குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

திருகோணமலையில் தீயநுண்மியிலிருந்து தப்பினார் இளைஞர்! கிழக்கில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்! கட்டுப்

23.03.2020  படுத்த முடியாது திணறும் படையினரும்,காவல்துறையினரும்! இந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள்! ஊரடங்கு காலத்தில் சிறப்பு நடவடிக்கை! ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி,இலங்கை மக்களுக்காக சனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை,தீயநுண்மி கொரோனாவில் தப்பியவர்களின் கூற்று நோய் அறிகுறிகள் இவையாம்.இல்லை நொடியில் தீயநுண்மி கொரோனா வந்துடும்... அலட்சியம் வேண்டாம்!

தீயநுண்மி நோயெதிர்ப்பு குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி முதியவர்கள், குழந்தைகள், உடல்நல பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும்.

எனவே இவர்கள் தீயநுண்மி பரவும் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதோடு ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றவற்றை எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்

உலக சுகாதார அமைப்பு தீயநுண்மி தடுக்க ஒருசில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துகிறது.

அவையாவன, அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.

தும்மல் அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது 1 மீட்டர் அல்லது 3 அடி இடைவெளியைப் பராமரிக்கவும்.

அசுத்தமான கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியை தேவையில்லாமல் தொடாதீர்கள்.

தும்மல் அல்லது இருமலின் போது, வாய் மற்றும் மூக்குப் பகுதியை டிஸ்யூ பேப்பர் அல்லது துணியால் மூடிக் கொள்ளவும்.

காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

எதெல்லாம் தொட்டால் கைகளைக் கழுவ வேண்டும்?

உலோகநாணயங்கள்(பணம்),ககித நாணயங்கள்,கதவுகள் அல்லது கைப்பிடிகள், மாடிப்படி கைப்பிடி, மேசை,கணினி (டேபிள் டாப்), செல்லப்பிராணிகள், கைத்தொலைபேசிகள் (மொபைல்/சுமார்ட்போன்) , காய்கறி வெட்டும் பலகை,சமையலறைதேய்ப்பிமென்மை (சுபாஞ்ச்)

எழுதுகருவிகள் (பேனாக்கள்)

விசும் பம்புகள்,காற்றுப்பம்புகள்.

ஊரடங்கு காலத்தில் சிறப்பு நடவடிக்கை!

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சிப்பு போக்குவரத்து முறைமையை முன்னெடுக்க கா.து தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, உணவு விநியோகம் மற்றும் பொருளாதார நிலையங்களுக்கான அத்தியாவசியப் பொருள் விநியோகம் ஆகியவற்றை முன்னெடுக்க விசேட போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நெஞ்சு வலி, யாரோ அமுக்குவது போன்ற உணர்வு... தீயநுண்மி(கொரோனாவால்) பாதித்தவர்கள் கூறிய உண்மைகள்

தீயநுண்மி பாதிக்கப்பட்ட மக்கள் உலகம் முழுக்க தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். தங்களுக்கு தீயநுண்மி ஏற்பட்ட சமயத்தில் எப்படி உணர்ந்தோம் என்பது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ளனர்.

தீயநுண்மி காரணமாக உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 13,071 ஆக உள்ளது. 3 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த தீயநுண்மி  காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த தீயநுண்மி  மூலம் பாதிக்கப்பட்ட பலர் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

அதன்படி உலகம் முழுக்க மொத்தம் 95,834 தீயநுண்மிக்கு பாதிக்கப்பட்டு நலம் அடைந்து உள்ளனர். இவர்களை அவர்கள் நாட்டு அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தீயநுண்மி தாக்கி பின் குணமடைந்து வீடு திரும்பி இருப்பவர்கள் வெளியே செல்ல கூடாது என்று அறிவுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வீட்டிற்குள் இருக்கும் இவர்கள் தங்கள் கொரோனா அனுபவங்களை போஸ்ட்டாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தங்களுக்கு எப்படி கொரோனா வந்தது. கொரோனா வந்த போது எப்படி உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது என்று விளக்கி உள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த தியா டேவிசு என்ற பெண், எனக்கு திடீர் என்று நெஞ்சு வலித்தது. எனக்கு இருமல் வரவில்லை. ஆனால் கடுமையாக நெஞ்சு வலித்தது. அன்று என்னால் மூச்சு விட முடியவில்லை. தொடர்ந்து மூச்சு விட முடியாமல் உயிரே போகும் அளவிற்கு பயம் இருந்தது. என் உடல் என்னிடம் இல்லாதது போல உணர்ந்தேன். அதுதான் இருப்பதிலேயே மோசமான அறிகுறி ஆகும், என்றுள்ளார்.

