குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரி

ன் பதிவு! கொரோனா எவ்வாறு பரவுகிறது? யப்பான் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி! அனைவருக்கும் அவசியமானது! கொரோனா தீயநுண்மி தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின் றது. 31.03.2020 கொரோனா நோயாளிகளுக்கு இரவும் பகலுமாக சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.அமெரிக்காவில் தீயநுண்மி கொரோனா வைரசு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நியூயோர்க் நகரில் அது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரான Cornelia Griggs டுவிட்டரில் தனது புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், இந்த பதிவை படிக்கும் அளவுக்கு என்னுடைய குழந்தைகளுக்கு வயது இன்னும் ஆகவில்லை, அவர்கள் குழந்தைகள்.

கொரோனாவால் நான் உயிரிப்பதன் மூலம் அவர்கள் என்னை இழக்கலாம்.

ஆனால் நான் என் பணியை கடினமாக செய்தேன் என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆபத்தான சூழலில் தான் சிகிச்சையளித்து வருவதாகவும், அதனால் தனது உயிருக்கும் எதாவது நேரலாம் என்பதையே அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவானது 90000 முறை மறு பதிவு செய்யப்பட்டு பெரியளவில் வைரலாகியுள்ளது.

தனது உயிரை பற்றியும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் அந்த பெண் மருத்துவர் ரியல் கீரோ எனவும் மிக தைரியமானவர் எனவும் பலரும் பாராட்டியுள்ளனர்.

கொரோனா எவ்வாறு பரவுகிறது? யப்பான் வெளி யிட்ட அதிர்ச்சி காணொளி! அனைவருக்கும் அவசியமானது!

உலகளாவிய ரீதியில் தீயநுண்மி கொரோனா  தீவிரம் அடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் 30 ஆயிரத்தையும் தாண்டிச் சென்றுள்ளது.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிர்கள் தீயநுண்மி கொரோனா விற்கு இலக்காகி மரணித்து கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் யார் பொறுப்பு? அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றத் தவறும் சில நபர்களினால் ஏற்பட்ட விபரீதமே இதற்கு காரணமாகும்.

இதுவரை தீயநுண்மி கொரோனா  பரவலுக்கு இலக்காக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடாக இத்தாலி பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பத்தாயிரத்தை தாண்டிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் பல பகுதிகளுக்குள் நோயாளிகள் நடமாடியதே இதற்கு பிரதான காரணமாகும்.

தீயநுண்மி பரவல் தொடர்பில் தெளிவில்லாமல் மக்கள் செயற்படுவதை உலக சுகாதார அமைப்பு கூட எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தீயநுண்மி கொரோனா  எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில் யப்பான் ஆவண காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீயநுண்மி தொற்றுக்கு இலக்கான நோயாளி ஒருவர் தும்மினால் அதிலிருந்து வெளியேறும் கிருமிகள் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு  அந்தப் பகுதியிலேயே பரவும். அதனூடாக பயணிப்போர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் அவல நிலை ஏற்படும்.

கொரோனா நோயாளி ஒருவருடன் இன்னொருவர் நெருக்கமாக பேசும் பாதிக்கப்பட்டவரின் எச்சலிலிருந்து கிருமிகள் மற்றவரை இலகுவாக தாக்கும்.

பொதுவான இடங்களில் கூட்டமாக மக்கள் ஒன்றுகூடும் போது சுமார் 10 sec இடைவெளியில் கொரோனா வைரஸ் அனைவர் மீது பரவும் தன்மையை கொண்டுள்ளது.

தொடுகையின் மூலம் மாத்திரமன்றி காற்றின் மூலமும் விரைவாக கொரோனா தொற்று ஏற்படும் என ஜப்பான் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக குறிப்பிட்ட சில வாரங்களில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். இவர்களில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த பேராபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டுக்குள் இருந்து எம்மையும் நம் சார்ந்த சமூகத்தினரையும் காப்பாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்லும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கூட்டமாக நிற்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையில் குறைந்து இரண்டு அடி இடைவெளியில் பேசுவது சிறந்ததாகும்.

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருபெற்ற தீயநுண்மி கொரோனா  இன்று 180 நாடுகளுக்கு வியாப்பித்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றத் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலகமும் அழிந்து போனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

அனைவரும் வீட்டில் இருங்கள். முக கவசத்தை மறக்காமல் அணியுங்கள். கொரோனா வைரஸ் இல்லாத உலகத்தை இன்றே ஏற்படுத்துவோம்.

கொரோனா தீயநுண்மி தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt இதை தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரோனா தீயநுண்மிதொற்றினால் 718,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா தீயநுண்மி பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், Michael Levitt சில உண்மையான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இதனால் விஞ்ஞானி Michael Levitt கூறிய கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

சீனாவில் 80,000 பேர் இந்த தீயநுண்மியால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று Michael Levitt அவர்கள் மதிப்பிட்டு கூறியிருந்தார். அவரின் கூற்றின் படியே, சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.