குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

மகிழ்ச்சியான செய்தி! தீயநுண்மிக்கு 13 தடுப்பூசிகள்! களமிறங்கியது விஞ்ஞானிகள் குழு,இத்தாலியில் களமிற

ங்கியது சீன படை,இலங்கையில் தீயநுண்ணி  பரவிவரும் நிலையில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய  அறிவித்தல்! ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(கள்ளன் போனபின் விசுவன் பொல்லெடுத்தானாம்... இருந்தாலும் தவறில்லை) 2ஆனையிறவாலும், பூநகரியாலும் உள்ச்செல்லவும் முடியாது வெளியேறவும் முடியாது! 22.23 .03.2020 தீயநுண்ணியால் இத்தாலியில் உயிரிழப்பு கட்டு மீறி சென்றுள்ளதை அடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீனா களமிறங்கி உள்ளது.தீயநுண்ணியை கட்டுப்படுத்துவதில் சீன மருத்துவர்களுக்கு அனுபவம் இருப்பதால் அங்கிருந்து சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்களுடன் களமிறங்கி உள்ளனர்.

தீயநுண்ணி கட்டுக்குள் வரவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று இத்தாலிய அமைச்சர் லூய்கி டிஐ மாயோ அச்சம் வெளிப்படுத்தி உள்ளார்.

10,000 வெண்டிலேட்டர்கள், 20 லட்சம்முகமூடிகள், 20,000 ஆயிரம் பாதுகாப்பு சூட்கள், இதை தவிர மருத்துவ உதவிகள் போன்றவைகளை இத்தாலிக்கு தந்து உதவ சீன அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதனால் விரைவில் இத்தாலியில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தீயநுண்ணி  பரவி வரும் நிலையில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

அனைத்து மருந்தகங்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

சீனாவில் தொடங்கிய தீயநுண்ணி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் ஶ்ரீலங்காவும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

தற்போதுவரை 80 பேர் இலங்கையில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து மருந்தகங்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தும் க்ளோராக்வின் மற்றும் கைட்ராக்‌சி குளோரோக்வின் ஆகிய மருந்துகளை வைத்திய நிபுணர்களின் அனுமதி இன்றி வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நடவடிக்கையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியான செய்தி! தீயநுண்மிக்கு  13 தடுப்பூசிகள்! களமிறங்கியது விஞ்ஞானிகள் குழு

சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு கொரோனா தொடர்பில் 13 தடுப்பூசிகளை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருதாவது, தீறநுண்மி தடுப்பூசி தொடர்பில் விலங்குகளுக்கும் அதேவேளை மனிதர்களுக்கும் அடுத்த வாரம் சோதனை மேற்கொள்ளப்படும் என பிரித்தானியா அறிவித்த நிலையில், தற்போது இரசியாவில் இருந்து செயல்பட்டுவரும் சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இதை அறிவித்துள்ளது.

இரசிய விஞ்ஞானிகள் குழு நாட்டில் தீயநுண்மி பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 253 பேருக்கும், அந்த 13 தடுப்பூசிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாதிரிகளைச் சோதித்து, பின்னர் அவற்றை சைபீரியாவின் அருகிலுள்ள வெக்டர் சுடேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலயி அண்ட் பயோடெக்னாலயி ஆய்வுக்கு அனுப்ப உள்ளனர்.

மொத்தம் 13 தடுப்பூசிகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதில் ஒன்று அல்லது மூன்று தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் தயாராகும் எனஇ இரசிய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நாடுகளை ஒப்பிடுகையில் இரசியாவில் தீயநுண்மி பாதிப்பு மிக மிகக் குறைவு. இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால், உண்மை நிலவரத்தை வடகொரியா போன்று இரசியாவும் மூடி மறைப்பதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆய்வகமானது வைசூரி அல்லது பெரியம்மை நோய்க்கான மருந்தை வியாபார ரீதியில் தயாரித்துள்ளது.

மட்டுமின்றி மிகவும் கொடூரமான Marburg என்ற கிருமியை ஆயுதமாகவும் பயன்படுத்தியுள்ளது.

