குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

கிறிசு(ஸ்)துக்கு பின் 600ஆம் நூற்றாண்டு....

26.04.2020...மெடிட்டெரேனியன்(mediterranean) கடலினூடாக கிழக்கு உரோம பேரரசின்(Byzantine empire) தற்போது இசு(ஸ்)தான்புல் என அறியப்படும் கான்Rடான்டிநோபில் துறைமுகத்தில் தரைதட்டுகிறது யசுடினியன் பேரரசனின் போர்க்கப்பல்கள்.

அவை எகிப்தை வெற்றிகொண்டபின், அரசனுக்கு காணிக்கையாக எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட தானியங்களை கொண்டுவந்திருந்தன, கூடவே எகிப்தியர்களின் சாபத்தையும்....

தானியங்களோடு ஊருக்குள் வருகின்றன அந்த கறுப்பு எலிகள்......

அன்றிலிருந்து தொடங்குகிறது அந்த பேரரசின் வீழ்ச்சி .

பின்பு “Yersinia pestis” என அறியப்படட கொள்ளை நோய் எழுச்சி பெறுகிறது.

கொள்ளைநோயின் எல்லைகள் பரவத்தொடங்க சாம்ராச்சியத்தின் எல்லைகள் சுருங்க தொடங்குகிறது.

வரலாறும் பேரழிவை தந்த முக்கியமான pandemic ஒன்றையும் நிலைகுலைந்த சாம்ராச்சியம் ஒன்றையும் பதிவு செய்து கொள்கிறது!!!!

ரெண்டு காலையும் விரிச்சபடி விட்டத்த பார்த்து கொண்டு

''corona அப்டி பண்ணிச்சாம்...corona இப்டி பண்ணிச்சாம் ''

எண்டு காலை, மாலை,மதியம் ,இரவு எண்டு ஒரு கணக்கில்லாம

ஒரே மாதிரி செய்தி வாசிக்கிறது எவ்ளோ பெரிய துன்பம் தெரியுமா?

எல்லாமே ஒரே மாதிரி flavour .....

ஏற்கனவே போதுமான அளவு உப்பும் சேர்த்தாச்சு (விழிப்புணர்வு தகவல்கள்)

போதாதற்கு சுடச்சுட Score விபரங்கள் வேறு

அபொழுது கண்ணில் பட்ட matter கொஞ்சம் காரசாரமான சமாச்சாரம் தான்.

ஒரு சம்பவத்தை பலவாறு உலுப்பக்கூடியவை இந்த conspiracy கண்ணோட்டம்.

அவை சம்பவத்தின் பலபரிமாணங்களை பல கோணங்களில் காட்ட கூடியன. உண்மையகமாறுவது ,அல்லது பொய்த்துப்போவது என்பது வேறுகதை. ஆனால் சிந்தனைக்கு தீனிபோடக்கூடியன, சுவாரசியமானவை அவை.

இந்த உலகத்தையே பீதியில் உறைய வைத்திருக்கும் covid 19 ஆற்றிய வினை, எதிர்வினை என்பவற்றை conspiracy கண்களோடு அலசுகிறது இது.

THE COLOR OF CORONA

(Through the eye of conspiracy)

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Conspiracy - 01

குடோன்ல (?Bats or Lab ) கிடந்த corona (SARS - CoV - 2) மூடையை கொண்டாந்து கூட்டத்தில வைச்சவன் யாரு ?

A million dollar கேள்வி.

