குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

யாழ்ப்பாணத்தை தீயநுண்மி (கொரோனா) தாக்கினால் மீள்வது கடினம்! அதற்கான காரணம். சுவிசிலிருந்து யாழ் வந்த

மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை! இலங்கையில் வேண்டுமென்றே தீயநுண்மி (கொரோனா)வை பரப்ப முயன்ற நபருக்கு ஏற்பட்ட நிலை! யாழில் ஊரடங்கு சட்டவேளையில் வாள்வெட்டு! கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் சட்டங்கள்.இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய படை கூறியுள்ளது.21.03.2020 யாழ். மாவட்டத்தில் தீயநுண்மி (கொரொனா வைரசு) பரவாது என்பதுபோல் யாழ். மாவட்ட மக்கள் செயற்படுகிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள். அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

யாழ்.மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு தீயநுண்மி (கொரோனா) பரவாது என்பதுதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. பரவும் என்பதற்கு 100 வீத சாத்தியங்கள் உள்ளன.

பரவினால் இத்தாலி போல் பலரைக் காப்பாற்ற முடியாமல்போகும். ” என இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.

நேற்று யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே இவ்வாறு கூறியுள்ளனா்.

யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே இவ்வாறு கூறியுள்ளனா்.

இதன்போது மேலும் அவா்கள் தொிவிக்கையில்,

இதுவரை யாழ்ப்பாணத்தில் எந்தவொரு நோயாளியும் இனம் காணப்படவில்லை.

பலாலி விண்ணுந்து நிலையம் மூலம் எமது மண்ணுக்கு 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்திறங்கி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள்.

அவர்கள் எவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களின் வீட்டு விலாசங்கள், அவர்கள் தொடர்பான தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரிகள் சேகரித்து அவர்களை கண்காணித்து அவர்களுக்கு தீயநுண்மி(கோரோனோ) உள்ளதா? எனப் பரிசோதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

தீயநுண்மி(கொரொனோ) தொற்றானது, ஒரு நோய் தொற்றுள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும். நோயாளியின் நீர் துளிகள் மூலமே அவை பரவுகின்றது.

எனவே நாம் நோயில் இருந்து தப்புவதற்கு முதலில் செய்ய வேண்டியது, தேவையற்று வெளியில் நடமாடாமல் வீட்டிலையே இருப்பதே சிறந்தது. அதற்காகவே அரசு விடுமுறையை விடுத்துள்ளது.

ஆனால், யாழ்ப்பாணத்தைப் பார்க்கும்போது நோய்க்காக அரசு விட்ட விடுமுறையை பொருள்கள் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட விடுமுறைபோல பலரும் பொருள்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதை விடினும் புடவைக்கடை , நகைக்கடை என்பவற்றிலும் மக்கள் கூட்டமாக பொருள்களை கொள்வனவு செய்வதில் உள்ளார்கள்.

இந்த நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க முடிந்த வரையில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்லாது தவிர்ப்பதே சிறந்தது.

அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதாயின் வீட்டில் உள்ள ஒருவர் மாத்திரம் சென்று அவற்றை கொள்வனவு செய்யவும்.

திருமண வீடு , பிறந்தநாள் கொண்டாட்டம் என்பவற்றில் கலந்து கொள்வதனையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.நோய் தொற்று உள்ளதாக சந்தேகிப்போர் வீட்டில் தனிமைப்பட்டு இருங்கள்

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களால் பாாிய ஆபத்து..

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டு 14 நாள்களின் பின்னரே அதற்கான அறிகுறிகள் தென்படும். எனவே 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து அவர் மூலம் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவர் ஊடாகவே வைத்தியசாலைக்கு செல்வது சிறந்தது.

வீட்டில நோய் தொற்று உள்ளவர் என சந்தேகப்படுபவர் தானே தனிமைப்பட்டு இருப்பது மட்டுமின்றி அவர் உபயோகிக்கும் பொருள்களை அவரே சுத்தம் செய்ய வேண்டும்.

