குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினராக பேராசிரியா் க.கந்தசாமி நியமனம்! இவரால் பூநகரி

மண்ணிற்கு பெருமை. 08.04.2020 இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எம்.எம்.நயீம் மற்றும் திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் எசு.ஏ.அரியதுரை ஆகிய நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

26 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் செயலணியில் இவர்கள் நால்வர் மட்டுமே தமிழ்பேசும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனாதிபதி கோட்டாபயவால் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் செயலணி தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு சனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பி. திசாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த ஆகிய இருவரும் செயலணியின் தலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

செயலணியின் செயலாளராக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபாலியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செயலணியின் பணிகளாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளவை பின் வருமாறு,

ஆரம்ப, இரண்டாம், மூன்றாம் கல்வி அலுவல்களை மேற்கொள்ளுவதற்குச் சமீபத்தில் தடைகள் ஏற்பட்டதன் காரணமாக செய்து முடிக்காத பணிகளை முடிவுறுத்தி கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகள் மற்றும் விடய சிபார்சுகளை உரியவாறு செயற்படுத்துவதற்குத் தேவையானதிறமுறைகளை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல்,

இக்காலப் பகுதியினுள் தொலைக்கல்வி எண்ணக்கருவின் கீழ் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கொண்டு நடாத்துவதற்கான திறமுறைகளை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல்,

தொழில்திறன் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துவதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை இனங்கண்டு அதனூடாக வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை விருத்தி செய்வதற்காக ஆக்கபூர்வமான திறமுறைகளை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல்,

பல்கலைக்கழகத்திற்குப் புதிய ஆள்சேர்ப்புகளை விரைவுபடுத்தி அம்மாணவர்களுக்கும் தொலைக்கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்தி அதனூடாக உயர்கல்விக்கான சந்தர்ப்பங்களைப் பரவலாக்குவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தல்,கல்வித் துறையின் பண்புசார் தன்மையை உயர்த்துதல் மற்றும் மாணவர்கள் காலத்தின் தேவைக்குப் பொருந்தும் விடயங்களுக்கு கவனம் செலுத்தும் கல்விமுறைகள் உட்பட பல் வேறு பயிற்சி வேலைத்திட்டங்களை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல் என்பனவாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.