தற்போது இந்த ஆய்வகம் பிளேக், ஆந்த்ராக்சு, எபோலா, கெபடைடிசு பி, எச்.ஐ.வி, சார்சு மற்றும் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது.

ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(கள்ளன் போனபின் விசுவன் பொல்லெடுத்தானாம்...இருந்தாலும் தவறில்லை)

யாழில் ஒருவருக்கு தீயநுண்மி (கொரோனோ வைரசு) தொற்று இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் கா.து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 வீதி மூடப்பட்டுள்ளது.

கா.து தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனையிறவாலும், பூநகரியாலும் உள்ச்செல்லவும் முடியாது வெளியேறவும் முடியாது!

மற்றுமொரு முள்ளிவாய்க்கால் அழிவு யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளதா???

ஆனையிறவாலும், பூநகரியாலும் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் யாரும் உள்ளே நுழைய முடியாது... வெளியேறமுடியாது தற்போது சீல் வைக்க்பபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு கொரோனா நோயாளி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதே காரணம். கொழும்பு மற்றும் கம்பக, திருகோணமலை போன்ற இடங்களில் தீயநுண்மி தொற்று இருந்தவர்கள் காணப்பட்டிருந்தாலும் குறித்த மாவட்டங்களுக்குள் நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தீயநுண்மியால் பெரும் அழிவு ஏற்பட்டாலும் தென்பகுதி கவனத்தில் பெரிதாக எடுக்காது என்பதை தென்பகுதி உயர்மட்டங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தென்பகுதி நடவடிக்கைகளை அவதானித்து எதிர்வு கூறுகின்றார்கள். இத்தாலியின் நிலை யாழ்ப்பாணத்திற்கு நடக்கப் போவதான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சுவிசு பாசிடரால் யாழ்ப்பாணத்தில் ஏராளமானவர்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி அறிய முடிகின்றது. தற்போது தீயநுண்மி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரர் சிவானந்தன். இவர் குறித்த பாசிடருடன் அரை மணி நேரமே ஒன்றாக இருந்துள்ளார். அவருக்கே இந்த நிலை என்றால் குறித்த பாசுடர் பல மணி நேரம் மண்டபத்தில் இருந்து ஆராதனைகள் செய்த போது இருந்த மக்களில் பெருமளவானவர்களுக்கும் இந்த நிலை இருக்கும்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரர் சிவானந்தன். இவர் குறித்த பாசுடருடன் அரை மணி நேரமே ஒன்றாக இருந்துள்ளார். அவருக்கே இந்த நிலை என்றால் குறித்த பாசுடர் பல மணி நேரம் மண்டபத்தில் இருந்து ஆராதனைகள் செய்த போது இருந்த மக்களில் பெருமளவானவர்களுக்கும் இந்த நிலை இருக்கும்.

அத்துடன் சிவானந்தன் தானாகவே சென்று வைத்தியசாலையில் பரிசோதித்ததற்கு அவருக்கு நன்றி செலுத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தை தவறாக சித்தரிக்காது அவரை வாழ்த்தி அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். ஏனெனில் அவரால் மேலும் பலர் நோய் தொற்றுக்கு இலக்காகாமல் தப்பியுள்ளார்கள். இதே வேளை சிவானந்தனுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், அயலவர்கள் சுய தனிமைக்கு உள்ளாகி தங்களைத் தாங்களே பாதுகாத்து நோய் ஐயம் இருந்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்.

குறித்த பாசுடர் சற்குணராசாவுடன் தொடர்பில் இருந்தவர்களும், தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் சுய தனிமைக்கு உள்ளாகுங்கள்..... உங்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் தயவு செய்து வைத்தியசாலைக்கு சென்றுவிடுங்கள். யாழ்ப்பாணத்தை நரகலோகமாக்காதீர்கள். நோயுடன் நீங்கள் ஊடரங்கு தளர்த்தப்பட்ட பின்னர் தெருவுக்கு சென்று பொருள் கொள்வனவு என்ற போர்வையில் நோய் பரப்பிகளாக செயற்படாதீர்கள். ஏனெனில் யாழ்ப்பாணத்தார் தங்களுக்கு தாங்கள் காரிய வெகுளிகளானவர்கள்.... பெண் பிள்ளை பெற்றவுடனேயே சீதனத்துக்கு பொருள், பணம் சேர்ப்பவர்கள். இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டால் பொருட் கொள்வனவுக்காக எந்தவித நோய் பாதுகாப்பு நிலைகளையும் எடுக்காது கூட்டமாக கடைகளில் அலை மோதுவார்கள். அவர்களுக்கு தயவு செய்து உங்கள் தொற்றைப் பரப்பிவிடாதீர்கள். அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது........