அதேவேளை வீட்டுக்கு வெளியே சென்று வருவோர் வீட்டிற்குள் போக முன்னர் முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும் முகத்தையும் நன்றாகக் கழிவி விட்டு செல்ல வேண்டும். அதேபோன்று அலுவலகத்துக்குச் செல்வோரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

2 வாரங்கள் நடமாட்டத்தை குறைத்தால் பாாிய மாற்றத்தை உணரலாம்..

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் வணிக நிலையங்களை மூடுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வருடன் கதைத்திருந்தோம். அவரும் தான் அது தொடர்பில் வணிகர் கழகத்துடன் பேசுவதாகக் கூறி இருந்தார்.

குறைந்தது இரண்டு வார காலமாவது வணிக நிலையங்களை மூடுவதனால் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். வடமாகாண ஆளுநர் யாழ்ப்பாணத்தில் இல்லை. அவர் கொழும்பில் தங்கியுள்ளார்.

சில நிலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் தேவை. மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோருகிறோம்.

வைத்தியசாலைகளில் ஒரு நோயாளி இருந்தால் அவா் ஊடாக 200 பேருக்கு பரவும்..

வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த கிளினிக்கு வருவோரை கட்டுப்படுத்தும் முகமாக சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அதாவது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இடையில் இடைவெளிகளைப் பேணும் நோக்குடன் நோயாளிகள்க் காத்திருக்கும் இருக்கைகளில் ஒன்று விட்ட ஒரு இருக்கையில் நோயாளிகள் உட்காரும் முகமாக ஒன்று விட்ட ஒரு இருக்கைக்கு அடையாளமிட்டுள்ளோம் (சுரிக்கர்) ஒட்டியுள்ளோம்.

அடையாளமிட்டுள்ள இருக்கைகளில் உட்கார வேண்டாமென அவர்களை அறிவுறுத்தி உள்ளோம். அதேவேளை சுத்திகரிப்பு பணிகளை மூன்று வேளைகளிலும் மேற்கொள்கின்றோம். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,

வீட்டில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம்.

மிக அத்தியாவசிய தேவை இல்லாமல் வைத்தியசாலைக்கு செல்லாதீா்கள்..

அடுத்து மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக்) வருவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த தீயநுண்மி இலகுவாக பரவி விடும். அதனால் பரிசோதனைக்கு வருவோர் கட்டாயமாக மருத்துவரை சந்திக்க வேண்டும் எனும் தேவை இருப்பின் மட்டும் பரிசோதனைக்கு வரலாம்.

மருத்துவரை பார்க்க வேண்டிய தேவை இல்லாவிடின் அவர்கள் உறவினர்கள் மூலம் தமது மருத்துவக்குறிப்பினை( கிளினிக்கொப்பியை) கொடுத்து மருந்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோன்று வைத்தியசாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட வரும் பார்வையாளரை கட்டுப்படுத்தி உள்ளோம். ஒரு நோயாளியை ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்க முடியும்.

அதற்காக மீண்டும் முன்னனுமதி(பாசு) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு நோயாளர்களும் அவர்களின் உறவினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்காப்பு ஆடைகள், மருந்துகள், அவசர சிகிச்சை பிாிவு இல்லை..

தீயநுண்மி நோயாளிகளை பரிசோதிப்பதற்கு மருத்துவர்கள் , தாதியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் இல்லை.

தற்போது மந்திகை வைத்தியசாலையில் இரண்டே உள்ளன. அதனை கொண்டு ஒரு நோயாளியையே அணுக முடியும்.

மேலதிக நோயாளிகள் வந்தால் அவர்களை எவ்வாறு அணுகுவது. மந்திகை வைத்திய சாலைக்கு ஒரு தீயநுண்மி ஒரு நோயாளி வந்தால் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதில் உள்ள சிக்கலைகளை மருத்துவ அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி உள்ளோம்.

