குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழைக்_காத்த_தமிழ்த்_தாத்தாஅவர்களின் நினைவுநாள் . எப்பிரல் 28.

29.04.2020 ....தமிழ் தாத்தா என நாம் வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ_வே_சாமிநாதய்யர். அழிந்துக்கொண்டுயிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றைத் தேடித்தேடி கண்டறி ந்து அதைப் பதிப்பித்தரை நடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் என்பதால் அவரைத் தமிழ் தாத்தா எனத் தமிழ் அறிஞர்கள் அவரை அழைக்கின்றனர். ஆங்கிலம், சமசுகிருதத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் தமிழ் மொழி முன் இந்த இரண்டு மொழிகளும் கும்பிடு போட்டு காலில் விழும் அளவுக்கு தொன்மை வாய்ந்த சிறப்பு மொழி என்பார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள #உத்தமதானபுரம் என்கிற கிராமத்தில் வேங்கடசுப்பையா – சரசுவதி இணையரின் மகனாக 1855 பிப்ரவரி 19ந்தேதி பிறந்தார் வேங்கடநாதன். பிற்காலத்தில் திருவாடுதுறை ஆதின மடத்தில் பயிலும்போது #சாமிநாதன் எனப் பெயர் மாற்றினார் ஆசிரியர். அது பின்னர் ஊர் பெயரையும், தந்தை பெயரையும் முன்னெழுத்துக்களாக இணைக்கும் வழக்கப்படி உ.வே.சாமிநாதன் ஆனார். அதனை சுருக்கி உ.வே.சா என அழைத்தனர்.

இவரது தந்தை இசைக்கலைஞராக இருந்தார். இதனால் திண்ணைப்பள்ளியில் பாடத்தோடு இசையையும் கற்றுத்தர சிறப்பு ஏற்பாடுகள் செய்தார் உ.வே.சா வின் தந்தை. 7வது வயதில் திருவாடுதுறை ஆதினத்தின் கீழ் தமிழ் கற்று தந்துக்கொண்டுயிருந்த மீனாட்சி சுந்தரம்_பிள்ளையிடம் தமிழ் கற்றுத்தரச் சொல்லி கேட்க அவரும் உ.வே.சாவை தனது மாணவராக சேர்த்துக்கொண்டு தமிழின் இலக்கணம், இலக்கியம், செய்யுள் அறிந்து ள்கொள்வது, இயற்றுவது, கவிதைகளை இயற்றுவது, பாடல் புனைவது போன்றவற்றை கற்று தந்தார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழை கற்றுக்கொண்டே இருந்தார்.

இவரது குடும்பம் வறுமையான குடும்பம். அக்காலத்தில் இராமாயண சொற்பொழிவு நடக்கும். மாதக் கணக்கில் நடக்கும். சொற்பொழிவாளராக இருந்த உ.வே.சா வின் தந்தை. தொழில் செய்யும் இடத்துக்கே தன் குடும்பத்தையும் அழைத்து செல்வார். இப்படி பிழைப்புக்காக ஊர் மாறி, ஊர் மாறி தங்கினர். உ.வே.சா விற்கு 14 வயதாகும் போது திருமணம் நடைபெற்றது. தனது 19வது வயதில் இருந்து குடும்ப வறுமையை போக்க உ.வே.சா வும் இராமாயணம் சொற்பொழிவு நிகழ்த்த துவங்கினார். இதனால் குடும்பத்தின் வறுமை மற்றும் கடன் ஓரளவு தீர்ந்தது.

படித்து முடித்தப்பின் கும்பகோணத்தில் செயல்பட்ட ஆதினத்தின் கீழ் செயல்பட்ட பள்ளியில் 1880 முதல் 1903வரை கும்பகோணத்தில் ஆசிரியர் பணியாற்றி வந்தார். கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்த்துவிட்டவர் தியாகராயசெட்டியார். அதன்பின் சென்னை பல்கலைகழகத்தில் 1903ல் பணிக்கு சேர்ந்தார். 16 ஆண்டுகள் பணியாற்றியவர் 1919ல் அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னைக்கு வந்தபின்பே அவரது வறுமை ஓரளவு நீங்கியது.

ஆங்கிலம், சமசுகிருதத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் தமிழ் மொழி முன் இந்த இரண்டு மொழிகளும் கும்பிடு போட்டு காலில் விழும் அளவுக்கு தொன்மை வாய்ந்த சிறப்பு மொழி என்பார்.

சங்க இலக்கிய நூல்களை தேடிப்பிடித்து புதுப்பிக்க முடிவு செய்தார். வேணுவனலிங்க விலாசச்சிறப்பு என்கிற நூலில் எழுதப்பட்ட 86 பாடல்களில் 8 பாடல்களை எழுதினார். அந்த நூலை பதிப்பித்தவர் உ.வே. சா. அந்த நூல் தான் அவரின் முதல் பதிப்பக நூல் என்பது குறிப்பிடதக்கது.

சீவகசிந்தாமணியை புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான குறிப்புகளை தேடித்தேடி சேகரித்து அதனை சரிப்பார்த்துக்கொண்டு இருந்தபோது, அதை வெளிவரவிடாமல் செய்ய பெரும் சிக்கல்களை உருவாக் கினார்கள். அந்த சிக்கல்களை வெற்றிகரமாக முறியடித்து வெளிக்கொண்டுவந்தார். அதன்பின்பே சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, நெருநானுற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அதை புதுப்பித்து வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்.

மணிமேகலை நூலுக்கு உரை எழுதியுள்ளார். இன்றளவும் சங்க இலக்கிய நூல்களில் சிறந்த உரை நூலாக உ.வே.சா எழுதிய மணிமேகலையை குறிப்பிடுகின்றனர் தமிழறிஞர்கள். என் சரித்திரம் என்கிற தனது வரலாற்றை இரண்டு ஆண்டுகள் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார் உ.வே.சா. அது 1940 முதல் 1942 வரை வெளிவந்தது. ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகளை தேடி சேகரித்து வைத்திருந்தார். அதனை தன் வாழ்நாள் பணியாகவே செய்தார்.

1931 மார்ச் 21ந்தேதி உ.வே.சா வின் தமிழன் பணியை பாராட்டி #மகாமகோபத்தியார் என்கிற பட்டம் வழங்கி கவுரவித்தது சென்னைப் பல்கலைக்கழகம். சங்ககால தமிழும், பிற்கால தமிழும் என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் பேசிய பேச்சு பின்னர் நூலாக வெளிவந்தது. அந்த அளவுக்கு பேச்சுக்கலையில் சிறந்தவர், பேசுவதை நகைச்சுவை இழையோட பேசுவார்.

1940 ஏப்ரல் 28ந்தேதி தனது 87வது வயதில் மறைந்தார். உத்தமநாதபுரத்தில் உ.வே.சா பிறந்த இல்லம் அரசால் நினைவில்லாமாக மாற்றப்பட்டது. 1942ல் சென்னையில் அவர் பெயரில் அமைக்கப்பட்ட நூல் நிலையம் இன்றளவும் செயல்படுகிறது.