*2004 இல் Beijing ஆய்வுகூடத்திலிருந்து SAARS பரவியதை சுட்டிகாட்டி , இம்முறையும் சீனாதான் மற்ற நாடுகள் மீது உயிராயுதமாக பயன்படுத்தும் நோக்கில் Wuhan Institute of Virology பரிசோதனைக்கூடத்தில் வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பொழுது, அங்கிருந்து தவறுதலாக பரவியதை தொடர்ந்து இது ஏற்பட்டிருக்கலாம் என இஸ்ரேல்(Israeli intelligence officer Dany Shoham) ,அமெரிக்கா நாடுகளால் (Washington Times article by Bill Gertz, Wilbur ross -United States Secretary of Commerce, Tom Cotton - Senator) சாடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் பிரபல சமுகவியல் விஞ்ஞானி Steven Westley Mosher (president of the Population Research Institute) Wuhan சோதனை கூடத்திலிருந்தே virus பரவியதாகவும் ,அங்கு சோதனைக்கு கொண்டுவரப்படும் விலங்குகள் சில விஞ்ஞானிகளால் நல்ல விலைக்கு Wuhan சந்தையினர்கு விற்கப்படுவதுண்டு, இதன் மூலம் பரவியிருக்கலாம் என அதிர்ச்சியூட்டுகிறார்.

பதிலுக்கு சீனா வெளிவிவகார அமைச்சின் அலுவலர் Lijian Zhao "இல்லை இல்லை , இது Wuhan இல் அக்டோபர் மதம் இடம்பெற்ற இராணுவ நிகழ்வுகளில் கலந்துகொண்ட அமெரிக்கா வீரர்களால் அவர்களுக்கு தெரியாமலே சமீபத்தில் மூடப்பட்ட Fort Detrick என்ற ஆய்வகத்திலிருந்து பரவிய பின், வந்து சேர்த்த Virus களாலேயே, இந்த நிலைமை தங்களுக்கு ஏற்பட்டதென counter punch ஒன்று கொடுத்திருந்தார்.

திட்டவட்டமாக எதையும் அறிக்கையிடவிட்டாலும் சீனா அரசுசார்பாக சொன்ன விளக்கம் Wuhan live animal market தான் தொடக்க இடமாக இருக்கலாம். அங்கிருந்திருக்க கூடிய விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியிருக்க வேண்டும். குறிப்பாக Prof Stephen Turner ( head of the department of microbiology at Melbourne’s Monash University) சொல்வது போல வௌவ்வால்களிலிருந்து ஒரு இடைபட்ட விலங்குக்கு தொற்றி பின் மனிதர்களுக்கு வந்திருக்கலாம். Huanan Seafood Market இல் இறால் விற்பனை செய்யும் 57 வயதான Wei Guixian என்ற பெண்மணி அங்குள்ள கழிவறைகளிலிருந்து covid 19 தொற்றிற்கு உள்ளாகியிருக்கலாம் என்பது அதன் ஊகம்.

அல்லது நேரடியாகவே வௌவ்வால்களிலிருந்து மனிதனுக்கு தொற்றியிருக்கலாம், பின்னர் அது இன்னொரு நோயாக்கியாக பரிணமித்திருக்கலாம்(Prof Edward Holmes, of the University of Sydney).

Yin Dao Tang, 24 வயது இளைஞர் ,Hubei மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Case zero. இவரின் இறுதி நேர வாக்குமூலம் தலைசுற்ற வைக்கிறது. தன்னால் ஒரு பெண்துணையை தேடிக்கொள்ள முடியாததால் , தன்னின சேர்க்கையாளராய் ஆவதிலும் பார்க்க மிருகங்களுடன் உறவு வைத்துக்கொள்ள எண்ணியதாக குறிப்பிட்டுளார் . அந்த Case zero வௌவ்வால்களுடனும் உறவுகொண்டுள்ளார் என சீனா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் Covid 19 வௌவ்வால்களிலிருந்து மனிதருக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. (World news daily report இணையதளம் , நோயாளியின் தந்தையை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தி). இதொரு புரளியென்றும் மறுப்பு கிளம்பியிருந்தது.

