குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

மலாயாவில் பால்மரம் சீவுதல் - 1910

06.05.2020....இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்... மலாயாவுக்கு முதன்முதலில் வந்த தமிழர்கள் எப்படி பால் மரம் சீவினார்கள். ஒய்யாரமாய் உரசிக் கொண்டு ஒன்றும் வேலை செய்யவில்லை. கம்புக் கட்டைத் தூண்களை ஏற்றி வைத்து சர்க்கஸ்காரர்களைப் போல அந்தர் பல்டி சாகசம் செய்து இருக்கிறார்கள்.

கொஞ்சம் வழுக்கினால்... அம்புட்டுத்தான். கீழே நின்று கொண்டு இருக்கும் பொஞ்சாதி மேலேயே மல்லாக்காய் விழுந்து... ரெண்டு பேரும் குட்டிக்கரணம் அடித்து... அப்படியே பாசா காட்டுக்குள் கட்டிப் புரண்டு போய்... மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். மரம் சீவும் விசயத்தைத் தான் சொல்கிறேன். இன்னும் நீங்கள் பாசா காட்டுக்குள் இருந்தால்... தயவு செய்து வெளியே வாருங்கள். ஆக அந்த மாதிரி நம்ப மலாயா பால்மரத்துக் காடுகளில் நிறையவே நடந்து இருக்கின்றன. எல்லாமே கித்தா தோப்பு விசும்பல் கதைகள் தான்.

1880-ஆம் ஆண்டுகளிலேயே இரப்பர் கன்றுகளை மலாயாவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஓரளவுக்குப் பயிரும் செய்து விட்டார்கள். 1910-ஆம் ஆண்டுகளில் மரம் சீவத் தொடங்கியது போது தான் சிக்கல்.

இப்போது போல விடியல் காலையிலேயே தீம்பாருக்குப் போய் நெற்றி லாம்பு கட்டி 300 - 400 மரங்களைச் சீவி முடித்து ஒன்பது மணிக்கு பசியாறுகிற வேலை எல்லாம் இல்லை.

ஓர் இரப்பர் மரத்தை ஒட்டி ஒன்பது காண்டா கம்புகளை ஊன்றி அதில் மேல் ஏறி மரம் சீவி இருக்கிறார்கள்.

ஒரே மரத்தில் எட்டு - பத்து (8 - 10) அடுக்குப் பரண் படிகள். இரு பக்கத்திலும் 40 கோடுகளைப் போட்டு பட்டைகளைப் பதம் பார்த்து இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குத் தெரிந்த ஒரே குத்திக் குதறும் வேலை. அப்போதைக்கு அது ஒரு கித்தா காட்டு ‘ஸ்டைல்’.

1880-களில் பிரேசில் காடுகளில் இப்படித்தான் இரப்பர் மரங்களைச் சீவி இருக்கிறார்கள். அதே முறையைத் தான் இங்கே மலாயாவிலும் முதலில் பயன்படுத்திப் பார்த்து இருக்கிறார்கள். சரிபட்டு வரவில்லை.

பற்பல மாற்றங்களைச் செய்து, இப்போது காயம் படாமல் மரங்களைச் சீவிக் கொண்டு இருக்கிறார்கள். மன்னிக்கவும்... அந்தத் தொழிலையும் வங்காளதேசிகளும் இந்தோனேசியர்களும் நம்மிடம் இருந்து கைமாற்றாய் வாங்கிக் கொண்டு விட்டார்கள்.

அப்போது எல்லாம் காக்கிச் சட்டை; யீன்சுசு( ஸ்)கர்ட்கள்; குட்டைப் பாவாடை நெட்டைச் சிலுவார்கள் எல்லாம் இல்லை. வெறும் வெள்ளை வேட்டிகள் தான். அதை வாரிச் சுற்றிக் கோவணமாக இடுப்பில் கட்டிக் கொண்டு வேலை பார்த்து இருக்கிறார்கள். பெண்கள் பத்து முழச் சேலையை முழங்காலுக்கு மேலே சுற்றி சதிராட்டம் ஆடி இருக்கிறார்கள்.

புருசன்காரன் மேலே ஏறி மரத்தைச் சீவ... பெண்சாதி கீழே மங்கு மங்காய்ப் பால் பிடிக்கிற வேலை. ஒரு நாளைக்கு ரெண்டு பேரும் இருபது மரங்களை ரவுண்டு கட்டி சீவி இருக்கிறார்கள்.

1910-ஆம் ஆண்டு கார்ல் கிளிங்ரூத் (Kleingrothe, Carl Josef, 1864 -1 925) எனும் டச்சுக்காரர் இந்தோனேசியா மேடானில் இருந்து கிள்ளான் வந்து அப்படியே பினாங்கு போய் இருக்கிறார். அப்போது இரப்பர்த் தோட்டங்களைப் படம் எடுத்து இருக்கிறார். வருடத்தைக் கவனியுங்கள்.

இரப்பர் உற்பத்தி மலாயாவில் துளிர்விடும் காலக் கட்டம். கார்ல் கிளிங்ரூத் எடுத்த படத்தில் உள்ள இரப்பர் மரத்தின் வயது 23. அப்படி என்றால் அந்த மரம் நடப்பட்டது 1887-ஆம் ஆண்டு.

ஆனால் எந்த இடத்தில் படம் எடுத்தார் எனும் குறிப்புகள் இல்லை. இந்தப் படம் இப்போது நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் (Leiden University Library Netherlands); தென்கிழக்காசியக் கழகத் துறையின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது. அங்கே போனால் அந்தப் படம் மலாயாவில் எங்கே எந்த இடத்தில் எடுக்கப் பட்டது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

பிரச்சினை இல்லை. மலாயாவில் எங்கோ ஓர் இடத்தில் எடுத்து இருக்கிறார். அது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அந்த மனநிறைவு போதும்.

கரை கடந்து வந்த தமிழர்கள் காட்டை அழித்து மேட்டைத் திருத்தி, கம்பி சடக்குகளைப் போட்டு மலாயாவைச் சொர்க்க பூமியாக மாற்றினார்கள். இரப்பர் மரங்களை நட்டு செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரியாக மாற்றினார்கள். இப்போது உள்ள குழந்தைகளுக்குத் தெரியாத விசயம்.

பேரப் பிள்ளைகளிடம் இந்தப் படத்தைக் காட்டுங்கள். ’இப்படித்தான் உங்க பாட்டன் பாட்டிகள் எல்லாம் மரத்தின் மேல் ஏறி வேலை செஞ்சு இருக்காங்க’ என்று சொல்லுங்கள். நம் வரலாற்றை ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளட்டும். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

05.05.2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.