குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 8 ம் திகதி புதன் கிழமை .

தீயநுண்மி(கொரோனாவும்)_இலங்கையும்,கியூபா தான் இன்றைய உலகின் கீரோ...!

19.03.2020.... கண்ணுக்கு தெரியாத அணுஆயுதப் ெபோர் போன்றது இது கண்ணுக்குத்தெரியாத உலகப்போர் தீயநுண்மி இது   நகைச்சுவையானது அல்ல(“கொரோனா) இசு நொட் யோக்கிங்”  என்றதிலிரு ந்தே இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கின்றேன். இதுவரை இலங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உலக அளவில் முதல் வாரத்தில் அதிகளவான கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை இருக்கிறது. முதலாவது வாரத்தில் கொரோனா நோயாளர்கள் மிகக் குறைவாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது வாரத்தில் அத்தொகை பலமடங்கு அதிகரித்திருந்தது.

இன்று கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் பலமடங்கு எகிறியிருக்கும் நிலையில், கொத்து கொத்தான மரணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனோடு பார்க்கும் போது, இனியும் கொரோனா தொற்று பரவுதலுக்கு எதிராக மிகச் சரியான தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்தினை இலங்கை முன்னெடுக்க தாமதிக்குமாயின், ஏற்படப்போகும் விளைவு மிகப் பாரதூரமானதாக அமையும்.

தீயநுண்மி(கொரோனா) கோவிட் – 19 வைரசு பற்றியும், அதற்கு எதிராக ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றியும் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் பிற நாடுகளும், சுகாதார அமைப்புகளும் அனுபவித்தினூடாகவும் , ஆய்வினூடாகவும் விபரமாகவே விளக்கியுள்ளன. ஆனால், அவைகள் இலங்கையில் கடைபிடிக்கப் படுகின்றனவா? என்பது பற்றி வேறாக ஆராய வேண்டியுள்ளது இந்த ஆபத்தான தருணத்தில்.

வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர்கள் மீள தாய்நாடு திரும்பியவுடன் செயற்பட்டவிதம் முறையானதா?

சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கொரியா, ஈரான் உட்பட 153 நாடுகளுக்கும் மேல் கோரோனோ வைரஸ் பரவி பல நாடுகளில் நரவேட்டையாடிவருகிற நேரத்தில், உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர்கள் பலர் மீளவும் நாடு திரும்பினர். இதன்போது அரசாங்கம் செயற்பட்ட முறையற்ற விதம் தொடர்பில் விமர்சிக்கப்பட்டு, கேள்விக்குட்படுத்தவும் பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் பலரது சுவாசக் குழாய்களை கோரோனா அறுத்தெறிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் கொஞ்சம் முனைப்புடன் விமான நிலையங்களில் வந்திறங்கும் பல பயணிகளை தனிமைப்படுத்தல் பரிசோதனையில் ஈடுபட வைத்தது.

ஆனால், ஏலவே இதற்கான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளப்படாத காலப்பகுதியில் பல இலங்கையர்கள் எந்தவித பரிசோதனையுமின்றி இலங்கைக்குள் புகுந்திருந்தனர். மார்ச் 01 முதல் மார்ச் 09 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 2000 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். அதில் 800 பேர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் என அறியமுடிகிறது. விபரம் விபரீதமாய் போவதை அறிந்த அரசாங்கம் இன்று மதியம் 4.30 மணியோடு அப்பிரதேசத்திற்கு ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் ஒருசில நாட்களுக்கு முன்பு தீயநுண்மி(கொரோனா) நோயாளி இனங்காணப்பட்டார். லண்டனில் இருந்து வந்த குறித்த நபர் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் உட்படாது தனது குடும்பத்தாருடன் குதூகலித்துள்ளார். பிரயாணங்களை மேற்கொண்டுள்ளார்.

அதேபோன்று, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகனிடமிருந்து 73 வயதான தகப்பனுக்கு தீயநுண்மி(கொரோனா) தொற்றியிருந்தது. இவ்வாறான தனிமனித சுய கட்டுப்பாடுகள் இல்லாத தன்மையினாலும் கொரோனா தொற்று அதிகரித்துப்போயுள்ளது. நாட்டுக்குள் கொரோனா வருகைதந்த நுழைவாயிலை தற்போது அரசாங்கம் மூடியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படவேண்டும். அதேபோல், அனைவரது பாதுகாப்பு கருதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படாத நபர்களை அடையாளங் கண்டு பொறுப்பான பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.