கடைசியில் இந்த கருதுகோள்களுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியில் பதில் வைக்கும் முகமாக சோதனைக்கூடங்களிலிருந்து வைரஸ்கள் பரவவில்லை, இயற்கையாக ஏற்பட்ட பிறழ்வே இந்த நுண்மி உருவாக்க கரணம் என scripp research institute ஐ சேர்ந்த Kristian G. Andersen "The proximal origin of SARS-CoV-2" என்ற தலைப்பில் Nature medicine என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் முடிவிற்கு வருகிறார்.

Covid 19 ஐ ஏற்படுத்தும் நுண்மி ஏற்கனவே உள்ள ஆறு வகையான Corona நுண்மிகளில் எந்த ஒன்றினதும் genetic back bone ஐ ஒத்ததாக இல்லை,இது வேறுபட்டதொரு genetic back bone ஐ காட்டுகிறது. ஆய்வுகூடத்தில் உருவாக்கி இருந்தால் ஏதோஒருவகையில் ஒத்துப்போயிருக்கவேண்டும், இவைதான் அவர் அதற்காக அவர் முன்வைக்கும் ஆதாரங்கள்.

SARS CoV -2 virus ஐ 100% ஓத்தில்லாமல் 96% ஒத்துள்ள virus கள், சில இன வௌவ்வால்களில் உள்ளன.

Conspiracy theory நினைத்தால் இதிலும் வாய்வைக்கலாம். குறிப்பிட்ட வௌவால்களிலிருந்து வைரஸ் ஐ பயன்படுத்தி ஆய்வுகூடத்தில் SARS CoV -2 virus தயாரிக்கப்பட்டிருக்கலாம் தானே.

சரி இது ஓரளவுக்கு ok போலிருக்கிறதென நினைக்க,

மறுபடியும் கிளப்பிவிடுகிறார் HIV கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் விஞ்ஞானி Luc Montagnier.

"இது HIV இற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்வின் போது விளைவான virus ஆக இருக்கவேண்டும், ஏனெனில் அதனில், HIV வைரஸின் genetic மூலக்கூறுகளும் உள்ளன, ஆகவே இது ஆய்வகத்திலிருந்து தான் வெளியேறியிருக்க வேண்டும் , அதுவும் Wuhan இது தொடர்பான ஆய்வுகளை பலவருடங்களாக செய்துவருகிறது."

"அட போங்கடா..." என்றிருக்க,

இதென்ன பிரமாதம் என,

இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்றை போடுகிறார் Professor Chandra Wickramasinghe of the Buckingham Centre for Astrobiology.

Panspermia (உயிரிகள் பிரபஞ்சம் பூராவும் பரந்திருக்கின்றன , அவை விண்வெளி தூசுகளூடாக பரப்ப படுகிறது)கொள்கைக்கு அமைவானது என்றபடி 2019 October 11 சீனாவின் வான எல்லையை வெடித்து எரிந்த விண்கல் தான் இந்த virus களின் மூலம் என்று ஒரு புதினமான கருத்தை முன்வைக்கிறார். அதையும் தாண்டி 40 - 60 பாகை அகலாங்குகளுக்குள் அடங்கும் நாடுகளுக்கு அதனூடு செல்கின்ற காற்றோட்டத்தினூடாக இது பரவுகிறதெனவும் வாதிக்கிறார்.

ஆகமொத்தத்தில்.....

origin of corona virus (SARS CoV -2) என்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு மர்மமே...

Conspiracy - 02

எல்லாம் சரி,

இந்த உலகவல்லரசுகள், அபிவிருத்தியடைந்த நாடுளான ஐரோப்பிய அமெரிக்கா நாடுகளில் ஏன் இவ்வளவு தோற்றாளர்கள் , மரணங்கள் ?

இதென்ன நோயின் தீவிரமா?

அல்லது அலட்சியமாக இருந்துவிட்டதன் விளைவா?

அல்லது,

மக்களின் நலன், உயிர் என்பவற்றிலும் பார்க்க மேலானதாக கருதப்படும் எதோ ஒன்று பின்னணியாக இருக்கிறதா?

