குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழர்களே இந்தியாவின் பூர்வீகக்குடிகள் அழகிய தமிழ் இருக்கும் போது பிணமான சமசுகிருதம் ஏன்??

எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சியா? குத்தூசி தமிழ்   17.02. 2018....06.05.2020  எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சி ஆரிய சூழ்ச்சி என்று பிறாமண ர்களை கரித்து கொண்டே இருப்பதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.

சரி நாம்தான் வீணாக பழி போடுகிறோமா அல்லது முந்தைய தலைமுறையினர் கூறியவற்றை கேட்டு ஆராயாமல் சிறுபான்மையான பிறாமணர்களை விமர்சிக்கின்றோமா என்று சந்தேகம் வர தொடங்கியது.

 

அதுவும் தமிழகத்தில் ஒரு படி மேலே சென்று பிறாமணர்களை கேள்வி கேட்பவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவரா இல்லையா என்ற பேதமில்லாமல் அனைவரையும் பிறாமண துவேசி என்றும் பெரியாரிய வாதிகள் என்றும் நாத்திகர் என்றும் கேள்வியை திசை திருப்பிவிடுவர்.

இன்றைய நிலையில் இந்தியா முழுவதுமுள்ள பிறாமணர்களையும் குறிப்பாக தமிழகத்து பிறாமணர்களின் தமிழ் பற்றையும் தமிழர் நலம்  கருதுவதையும் ஆராய்வோம். அதாவது நம் கண்ணுக்கு தெரிந்த சமசுகிருத பிறாமண சூழ்ச்சிகள் ஆராய்வோம்

இந்த நூற்றாண்டில் நமக்கு தெரிந்து திருக்குறளை சமசுகிருத மொழிக்கு மொழிபெயர்த்தனர். மொழிபெயர்ப்பில் அந்தணர் என்ற சொல்லுக்கு பிறாமணர் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர். அந்தணர் என்ற சொல்லுக்கு வள்ளுவர் கூறுவது எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்று அப்படியென்றால் புல் பூண்டு முதல் மனிதன் வரை எந்த  உயிரானாலும்  அன்பு காட்டுதலாகும். ஆனால் பிறாமணர்களின் மக்களை நான்காக பிரித்து மனிதனை மனிதனாகக்கூட பார்க்காத விதத்திலேயே அந்தணர் என்றால் பிறாமணரில்லை என்பது புரிந்துவிடும். சமசுகிருத

திருக்குறள் –> Tirukkural_sanskrit (1)

திருக்குறளை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்த சிறி ராம தேசிகன்  பத்துப்பாட்டு எட்டுத்தொகை, திருப்பாவை , கம்பராமாயணம்,நாலடியார், மற்றும் சிலப்பதிகாரம் என்று சமசுகிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழரின் பெரிய புராணத்தை மொழி பெயர்த்து அதனை மகா தேவ வியயம் என்று பெயரிட்டு தமிழகத்திலேயே கதா காலட்சேபம் செய்து சமசுகிருதத்தில் படித்து அதற்கு தமிழில் பொருள் தந்த கொடுமை நிகழ்கிறது.

ஆண்டாளின் திருப்பாவையை வடமொழியில் மொழிபெயர்த்து சிறிரங்கம் ராமானுய சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள். ர.பரதன் என்பார் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ளார். http://www.sangatham.com/bookreviews/tiruppavai-in-sanskrit.html

சமீபமாக2018ல்  திருக்குறள் சமசுகிருத வேத சாசுதிர வர்ணா சிரம தர்மத்தின் சாரம் என்று நாகசாமி  (நாகசாமி பற்றிய பதிவு https://wp.me/p9GVEN-vl) என்பவர் புத்தகம் வெளியிட்டார் .

இந்த புத்தகத்தை  எழுதியவர் நாகசாமி என்ற பிறாமணர், இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு தலைமை தாங்கியவர் காஞ்சி மடத்து வியயேந்திரன்.  குறிப்பு:– தமிழ்தாய் வாழ்த்திற்கு தியானம் செய்கிறேன் என்று அவமதித்த வியயேந்திரனிடம் தமிழுக்கும் தமிழருக்கும் விரோகமான நிகழ்ச்சி என்றால் கலந்து கொள்வான் போல.

செவி வழிச்செய்தியாக மகா பெரியவா என்ற காஞ்சி மடத்து பெரியவா பூசையின் போது தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் ஆகையால் தமிழில் பேசியவரை குளித்துவிட்டு வா என்றாராம், தமிழ் நீச பாசை என்றாராம்.

திருப்பாவையில் வரும் தீக்குறளை சென்றோதோம் (தீய சொல்லை கூற மாட்டோம் அல்லது கோள் பேசமாட்டோம்) என்ற சொல்லை மார்கழி மாதத்தில் திருக்குறளை படிக்க மாட்டோம் என்று தமிழுக்கு எதிராக தமிழிலக்கியத்தை திசை திருப்பிய தமிழின விரோதி இந்த காஞ்சி மடத்து பெரியவா.

தமிழும் சமசுகிருதமும் சிவனின் உடுக்கையிலிருந்து வந்தது என்று ஏமாற்றும் இவர்கள் இன்று வரை தமிழகத்து கோயில்களில் தமிழில் பூசை செய்ய மக்கள் போராடும் நிலையே உள்ளது.

இப்படி இன்றுவரை தமிழுக்கு எதிரான பல  செயல்களை செய்யும் இவர்களை நம் முன்னோர்கள் குறைக்கூறியது போன்று இன்று நாம் குறைக்கூறுவது தவறே இல்லை… அன்று முதல் இன்று வரை தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவர்களாக பிறாமணர்கள் கொஞ்சம் கூட மாறாமல் இருப்பது வியப்பு என்றாலும் , பிற + மண்ணினர் = பிறாமணர் என்ற பெயருக்கான இயல்பே அவர்களின் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான போக்கு

தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு (குறிப்பாக பேசக்கூடிய) மொழிப்பெயர்ப்பு செய்வதில் தவறேதுமில்லை. ஆனால் சமசுகிருதம் என்பது பிணத்திற்கு சமம் என்பது அனைவரும் தெரிந்ததே அப்படிப்பட்ட மொழியில் மாற்றப்பட்ட இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளுக்கு பின் சமசுகிருத இலக்கியங்களே தமிழில் வந்தது என்று வழக்கம் போல் கூறிடுவர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.