இலகு காய்ச்சல்

அதேபோல் யப்பான் டயமண்ட் பிரின்சசு கப்பலில் இருந்த கார்ல் கோல்டுமேன் தெரிவித்த போதும் எனக்கு கடுமையான வறட்டு இருமல் இருந்தது. அதேபோல் மிக லேசான காய்ச்சல் இருந்தது. இதை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால் போக போக இருமல் அதிகம் ஆனது. என்னால் மூச்சு விடமால் முடியாமல் நெஞ்சை யாரோ அமுக்குவது போல இருந்தது, என்று கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் மட்டும் வலி

மேலும் எனக்கு அதன்பின் தீயநுண்மி என்று கூறினார்கள். எனக்கு எப்படி தீயநுண்மி வந்தது என்று தெரியவில்லை. நான் நல்ல ஆரோக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிடுவேன். ஆனாலும் வந்தது. எனக்கு இலகு காய்ச்சல் என்றுதான் நினைத்தேன். தலைவலி இல்லை. ஆனால் நெஞ்சு மட்டும் இரவு நேரத்தில் மிக மோசமாக வலித்தது. உணவு சாப்பிட சிரமமாக இருந்தது, என்றுள்ளார்.

எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் தீயநுண்மி (கொரோனா)

அதே கப்பலில் இருந்த இன்னொரு கொரோனா பாதித்த பயணியான மார்க் யோர்கென்சன் பேசியதாவது, எனக்கு தீயநுண்மி ஏற்பட்ட போது எந்த விதமான அறிகுறியும் இல்லை. என்னால் அதை நம்ப முடியவில்லை. எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லாமலே தீயநுண்மி ஏற்பட்டது. நம்புங்கள், நான்தான் இதற்கு சாட்சி. தீயநுண்மிஅறிகுறி இல்லாமல் கூட உங்களுக்கு தோன்றலாம், என்று கூறியுள்ளார்.

தீயநுண்மிக்கு சிகிச்சை

இவர்கள் மூன்று பேரும் சிகிச்சை முறை குறித்து ஒரே மாதிரி விளக்கி உள்ளனர். காய்ச்சலையும் இருமலையும் கட்டுப்படுத்த மட்டுமே மருந்து கொடுப்பார்கள். தீயநுண்மிக்கு மருந்து எதுவும் இல்லை. அதனால் தீயநுண்மிக்கு மருந்து கொடுக்காமல் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டும் மருந்து கொடுத்து தனிப்பார்கள். அதாவது காய்ச்சல் இருந்தால் காய்ச்சலுக்கான மருந்து கொடுப்பார்கள்.

இருமல் இருந்தால் இருமலுக்கான மருந்து கொடுப்பார்கள். உடலில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறதோ அதற்கு எல்லாம் மருந்து கொடுத்து உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வார்கள். ஆனால் இதெல்லாம் தீயநுண்மி குணப்படுத்தாது. இது பின் விளைவுகளை கட்டுப்படுத்தி தீயநுண்மி கட்டுப்படுத்தும். இதை தொடர்ந்து செய்தால் கொரோனா குணமாக ஓரளவு வாய்ப்புகள் உள்ளது, என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி

கலங்கி நிற்கும் இத்தாலி

கடந்த மார்கழியில் சீனாவில் ஆரம்பமான கொடிய தீயநுண்மியானது இன்று உலகினையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது.

பல நாடுகளிற்கும் வேகமாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினையே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய தீயநுண்மி. அதிலும் சமீப நாட்களாக இதனால் இத்தாலி மக்கள் பெரும் அனர்தத்திற்கு முகம் கொடுத்துவருகின்றன.

நாளும் பலநூற்றுக்கண்க்காணவர்களை அங்கு பலிவாங்கிக் கொண்டுள்ளது இந்த தீயநுண்மி.

ஒரு வீட்டின் தந்தை அழுவதைப்போலவும் ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போலவும் கொடுமையான ஒரு காட்சி இருக்கமுடியாது.

ஒரு காலத்தில் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரும் சாம்ராச்சிம் (உரோமானிய பேரரசு) நிலவிய மண் அது. மேனாட்டவராக இருந்து எம் தமிழ்மொழிக்கு அளப்பெரும் தொண்டாற்றிய வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) பிறந்த மண் அது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலகில் மனிதர்கள் மனநிறைவுடன் வாழத்தகுந்த சிறந்த நாடாக இத்தாலி அண்மைய நாட்கள்வரை விளங்கியது. அத்துடன் சுகாதார நிலைமைகள் மிகவும் மேம்பட்ட நாடாக விளங்கியது இத்தாலி.

