குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

முள்ளிவாய்க்கால் காலத்துஉணர்வு மீண்டும்வருகிறது!!! உலகமே முள்ளிவாய்கால் முடிவில்நிற்கிறது.

உலகைப்பார்க்கும் போது

உணர்வு சோர்கிறது!

கண்ணீர் வருகிறது!!

முள்ளிவாய்க்கால்

காலத்துஉணர்வு

மீண்டும் வருகிறது!!!

உலகமே முள்ளிவாய்கால்

முடிவில்நிற்கிறது.


உடலங்களை

புதைக்க முடியாது

அரசுகள் திணறுகின்றன!

உறவுகளின் முகங்களை

பார்க்காது உயிர்கள்

போகின்றன.


மணிக்கு மணி

மாண்டுபோவோர்

எண்ணிக்கை

அதிகரிக்கின்றது

முனங்கி முனங்கி

முதியோர்கள்

மடிகின்றார்கள்

 

சீனாதான் எதிலும்

முன்னணி என்று

ஏங்கியது போய்!

இறப்பில் சீனவை

முந்திக்கொண்டது

இத்தாலி!

தற்போது இத்தாலியை

எந்தநாடு முந்துமோ

என்ற ஏக்கமே

எழுகின்றது !


அயலில் ஒருவர்

இறந்தால் அழலாம்

உறவில் சிலர்

இறந்தால் அழலாம்

உலகே இறப்பில்

மூழ்கின்றதே!!

 

உலகவரலாறுகளை

வாசிக்க முடிந்ததே

அதேபோன்ற

நிகழ்வுகளின் விழிம்பில்

உலகு தொங்குகின்றதே!!!

உலகின் கண்

ஒருமுனையை

மட்டும்பார்க்கட்டும்

இந்த அழிவிலிருந்து

மீண்டுவரட்டும்.

தீநுண்மி (வைரசு)

பரவாமலும்

தொற்றாமலும்

இருக்க

 

எல்லோரும் எக்கணமும்

இது பற்றியே எண்ணும்படி

அரசுகள் அறிவிக்கும் போது

தண்டப்பணம் செலுத்துமளவு

அசட்டைத்தனமாய் இருப்பதா?


பூநகரி பொன்னம்பலம் முருகவேள்

சுவிற்சர்லாந்து 20.03.2020