அதற்குள்ளும் எட்டிப்பார்க்கிறது consipiracy theory.

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அங்கு வெளிப்படையாகவே பேசப்பட்டது,lock down லும் பார்க்க தாங்கள் covid -19 ஐ எதிர்கொள்கிறோம் என்று.

TEXAS மாநிலத்தின் 69 வயதான lieutenant governor ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிடுகிறார் " 69 வயதான எனது உயிரிலும் பார்க்க எனது நாட்டின் பொருளாதாரம் முக்கியமானது " இதை என்னை போன்ற 69 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து பெருமக்களும் ஏற்று கொள்வார்களென தன நம்புவதாகவும் உணர்வு பூர்வமாக தெரிவிக்கிறார்.

பொருளாதாரசீர்குலைவு , அல்லது உலகத்தில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுத்தல் சார்பாக அமெரிக்க ஆட்சியாளர்களின் மனப்போக்கு எவ்வாறு சிந்துக்கும் எவ்வாறானதொரு முடிவெடுக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதேபோல் colorado ,pennyslvania ,Texas போன்ற இடங்களிலும் anti lock down rallies நடைபெற்றதும் அதிர்ச்சியான விடயம்.

உயிரைவிட economy ஐ முக்கியப்படுத்தும் மனநிலைக்கு covid -19 இன் target population உம் ஒரு காரணமாயிருந்திருக்கலாம்.

covid 19 vs economy போரில் அமெரிக்கர்கள் பணயம் வைப்பது அல்லது பலி கொடுத்துக்கொண்டிருப்பது 60வயதுக்கும் மேற்பட்டவர்களையே. இது ஒரே கல்லிலே இரண்டு மாங்காயை அமெரிக்கர்களுக்கு கொடுக்கலாம்.

2020 ஆம் ஆண்டளவில் வயதானோர்களின் தொகை மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 17% ஆக இருக்கும். ஒரு உதாரணத்திற்கு 2011 இல் அமெரிக்காவின் மொத்த பாதீட்டில்(3.8 trillion) இல் ஏறத்தாழ 11% ஆன செலவீனம்(centre for financing access and cost trends) 65வயத்திற்கு மேற்பட்டவர்களை சார்ந்த செலவீனம் ஆக இருந்திருக்கிறது,அதேசமயம் இராணுவம் மற்றும் பாதுகாப்பிற்கானது 19% ஆகும்.

பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால் இது ஒரு சுமையாகவும் செலவாகவும் கருதப்படலாம், அவ்வாறான மனநிலையில்தான் அமெரிக்கர்கள் இருப்பதாக தெரிகிறது. போதாக்குறைக்கு அமெரிக்காவின் பொருளாதார ஆர்வலர் Howard Gleckman , அமெரிக்க சஞ்சிகையான Forbe சென்ற வருட தொடக்கத்தில் இல் எழுதுகிறார்-இன்னும் பத்து வருடங்களில் வயது முதிர்ந்தோரிற்கான செலவீனம் பாதீட்டின் 50% ஐ பிடித்துக்கொள்ளலாம் என்று.

தற்போது அமெரிக்காவின் இறப்பு 46 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கையில் இறந்தவர்களில் 70 -80% இடைபட்டவர்கள் - 65வயதிட்கு மேற்பட்டவர்களே .

அதே போல் பாதிப்படைந்தவர்களிலும் 60% அண்மித்த அளவில் இருப்பவர்கள் வயதானவர்களே.

அமெரிக்கர்கள் மட்டுமல்ல ஐரோப்பியர்களின் மனநிலைக்கு இத்தாலியினரே எடுத்துக்காட்டு. 2013 இல் Pew research center "முதியவர்களை பராமரிப்பது யாரினுடைய பொறுப்பு?" என வினாவி நடத்திய கருத்துக்கணிப்பில் 56% இத்தாலிய மக்கள் அது தங்களது வேலை இல்லை, அவர்களை அரசாங்கம் தான் அரச செலவில் பராமரிக்க வேண்டும் என பதிலளித்துள்ளனர், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறதென பாருங்கள்.

