குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

வழமைக்குப் புறம்பான பாராளுமன்ற ஒன்றுகூடல்

05.05.2020 உண்மையில் சுவிற்சர்லாந்திற்கு தலைநகர் என்பது கிடையாது. 28. 11. 1848ம் ஆண்டு சுவிசின்புதிய அரசியல் யாப்பிற்கமைய சுவிசின் இருப்பு எங்கு எனும் வாதத்தில் பேர்ன் நகரில் பாராளுமன்றத்தினை அமைத் துக்கொள்ளலாம் எனும் இணக்கம் காணப்பட்டது. பேர்ன் நகரை தலைநகராக அப்போதையமாநில- மற்றும் தேசிய சபைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே பேர்ன் மாநிலத்தில்அமைந்துள்ள பேர்ன் நகரில் சுவிசின் பாராளுமன்றம் உள்ளது என்பதே சரியாகும். இடைச்செருகல்(குமரிநாடு.கொம்) அதற்கான பிரதான  கிளைப்பணிமனைகளும் சேவைகளும்  இங்குதான் நடைபெறுகின்றது. அன்று ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் மெல்ல நடைமுறைக்கு  கொண்டுவந்து விட்டார்கள் என்றும் கூறலாம்.

கூட்டாச்சியாக நடைபெறும் ஆட்சி முறையில் அதிகாரப்பரவல், நேரடிக் குடியாட்சி என்பன சுவிசின் அரசியல் சிறப்பாகும். ஏப்பிரல் 2ம் திகதி 1902ம்ஆண்டு இப்போதைய பாராளுமன்றக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை சுவிசின் பாராளுமன்றம் இரண்டு பெரும் உலகப்போர் காலத்திலும், இயற்கைப் பேரிடர் காலத்திலும், அல்லது இதற்கு முன் இருந்த பெருந்தொற்றுநோய் காலத்திலும்கூட வெளியிடத்தில் கூடியதில்லை.

பேர்ன் நகிரில் «பேயா (Bea)» பெருவளாகத்தில் சுவிசு(ஸ்) பாராளுமன்றம்

கடந்த இரண்டு நூறு ஆண்டுகள் காணாதசூழலில் சுவிற்சர்லாந்தின் 2020 மே மாத ஒன்றுகூடல் 04. 05 முதல் 07. 05. 2020 வரை பாராளுமன்றக்கட்டடத்தில் அல்லாது வெளியில் பெரும்பொருட்காட்சி நடைபெறும் பேர்ன் «பேயா» எனும் பெருவளாகத்தில் கூடியுள்ளது.

மாநிலங்களின் நலனைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு முழு மாநிலத்திற்கு 2 உறுப்பினர்கள் என 46 உறுப்பினர்களும் (மாநிலங்கள் சபை «Ständerat»), 30 ஆயிரம்மக்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதிஎன 200 உறுப்பினர்களும் (தேசிய சபை «Nationalrat») ஒன்றாகக் கூடுவதே சுவிசின்பாராளுமன்றம் ஆகும்.

கொறோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 16. 03. 2020 முதல் சுவிற்சர்லாந்து அரசு அவசரகால சட்டத்தைநடைமுறைக்கு கொண்டு வந்தது, சூழலிற்கு ஏற்ப தமது நடவடிக்கைகளைஇறுக்கி வந்தது. மக்கள் ஒன்று கூடுவதற்கு தடையும், இரண்டு மீற்ரர் இடைவெளி விட வேண்டும் எனும்சுகாதாரா நடவடிக்கையும், மேலும் பல்பாதுகாப்பு விதிகளையும் சுவிஸ் அரசு அமுல்ப்படுத்தியது.

28. 04. மற்றும் 11. 05. 2020 முதல் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒன்றுகூடுவதற்கு தடை என்பது நடைமுறையில்உள்ளது. ஆகவே சுவிசு(ஸ்) பாராளுமன்றம்வழமைபோல் கூடுவதற்கு 2 மீற்ரர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனும் விதி தடையாக இருந்தது. எனவே வழமைக்கு மாறாக பாராளுமன்றக் கட்டடத்தில் இருந்து வெளியேறி பேயா பெருவளாகத்தில் இருசபைகளும்கூடுகின்றன.

04. 05. 20 தொடங்கியது பாராளுமன்றக் கூட்டத்தொடர்

வழமைக்குப் புறம்பான எனத் தலைப்புக் கொண்டுஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றக் கூட்டத்தொடர் சுவிசு பாராளுமன்றத்தில் நடந்திருக்கின்றது. ஆனால் இந்தாண்டு இப்போது நடைபெறும் இக்கூட்டத்திற்கு இது பொருத்தமான பெயராகமாறியுள்ளது.

