குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கொரோனாத் தொற்றுக்காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டியவை.ஆலோசனை 2:வைத்தியக்கலாநிதி த.சத்தியமூர்த்தி.

01.04.2020 இந்த கொரோனா தொற்று அபாய க்காலப் பகுதியில் சனக்கூட்டங்களை தவிர்த்து பிறரிடமிருந்து தூரப்படுத்துவது கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அத்தியாவசியமானது.எனினும் உணவு அடங்கலான அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் சந்தைகளில் பாரியளவில் கூடுவதும், அதிகமாக பொருட்களை வாங்க பல இடங்களுக்கு அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகளால் கொரோனா வேகமாக பரவும் சாத்தியம் அதிகரிக்கின்றது.

 

இவ்வேளையில் ஊரடங்கினாலோ வேறு காரணங்களினாலோ உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் கொண்டு அளவுக்கதிகமாக பொருட்களை வாங்கிச் சேகரிக்கத் தேவையில்லை. விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் உணவு உற்பத்தி பாதிக்காத வண்ணம் அரசாங்கம் செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. ஊரடங்கு வேளையிலும் வீட்டிலிருந்தவாறே உணவுப்பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் பெறக்கூடிய வழிவகைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வது குறித்து அநாவசியமாகப் பதற்றப்பட வேண்டியதில்லை.

சிலர் அளவுக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்வதால் போலித்தட்டுப்பாடு உருவாகி நலிந்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பம் எழுகிறது. அனைவரும் தேவையான பொருட்களை தேவையான அளவில் மட்டும் வாங்கிக்கொள்வதன் மூலம் இதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

ஊரடங்கு தொடர்வதால் வருவாய் இல்லாமல் வறியவர்களும் நாள் வருமானத்தில் வாழ்பவர்களும் வருவாய் இன்மையால் உணவுப்பொருட்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்கொள்ளக்கூடும். அவ்வாறான குடும்பங்கள் பசியால் வாடக்கூடும்.

எங்கள் அயலில் இருக்கும் அவ்வாறான குடும்பங்களுடன்

எம்மிடம் இருக்கும் பொருட்களையும் உணவுகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களது பசிபோக்குவது எமது கடமையாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

சனக்கூட்டங்கள் ஏற்படாத வண்ணம் தேவையான பொருட்களை தேவையான அளவுகளில் மட்டும் கொள்வனவு செய்வதன் மூலமும், உதவி தேவைப்படுபவர்களுக்கு பொருட்களை பகிர்ந்துதவதன் மூலமாகவும் ஒற்றுமையுடன் இந்த கடினமான காலப்பகுதியை யாரும் பாதிக்கப்பாடாத விதத்தில் எதிர்கொள்வோம்.

அருகில் இருப்பவரை பாதுகாப்பதன் மூலம் அனைவரையும் பாதுகாப்போம்.

நன்றி.




 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.