குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியத் தமிழர்களை விட காலத்தாலும், வழிபாட்டுப் பாரம்பரியத்தாலும் முற்பட்ட

வர்களா?என்.கே.எசு .திருச்செல்வம் 15.01. 2017    ...தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற இடத் தில் பெருங்கற்கால தொல்லியல் மையம் ஒன்றில் அகழ்வாராய்ச் சிகள் நடைபெற்றன. இது 2600 வருடங்கள் பழமையான தொல்லியல் மையம் என ஆய்வறிக்கை கூறுகிறது. இங்கு 7000 தொல்லியல் சின் னங்கள் கிடைத்ததாகவும், இவற்றில் வழிபாடு தொடர்பான சின்ன ங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங் கற் கால தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற் றில் கிடைத்த சுடுமண் சின்னங்களில் லிங்க வடிவங்கள் மற்றும் இரும்பு வேல் சின்னங்களும், பெண் தெய்வ உருவங்களும் கிடைத் துள்ளன.

பொம்பரிப்பு, அனுராதபுரம், பூநகரி, ஆகிய இடங்களில் இரும்பு வேல் சின்னங்களும், நிக்காவெவ, உருத்திராபுரம், பின்வெவ ஆகிய இடங்களில் லிங்க வடிவங்கள், பெண் தெய்வ வடிவம் ஆகியவை யும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் படங்களை கீழே இணை த்துள்ளேன்.

உசாத்துணை நூல்கள்.

( ஈழத்து இந்து சமய வரலாறு-பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்)

(ஸ்போலியா செலனிகா-பேராசிரியர் யீ.ஏ.பி.தெரனியகல)

(தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும்-பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்)

அப்படியானால் லிங்க வழிபாடும், வேல் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் இலங்கையில் இருந்து தான் தென்னிந்தியாவுக்கு பரவி யுள்ளதா? இவ்வழிபாடுகளுக்கு தென்னிந்தியத் தமிழருக்கு இலங் கைத் தமிழர்கள் தான் முன்னோடிகளா?

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்களை விட காலத்தா லும், வழிபாட்டு பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்கள் எனும் எனது சந்தேகம் இதன் மூலம் வலுப்பெறுகிறது.

இலங்கைத் தமிழர்கள் சிவலிங்க வழிபாட்டையும், முருகவேல் வழி பாட்டையும், பெண் தெய்வ வழிபாட்டையும் இந்தியத் தமிழர்களுக் குக் கொடுத்திருப்பார்கள் எனவும், இதனால் தான் ஈழத்தமிழர்கள் இன்று வரை தமிழர் வழிபாட்டையும், கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் தென்னிந்தியத் தமிழர்களை விட அதிகமாக பேணி பாதுகாத்து கடைப்பிடித்து வருகிறார்கள் எனவும் எண்ணத் தோன் றுகிறது.

ஈழத்தமிழரின் மரபணு இந்தியத் தமிழருடன் 16.60% வீதம் தான் பொருந்துகிறது. ஆனால் வங்காளியர்களுடன் 28.10% வீதமும், சிங்க ளவர்களுடன் 55.20% பொருந்துகிறது என "இலங்கையில் சிங்களவர்" எனும் நூல் கூறுகிறது.

உசாத்துணை நூல்

(பக்தவத்சல பாரதி-மானிடவியல் துறை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்-2016)

எனவே ஈழத்தமிழர்கள் தனித்துவ மானவர்கள். "ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டோடு மொழியைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லை." எனக் கூறப்படுவது உண்மை போலத் தெரிகிறது.


என்.கே.எஸ்.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.