குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

நீரின்றி அமையாது இவ்வுலகு !கிளிநொச்சியின் நீர்ப்பாசன வரலாற்றின் நிரந்தர அடையாளம் எந்திரி சுதாகரன்.

பங்கை.....கட்டுரையாளர்12.04.2020 ........2008 இலங்கை இனப்பிரச்சினையில் கடும் போர் நடைபெற்றுக்கொண்டு இருந்தகாலம் வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு மிகநெருக்கடியான பயணங்கள் மூலம் வெளியுலகோடு மக்கள் தொடர்பு கொண்டிருந்த காலம், உயிருக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாத போக்கு வரத்து மார்க்கங்கள்...

வன்னிப் பிரதேசத்தில் வேலை செய்த வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் எப்படியாவது இந்த இடங்களை விட்டு பாதுகாப்பு கருதி போய்விட வேண்டும்/அல்லது போய்க் கொண்டிருந்த காலம்..

இவ்வாறான நெருக்கடி மிக்க காலத்தில் 2008 சனவரி 02 ஆம் திகதி கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக எந்திரி.சுதாகரன் அவர்கள் பதவி ஏற்றார்..

கிளிநொச்சி பிராந்திய நீர்பாசன திணைக்களம் என்பது கிளி/யாழ் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்..

2008 இன் நடுப்பகுதியிலிருந்து கிளிநொச்சி மெல்ல மெல்ல இடம்பெயரத் தொடங்கியது,இதனால் அலுவலகத்தினை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி நிர்வாகப் பணிகளை நடாத்த வேண்டிய நிலமை எல்லா திணைக்கள தலைவர்களுக்கும் இருந்தது போல எந்திரி சுதாகரனுக்கும் இருந்தது..

இறுதிப் போரில் உயிர்காக்க இடம்விட்டு பாதுகாப்பு பிரதேசங்களுக் மக்கள் இடம் பெயர்ந்த போது 2008 டிசம்பரில் “விசுவமடுவில்” இருந்து வெளியேற வேண்டிய நிலை, வவுனியாவில் தற்காலிக அலுவலகத்தில் பணிகளை ஆரம்பிக்கிறார்,யாழ்ப்பாணத்தின் பணிகளை ஆற்ற விமானமூலம் சென்றுவர வேண்டிய நிலமை..

போர் காலத்தில் மிகக்குறைந்த வளங்களுடன் பாரிய கட்டுமானங்களின்றி அழிந்து போன நீர் கட்டுமானங்களை வைத்து, நீர் முகாமை செய்வது மிகப்பெரிய சவால் நிறைந்ததாக இருந்து..

2009 மீள் குடியேற்றம் ஆரம்பிக்க ஏதுவாகவும் ஏனைய திணைக்களங்கள் இயக்குவதற்கு வாய்ப்பாகவும் தனது திணைக்களத்தினை மிக விரைவாக மீள இயக்க தொடங்குகிறார்..

மீள் குடியேற்றத்தின் போது நீண்ட காலப் போரினால் அழிவடைந்த குளங்களையும்,கால்வாய்களையும் புனரமைத்து மக்களின் இயல்பு வாழ்வை வளம் படுத்துவதென்பது சவால் நிறைந்ததாக காணப்பட்டது. இதற்காக குறுங்கால நடுத்தர காலத்திட்டங்களை வகுத்து நீர்ப்பாசன புனரமைப்புக்களை முன்னெடுத்தார்.

2009 நடுப்பகுதியில் இரணைமடு குளத்தினையும்,கால்வாய்களையும் புனரமைத்து மீள் குடியேறிய மக்களுக்கான விவசாய செய்கைக்கு விரைந்து வழிசமைத்தார்..

போரின் போது பாரிய அளவில் உடைப்பெடுத்த கல்மடுக்குளத்தினை உலகவங்கியின் நிதி உதவியுடன் மீளக் கட்டி 2012 சிறுபோகச் செய்கையை மேற்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளித்தார் இந்தக் குளத்தின் மீள் கட்டுமானம் தனது பணியின் ஒரு மைல் கல் எனக்குறிப்பிடுகிறார் எந்திரி.

2009 இன் பின்னர் இரணைமடு பாரிய நீர்த்தேக்க அபிவிருத்திப் பணிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்பில் 5300 மில்லியன் செலவில் புனரமைத்து குளத்தின் கட்டினை உயர்த்தி அதன் நீர் கொள்ளளவினை அதிகரித்ததுடன்,கால்வாய்கள்,வயல் வீதிகளை பாரிய அளவில் அபிவிருத்தி செய்ய காரணமாக இருந்தமை குறிப்பிட்டு கூறமுடியும்.

இயற்கை பொய்த்ததால் பல போகங்கள் சிறுபோகச் செய்கை பாதிக்கப்பட்டாலும் இவ்வருடம் இரணைமடு புனரமைப்பின் நிரந்தர பயனை மக்கள் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்

கிளிநொச்சி மாவட்டத்தின் வரண்ட பகுதிகளை வளம்மிக்கதாக உருவாக்கும் நோக்கில் கனகராயன் ஆற்றுப் படுக்கையில் விரயமாகும் நீரை பயன்படுத்தும் வகையில் ஆறுமுகம் திட்டம்,பூநகரி திட்டம்,மண்டக்கல்லாறு திட்டம் என்பனவற்றை முன்மொழிந்து தற்போது அவை செல்வடிவம் பெற காரணமானார்.

நீர்ப்பாசன திட்ட வேலைகளுடன் சமூக அபிவிருத்தி நோக்கில் பல்வேறு அமைப்புக்களுக்கூடாக இவர் ஆற்றிவரும் பங்கும் முக்கியமானது.

கிளிநகர றோட்டறி கழக ஆரம்பகால உறுப்பினராகவும் 2017/2018 கால தலைவராகவும் இருந்து இவர் ஆற்றிவரும் பணி முக்கியமானதாகும்.

சேர் பொன் இராமநாதன் நம்பிக்கை நிதியத்தின் தலைவராக இருந்து மருதநகர் மக்களுக்காக இவர் ஆற்றி வரும் பணிகள் சிறப்புடன் நோக்க கூடியது.

பாடசாலைகளின் கட்டட வடிவமைப்பு மேற்பார்வை,ஒழுங்கு படுத்தல்கள், வள உதவிகள் என்பனவும் இவரது பிறிதொரு பங்களிப்பாக மனம் கொள்ளத்தக்கது.

வடக்கிலுள்ள பல்வேறு ஆலயங்களின் அபிவிருத்தி பணியில் சுதாகரனின் பொறியியல் அறிவு பயன்படுத்தப்படுவதை அனைவரும் உணர்வர்.

தலைவனாய்,சேவகனாய்,நண்பனாய், ஆலோசகனாய்,வழிகாட்டியாய்,துன்பத்தில் தோள் கொடுப்பவனாய்,மற்றவர் இன்பத்தில் மகிழ்பவனாய் கிளிநொச்சியில் எம்முடன் இணைந்திருந்த எந்திரி சுதாகரனின் பணி இந்த வடக்கு மாகாண மக்கள் அணைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எமது பேரவா!

₹வடக்கின் எந்தவொரு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டமிடலையும் எந்திரி சுதாகரனை விடுத்து சிந்திக்க முடியாது என்பது மட்டும் மறுக்க முடியாத பேருண்மை ஆகும்..

—நட்புரிமையுடன்—

—பங்கை—

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.