குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 6 ம் திகதி சனிக் கிழமை .

யாழ்ப்பாணத்தில் பலருக்கு தீயநுண்மி (கொரோனா)வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி !

தீயநுண்மி கொரோனாவுக்கான முழு அறிகுறிகள் என்னென்ன?.. எப்படி ஆரம்பிக்கும் தெரியுமா?கா.து ருக்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் கைது .24.03.2020 யாழ்ப்பாணத்தில் தீயநுண்மி தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்திய சாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் தீயநுண்மி தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தீயநுண்மி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர் சந்தித்த மனிதர்கள் என பலரையும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தனது முகநூலில் கருத்துப் பதிவு செய்துள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி,

நமது பகுதியில் Corona - Covid - 19 நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால் தொற்றுக்குள்ளான்வர்கள்பலர் எமது பகுதியில் பலர் இருக்க வாய்ப்புண்டு.

அனைவரும் சுகாதாரத்துறையினரதும் அரசாங்கத்தினதும் செய்திகளை மிக மிக கவனமாக கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீயநுண்மி கொரோனாவுக்கான முழு அறிகுறிகள் என்னென்ன?.. எப்படி ஆரம்பிக்கும் தெரியுமா?

தீயநுண்மி கொரோனா  குறித்து உலக ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். இந்த தீயநுண்மி எப்படிப்பட்ட தீயநுண்மி என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.

அதேபோல, இந்த தீயநுண்மி எப்படி உருவானது, எப்படி குணப்படுத்துவது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகள் மற்றும் வெகு சில பின் விளைவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அறிகுறி குறித்து மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

1 முதல் 3 நாட்கள் - சளி, லேசான காய்ச்சல், சிலருக்கு தொண்டைவலி, வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் உணர்வு

4 ஆம் நாள் - தொண்டை வலி அதிகரிக்கும், குரல் கரகரப்பாகும், காய்ச்சல் அதிகரிக்கும், சாப்பிடமுடியாது.

5 ஆம்நாள் - தொண்டை வலி அதிகரிக்கும், சாப்பிடும்போதும், விழுங்கும்போதும் வலி, உடல்வலி

6 ஆம் நாள் - காய்ச்சல் அதிகரிக்கும், வறட்டு இருமல், தொண்டைவலி, பேசும்போதும், விழுங்கும்போதும் வலித்தல், மூச்சுவிடுதலில் சிரமம்

7 ஆம் நாள் - காய்ச்சல் மேலும் அதிகரிக்கும், உடல்வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரிக்கும்.

8 ஆம் நாள் - மூச்சுவிடுவது கடினமாகும். நெஞ்சு அடைக்கும். இருமல், தலைவலி, மூட்டுகளில் வலியுடன், ‌அதிக காய்ச்சல்

9 ஆம் நாள் - அனைத்து அறிகுறிகளும் தீவிரமடையும். எனவே நோய் இந்தளவுக்கு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் மூச்சுவிடுதலில் சிரமம், நெஞ்சில் வலி தோன்றும்போது அலட்சியம் காட்டாமல் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம்.

கா.து ருக்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் கைது

ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த மதுபான சாலை ஒன்று திருகோணமலை கா.துறையினரினால் முற்றுகையிடப்பட்டது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருக்கும் நிலையில், மதுபான சாலைகளை திறப்பதற்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறிருக்க சட்டவிரோதமான முறையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கா.து விற்பனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை கையகப்படுத்தியதோடு அங்கிருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மொத்தமாக 200க்கும் அதிக மதுபான போத்தல்களும் 200,930 பெறுமதியான பணமும் கா.து கைப்பற்றப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.