தற்போது வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளிகளிடம் தீயநுண்மி நோய் இருக்கும் என ஐயப்படுபவர்களுடன்

பழக்கங்கள் இருந்ததா என வினாவி அவ்வாறு பழக்கம் இருந்தால் தீயநுண்மி நோயாளிகளை பரிசோதிக்க என சிறப்பேற்பாடு செயப்பட்டுள்ள இடத்தில் பரிசோதனை செய்கிறோம்.

இதுவரையில் மந்திகை வைத்தியசாலையில் நான்கு பேர் தீநுண்மி ஐயம் உள்ளது என சேர்க்கப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்துள்ளோம்.

வீடுகளுக்கு சென்றவர்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்பட்டு இருக்குமாறே அறிவுறுத்தி உள்ளோம். அதேவேளை அவசர சிகிச்சைப் பிரிவில் போதியளவு கட்டில்கள் இல்லை. தற்போது உள்ள கட்டில்கள் அனைத்திலும் வேறு நோயாளர்கள் உள்ளனர்.

அதேபோன்று செயற்கை மூச்சு(உயிர்வாயு) வழங்கும் கருவிகள் உள்ளிட்டவையும் போதியளவில் இல்லை. எனவே, யாழ்ப்பாணத்துக்கு தீயநுண்மியின் தாக்கம் வருமாயின் அதனை எதிர்கொள்வதற்குப் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

எனவே, வரும் முன் காப்போம். நோய்த் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க உரிய நடைமுறைகளை பின்பற்றுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

சுவிசிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிசுதவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், தீயநுண்மி (கொரோனா) தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீசுவரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் தீயநுண்மி (கொரோனா) தொற்று ஐயத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவர்கள், மாவட்டங்களை சோ்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறியத்தரவும் என அவர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

இந்த போதனை நிகழ்வை நடாத்திய போதகர் திரும்பி சுவிசிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் தீயநுண்மி (கொரோனா) நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் இந்த மதபோதனையில் கலந்து கொண்டிருந்தவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறும், ஐயங்கள் இருப்பின்

உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுள்ளனர். இதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த விடயம் அரியாலை பகுதியில் உள்ள மருத்தவர் ஒருவர் ஊடாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆ.கேதீசுவரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், நல்லுாா் பிரதேச மருத்துவ அதிகாரி யெயக்குமார் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் மோகனகுமார் மற்றும் சுகாதார பாிசோதகர், பொலிஸார் என அதிகாரிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன் பின்னர் முதல்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். மேலும் குறித்த நபர் அவருடைய வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

மேலும் அவருடைய குடும்பத்தாரும் கண்காணிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருபுறம் கொரோனா தீயநுண்மியால் உலகம் முடங்கியிருக்க மறுபுறம் வடகொரியா எடுத்த அதிரடி முடிவு!

உலக நாடுகளை தீயநுணடமி(கொரோனா வைரசு) அச்சுறுத்தி வருகிறது. ஆனால் வடகொரியா இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளது.

இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய படை கூறியுள்ளது.

இது குறைந்த தூர இலக்குகளை தாக்கவல்ல பொலிசுடிக் ரக ஏவுகணைகளாக இருக்கக் கூடும் என்று தென் கொரிய ராணுவம் கருதுகிறது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கியிருக்க, வட கொரியாவில் இதுவரை தீயநுண்மி பாதிப்பு ஒன்றுகூட உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இதுகுறித்து வல்லுநர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

வட கொரியாவின் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடான சீனாவில் தான் தீயநுண்மி கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தென் கொரியாவை ஆட்டிப்படைத்து வரும் தீயநுண்மி கொரோனா வட கொரியாவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்நாட்டு அரசு கூறுவதன் உண்மைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

சென்ற வாரம் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க படை அதிகாரி ஒருவர், வட கொரியாவில் கொரோனா தீயநுண்மி தாக்கம் இருக்கும் என்று மிகவும் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

வட கொரிய தலைநகர் பியோங்யோங்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 380க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளை தீயநுண்மி  அச்சத்தின் காரணமாக வட கொரிய அரசு 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தியது என்றும் கூறப்படுகிறது.