குடாநாட்டு மக்களே!!! உங்களுக்கு நோய் வந்தால் எம்மைக் காப்பாற்ற அரசாங்கம் இருக்கின்றது தானே... டொக்டர்மார் இருக்கின்றார்கள்தானே... ஆசுப்பத்திரி இருக்கின்றது தானே என்று நீங்கள் கவலையீனமாக இருந்தால் உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. காரணம் மக்கள் நலனில் அக்கறை கொண்ட வல்லரசுகளே தீயநுண்மியால் தடுமாறி நிற்கின்றதை நீங்கள் அறிய வேண்டும்.

தீயநுண்மி நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக நீங்கள் பார்த்திருந்தால் அதன் கொடூரம் உங்களுக்கு விளங்கும். வைத்தியர் என்பவர் கடவுள் அல்ல... அவரும் சாதாரன மனநிலை கொண்ட ஒரு மனிதன். முதலில் அவர்களும் தங்களைத் தாங்கள் பாதுகாக்கவே முற்படுவார்கள்.

நான் அறிந்த அளவில் பெருமளவான வைத்தியர்களும் சுகாதாரத்துறையினரும் மேலான சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை இன்று தீயநுண்மி நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று அறிந்தவுடன் சுகாதாரத்தரப்பைச் சேர்ந்த சிலர் தமது கடமைக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் 20 பேர் பராமரிக்கும் வசதி கொண்ட வைத்தியசாலையில் 2 ஆயிரம் பேர் அனுமதிக்கும் போது எவ்வாறான நிலை உண்டாகும் என்பதை சொல்ல தேவையில்லை.

முள்ளிவாய்க்காலில் உங்களில் பலர் நேரில் பார்த்த சில விளைவுகளை மீண்டும் பார்க்க வேண்டி வரும்.

மக்களை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஊரடங்கு சட்டம் சிறந்த செயற்பாடு என்றாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்தச் சட்டம் சில மணி நேரம் தளர்த்தப்படல் வேண்டும்.

அந்த நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு விநியோகம், மருந்து விநியோகம் போன்றவற்றை திட்டமிட்டு சன நெருக்கமில்லாது விநியோகிப்பதற்கு வடக்கு அதிகாரிகள் சிறந்த திட்டமிடலை மேற்கொண்டு செயற்பட வேண்டும்.

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் கண்டபடி எழுந்தமானமாக வேடிக்கை பார்க்க திரிவதை நிறுத்துவதற்கு பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மூடப்படல் வேண்டும். அந்த நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளை செய்பவர்களுக்கு மாத்திரம் வாகனங்களுக்காக எரிபொருள் விநியோகம் செய்ய வேண்டும்.

பொதுமக்களை வீட்டுக்குள் வைத்திருப்பதற்காக இணைய சேவைகளை குறித்த நிறுவனங்கள் சில வாரங்களுக்காகவது இலவசமாக வழங்கினால் பெருமளவானவர்கள் வீடுகளுக்குள் இருப்பதற்கு வழிவகுக்கும்.

வீதிக்கு வீதி கா.து நிறுத்தி அலைந்து திரிபவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதனால் மற்றுமொரு முள்ளிவாய்காலை தவிர்க்க முடியும்....

(வயிற்றில் புளி கரைக்க கரைக்க இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.... ஆரம்பத்தில் நானும் யாழ்ப்பாணத்திற்கு கொரோனா வராது என்று அசன்டையீனமாக இருந்துள்ளேன்..... தற்போதே அதன் தாக்கம் தெரிகின்றது.... )

வசந்தரூபன் தனபாலசிங்கம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.