குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிசில் முதற்தளர்வு

27. 04. 2020 முதல்தளர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனாலும் 65 வயதிற்கு மேற்பட்டவராயின், முன்னரே நோய்வாய்ப்பட்டு பக்கவிளைவு கொண்டுள்ளோர் வீட்டில் தனித்திருங்கள் எனும் வேண்டுகோள் தொடர்ந்தும் சுவிற்சர்லாந்து நடுவன் அரசால் விடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களே வீண் பயணங்களைத் தவிருங்கள், வேலைக்கு செல்லவும், மருத்துவமனைக்கு அல்லது மருந்தகம் செல்வதற்கும். உணவுப்பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியில் செல்லுங்கள் என்ற கோரிக்கையும் சுவிற்சர்லாந்து அரசால் தொடர்ந்து சமூக வலையித்தளங்களிலும் பொது ஊடகங்களிலும் பரப்புரையாக ஒலித்துக் கொண்டுள்ளது.

முதற்கட்ட தளர்வு நடவடிக்கையாக முடிதிருத்து நிலையம், தோட்ட நடுவங்கள், கட்டப் பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தும்போது மருத்துவ முகமூடி அணிதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11. 05. 2020 முதல் பொதுப்போக்குவரத்திலும் புதிய நடைமுறைகள் கையாளப்படும், முகவுறை அணிய வேண்டி இருக்கும்.

முகவுறை:

இன்றைய சுவிசு நடுவன் அரசின் ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிசின் பாதுகாப்பு அமைச்சின் வழங்கல் பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் திரு. மார்க்குசுநெப் அவர்கள் தெரிவிக்கையில்சாதாரண துணியாலான முகவுறைகள் உரிய பலனை அளித்துகொறோனா தொற்றினைக் கட்டுப்படுத்தாது. நாம் உரிய மருத்துவதரத்தில் நோய்த் தொற்றுத் தடுப்புத் திறனுள்ள முகவுறைகள் கிடைப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

நோய்கட்டுகுள் வந்ததா?

சுவிசுநடுவன் அரசின் கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர் தடுப்புபதிகாரியான திரு. டனியேல் கொக் அவர்கள் தமதுஉரையில் சுவிசில் இப்போது தொற்றுக் குறைந்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி. இருந்தபோதும்நாம் இப்போது ஓய்வுகொள்ளலாகாது, «இந்த நோயுடன் நாம் ஆராய்ச்சி செய்யலாகது» தொடர்ந்தும் சுதகாதர நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்க்க வேண்டும் என்றார்.

இத்தாலியுடன் எல்லையினைக் கொண்ட சுவிசின் அதிக கொறோனா நோயாளிகளைக்கொண்ட மாநிலமான ரிச்சீனோவில், 27. 04. 2020 திங்கட்கிழமை 24 மணிநேரத்தில் கொறோனா நோய்த்தொற்றுக் காரணமாக 5வர் உயிரழந்துள்ளனர்.

நோய்த்தொற்று:

சுவிசில் 27. 04. 2020 வரை 28978 பேர் கொறோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள். அவர்களில் 22300 பேர் நலன் அடைந்துள்ளார்கள். 1663 பேர் கொறோனா காரணமாக இறந்துள்ளார்கள்.

25. 02. 2020 முதல்இன்றுவரை ரிச்சீனோ மாநிலத்தில் 3169 மனிதர்கள் கொறோனா தொற்றிற்கு ஆளாகி அதில் 311 மக்கள் தமது உயிரை இழந்துள்ளனர். இதுவரை 709 நோயாளர்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து வைத்தியம் செய்து, நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.

27. 04. 2020 ஒரேநாளில் 103 புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளார்கள். கடந்த 26. 04. 2020 ஞாயிறு 167 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாயினர்.

மூதாளர்இல்லம்:

சுவிசில் தற்போது மூதாளர் இல்லங்களில் இருப்போரை சென்று பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துர்க்கா மாநிலம் முதலாவதாக 01. 05. 2020 முதல் இத்தடையினை நீக்க உள்ளது. இதன்படி இம் மாநில அரசுநடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் 01. 05. வெள்ளி முதல் மூதாளர் இல்லத்தில் வாழ்பவரை உறவினர்கள்சென்று பார்க்க முடியும். ஆனாலும் முற்பதிவு செய்து சுவிஸ் நடுவன் அரசு அறிவித்துள்ள உரியமருத்துவ நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டப்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் உறவினர்கள் சந்திபிற்கென தனியான இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம்.

பேரன் பேத்தியை அணைக்கலாம்:

ஆம் இதுவரை மூதாளார்கள் குழந்தைகளைத் தீண்டாதீர் எனும் பரப்புரை சுவிஸ் நடுவன் அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்றைய சந்திப்பில் திரு. கொக் அவர்கள் தெரிவிக்கையில்பாலர் வயதுப் பேரன் பேத்தியை மூதாளர்கள் அச்சமின்றி தீண்டலாம், தொடுதலாம், ஆனால் விடலை வயது மற்றும் இடைச்சந்சந்ததிகளிடையில் தொடர்ந்தும் இடைவெளி பேணுதல் உடல் நலன் பேணும் என்றார்.

வீதிமுடக்கம்:

பேர்ன் மாநிலத்தில் நீடெர்வங்கென் எனும் ஊருக்கு செல்லும் வேக வீதியை காலை 07.25 மணிக்கே காவற்துறை பூட்ட வேண்டி அமைந்து விட்டது. காரணம் கட்டடப் பணிக்கு உரிய பொருட்களை விற்கும் பவ்கவுஸ் (Bauhaus) இன்று (27.04.20) நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதாகும். அதன் முன்றலில் பநூறுவாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக நிரல்படுத்தி நின்று வீதியை முடக்கிவிட்டது. காற்துறையின் ஒழுங்கமைப்பில் வீதி திறக்கப்பட 2 மணிநேரங்கள் ஆனது.

இனி என்ன தளர்வு?

அடுத்தகட்ட சுவிசின் நடவடிக்கை என்ன என்பதை தீர்மானிக்கப்போது வேறுயாருமல்ல, கொறேனாதான். இதன் பரவல் கட்டுக்குள் இருந்தால் தொடர்ந்தும் தளர்வுகள் தொடரும்…

தொகுப்பு: சிவமகிழி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.