குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தூக்குத் தண்டனை கைதியான படைஅலுவலகருக்கு பொது மன்னிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிர்ச்சிவருத்தம்

28..29.03.2020 இலங்கையில் தமிழர்கள் எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட படைச் சிப்பாய் சனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கவலை வெளியிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தென்மராட்சி மிருசுவிலில் எட்டு பொதுமக்களை படுகொலை செய்த குற்றத்துக்கு முன்னாள் படை அதிகாரி சார்யன்ட் சுனில் இரத்நாயக்கவுக்கு 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கான தண்டனை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டது.

படை அதிகாரி சுனில் இரத்நாயக்க, சனாதிபதி கோத்தாபய இராயபக்சவின் பொதுமன்னிப்பில் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

மிருசுவில் படுகொலைக்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்குசனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் குழப்பமைடைந்துள்ளார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களிற்கு செய்யப்பட்ட அவமரியாதை என குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர், போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், ஏனைய பெரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கை தவறிவிட்டது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவெனவும் கூறியுள்ளார்.

இவ்வாறான மீறல்கள் மற்றும் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு தீர்விற்கான உரிமையுள்ளது. இதில் நீதி மற்றும் இழப்பீட்டுக்கான சமத்துவமும் வாய்ப்பும் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றவாளிகள் இழைத்த குற்றங்களிற்காக சமாந்திரமான தண்டனைகள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.