குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழர் நெறி இந்து மதம் ஆனது எப்படி?

21.04.2020 ...தெற்கே குமரி கடலில் (இந்துமா கடல் ) குமரி கண்டம் தோன்றியது என்றும் வேதியல் மாற்றங்களால் குமரி கண்டம் மூழ்கி போனதும், வடக்கே பனி மலை (இமயமலை) தோன்றியதும் நிலவியல் வரலாறு !இது ஒரே காலத்தில் நடந்தது அன்று முதட்கடற் கோளில் குமரி மலையும் பற்றுளியாறும், தலை கழகதென்மதுரையும் இரண்டாம் கடற் கோளில் இடை கழகமும் காபாட புரமும் மூன்றாம் கடற் கோளில் காவேரி பூம் பட்டினமும் அழிந்தது, அதன் பின் பாண்டியர்கள் வடக்கே இமயம் வரை அரசுஆண்டார்கள் என்பது வரலாறு, பற்றுளி யாறு என்று தொடங்கும் சிலபதிகார செய்யுள் லும் மலிதிரையூர்ந்து என்று தொடங்கும் களிதொகையுளும் (104) வடா அது என்று தொடங்கும் புறநானுறு (6) மூலம் தெரிய வருகிறது. நம் இலக்கியங்களில் இமயம் வரை தமிழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு பல எடுத்துகாட்டுகள் உள்ளன

காவேரி பூம்பட்டினம் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாலர்களால் நிருபிக்க பட்டு உள்ளது, சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்று நிருபிக்க பட்டு உள்ளது .

சமசுகிருதம் பிராகிதமும், பாலி யும் கலந்தது, இது தீய நோக்கத்துடன் தமிழ் மொழியுடன் கலக்க பட்டு தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் 22 மொழிகளாக பிரிக்கப்பட்டது, மற்றும் தமிழ் ஓலைசுவடிகளை எடுத்து சமசுகிருததில் பெயர்த்து எழுதி புராண கதைகளை புனைந்து தமிழர்களின் மதம், கலாசாரம் போன்றவற்றை அழித்து வருகின்றனர் .

தமிழர் மதமாகிய சிவனிய (சைவ) மாலிய (வைசுணவ ) மதங்களின் தேவ வணக்கங்களை தம் வேத மதத்தில் புனை கதைகளுடன் இணைத்து தமிழர்களின் மதத்தின் தனி தன்மையை அழித்து கிந்து மதம் என்னும் பொய்யான வாதத்தை வைத்து தமிழை சீரழிக்க வைணவம், சைணவம் என்னும் மத போராட்டத்தை உருவாக்கி தமிழ் மற்றும் தமிழர்களை அழிப்பதில் இன்று வரை இவர்கள்(சமசுகிருதத்தை உயர்ந்ததாக நினைபவர்கள் ) முக்கிய மானவர்கள் .

ஆதாரம் :

பாவாணர் எழுதிய தமிழர் மதம்,

மாசோ விக்டர் எழுதிய பற்றுளியாறு

குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம்

சிந்து சமவெளி நாகரிக வரலாறு

ஆரியர் வருகைக்கு முன்னே சிவன் (சேயோன்) கோவில்களில் குருக்கள் அல்லது பண்டாரம், திருமால் கோவில்களில் நம்பிமார்களும், காளி கோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பார் களும் வழிபகாட்டினை தனித்தமிழில் செய்தனர்,

வானியலோடும் கணியதொடும் தொடர்பு உடைய தமிழ் நான்மறையை கற்றவர்களே வள்ளுவம் எனப்படும் பாரபரியம் இவர்கள் கணியம் நாள் பார்ப்பார்கள் அதனால் தான் தமிழ் பார்பரியர்கள் என அழைக்க பட்டனர்,

நான்மறைக்கு முந்தைய நூல் #ஆதிநூல், எழுதாக்கேள்வி, நத்து, சாகை, கேள்வி ஆகிய பெயர்களும் உண்டு நான்மறையை சந்கேதபடுதி ரிக், யயுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வேதங்களாக ஆரியர்களால் திரிக்க பட்டது .

