குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சமபலம் அல்லது சிறந்த ஆளுமை உள்ள ஒரு தலைமையை இன்னுமொரு தலைமை ஏற்றுக் கொள்ளாது.அது எமது ஆயுதப் போராட்ட

மும் சரி எமது அரசியல் போராட்டமும் சரி கடந்து வந்த பாதைகள் தான்.04.05.2020...........அதில் ஒரு முக்கி யமானவர் க.வே பாலகுமாரன் அவர்கள்.மார்க்சிய, லெனினிச சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த மக்கள் நல ன் சார்ந்து சிந்தனை உடைய ஒருவர்.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை ஏற்றுக் கொண் ட மக்கள் அவரின் கீழ் இறுதிவரை மக்களுக்காக வாழ்ந்த ஒரு கைதியாக சரணடையும் வரை இருந்த சிறந்த ஒரு மக்கள் போராளியான முன்னாள் தமிழ் மக்களின் தலைமை ஈரோசு(ஸ்) அமைப்பின் தலைவரான பாலகுமாரன் அவர்களை மறந்தது ஏன்.

ஒரு வெற்றியாளன் அங்கீகரிக்கப்படுகிறார் அதே வெற்றிக்குரிய தகுதியுடன் இருக்கும் ஒருவர் வெற்றி அடையாவிட்டால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எமது இனத்திடம் இல்லை.வெற்றிகளும் தோல்விகளும் தான் ஒரு மனிதனை அங்கீகரிக்கின்றன.அவனுக்குள் இருக்கும் கொள்கையும் போராட்ட சிந்தனையும் அல்ல என்பது சில விடயங்களில் புரிந்து கொள்கிறோம்....

பாலகுமாரன் அவர்களுக்கு 1990ஆம் ஆண்டுக்கு பின் விடுதலைப்புலிகளின் இணைப்பின் பின் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.சர்வதேச ரீதியில் அரசியலை அரசியல் நுணுக்கங்களுடன் சாணக்கிய தன்மையாக கையாளக்கூடிய சிறந்த ஒரு மனிதன் அரசியலில்.இதை எனக்கு அதிக முறை அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைவு படுத்தி இருக்கிறார்.

சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். 2002 சமாதான காலகட்டத்தின் பொழுது நெல்லியடி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு நாளில் உரையாற்றுவதற்காக பாலகுமாரன் அவர்கள் வந்திருந்தார்.உரை நிகழ்த்தி முடித்த பின்-இரவு பொழுதினிலே அவரின் உற்ற நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக புலோலி கிராமத்தில் சென்றோம்.15 ஆண்டுகள் கழித்து இரண்டு நண்பர்களும் சந்திக்கிறார்கள் அவருடைய நண்பர் அதிக காலம் இங்கிலாந்தில் வசித்து விடுமுறைக்காக வந்த ஒருவர்.அதிகமாக இருவரும் உரையாடுகிறார்கள்.நான் அதை ஆரோக்கியமாக சுவாரசியமாக ரசித்துக்கொண்டிருந்தேன்..

நண்பரின் ஒரு கேள்விக்கு பாலா (பாலகுமாரன்) உன்னுடைய கொள்கைகள் சிந்தனைகள் எல்லாம் முடக்கப்பட்ட விட்டனவா என்ற ஒரு கேள்வியை வைத்தார்.சிரித்துக்கொண்டே ஒரு பதிலைக் கூறினார் தமிழர் என்ற ஒரு அங்கீகாரத்திற்காக போராடத் தொடங்கியவர்கள் நாங்கள் இப்பொழுது அங்கீகாரம் இல்லாவிட்டாலும் அங்கீகாரம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது மரணம் வரை காத்திருப்பு என்றாலும் அதையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.நான் ஒன்றும் சினிமா கதாநாயகன் அல்ல கொடுக்கும் பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு.நடிகன் ஆக இருந்தால் நடித்துவிட்டு போயிருக்க முடியும் ஒரு கதாபாத்திரத்தை.நாம் இப்பொழுது மக்களுக்காக நடிக்கும் நாயகர்கள்.அவரின் பதில் இறுதியில் அப்பொழுது பார்த்தேன் அவரின் முகத்தை ஒரு மனிதனின் விரக்தி எதிர்பார்ப்பு கொள்கையின் முடக்கம் சிந்தனை இப்படி ஒவ்வொன்றையும் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு அவரின் அந்த சொற்கள் என்னை அதிகம் காயப்படுத்தியது அன்றைய இரவுப் பொழுது....

30 ஆண்டுகளுக்கு மேலாக தனது அனைத்து எண்ணங்களையும் தனக்குள் புதைத்து முள்ளிவாய்க்காலில் ஒரு கைதியாக நிலத்தில் அவரும் அவரின் மகனும் அமர்ந்திருந்த புகைப்படம் பார்க்கும் பொழுது இன்றும் கண்களில் கண்ணீர் கசிகிறது...

எண்ணுகிறேன் இந்த தருணத்தில்.அவர் தமிழ் மக்களுக்காக ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் நடிகரா அல்லது நாயகனா மக்களின் முன்.இதை சொல்வதற்கு காரணம் விடுதலைப் புலிகளின் தலைமை இன்னுமொரு தலைமையை நம்பவில்லையா.ஆனால் பாலகுமாரன் அவர்கள் இறுதிவரை விடுதலைப்புலிகளின் தலைமைக்கு கட்டுப்பட்ட( கட்டப்பட்ட )ஒரு சிறந்த விடுதலைப் புலி போராளியாக தான் தான் இருந்தார். இது அனைத்து போராளிகளும் அறிந்த ஒன்று..

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போராட்ட சிந்தனை அதிகம் என்றால்.அவரை விட அதிகம் அரசியல் சிந்தனை உள்ளவர்தான் பாலகுமாரன் அவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அங்கீகாரத்திற்காக அல்லது அதிகாரத்திற்காக அல்லது மக்களுக்காகவா பாலகுமாரன் அவர்கள் இறுதிவரை. ஒவ்வொருவர் சிந்தனையில் மாறுபட்டு இருக்கலாம் எனது சிந்தனையில் பழகி எண்ணங்களை வைத்து மக்களுக்கான ஒரு மனிதர்..

இன்று மக்களுக்காக அரசியல் செய்ய வருபவர்களுக்கு செய்து கொண்டிருப்பவர்களுக்கு..

ஒருவரின் ஆளுமையை தெரிந்து அங்கீகரிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனிடம் ஒரு சிறந்த ஆளுமை உண்டு.அதை கற்றுக் கொள்வதிலும் அந்த ஆளுமையை பயன்படுத்துவதும் ஒரு தலைமைக்கு முக்கியமானது..

நீண்ட பதிவாக போய்க்கொண்டிருக்கிறது எனது கடந்த காலம்.இரண்டாவது பதிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் பாலகுமாரன் அவர்களின் நிலை நிலைப்பாடு எண்ணங்களை அண்டன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிவராமன் கருணா இன்னும் சிலரின் விவரங்களை பதிவு செய்வதை தவிர்த்து கொள்கிறேன் நடந்த உரையாடல்களை சில சுவாரசியமான விடையங்களை அடுத்த பதிவில் பதிவு செய்கிறேன்..

எனது பதிவு சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

அன்புடன்

அரசியல் சாணக்கியன்..