குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 8 ம் திகதி புதன் கிழமை .

இலங்கையின் இந்த நிலைக்கு இவர்கள் தான் காரணம்! கொதித்தெழுந்த அமைச்சர்,சுவிற்சர்லாந்து மருத்துவத்துறை

எச்சரிக்கை! 20.03.2020 நிர்பயா பாலியல் கொலை சம்பவம்! குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறை வேற்றம். தீயநுண்மி (வைரசு) தொற்று படிப்படியாக அதிகரிப்பு - நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தங்களை தடுப்பு முகாமுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்வோர், தனிமைப்படுத்தும் மையங்களிலிருந்து தப்பியோடுவோரே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

 

மேலும் இவர்கள் அனைவரும், தேசத் துரோகிகளாக கருதப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் நாட்டின் தற்போதைய நிலைக்கு, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முப்படையினர், சுகாதார சேவையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டிலுள்ள முப்படையினரும் சுகாதார சேவகர்களுமே, மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்! சுவிற்சர்லாந்து மருத்துவத்துறை எச்சரிக்கை

காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகள் தென்படுவோர் Ibuprofen என்ற குளிசையை எடுக்க வேண்டாமென சுவிசின் மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ibuprofen நோயை தீவிரப்படுத்தும் அபாயமுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனால் இந்த எச்சரிக்கையினை சுவிசு மருத்துவத்துறை விடுத்துள்ளது.

இது குறித்து சுவிட்சர்லாந்து ஊடகம் மக்களிற்கு கடுமையான செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

உலகையே உலுக்கிய நிர்பயா பாலியல் கொலை சம்பவம்! குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்.

இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவம் நடந்து இன்றோடு 7 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

இவர்களுக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.

இன்றும் கூட குற்றவாளி பவன் குப்தா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி  உயர் வழக்காடு மன்றில் நடந்தது. அதன் பின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது.

அதிகாலை 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை அவசர அவசரமாக நடந்தது.

இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகாலை 3.30 மணிக்கு தீர்ப்பை வழங்கியது. அதில் 4 குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரித்தது தவறு இல்லை. அவர்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. தூக்கு தண்டனையை இன்றே நிறைவேற்றலாம் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தீயநுண்மி (வைரசு) தொற்று படிப்படியாக அதிகரிப்பு - நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்

தீயநுண்மி(கொரோனா வைரசு) தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய Covid -19 தொற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இராணுவ தளபதி லெப்டினன் யெனரல் சவேந்திர சில்வா கா.து உடக பேச்சாளர் அயித்ரோகன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மீண்டும் கேட்டுக்கொண்டார்.நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இராணுவ தளபதி லெப்டினன் யெனரல் சவேசந்திர சில்வா கருத்து தெரிவிக்கையில் இந்தியாவில் யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் 1,500 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டுள்ளன. சுயமாக தானிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இவர்களுக்கு அறிவுறத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.