குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

கொரோனா தீயநுண்மியை விலத்தியிரு வீட்டுக்குள்ளும் எட்டியிரு 06.04.2020

வாயை வயிற்றை கட்டியிரு

கொரோனா தீயநுண்மியை விலத்தியிரு

வீட்டுக்குள்ளும் எட்டியிரு

முட்டி அழுத்தி தீயநுண்மியை

ஒட்டி எம்முடலில் புகுத்தி

அறிகுறி அறியாத காலம்வரை

உயிருக்குயிரான உறவுகளுக்கும்

ஊருக்கும் உலகிற்கும் பரப்பும்

காவியாய் இருந்தோம் என்ற

பழிக்கு அஞ்சி வாழ்வோம்.

 

வீட்டுக்குள் இருக்காது

வீதிக்கு சென்று தெறித்து

பரவும் பிணியை பக்குவமாய்

கையில்காலில் அணியும் உடையில்

உள்வாங்கி வில்லங்கமாய்

வீட்டுக்குள் எடுத்து மடிவதேன்?

மருத்துவ அறிவுத்தல்களுக்கும்

சட்டவிதிகளுக்கும் காவல்துறைக்கும்

வால்காட்டி வராத தீதை

வரவைத்து மாயாதே மாண்டுபோகாதே!


உணவே மருந்தென்று

முன்னோர் சொன்னதை

மதித்து வாழ்ந்திடு

உன்னுக்குள் எதிரியை(தீயநுண்மியை)

அழிக்கும் ஆற்றலை  பெற்றிடு

துாய்மை காத்து உன்னையும் காத்து

உலகையும் வாழவிடு!

சுவரின்றி ஏதும்வரைய முடியாது

விஞ்ஞானமும்  மெய்ஞானமும்

எமக்கானதாய் மலர்ந்திட வாழ்ந்திரு.