குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சுவிசில் கொசோவா உட்பட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

11,10. 2011சுவிஸில் கொசோவா நாட்டவர்களின் குடியேற்றம் அதிகரித்து செல்வதால் சுவிசு(ஸ்) நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இவர்களினால் நாட்டில் வன்முறை சம்பவங்களும் சட்டத்திற்கு மதிக்காத செயல்களும் அதிகரிக்கலாம் என வலதுசாரி கட்சியான எசு(ஸ்).வி.பி தெரிவித்துள்ளது. இதேவேளை சுவிட்சர்லந்தில் வசிக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டிலும் பார்க்க இந்த ஆண்டு 3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று சமஷ்டி குடிவரவு அலுவலகத்தின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

ஓகஸ்ட் மாத முடிவு வரை சுவிட்சர்லந்தில் வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 1,751,301 பேர் என்றும் இது நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்களில் 23 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரசைகள் மற்றும் லீச்ரென்ஸ்ரீன், நோர்வே,  ஐஸ்லந்து ஆகிய நாடுகளின் பிரசைகள் 43,805 இலிருந்து 11இலட்சத்து 29ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.  ஏனைய வெளிநாடுகளின் பிரசைகளின் எண்ணிக்கை 5,050 இலிருந்து 621,633 ஆக அதிகரித்துள்ளது.

கொசோவோ நாட்டு பிரசைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சுவிஸில் இருக்கும் கொசொவோ நாட்டு குடிமக்களில் 17854பேர் சுவிஸ் நிரந்தர வதிவிட அனுமதியை பெற்றுள்ளனர். ஜேர்மனியர்கள் 14,395 பேரும், போர்த்துகல் நாட்டவர் 9,816 பேரும், பிரான்ஸ் குடிமக்கள் 4,388 பேரும்,
பிரித்தானியர்கள்  2,365 பேரும் சுவிஸ் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளனர்.

கொசொவொ நாட்டுப்பிரசைகளின் அதிகரிப்பு முன்னர் தங்களை செர்பியர்கள் என்று
அடையாளப்படுத்திவர்கள் என்றும் கொசொவொ 2008 ஆண்டு சுதந்திர நாடாக
பிரகடன்படுத்தியதை அடுத்து அவர்கள் தங்களை கொசொவொ நாட்டவர் என்று பதிவு
செய்துள்ளனர்

சுவிஸில் உள்ள செர்பியர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 19,910 ஆகக்
குறைந்துள்ளது. சுவிஸில் உள்ள வெளிநாட்டவர்களில் இத்தாலியர்களின் எண்ணிக்கை
தான் அதிகம். இத்தாலியர்கள்- 2இலட்சத்து 89,555 பேரும்,
ஜேர்மானியர்கள்-2இலட்சத்து 72,906 பேரும், போர்த்துக்கீசர்-2இலட்சத்து 20,446 பேரும்,  செர்பியர்கள்- ஒரு இலட்சத்து 05,737 பேரும்,  பிரெஞ்சுக்காரர்- 97,288 பேரும் வாழ்கின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.