கடவுளர்களைக் குறிவைக்கும் கொரோனா

மதவாத அரசியலில் மூழ்கடிக்கப்பட்ட இலங்கை அதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு சுலபமா? அரசியல் சட்டத்தின் வாயில் ‘மதம்’ என்ற போதை ஊற்றப்பட்டபின் நாடு எப்படி தள்ளாடாமல் இருக்க முடியும்?

அதேபோல, மக்களுடைய சிந்தனையும் போக்கும் தள்ளாட்டம் கண்டுள்ளது. கொரோனா வருமுன் இருந்த மதவாதிகளின் அடாவடித்தனமும் பெருங்குரலும் கொரோனா இலங்கை எல்லைக்குள் புகுந்த பின்னர் கொஞ்சம் அடங்கியும் போயுள்ளது.

கடவுள் நம்பிக்கையில் மூழ்கிப்போன குறிப்பிட்ட சனம் கொரோனா தாக்கத்தை ஒரு பொருட்டாக கணக்கெடுக்காத நிலையும் காணப்படுகிறது. இலங்கை இன்னும் தன்னை பவுத்த நாடாக காட்டுவதற்காக பூயை புனசுகாரங்களை மேற்கொள்கிறது. “நாங்கள் கொரோனாவுக்கு பயந்து சிறிபாதவை(சிவனொளிபாதமலையை) மூடமுடியாது” என்று தேரர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையும் காணக்கிடைத்தது.

தென்கொரிய தேவாலயத்தில் ஒரே நேரத்தில் கொரோனா பரவியதையும் நான் இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகிறேன். சிங்கப்பூர் அனைத்து சமய வழிபாடுகளையும் ஆரம்பத்திலேயே நிறுத்தியது. வரலாற்றில் மூடப்படாத சீரடி சாயிபாபா கோவில் மூடப்பட்டுவிட்டது.

ஆனால், மதம் மக்கள் மீது வைத்த கண்ணை எடுத்ததாகத் தெரியவில்லை. மக்களும் வசியப்பட்டுப்போய் கிடக்கிறார்கள். “கடவுள் இல்லனு சொல்லல. இருந்தா நல்ல இருக்கும்னுதான் சொல்லுறேன்.” இவ்விடத்தில் தமிழ் சினிமா டையலகையும் பதிவு செய்கிறேன். ஆனாலும், விஞ்ஞானத்தின் பின்னால் மதம் மற்றும் கடவுளர்கள் வளம் வருவதே இன்றைய எதார்த்த சூழல். “ஏமாற்றுகாரர்களின் பேச்சைக்கேட்டு ஏமாற வேண்டாம்.” இதற்கு மேல் என்ன சொல்ல?

வெள்ளம் வரும் முன் அணையைக் கட்டியதா இலங்கை அரசு ?

“பலமான அணையைக் கட்ட முடியாதவர்களே இலங்கை அரசாங்கம்” என்று ஆர்ப்பரித்து வந்த வெள்ளம் காட்டிவிட்டது. நேற்று சனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டு நலன் பற்றி எதுவுமே இல்லை என்பது போல யே.வி.பி இன்று ஊடக சந்திப்பில் கூறியதோடு, தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை கோரோனா விவகாரத்துக்கு வழங்குவதாகவும் அறிவித்தது.

தீயநுண்மி(கொரோனாவை) எதிர்த்து இலங்கையில் இராணுவப்படை துப்பாக்கி தூக்கி நிற்கிறது. அமெரிக்காவே ஆடிப்போய் இருக்கும் இநேரத்தில் இவர்கள் இராணுவ பலத்தைக் காட்டுகிறார்களாம். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி “மக்களே எமக்கு ²/3 அதிகாரத்தை தாருங்கள்.” என்கிறார். அரசாங்கம் இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த முயல்கிறது.

கோட்டாபய தோற்றுப்போயுள்ளார். இந்த நேரத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் செயலாற்றுவதே சிறந்தது.

