குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிற்சர்லாந்து நாட்டின் மக்கள்தொகைக்கு கொரோனா பாதிப்பு அதிகம்!அதிலும் தமிழர்களின்

பாதிப்பும் அதிகம்!! 05.04.2020 உலகில் இந்தகொரோனா என்ற தீயநுண்மியால்(வைரசுசால்) இதுவரையில் 59.000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள்காட்டுகின்றன. வீடுகளில் மக்கள் ஐயத்துடன் வாழ்ந்துெகாண்டிருக்கின்றார்கள் ,நாடுகளில் மரணம் நோக்கிய பதட்டம் நிலவுகின்றது!

இன்றிருப்போர்  நாளை இல்லை என்பார் என்பது ஒரு  ஆன்மிகக்கருத்து அத்பொருள் நிலையாமை என்பார்கள். அது இப்பொழுது வேறுவிதமாக மக்களை துழைத்து  நிற்கிறது.

இன்று நண்பர்களாகப்பேசியவரில் ஒருவருக்கு அல்லது  இருவருக்கும் தீயநுண்மி  தாக்கியுள்ளது  தனிமையாகியுள்ளார் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்படும்போது மக்களிடையே பதட்டம் அதிகரிக்கின்றது.

நிலையற்ற தன்மை புயலாகிவிட்டது, உலகம்  முழுக்கவீசும் பமரணப்புயலாகவுள்ளது. இந்தநிலையில் சற்று நாம் வாழும் சுவிற்சர்லாந்து சார்ந்து இங்கே எண்ணிக் கொள்வதே இப்பதிவின்நோக்கமாகும்.

இரண்டாவது உலகப்போரால் பாதிக்கப்படாத நாடக அல்லது எவருடனும் போர்புரியாத நாடக ஆக்கிரமிக்கப்படாத நாடக சுவிற்சர்லாந்து திகழ்ந்தது.

நுண்ணிய நழுவல்போக்கு, அல்லது  சுவிற்சர்லாந்தின் மென்போக்கும் சுவிற்சரலாந்து உலகின் வலுவான பொருளாதார நாடகமிளிர்ந்து கொண்டிருக்கக்காரலமானது.

மற்றநாடுகள் போரால் பொருளாதாரத்தை இழந்துகொண்டிருக்க அப்போர் சூழ்நிலையில்   தனது  பொருளாதாரத்தை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கும் நாடு சுவிற்சர்லாந்து.

வங்கிப்பணவைப்பு நடவடிக்கையாலும்  உலகின் செல்வந்தநாடுகளின் வரிசையில் நிற்பதோடு உறுதியான பொருளாதாரம் என்ற நிலைப்பாட்டைக்கொண்ட நாடாக சுவிற்சர்லாந்து  உள்ளது .

நிலத்திற்குகீழான அறைகளில் தங்கக்கட்டிகள் நிறையப்பெற்றநாடாகவும்  சுவிற்சர்லாந்து உள்ளது. இந்தவாய்ப்பினை இரண்டாம்பெரிய போர் இந்தநாட்டிற்கு இந்த வாய்ப்பைஏற்படுத்திக்கொடுத்தது.

இதுவரை மலைகளையும்,புல்வெளிகளையும்,ஆறுகைளயும் நீர்ஏரிகளையும் கொண்டு பால்,பால்கட்டி உற்பத்தி,சொக்ளேற், கடிகார உற்பத்திகளுடன், உலக செல்வந்தர்கள் ,உல்லாசப்பயணிகள் விரும்பும் நாடாக இதுவரை சுவிற்சர்லாந்து இருந்துவந்தது.

இன்றோ இறுதியாக உள்ள உல்லாசப்பயணத்துறையாலும், அயல்நாட்டுத்தொழிலாளர்களாலும்,அயல்நாட்டு வணிகத்தொடர்பாலும் தனது முடிவுகளை எடுத்துக்கொள்ளும் தீர்மானத்தில் தயங்கியமையால் இக்கட்டான நிலையில் சுவிற்சர்லாந்து நிற்கின்றது.

நாட்டின் எல்லைகளை மூடுவதிலும், இத்தாலியில் இருந்து நாளாந்தம் 65.000இற்கும் அதிகமானவர்கள் வேலைக்கு வருவதனை நிறுத்துவதிலும் சில காலம் தாமத்தார்கள் என்று கொள்ளலாம்.

