குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு -29 கைலாசபதி தளமும் வளமும் தொகுப்பிலிருந்து பேராசிரியர்

எம் .ஏ.நுகுமான் அவர்களின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்  கைலாசபதி -சில நினைவுக் குறிப் புகள் 29.04.2020.. "யாழ் பல்கலைக் கழகத்தைப் பற்றிய கைலாசின் கற்பனையும் எதிர்பார்ப்பும் வேறாக இருந்தது.அவர் மாக்சிய இடதுசாரிச் சிந்தனையில் வேரூன்றியவர். தேசிய வாத்ங்களுக்கு எதிராக தேசிய ஒருமைப்பாடு சர்வதேசியம் என்பன பற்றி கனவு கண்டவர்.யாழ் பல்கலைக் கழகத்தை ஒரு பலமான அடித் தளத்தில் தேசிய பல்கலைக் கழகமாக ,தென்னாசியாவின் மிகச் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தெடுக்க ஆசைப் பட்டவர்.அவரது எதிர்பார்ப்புகளுக்கி துணை நிற்கக் கூடியவர்கள் என்று அவர் கருதிய சிரேசுர புலமையாளர்களை ,இளம் விரிவுரையாளர்களை உள்ளுக்கு கொண்டு வர தன் சக்திக்கு உட் பட்டவரை முயன்றார்.தன்னுடைய குறுகிய பதவிக் காலத்துக்குள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடித் தளத்தை அவர் அமைத்தார்."

"கைலாசின் கல்வித் தகமையும் ஆழ்ந்த புலமையும் பரந்த பார்வயும் செயலாற்றலும் அக்காலத்தில் அப் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கக் கூடிய யாருக்கும் குறைந்ததல்ல.தவிரவும் கைலாசு பதவிக்காக ஆலாய்ப் பறந்தவருமல்ல."

"வளாகத் தலைவர் பதவியால் தனிப்பட்ட முறையில் கிடைத்த நன்மைகளை விட இழப்புகளே அதிகம் என்று நான் சொல்வேன்.ஒரு ஆய்வாளன் என்ற வகையில் அவருடைய நிர்வாகப் பதவி அவருடைய ஆய்வு மற்றும் எழுத்து முயற்சிகளை பெரிதும் மட்டுப் படுத்தியது.கைலாசின் முக்கியமான நூல்கள் 1974க்கு முன் வந்தவைதான்"

"கடைசி நாட்களிலும் கைலாசு பல்கலைக் கழக முன்னேற்றம் பற்றி நினைத்தார் "

"கைலாசை கோட்பாடு தளத்தில் எதிர் கொள்ள முயன்றவர் வெங்கட் சாமிநாதன் ஒருவர்தான் ஆனால் சாமிநாதனுக்கு மாக்சிய ஞானமோ தமிழ் இலக்கிய வரலாறு,சமூகவியல் பற்றிய ஆழ்ந்த பரிச்சயமோ இல்லை.அவர் கண்மூடித் தனமான மாக்சிய எதிர்ப்பாளர் மடுமே."