இறுதியாக,

தலைக்கு வந்த கொரோனாவுக்கு தலையைக் கொடுக்காது தலைப்பாகையோடு வழியனுப்பவே அரசாங்கம் செயற்பட வேண்டும். உலக அரங்கிலேயே மக்களுக்கு சேவையாற்றுவதாக பொய்யிக்கு நடித்தவர்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள். போலி மருத்துவ மாஃபியா பதுங்கிவிட்டது. கடவுளர்கள் காணாமலாகிவிட்டார்கள். எதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசாங்கம் மக்களுக்கு செயலாற்ற வேண்டும். மக்களும் அதற்கேற்றாற்போல் நடக்க வேண்டும். இந்த நேரத்தில் தியநுண்மி(கொரோனா )வைரசிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதே பிறருக்கு செய்யும் பேருதவியாகும்.

சதீசு செல்வராச் ....... மலையக ஒன்றியத்திலிருந்து

கியூபா தான் இன்றைய உலகின் கீரோ...!

கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!

"உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", எனப் பிடல் காசுட்ரோ கெஞ்சினார்!

அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.

பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காசுட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.

உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.

இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!

உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்", என்று அறிவித்தார்.

அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்றைக்கு 'கொரோனா' வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!

அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

இதோ! பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும், அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது!

எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக் கூட உள்ள விடமாட்டேன்னு சொல்லுறான்...ஆனால், கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீச் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது....

கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து...தஞ்சம் கொடுத்துள்ளது...மருத்துவம் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது...

கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட ராஜீய ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி, மற்ற நாடுகளையும் அதற்காக நிற்பந்தித்து வரும்...உலகின் பொருளாதாரப் புலிகள் எல்லாம்... தெறிச்சு ஓடும் போது...இந்த நோயைக் கண்டு பதறாமல் நின்று எதிர்கொள்ளும் கியூபா தான் இன்றைய உலகின் கீரோ...!

எம்மிடம் ஒரு தீயநுண்மியும்(கொரோனா வைரசு) நோயாளி கூட இல்லை - வட கொரியா  கண்ணுக்கு தெரியாத அணுஆயுதப்போர் போன்றது இது கண்ணுக்குத்தெரியாத உலகப்போர்

18,19.03.2020  எம்மிடம் ஒரு தீயநுண்மியும்(கொரோனா வைரசு) (COVID-19) தொற்றுக்குள்ளான நோயாளி கூட இல்லை என வட கொரியா அறிவித்துள்ளது. வட கொரியாவின் எல்லைகளை மூடுதல், சீனாவுடனான போக்குவரத்து / வர்த்தக தொடர்புகளை துண்டித்தல் போன்ற விடயங்களை முறையாக மேற்கொண்டதன் விளைவாகதீயநுண்மியும்( கொரோனா வைரசு) நாட்டினுள் வருவதை தடுத்ததாக அந்நாட்டு அதிபர் கிம் யான்ங் உன் தெரிவித்துள்ளார்.

தீயநுண்மியும்(கொரோனா வைரசு) தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனாவையும், தென் கொரியாவையும் அயல் நாடுகளாக கொண்டுள்ள வட கொரியா, தம்மிடம் கொரோனா தொற்றுள்ள ஒரு நோயாளி கூட இல்லை என அறிவித்ததில் நம்பகத்தன்மை இல்லை என்றே சீனா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கருதுகின்றன.

வட கொரியாவில் தீயநுண்மியும்(கொரோனா வைரசு) தொற்று உள்ளதா என பரிசோதிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட 5,400 பேரில் ஒருவருக்கேனும் தீயநுண்மியும்(கொரோனா வைரசு) தொற்று இருக்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநாட்டில் ஒரு நாளைக்கு 10.000 பேரை பரசோதிக்கம் அளவு தொழில்நுட்பவசதியம் திட்டமும் இருந்துள்ளது. இந்தகிருமிப்பரவலால் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதும் ஒரு அங்கம்  ஆகையால் தீநுண்மியை கட்டுப்பபடுத்தும்போது  பொருளாதாரம் வீழ்ச்சியடையாமலும்பார்க்வேண்டுமென்பது கொரியாவின் இலக்கம்  அறிவிப்புமாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.