இந்த காலப் பகுதியில் கடையில் வாங்கும் காய்பின்சுகளை நன்றாக கழுவுகின்றீர்களா?

நீங்கள் எப்போதும் செய்வது போல பழங்கள் மற்றும் காய்பின்சுகள் வாங்கினால் நன்றாக கழுவவிப்பாவியுங்கள்.

வாங்கும் பொருட்களில் வெவ்வேறு மேற்பரப்புகளில் தீயநுண்மி(வைரசு) எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பது பற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது.

ஆகையால் முடிந்தவரை எல்லோரும் நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை மட்டுமே தொடுவது அவசியமானது.

காய்கறி பழவகைகளை வாங்குவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவுங்கள் அத்தோடு அடிக்கடி முகத்தைத் தொடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

சமைப்பதற்கு முன்பு காய்பின்சுகளையும் கைகளையும் நன்கு கழுவிவிட்டு சமைக்கவும் அதேபோன்று சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் கையை கழுவுங்கள் குறிப்பாக கடையில் இருந்து பொருட்கள் வாங்கிவந்த நெகுழிப்பைகளை சமையலறையின் மேசைகளில் வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நோர்வேயின் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்ட நேரத்தில் யாழில் வாள்வெட்டு!

யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கா.து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண கா.து தெரிவிக்கின்றனர்

இலங்கையில் வேண்டுமென்றே தீயநுண்ணி கொரோனாவை பரப்ப முயன்ற நபருக்கு ஏற்பட்ட நிலை

தீயநுண்ணமி கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு மாரடைப்பு உள்ளதாக பொய் கூறி கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரதி கா.து மா அதிபர் அயித் ரோகண தெரிவித்தார்.

குறித்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தான் வெளிநாட்டிலிருந்து வந்த விடயத்தை மறைத்துள்ளதோடு, மூச்சு தொடர்பான பிரச்சினைகள், காய்ச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மருத்துவர்கள் கேட்டுள்ளபோதிலும் அவர் அவற்றையும் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு ECG சோதனைகள் மேற்கொண்ட போது அதில் மாரடைப்பு தொடர்பில் குறிப்பிடுமளவில் எந்தவிதமான மாற்றங்களும் காணப்படவில்லை.

அதன் பின்னர் அவர் சாதாரண பகுதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த நாள் அவருக்கு, இருமல், காய்ச்சல் என்பன காணப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வார்ட் பதிவாளர் அவரது உறவினர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் இத்தாலியிலிருந்து வந்தமை தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் மேற்கொண்ட சோதனையில், அவருக்கு தீயநுண்மி கொரோனா வைரசு தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வார்டில் உள்ள மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக அயித் ரோகண தெரிவித்தார்.

குறித்த நபர், இச்செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில், அவர் மீதும், இக்குற்றத்தை மேற்கொள்ள துணையாக இருந்தவர்களுக்கும் எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

இராகம மருத்துவமனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் அரச பணியாளர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி!

வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரசஉத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தீயநுண்மி(கொரோனாவைரசு)  தாக்கியுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

இதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று அவசரமருத்துவண்டிமூலம்  வவுனியா பொது வைத்தியசாலையின் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் குருதி மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்களுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

யாழ் நகரப்பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ள கா.து!

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால் யாழ்நகரம் நேற்று மாலையிலிருந்து முடங்கியது. திங்கட்கிழமை காலை 6 மணி வரை அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரம் முடங்கி காணப்படுகின்றது.

யாழ்ப்பாண நகரத்தில் கா.து  களமிறக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதோடு வீதியால் பயணிப்போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் யாழ் நகர் பகுதியில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

தீவிரமடையும் தீயநுண்மி (கொரோனா வைரசு) பாதிப்புகளால் கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் சட்டங்கள்

தீயநுண்மி (கொரோனா வைரசு) பாதிப்புகள் சுவிசில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதற்காக மேலும் வழமைக்கு மாறான நடவடிக்கைகளை சுவிசு அரசு எடுப்பதற்குத் தயாராக உள்ளது.