அதேசமயம் வளர்ச்சியடைந்த,வளர்ச்சியடைந்து வரும் பெரும்பாலான ஆசியா நாட்டு மக்கள் அது தங்களின் அல்லது குடும்பத்தின் பொறுப்பாக கருதுகிறார்கள்.

இத்தாலியின் சனத்தொகையில் 2020 அளவில் 23% ஆனாவர்கள் வயதானோராகவும் தங்கி வாழ்பவர்களாக இருக்கிறார்கள் (Statista Research Department, Mar 23, 2020).இவர்களுக்கான செலவீனம் பாதீட்டில் அண்ணளவாக 16% பிடித்துக்கொண்டிருக்கிறது.

இப்படியே போனால் 23% என்பது 2050 இல் இது 40% ஐ எட்டுமென எதிர்வும் கூறப்பட்டது(Demographic trends - OECD iLibrary).

Covid -19 உச்சம் தொடட பொழுது, 80வயதிற்கும் மேற்பட்டோரை கைவிடுகிறதா?

இத்தாலி அரசு என அங்கிருக்க கூடிய சுகாதாரஅலுவலர்களின் அறிக்கை ஒன்றை மேற்கோள்கடடி The Telegraph பத்திரிகை கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது. அதற்கு பின்னர் மறுப்பறிக்கைகளும் வந்திருந்தன.

சரி முதியவர்களை விடுவோம்,அடுத்த இடத்திலிருக்கும் நடுத்தரவயதினரின் இழப்பு????

அதற்குள்ளும் புகுந்து விளையாடுகிறது Conspiracy.

இதில் அரைக்கரைவாசி பாதிப்பு அமெரிக்காவின் பெரும்பான்மை(அண்ணளவாக 75%, united states census buraeu ) இனமான வெள்ளையர்கள் (whites)அல்லாத மாற்று இனத்தவரிலேயே அதாவது சிறுபாண்மை இனத்தவரிலேயே ஏற்பட்டிருக்கிறது .

"கூட்டிக்கழிச்சு பார் கணக்கு சரியாக வரும்!!" என்று conspiracy theories சொல்வது போலுள்ளது.

இதில் என்ன குழப்பம் எனில் பாதிப்புற்றோரில் 65%ஆன நோயாளிகளில் அவர்கள் என்ன இனம் என்பது தரவுகளில் எடுத்துக்கொள்ளப்படவில்லை(Center for disease control and prevention ,2020,april 21).

இந்த குழப்பமும் ஏதேனும் ஊகத்தை உங்களுக்கு ஏற்படுத்தினால் நான் பொறுப்பல்ல.

இந்த சந்தேகத்தோடே APM எனப்படும் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வானொலி வலையமைப்பு The Color of corona virus என்ற கட்டுரையூடாக கருப்புநிறத்தவரில் 100,000 பேரில் 23 பேர் இற ப்பதாகவும் அது ஏனைய இனங்களைவிட மூன்று மடங்கு அதிகமானதெனவும் முரண்படுகிறது.

இதனால்தான் சரியான தகவல் சேகரிப்பு தவறவிடப்பட்டதா?

இதே நிலைமை தான் ஐக்கியராச்சியத்திலும் நிலவுகிறதென The guardian சஞ்சிகை British Medical Association இன் தலைவரான Dr Chaand Nagpaul இனை மேற்கோள் காட்டி கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதில்

"இனப்பரம்பலில் சிறுபான்மையாக இருப்பவர்கள் covid 19 பாதிப்பிலும் இறப்பிலும் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்களே ஏன்?"