இதேபோன்று டொச்லாண்ட்(யேர்மனி), பிரான்சுநாட்டிலிருந்தும் கணிசமானவர்கள் தொழிலுக்காக வருகைதருகவர்களை  நிறுத்துவதிலும் ,பாரஊர்திகள் மூலமான வணிகம்,தொடருந்து மூலமான வணிகம் இவற்றை எல்லாம் எப்படி நிறுத்திக்கொள்வது என்றெல்லாம் தாமதித்தார்கள் எனலாம்

இதனால் எவ்வளவு பொருளாதாரத்தை இழப்பது என்ற தயக்கத்தால் பொருளாதாரப்பின்டைவுகளைச் சந்திக்கவேண்டிவரும் என்ற ஐயத்தால் எல்லைகளை மூடிக்கொள்வதில் ஏற்பட்டதாமதம் அதிகம் நோய் பரவிக்கொள்ள காரணமாகிவிட்டது.

உணவகங்கள் மற்றும்  மக்கள் கூடும்,மகிழும்,மது அருந்தும் இடங்கள் போன்றவற்றை மூடிக்கொள்ள எடுத்த  தாமதம் தான்  கொரோனா தீயநுண்மியின் பாதிப்பு அதிகரித்தமைக்கு காரணமானது.

இதனை மிகுந்த வருத்தத்துடன் சுவிற்சர்லாந்து மக்களும், அரசினரும் உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. இது மக்களை விட சுவிற்சர்லாந்தில் முதணாளிகளின்  நலன்கள் முதலில் கவனத்தில் கொள்ளப்படுகின்றதா என்ற  ஒரு மனஉழைச்சல்  நிலையினையும்   ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்டுரையை எழுதும்போது(05.04.2020) பிற்பகல்வேளை சுவிற்சர்லாந்தில் கொரோனாவால்  உயிரிழந்தவர்கள் 666 என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.பாதிகப்பட்டிருப்பவர்கள் 20.505 ஆகவும் புள்ளிவிபரங்கள் உள்ளன, இவை உறுதியான  தகவல்கள்.

இதில் தலைநகரமான பேர்ண் மாநிலத்தில் 15 தமிழ் மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதுவரையில் செங்காலான் மாநிலத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு ஒன்றினைத்தவிர தமிழர்கள் மத்தியில் சுவிற்சர்லாந்தில் வேறு மரணங்கள் நிகழ்ந்ததாகத்தகவல்கள் இல்லை.

இதற்கு முன்நோய் அறிகுறிகளைக்கொண்டிருந்தவர்களும் குணமடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை அறியமுடிகின்றது.

சுவிற்சர்லாந்தில்இன்றைய நிலையில் ஒரு இலட்சம்பேர்வரை எண்ணிக்கையினைக் கொண்டிராத தமிழர்களில் சுவிற்சர்லாந்து முழுவதும் 15 அல்லது 20 தமிழர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும்  அது அதிகமானது என்றும் அது மேலும் எவ்வளவாக அதிகரிக்கும் என்ற தயக்கத்துடனும், ஏக்கத்துடனும் இவற்றைப்பதிவுசெய்து கொடிருக்கின்றேன்.

சுவிற்சர்லாந்து அரசின் மக்களுக்கான அறிவிப்புகளை மக்கள் மிகவும் கவனமாகக்கடைப்பிடிப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

இதிலிருந்து ஒன்றினை தெளிவாக்கூறலாம் சுவிசரசானது நடவடிக்கை எடுக்கமுன்னரே உள்நாட்டுக்குள்  பலருக்கு நோய்தொற்று ஏற்பட்டு அறிகுறிகளின்றி பலர் மூலம் பலருக்கு பரவிக்கொண்டிருந்திருக்கின்றது.

இது தொடுகை மூலமாகவும்,மற்றும் வழிகளாலும் நிகழ்திருக்க வாய்ப்புண்டு  அதனால்தான் குறித்தகாலத்தில் மிகஅதிக எண்ணிக்கையானவர்களை   பாதிருக்கின்றது என்றமுடிவினை மருத்துவபரிசோதனைகள்  உறுதிப்படுத்துகின்றன எனலாம்.அத்துடன் பரவும் விழுக்காடும் உயர்ந்து செல்கின்றது சுவிற்சர்லாந்தில்.

மிழர்களின் பழக்கவழக்கங்கள்,உணவுமுறைகள்மூலம் தமிழர்களுக்கு இந்தநோய் அதிகம்பரவவாய்ப்பில்லை என்று கருதியிருந்தநிலையில் இன்றளவில்  நண்பர்கள் மூலம் தமது நண்பர்களுக்கு நோய் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

பேர்ண் தலைநகருக்கு  அண்மியமாகவுள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள்,ஆண்கள் எனப்பலர் அடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்த நிலையில் என்ன நிகழ்ந்திருக்கின்றது என்ற ஐயத்தோடு இன்றிலிருந்தாவது இந்தநோயின் பாதிப்பு குறைந்து குறைந்து  சென்று உலகத்திலிருந்து இல்லாமல் போகாதா என்ற ஏக்கத்துடன் நிறைவு செய்கின்றேன்.