எம் சமூகத்தில் வாழ்ந்து வரும் அனைவரிற்கும் ஆதரவு கொடுப்பதே எமது எண்ணம். வைத்தியசாலைகளின் பணிகளை ஆதரிக்க நாங்கள் அனைத்தையும் செய்கின்றோம்.

அனைவரும் அதற்கான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுவிட்சர்லாந்தின் மத்திய அரசு மக்களிடம் கேட்டுள்ளது.

ஒவ்வொரு தனி நபரிற்கும் இதில் பொறுப்பு உண்டு 5 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று நள்ளிரவில் இருந்து பொது இடங்களில் ஒன்று கூடினால் 100 சுவிசு பிராங் தண்டமாக அறவிடப்படும் என சுவிசு அரசு கூறியுள்ளது.

இவை அனைத்தையும் காவற்துறை முழுமையாக கண்காணித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.

கட்டிடவேலைகளைச் செய்பவர்கள் உரிய சுகாதாரத்தைப் பேண வேண்டும்.

தொழிற்சாலைகளிலும், கட்டிட வேலைகள் நடைபெறும் இடங்களிலும் ஒவ்வொருவரிற்கும் இடையிலான 2மீற்றர் இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரவுகளில் வெளியே செல்வததை தடுப்பது பற்றி நாங்கள் பேசியிருந்தோம். ஆனால் அதை நாங்கள் ஒரு புதிய முடிவாக கூறவில்லை. ஏனெனில் அது ஒவ்வொருவரின் சுதந்திரம்.

ஏற்கெனவே நாங்கள் அழைப்பாணையூடாக அறிவித்ததை தொடர்ந்து அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். என சுவிஸ் மத்திய அரசின் பிரதிநிதி அலே பேர்சே கூறியுள்ளார்.

பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்காக பொருளாதார அமைச்சர் 40 பில்லியன் சுவிஸ் பிராங்கை வழங்குவதுடன் மேலும் 32 பில்லியன் பணத்தை அதற்கான வேலைகளிற்காக அடுத்த வாரத்தில் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

மேலும் வேலை செய்யும் மக்களையும், நிறுவனங்களையும் ஆதரிப்பதே இதன் இலக்கு. சுயதொழில் செய்பவர்களையும், பிற நிறுவனங்களின் ஊழியர்களிற்கும் உரிய பணம் கொடுக்கப்பட வேண்டும். கற்பவர்களும், தற்காலிக ஊழியர்களும், சுயதொழில் ஊழியர்களும் வேலையின்மை சலுகைகள் மூலம் உரிய உதவியைப்பெற்றுக்கொள்ளலாம்

மருத்துவரீதியாகவும், விவசாய ரீதியாகவும் பணியாற்றும் அனைவரிற்கும் சுவிஸ் அரசு நன்றியைத் தெரிவிக்கின்றது. என்றார் பொருளாதாரம் – கல்வி – ஆராய்ச்சி தலைவர் கி பார்மெலேன்.

எங்களிடம் ஒரு வலுவவான நிதி உள்ளது. இப்பொழுது உதவ போதுமான பணம் இருக்கின்றது. வெவ்வேறு நடவடிக்கைகள் உள்ளன. சில வரிகளை பிற்போடலாம். மத்திய அரசு வங்கிக்குப் பணத்தை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது.

இதனூடாக வங்கிகள், குடிமக்களுக்கும் நிறுவனங்களிற்கும் பணத்தை வழங்குவதற்கான பணியை முன்னெடுக்கும்.

ஒரு கட்டுப்பாட்டுடன் இது 500’000 வரை செல்லாம். இது எளிமையான வழி. என்று யுஎலி மௌறர் கூறியுள்ளார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.