குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

''கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சி: எம்.யி.ஆர்.,மருத்துவ பல்கலை. சாதனை''

23-4-2020''சென்னை: தமிழ்நாடு எம்.யி.ஆர்., மருத்துவ பல்கலையில், கொரோனா தொற்றுக்கு, தடுப்பு மருந்து கண்டறியும் முதற்கட்ட ஆய்வு பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சித்தா மருத்துவ முறையை பின்பற்றி, நோய் தொற்றை தடுக்கும் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணிகளை, உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை, 47 ஆராய்ச்சிகள், முதற்கட்டத்தை எட்டி இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தமிழகத் தில், கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணியில், தமிழ்நாடு டாக்டர் எம்.யி.ஆர்., மருத்துவ பல்கலை ஈடுபட்டு உள்ளது.

அரசிடம் சமர்பிப்பு

இந்த ஆய்வு பணியில், பல்கலை துணை வேந்தர், டாக்டர் சுதா சேசய்யன் தலைமையில், டாக்டர் புஷ்கலா, ஆராய்ச்சி மாணவர் தம்மண்ணா பயந்த்ரி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். தற்போது, முதற்கட்ட ஆய்வு பணியை நிறைவு செய்து, தடுப்பு மருந்துகளின் மூலக்கூறுகள் குறித்த அறிக்கையை, அரசிடம், பல்கலை சமர்ப்பித்து உள்ளது. இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட ஆய்வுகளை, எந்த மாநிலமும் நிறைவு செய்யாத நிலையில், தமிழக மருத்துவ பல்கலை சாதனை செய்திருப்பது, நம்பிக்கையை விதைத்துள்ளது.இது குறித்து, பல்கலை துணை வேந்தர், சுதா சேசய்யன் கூறியதாவது:நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை, ஆய்வகங்களில் ஆராய்ச்சி செய்து, அதன் வாயிலாகவே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது, அந்த நிலை மாறி, நோய் கிருமியின் மரபணு மாதிரியை மட்டும் வைத்து, செயற்கை முறையில், கணினி மென்பொருட்கள் வாயிலாக, முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் வந்து விட்டது. இது, 'எதிர்மறை தடுப்பு மருந்தியல்' என்று, அழைக்கப்படுகிறது. தற்போது, மருத்துவ பல்கலையின், முதற்கட்ட ஆராய்ச்சியில், கொரோனா நோய் தொற்றை தடுக்கும் புரதத்தை, வெற்றிகரமாக கண்டு பிடித்து உள்ளோம். இந்த தடுப்பு மருந்துக்கு, பெயர் வைக்கப்படவில்லை. இந்த தடுப்பு மருந்துகளை, விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி, ஆய்வு செய்யும் நடவடிக்கைகள், அமெரிக்கா ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, அடுத்தகட்டமாக நடைபெற உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

சித்தாவில் நோய் எதிர்ப்பு மருந்து!

நம் பாரம்பரிய மருத்துவ பொருட்களை கொண்டு, நோய்த்தொற்று எதிர்ப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளிலும், எம்.யி.ஆர்., மருத்துவ பல்கலை இறங்கியுள்ளது.இதில், பல்கலை துணை வேந்தர், சுதா சேசய்யன், நோய் பரவியல் துறை தலைவர், சிறனிவாசு(ஸ்), சித்த மருத்துவ துறை தலைவர், கபிலன், ஆராய்ச்சி ஆலோசகர், நவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்து, குழுவினர் கூறியதாவது:கொரோனா வைரசில், 200க்கும் மேற்பட்ட புரதக்கூறுகள் உள்ளன. அவற்றில், மூன்று முக்கிய புரதங்கள் தான், நம் உடலுக்குள் நோய் தொற்றாக சென்று, பல்கி பெருக காரணமாக உள்ளன. இந்த புரதங்களை தடுத்து, நோய் தொற்றை, அணுவுக்கு உள்ளே நுழைய விடாமல் எதிர்க்கும் ஆற்றல், பாரம்பரிய மருத்துவ பொருட்களில் உள்ளது. அதை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளோம்.