கி .பி 5 ம் நூற்றாண்டில் ஆகமம், சங்கேத தந்திரம் என்று தொடு மறைகளை இயற்றி பிராமணரே திரு கோவில் வழிபாடு செய்யும்மாறு ஆரியயர்களால் நம் வழிபாடு சிதைக்கப்பட்டது .

வடக்கே இருந்து வரும் அரகரிகர்கள் கொணர்ந்த நிற வெறி கொள்ள்கையே ஆரியம் ஆகும் சேரலத்தில் பரசுராமன் என்னும் வடுகன் நம் தமிழ் வள்ளுவ பார்பரியத்தை திரித்து கட்டியதால் வந்த கட்டுமானமே பிராமணியம், தமிழ் பார்பரியர்கள் அதாவது வள்ளுவர் காலத்திற்கு முற்பட்ட பார்பரியம் வள்ளுவ பார்பரியம்.

வள்ளுவ பார்பரியமும், பிராமணியமும் ஒன்றே என்னும் மாயையில் கட்டுப்பட்டு இருபவர்களே இன்றைய தமிழ் பார்பரியர்கள் அதனால் தான் தமிழ் மொழி மீது வெறியாக இருக்கும் தமிழரை கிந்து என்றும் இந்தியா என்றும் சொல்லும் இவர்களால் தான் " தமிழன் " என்று சொல்லுவதற்கு கூட வெட்கப்பட்டு தமிழ்க்கும் தமிழர்க்கும் தூரோகம் செய்கின்றனர்.

இப்போது தந்திரமாக வரையறுக்கப்பட்ட இந்து மதம் என்பது பல பண்பாடுகள், வழிபாடுகள், நூல்கள், சாத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் ஆரியப் பண்பாடும் தமிழர் பண்பாடும் சேர்ந்தே இருக்கிறது . ஆரியப் பண்பாடு என்பது தமிழர் பண்பாடுகளை வழக்கம் போல் அழிக்கவே எத்தனிக்கிறது. தமிழர் சமயங்களையும் ஆரிய சமயங்கள் தான் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தமிழர்கள் ஆரிய மதம், பண்பாடு, மொழியை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை . தமிழர் திருமணம், பெயர்சூட்டு விழா தொடங்கி புதுமனை விழா கருமாரி வரை ஆரியப் பண்பாட்டை, மொழியை தமிழர்கள் இன்று ஏற்றுக் கொண்டு அது தான் இந்து மதம் என்ற மாயையில் சுழல்கின்றனர். தமிழை எல்லாத் தளங்களிலும் புறக்கணிக்கின்றனர் தமிழர்கள்.

தமிழர்கள் தங்களுக்கான வழிபாடு, சித்தாந்தம், மெய்யியல், பூசனைகள், ஓகம், குமுக பழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றை தமிழர் மதத்தின் அடிப்படையில் அதாவது தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் வழக்கப் படுத்திக் கொள்வதே தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரியப் பண்பாட்டை எல்லா வகையிலும் புறக்கணிக்க வேண்டும். இராமாயணம், மகாபாரதம் போன்ற வடநாட்டு கட்டுக் கதைகளை தமிழர்கள் ஒரு போதும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரக் கூடாது. வள்ளுவரின் குறல் நெறியை கற்றுக் கொடுத்து மெய்ப் பொருளைக்காணச் செய்ய வேண்டும். மெய்யியல் விரும்புபவர்கள் தமிழ் சித்தர் நூல்களை படிக்க வேண்டுமே தவிர பொய்யான வேதங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து தமிழர்களும் தான் தமிழர் மதத்தை சார்ந்தவர்கள் என்ற உண்மையை புரிந்து கொண்டு, இந்து மதமாக தங்களை அடையாள படுத்துவதை நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும் . தமிழர்களுக்கு தேவை ஒரு பண்பாட்டுப் புரட்சி. தமிழர் மதத்தை இந்து மதம் என்ற அழுக்கு குட்டையில் இருந்து மீட்பது காலத்தின் கட்டாயம்.

ஆம் நாங்கள் தமிழர்கள்  இது கட்சியல்ல தமிழரின் பண்பாட்டுப் புரட்சி!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.