குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

இது பேராசிரியர் கைலாசபதி மாதம் ஏப்பரல் முதலாம் பக்கல்

எதிர்வரும் சித்திரை ஐந்தாம் திகதி(05.04.2020)பேராசிரியர்

01.04.2020 க. கைலாசபதி அவர்களின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் இந்த மாதம் முழுவதும் அவர் பற்றிய பதிவுகளை தொடர்ந்து பதிவிட இருக்கிறேன் வரும் மார்கழி மாதம் வருகின்ற அவரது நினைவு நாளில் ஒரு முழுமையான தொகுப்பு ஒன்றை வெளியிடும் நோக்கில் இம் முயற்சி முன்னெடுக்கப் படுகிறது.

பேராசிரியரிடம் படித்த மாணவர்கள் அவரது மாக்சிய கொள்கைகளால் கவரப் பட்டவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் உங்கள் மனப் பதிவுகளை எழுதுங்கள்.

அவர் எழுத்தும் வாழ்வும் அவர் சார்ந்த அரசியல் கோட்பாடுகளும் எதிர்கால சந்ததியினருக்கு இன்றும் புதிதாய் எழுச்சியூட்டும் அறிமுகமாய் அமையும் வாருங்கள் தோழர்களே கரம் கோர்ப்போம்.

கைலாசபதி ஆய்வு வட்டம் 2005ஆம் ஆண்டு "கைலாசபதி தளமும் வளமும் " எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருந்ததது அந்த தொகுப்பில்

1.பேராசிரியர்.எம்.ஏ.நுஹ்மான்

2.கவிஞர்.இ.முருகையன்

3.பேராசிரியை.சித்திரலேகா மெளனகுரு

4.கலாநிதி.செ.யோகராஜா

5.முற்போக்கு விமர்சகர்.லெனின்.மதிவாணன்

6.கல்வியாளர்.அ.முகம்மது சமீம்

7.பேராசிரியர்.சி.மெளனகுரு

8.மேனாள் முதன்மையர்.பால.சுகுமார்

9.எழுத்தாளர்.நீர்வை பொன்னையன்

10.எழுத்தாளர்.செ.கணேசலிங்கன்

11.கவிஞர்.ஏ.இக்பால்

12.கல்வியாளர்.க.சண்முகலிங்கம்

13.கலாநிது.வ.மகேஸ்வரன்

14.எழுத்தாளர்.தெ.மதுசூதனன்

16.பேராசிரியர்.எஸ்.சிவலிங்கராஜா


ஆகியோர் காத்திரமான கட்டுரைகளை வழங்கியுள்ளனர்.


பேராசிரியர் கைலாசபதியின் இதுவரை வெளி வந்த நூல்கள்



1.பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966


2.தமிழ் நாவல் இலக்கியம்,1968


3.Tamil Heroic Poetry,Oxford,1968


4.ஒப்பியல் இலக்கியம்,1969


5.அடியும் முடியும்,1970


6.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971


7.இலக்கியமும் திறனாய்வும்,1976


8.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976


9.சமூகவியலும் இலக்கியமும்,1979


10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979


11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum


12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980


13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980


14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)


15.இலக்கியச் சிந்தனைகள்,1983

பாரதி ஆய்வுகள்,1984


16.The Relation of Tamil and Western Literatures


17.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986


18.On Art and Literature,1986


19.இரு மகாகவிகள்,1987(ஆ.ப)


20.On Bharathi,1987


21.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)


22.Tamil (mimeo)(co-author A,Shanmugadas)


23.தமிழ் வீர நிலைக் கவிதை

மொழிபெயர்ப்பு கு.வெ.பாலசுப்பிரமணியம்


ஓவியம் செளந்தர்