குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

உலகைக்காக்க எல்லோரும் எண்ணுவோம்!

கொல்லும் தீநுண்மியை (கொரோனாவை)

வெல்லும் மனிதர் யார் என்றே

எண்ணங்கள் எழுகின்றன?

தீநுண்மியை மனிதர் வெல்வாரோ ?

மனிதரை தீநுண்மி வெல்லுமோ?

அது பரவாமல் தாக்காமல் இருக்கும்

முறைகள் தான் நடக்கு.

இந்த தீநுண்ணி எப்படி வந்தது?

அதனைஅறிவதே தொடக்கமாக இருக்கு

அதனை ஆராய்ந்த பின்பே

மருந்தென்பது காணமுடியும்

என்பதே அறிவியல் முடிவாக இருக்கு!


தனிநபர்களின் அறிவு பொருட்களை

தேக்கினால் சரியென்பது தீர்வாக இருக்கு!

மற்றவர்க்கில்லாமல் எமக்கென்று ஆக்கும்

அறியாமை தேங்கிக்கிடக்கு!!


தீநுண்மியைக்காட்டி தன்னல நுண்மிகள்

பெருகி மனிதவரலாற்றில் விரும்பாப்

பண்பொன்று உருவாகி மனிதம் அழியுமோ!

தீநுண்மியால் மாற்று நடைமுறைகள் உயருமோ!!


வீட்டுக்குள்ளிருந்தாலும்

உலகிற்குள் நுழைவோம்

உலகிற்குள் இருந்தாலும்

வீட்டிற்குள் சுருங்குவோம்

சுயநலம் கருவாகியிருப்பின்.


ஏட்டில் எடுத்ததை

எண்ணத்தில் உயர்வாய்

கொள்வோம் உயர்வோம்

உலகைக்காக்க

எல்லோரும் எண்ணுவோம்

அதுவே எல்லோரையும்காக்கும்

மருந்தாகும் கடவுளுமாகும்.


பூநகரி பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து 14.03.2020