வீட்டிலிருந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தது வரை, கொரோனா கட்டுப்பாடுகளை தானும் பின்பற்றியதோடு தன் நாட்டு மக்களையும் பின்பற்றச் செய்தார்.

அமெரிக்காவில் அப்படியல்ல என்பதை உலகமே அறியும். கனடாவில் பாதுகாப்பு உபகரணங்களை அரசே மொத்தமாக வாங்கி மாகாணங்களுக்கு தேவையின் அடிப்படையில் விநியோகம் செய்தது. அத்துடன் பரிசோதனைகளைப் பொருத்தவரையில், கனடா சரியான முடிவுகளை எடுத்தது. அமெரிக்காவில், எந்த அனுபவமும் இல்லாத இட்ரம்பின் மருமகனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, இன்னமும் மூன்று முக்கிய வேறுபாடுகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்றன. முதலாவது, 2002ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய SARS, 2003ஆம் ஆண்டு கனடாவுக்குள் நுழைந்தபோது, 44 கனேடியர்கள் உயிரிழந்தார்கள். கனடா, அந்த அனுபவத்திலிருந்து பெற்ற பாடத்தை கொரோனாவுக்கு பயன்படுத்திக்கொண்டது.

இரண்டாவதாக, சமீப காலமாக சுகாதாரத்திற்கான வரவுசெலவில் கனடாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவில் நோய்த்தடுப்பு மையங்களுக்கான நிதியுதவி 10 சதவிகிதம் குறைந்துள்ளது.

மூன்றாவதாக, அனைத்து நிபுணர்களும் கருத்து வேறுபாடு இன்றி ஆமோதிக்கும் ஒரு விடயம், கனடாவின் single-payer health care system. இந்த அமைப்பின்படி, சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் தங்களுக்கு ஒரு மருத்துவப் பரிசோதனையோ சிகிச்சையோ தேவையென்றால் ஒரு மருத்துவரிடம் செல்லவேண்டும். இந்த திட்டம் கனேடிய அதிகாரிகளுக்கு ஒருங்கிணைக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதாக தெரிவிக்கும் நிபுணர்கள், அமெரிக்காவில் அது இல்லை என்கிறார்கள்.

கனடாவைப் போல் மட்டும் இருந்திருந்தால், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா, இத்தனை உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்க நேர்ந்திருக்காது என்கிறார்கள் அவர்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.