இன்று எல்லாவற்றையுமே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய கொள்ளை நோய் தீயநுண்மி. இப்பேர்ப்பட்ட வளர்ந்த நாட்டுக்கே இந்நிலையெனில்..... அட கச்சி ஏகம்பா...... நினைக்கவே பயங்கரமாக இருக்கின்றது.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேனெனில், நாளை சில மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

மிகத் தேவையான பொருட்களை வாங்கவேண்டுமென்றால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வாருங்கள்.

அவசியம் கடைக்குப் போகத்தான் வேண்டுமெனில் தனியாக மட்டும் சென்று திரும்புங்கள்.

வீடு திரும்பியதும் கண்டிப்பாக பாதணிகளை வெய்யில் படக்கூடிய இடத்தில் கழற்றிவிட்டு கால்களையும் கைகளையும் நன்றாக கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள்.

ஏனெனில் இப்படியான இடைவெளிகளை சுகாதார மேம்பாடுமிக்க இத்தாலியின் மக்கள் அலட்சியப்படுத்தியதுதான் இன்று அந்த நாட்டின் தலைவனே கண்ணீர்விடுமளவுக்கு கொண்டுவந்தது கொடிய தீயநுண்மி என்பதை மறவாதீர்கள் அங்குள்ள நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்காக சனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை!

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள், வீட்டு நிலையான ​தொலைபேசி, கடத்தி தொலைக்காட்சி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு சனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

சனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய , கொவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தகவல்களை விநியோகிப்பதை முன்னெடுப்பது அத்தியாவசியமான இக்காலக்கட்டத்தில், அனைத்து கொடுப்பனவுகள் நுகர்வோருக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமாக கருதி இந்த சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும்,

முன்னர் செலுத்த வேண்டிய வாடிக்கையாளருக்கான அவசர கடன் வசதி மற்றும் மேலதிக உரையாடல் காலத்தை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறும்,

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசி , கையடக்க தொலைபேசி மற்றும் செய்திகளின் நேரடி தொலைபேசிகளைப் போன்று கட்தி தொலைக்காட்சி சேவைகளை வழங்குவோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தீயநுண்மியிலிருந்து தப்பினார் இளைஞர்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது தீயநுண்மி தொற்றுக்கிலக்கான நபர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவருக்கு தீயநுண்மி இல்லையென அறிக்கை கிடைத்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்கர் டி.யி மெலிண்டன் கொசுதா தெரிவித்தார்.

கந்தளாய், வான்எல,யெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரொருவருக்கு தீயநுண்மி தொடர்பான ஐயத்தின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள தீயநுண்மி ஆராய்ச்சி மத்திய நிலையத்திற்கு நேற்று முன்தினம்(21) மாலை அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே அதன் அறிக்கை நேற்று(22) மாலை தீயநுண்மி இல்லையென கிடைத்துள்ளதாகவும்,கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

குறித்த இளைஞர் கபரன பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் யெயந்திபுரவிற்கு சென்ற நிலையில் காய்ச்சல் காரணமாக நேற்றுமுன்தினம்(21) கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் தீயநுண்மி தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு தீயநுண்மி பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதன் அறிக்கையே தீயநுண்மி இல்லையென தகவல் கிடைத்துள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.இவை தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் பிரதேச வாழ் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை இல்லையெனவும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

கிழக்கில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்! கட்டுப்படுத்த முடியாது திணறும் படையினரும்,காவல்துறையினரும்!

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்முனை, சாய்ந்தமருது ,மத்திய முகாம், கல்முனை ,மருதமுனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு பொதுமக்கள் முண்டியடிப்பதை காணமுடிந்தது.

கல்முனை பொதுச் சந்தை , சதோச போன்ற இடங்களில் பெருமளவு வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர். படையினரும்,காவல்துறையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதோடு மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றா என்பதையும் அவதானித்து வருகின்றனர். கா.து ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக மக்களை தெளிவுபடுத்தும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர் .

அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி உரிய சுகாதார முறைப்படி முகவசம் அணியாமல் வருகை தந்வர்கள் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கப்பட்டனர். பொருட்கள் கொள்வனவு செய்ய கட்டுக்கடங்காமல் கூடிவரும் மக்களிடையே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கல்முனை மாநகர சபை , கல்முனை பிராந்திய படையினரும்,காவல்துறையினரும் இணைந்து மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி வருகின்ற போதிலும் குவியும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்ததற்காக கூடியிருந்தவர்கள் அங்கிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.