குறிப்பாக, கடுக்காய், கற்பூரவள்ளியில் உள்ள, மருத்துவ வேதிக்கூறுகளின் வாயிலாக, கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். மேலும், சிற்றரத்தை, அழிஞ்சில்(சீந்தில் கொடியென்போம் வேலிகளில் படர்வது), ஏழிலைப்பாலை, நீர் பிரம்மி, திப்பிலி, கோரைக்கிழங்கு, அமிர்தக்கொடி, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட பொருட்களில் உள்ள, வேதிப்பொருட்கள், கொரோனா வைரசின் புரதங்களின் மீது, ஒரு தடுப்பு கவசமாக ஒட்டி, நம் உடலினுள் பரவாமல் தடுப்பது, ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது.இதில் உள்ள வேதிப்பொருட்களில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மையுடன், நோய் தொற்றை தடுக்கும் தன்மையும் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்''.--தினமலர், 23-4-2020

தீயநுணமி வைர(ஸ்)சு எச்சரிக்கை:

'' தீயநுண்மி(வைரசு(ஸ்)) வெளியில் இருக்கும் போது, உயிரற்ற ஒரு துகள் போல் தான் இருக்கும். நம் உடம்பினுள் சென்று, செல்களுக்கு உள்ளே ஒட்டிக் கொண்ட பின், செல்களில் இருக்கும் புரதத்தை எடுத்து, வளர ஆரம்பிக்கும். செல்களை போன்றே இருப்பதால், நோய் எதிர்ப்பு அணுக்களால் இவற்றை அடையாளம் கண்டு அழிக்க முடிவதில்லை.

தீயநுண்மி (வைரசு) , பொதுவாக ஒட்டி வளரும் இடங்கள், சுவாச பாதையும், சமிபாட்டுத்தொகுதியும் தான். இதில், தீயநுண்மி வைரசு ஒட்டிக் கொள்ள உதவி செய்யும் செல்களுக்கு, 'ரிசெப்டார்கள்' அதாவது ஏற்பிகள் என்று பெயர்.

இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவை மிகவும் குறைவு என்பதால், வைசு பாதிக்கும் வாய்ப்பு குறைவு. 'குழந்தைகளை அதிகம் பாதிப்பதில்லை; பிறகு ஏன் பள்ளிகளை மூட வேண்டும்?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

வைரசு தொற்றால் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றாலும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம். பிறப்புறுப்பில், வைரஸ் கிருமி பொதுவாக இருக்காது. வைரசு பாதித்த பெண், சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

நெகிழி பிளாசுடிக்!

பழைய காலத்தில் பயன்படுத்திய தாமிர பாத்திரத்தில், மூன்று மணி நேரம் வரை, வைரசு உயிர்ப்புடன் இருக்கும். மர பொருட்களிலும், சுடெயின்லெசு சுடீல் பொருட்களி லும், இதைக் காட்டிலும் அதிக நேரம் வைரசு உயிர்ப்புடன் தங்கும். நெகிழியில் நீண்ட நேரம் அப்படியே ஒட்டியபடி இருக்கும்.

தனிமைப்படுதல்!

நகராமல், எந்த இடத்தில் இருக்கிறதோ, அதே இடத்தில் இருப்பது வைரஸ். அதுவாக நம் மீது ஒட்டுவதில்லை; நாம் தான் அதை தொடுகிறோம். அந்த வாய்ப்பை குறைப்பது அல்லது செய்யாமலேயே இருப்பது ஒன்று தான், வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி.உள்ளே புரதம் வெளியில் கொழுப்பு என்று இரண்டு அடுக்குகளாக இருப்பது வைரசு. கொழுப்பு அடுக்கை உடைத்து விட்டால் அழிந்து விடும். இதற்கு, வீரியம் மிக்க திரவங்கள் தேவை இல்லை; தினசரி உபயோகிக்கும் சோப்பு போட்டு கழுவினாலே போதும். யாருடனும் நெருங்காமல்,  இடைவெளியை கடைப்பிடித்து, மூச்சுவழிப்பகுதி, தோல் இரண்டையும் பாதுகாத்தால், வைரசை வாங்கிக் கொள்ள மாட்டோம்.

வெளியில் சென்றால், முக கவசம் அணிய வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் நீர் துளிகள் வெளியே தெறித்து, வெட்ட வெளியில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை அப்படியே இருக்கும். அந்த இடத்திற்கு, பாதுகாப்பு இல்லாமல் சென்றால், தொற்றிக் கொள்ளும்.'' --தினமலர், 23-4-2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.