என்ற கேள்வி எழுப்ப படுவதோடு , சரியான முறையில் இனப்பரம்பல் சார்ந்த வகையில் நோய் தொற்றையும் இறப்பையும் அரசாங்கம் பதிவு செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டபடுகிறது.

இதற்கு பதிலாக சொல்லப்படடகரணம் "Front line workers இல் சிறுபான்மையினர் அதிகளவில் வேலைசெய்கிறார்கள், ஆகவே இது சாத்தியமே"என்று.

ஆனால் அதை மறுத்து NHS இன் கட்டமைப்பிற்குள் பணிபுரிபவர்களில் 44% ஆனவர்களே BAME எனப்படும் Black ,Asian and Minority Ethnics எனப்படும் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் corona வினுடைய தாக்கமும் போக்கும் simple ஆக நோயில் மட்டும் தங்கியில்லாமல் , அது ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ளமுடியாத சிக்கலான பலவிடையங்களில் தங்கியிருக்கிறதென்பதை conspiracy theory கிளறிவிட்டுக்கொண்டிருக்கிறது.

Lock down முறையை உடனே அமுல்படுத்தாமலிருந்ததற்கு பொருளாதாரத்தையும் தாண்டி வலுவான இன்னொரு காரணதையும் conspiracy theory அலசுகிறது.

அது covid -19 இன் பாதிப்புகளிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பு பெறுவதை எதிர்பார்த்ததாயிருக்கலாம். ஒரு time tested vaccination செயன்முறையூடாக பெறக்கூடிய பலனை அது தருவதாயிருக்கலாம்.

அதுதான் கூட்டு நிர்பீடனம்,

இந்த நிலையை அடைய ஏறக்குறைய 70% சனத்தொகை நோய்த்தொற்றியிருக்க வேண்டும்.

70% சன்தொகை பாதிக்க பட்டபின் " நிர்பீடனம் வந்த என்ன வராட்டி என்ன? என்றொரு கடுப்பு கேள்வி எழலாம் ,

உண்மைதான் , ஏனெனில் கூட்டுநிர்பீடனம் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பாதிப்பிற்கு ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. அது முழுக்க முழுக்க எதிர்கால திட்டம் சார்ந்தது. இன்னொரு காலத்தில், அல்லது இக்கட்டு காலத்தில் யாரும் "உனது நாட்டிற்கு Corona பரப்பிவிடுவேன்" என்று பூச்சாண்டி காட்டமுடியாது. அதற்காக கொடுக்க வேண்டிய விலை பல ஆயிரக்கணக்கான உயிர்கள். அவ்வாறு இழக்கப்படும் உயிர்கள் பற்றிய ஆராட்சியாளர்களின் மனநிலை தான் மேலே ஆராயப்பட்டது.

ஆதாயங்களுடன் ஒப்பிடுகையில் உடனடியா lock down ஐ செயற்படுத்துவது அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாக இருந்திருக்கும். lock down ஐ செயற்படுத்துகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதோடு , அதை தளர்த்தும் போது,

"மறுபடியும் cheers ஆ ?''

நிலமைக்கும் வாய்ப்பிருக்கின்றது.

இந்த கருத்தியல் கொண்டுதான் ஆரம்பத்தில் lock down ஐ விரும்பவில்லை என இங்கிலாந்து பிரதமரே வாய்விட்டிருக்கிறார்.

ஆனால் உயிர்களை பணயம் வைக்கும் இந்த திடத்திற்கு எதிர்ப்பு வரவே அது கைவிடப்பட்டது.

மீண்டும் சொல்வதெனில்- வளர்ச்சியடைந்த நாடுகளில் corona வினுடைய தாக்கமும் போக்கும் simple ஆக நோயில் மட்டும் தங்கியில்லாமல் , அது ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ளமுடியாது சிக்கலான பலவிடையங்களில் தங்கியிருக்கிறது.

conspiracy தொடரலாம்......