வரலாற்றில் எப்போதும் இத்தனை கோடி சுவிஸ்பிராங்குகள் ஒரு கூட்டத்தொடரில்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில்லை. கிட்டத்தட்ட 60 பில்லியன் சுவிசு பிராங்குகளை சுவிசு பாராளுமன்றம் கொறோனா பேரிடர் காப்பிற்கும், பொருளாதார சுழற்சிக்காகவும் வரவு செலவில் ஒப்புதல்அளிக்க வேண்டி உள்ளது. நிதிஅமைச்சராக இருப்பவர் சுவிசு மக்கள் கட்சியைச் சேர்ந்த திரு. ஊவெலி மௌறெர் ஆவார். இவருக்கு முன்னர் எந்த நிதி அமைச்சரும்சுவிசின் வரலாற்றில் இப்பெருந் தொகையில் பட்யற் (Budget) தாக்கல் செய்ததும் இல்லை என்ற வரலாற்றுப்பதிவாக இக்கூட்டத்தொடர்அமைகின்றது.

அதே நேரம் சுவிசின் நன்கு அறியப்பட்ட இவரது சுவிசு மக்கள் கட்சி (வலதுசாரிக்கட்சி), பணிநேரம் குறைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சுவிஸ் அரசு அளிக்கும் மானியஈட்டினைக் குறைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்ததிரு. மௌறெர் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக நாட்டின் நலனைக் காக்க இயங்க வேண்டிய சூழலில் உள்ளார்.

தேசியசபையின் இவ்வாண்டிற்கான தலைவி திருமதி. ஈசாபெல் மோறே சுவிஸ் பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார். இதன்போது பேசிய இவர் «இக்கூட்டத்தொடர் சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் பதியப்படும், வழமைக்கு மாறான இக்கூட்டத்தொடரை வழமைக்குப் புறம்பான காலத்தில் கூட்டுகின்றோம்» என்றார்.

இந்நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக உறவுகளை இழந்தவர்களுக்கு தமது இரங்கலையும் , நோயின்தீவிரத்தால் அல்லலுறுவோற்கு தமது ஆறுதலையும் சுவிசுபாராளுமன்றத்தின் சார்பில் திருமதிமோறே நவின்றார். ஒரு குறுகிய நேரம்அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் இக் கடின சூழலில்பேரிடரிற்கு எதிராக உழைப்போருக்கும், இறந்தவர்களைக் கவனிப்போருக்கும் பாராட்டும் நன்றியும் nதிரிவித்து இவர் தம் பணிகளைத்தாம் மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார் திருமதி மோறே.

கடந்த 28. 02. 2020 அவசரகாலச்சட்டத்தினை நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக நடுவன் அரசு அறிவித்து பெருந்தொகையில்கடன்களையும் வழங்க முன்வந்திருந்தது. ஆனால் சுவிற்சர்லாந்தின் அரசியல் யாப்பிற் கமைய இச்சட்டத்தை மட்டும்கொண்டு நடுவன் அரசு பாராளுமன்றத்தின் ஒப்புதல்பெறாது பெருந்தொகை களைக் கடனாக அளிக்க முடியாது. அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கடன்களுக்கும் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டும். இக்கூட்டத்தொடரில் இவை கையாளப்படும் என்றார்திருமதி. மோறே.

04. 05. 2020 திங்கள் கூடியுள்ளசுவிசு பாராளுமன்றத்தில் பல விடயங்கள் கையாளப்பட்டாலும்வழமையான கூட்டத் தொடராக இது அமையாது என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

இருக்கைகள் பெயரிடப்பட்டு பாராளுமன்றத்தில் இருப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பேசும்போதுஎழுந்து வந்து அனைவருக்கும் பொதுவாக பொருத்தப்பட்டிருக்கும் ஒரே ஒலிவா ங்கியில் பேசவேண்டி இருந்தது.

வழமையாக பாராளுமன்றத்தில் உணவகம் பல் வகை உணவுகளுடன்அமைந்திருக்கும். ஆனால் இம்முறை சிற்றுண்டி மட்டும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தது.

அதுபோல் வழமையான ஓய்வு இடைவேளை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் தமக்கு ஏற்ப ஓய்வுகளை எடுத்துக்கொண்டு கூட்டத்தொடரில் தொய்வின்றி பங்கெடுக்க அழைக் கப்பட்டி ருந்தனர்.

வழமையாக ஒவ்வொரு தீர்மானம் மற்றும் ஒப்புதல்கள் அளிக்கும்போது சபை உறுப்பினர்கள் அளிக்கும்வாக்கு கணனித்திரையில் மின்னொளியாக ஒளிரும். இதற்குப் பதில் உறுப்பினர் ஆம் இல்லை எனும்பதிலுற்கு எழுந்து நின்று சமிக்கை காட்ட கேட்கப்பட்டது.

இக்கூட்டத்தின் முழுமையான பெறுபேறு 07. 05. 2020 வியாழன் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கலாம்.

தொகுப்பு: சிவமகிழி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.