குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழர் பிரதேசங்களில் தீயநுண்மி(கொரோனா) தொற்று? புத்தளத்தால் பூநகரி நாச்சிக்குடாவிற்கு பாதிப்பு !

20.03.2020 இலங்கையிலும் தீயநுண்மியின்  தாக்கம் ஏற்பட்டிருப்பது  எல்லோரும் அறிந்த செய்தியே. இதற்கு வெளிநாடுகளிலிருந்துவந்த உல்லாசப்பயணிகளும் , இலங்கைவாழ் மக்களின்  உறவுகளும் காரணமென எண்ணப்படுகின்றது. இலங்கையில் இதற்கான சட்டங்கள்  அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும்  இதற்கு தண்ணி காட்டும் வேலைகளும் இடம்பெறுவதாக அரசு உணர்ந்துள்ளது. இதனைக்கட்டுப்படுத்த பூநகரி நாச்சிக்குடாப்பகுதில் காவல்துறையினரும்,படையினரும் கடுமையான தேடுதல்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் , இதற்கு  பூநகரி வாழ்மக்களும் ஒத்துழைக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

இந்தமாதம் முதலாம் பக்கலிலிருந்து (திகதியிலிருந்து) வெளிநாடுகளிலிருந்து புத்தளம் பகுதிக்கு சுமார் 800 வரையிலானவர்கள்  நுழைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிமைப்படுத்தல் சட்டம் அறிவிக்கப் பட்டதும் அங்கிருந்தவர்கள் அந்த முகவரிகளைவிட்டு வெளியேறி  பூநகரி நச்சிக்குடாச்பகுதிகளில் உறவுக ளுடன் அல்லது தமது பழையவீடுகளில் வசித்து வருகின்றனர்.இதனால் பூநகரி பல்லவராயன்கட்டு, பூநகரி சோலை,பூநகரியெயபுரம்,பூநகரி முழங்காவில்,பூநகரி குமுழமுனை பகுதிகளில் தீயநுண்மியால் பரவும் நோய்கள் பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதாக பூநகரிமக்களும் அதிகாரிகளும் ஐயமடைகின்றனர்.

மக்கள் போக்கவரத்தின் போதும் வணிகநிலையங்கள் போன்ற பொது இடங்களிலும்  கவனமாக நடந்துகொள்ளு மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.  நீங்கள் வெளியில் பயன்படுத்திய ஆடைகளுடன் வீட்டிற்குள் செல்வ தைத்  தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றார்கள், உடலை துாய்மைப்படுத்திக்கொண்டே வீட்டிற்குள் செல்லவேண்டும் (குளித்துவிட்டு, அல்லது முழுகிவிட்டு) வீட்டில் ஏனைய உறுப்பினர்களுடன், உறவுகளுடன் பழகவேண்டும். கண்ட இடங்களில் வெற்றிலை சப்பி உமிழ்வதை தவிர்குமாறும் கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள். அதன் மூலம்தீயநுண்மி பரவி ஆபத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. அரசும், மருத்துவத்துறையும் இதற்குரிய அதிகாரிகளும் தரும் அறிவித்தல்களுக்கும் மதிப்புகொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். அண்மைக்காலங்களில்  கட்டுநாயக்கா விண்ணுந்து நிலையத்தில் ஒரு முகவரியை பதிந்துவிட்டு வேறு இடங்களில் தங்குபவர்களால் தான் இலங்கையில் இந்த தீயநுண்மி நோய்களை ஏற்படுத்தி இதுவரை 71  நபர்கைள கண்டறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே மேலும் பலரும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தமாதம் நடுப்பகுதியில் செம்மணிப்பகுதிக்கு அயலில் இருக்கும் தேவாலயம் ஒன்றிற்கு  மதவழிபாட்டினை நடத்துவதற்குசுவிற்சர்லாந்திலிருந்து  வருகைதந்திருந்த  ஒருவரால் அரியாலை போன்ற பகுதிகளிலும்  கொரோனா பரவியிருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது. அந்தவழிபாட்டினை நடத்தியவர் தற்போது சுவிற்சர்லாந்தில் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுதீவிரசிகிச்சை பெற்ற வருவதாக உறுதிசெய்யப்பட்டுளது. இந்தவழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் யாழ்பாணத்தின் பலபகுகைளச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடததக்கதாகும்.  அப்படி ஐயத்திற்கிட மானவர்கைள உரிய அதிகாரிகளுக்கு  தகவல்களைக்கொடுத்து உதவி உங்களைப்பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

பூநகரி நாச்சிக்குடாவில் தேடுததல் பணிகளும் ,கண்காணிப்பு பணிகளும் நடைபெறுவதாக தகவல்கள் மூலம் அறிகின்றோம். படையினரும், காவல்துறையினரும்  மிகவும் கடுமையான  கட்டுப்பாடுகைள விதித்து நாச்சிக்குடாவிலிருந்து யாரும் வெளியில் வராதவண்ணமும் வெளியிலிருந்து யாரும் உட்செல்ல முடியாதவாறும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை விதித்திருப்பதகவும்  அறிவித்துள்ளார்கள்.

தமிழர் பிரதேசங்களில் தீயநுண்மி(கொரோனா) தொற்று? துணிவுடன் களமிறங்கும் தமிழ் இளைஞர்கள்!!

20.03.2020 வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள் களமிறங்கியுள்ளார்கள்.

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா நோய் தொடர்பான பயிற்சிப்பட்டறையைத் தொடர்ந்து அவர்கள் இந்த விழிப்புணர்வுச் செயல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சமுகத்திலுள்ள தன்னெழுச்சி மிக்க இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணி அளவில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து.சத்தியமூர்த்தி அவர்னளும் மற்றும் வைத்திய கலாநிதிகளின் தலைமையில் கொரோனா நோய் தொடர்பான ஒரு பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையின் ஊடாக பல்வேறு கருத்துக்களை வைத்தியர்கள் கூறியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக குமுகாய வலைத்தளங்களினால் பரப்பப்படும் சில தவறான தகவல்களின் ஊடாக இளைஞர்கள் மத்தியில் இந் நோய் தொடர்பில் ஓர் பய உணர்வு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பொதுமக்கள் வீணான அச்ச உணர்வை தவிர்த்து நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருந்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் வைத்தியர்களோஅல்லது சுகாதார ஊழியர்களோ தீயநுண்மியின் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தமக்கு மேலதிகமாக தன்னார்வ தொண்டர்களின் உதவி தேவைப்படின் அவர்களது செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு நிச்சயம் தாம் தயாராக இருப்பதாகவும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.