07.02.2020...பூமிக்கான முதன்மை ஆற்றல் எது? நீங்கள் கதிரவன் என்று சொன்னால், அதை சரியாகவே யூகித்தீர்கள். நமது ஞாயிற்றுத்தொகுதியில் கோள்கள்கள் சுற்றும் நட்சத்திரம்தான் அது.
பூமி என்பது ஏராளமான வளங்களைக் கொண்ட ஒரு பாறை. அதன் மேல் படரும் கதிரவனின் ஒளியால் பல சுழற்சி நிகழ்வுகள் நிகழ்கின்றன. எ.கா., தாவரங்கள் வளர்ந்து, தாவரபட்சிக்ளுக்கு உணவாகி, அந்த பட்சிகள் மாமிச உயிரினங்களுக்கு புரதமாக இரையாகி, அவைகளே இறந்து மண்ணுக்கு மீண்டும் உரமாக மக்கிப் போகின்றன. இதேபோல், நீர் ஆவியாகி, உறைந்து, ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்தேக்கி மறுபடியும் நீர்நிலை சுழற்சிக்கு ஆயத்தமாகிறது.
இச்சுழற்சிகளால் தான் வாழ்க்கை சாத்தியமாகிறது.
கதிரவன் நமது விண்மீன் மண்டலத்தில் சராசரியாக இயங்கும் ஒரு உடு. இது ஏற்கனவே சுமார் ஐந்து பில்லியன் ஆண்டுகளாக அதன் வாழ்நாளின் பாதியை கடந்து விட்டது. இருந்தும், 15 கோடி கிலோமீட்டர் (150 மில்லியன் கி.மீ) தொலைவில் உள்ள இந்த நட்சத்திரத்தை, நாம் நேரடியாக பார்க்க முடியாது.
ஏன்?
பூமியில் எங்கும் நிலப்பரப்பு வானிலை கணிப்புகள் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும். நம் தமிழ்நாட்டு வானிலை அறிஞர் Pradeep John சர்வ சாதாரனமாக செய்து விடுவார். இப்போதைய விண்வெளி வானிலை நிபுணத்துவம் ஒரு 50 வருடம் பின்தங்களாக உள்ளது. சுமார் 48 நிமிடங்கள் முன்னால் மட்டுமே எந்த விண்வெளி வானிலையையும் கணிக்க முடிகிறது. நமது இலக்கு 48 மணிநேரம். இது சாத்தியமானால் மின்சார கட்டங்களைச் சரிவர செயல்படுத்தவும் மற்றும் செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் தங்கள் வன்பொருளை பாதுகாப்பான பயன்முறையில் விண்வெளியில் அமர்த்தவும் உதவும்.
அப்படி தொழில்நுட்பம் மேம்படும் போது நம்மவர் விண்வெளி வானிலையையும் ஒரு கை பார்த்து விடுவார்.
கதிரியக்க மண்டலத்தில் வெப்பநிலை சுமார் 70 லட்சம்°C இருந்து 20 லட்சம்°C க்கு குளிர்ச்சியடைகிறது. இது மேற்பரப்புக்கு வரும்போது, அணுவின் வெப்பநிலை வெறும் 5,500°C தான்!
எப்படி இது சாத்தியமாகிறது?
கதிரவனின் மையத்தில், கைட்ரயன் அணுக்கள் மிக இறுக்கமாக நிரம்பியுள்ளன. அவற்றில் இரண்டு அணுக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவை உருவாக்குகின்றன. அத்தருணத்தில் காமா கதிர்கள் உருவாகி நிறைய ஆற்றலை வெளியிடுகின்றன. அவ்வாற்றல் மற்ற அணுக்களால் உறிஞ்சப்பட்டு, பின்னர் மீண்டும் கதிர்வீச்சாக உருவாவதற்கு முன்பு, சில மில்லிமீட்டர்கள் மட்டுமே பயணிக்கிறது. இந்த செயல்முறை சுமார் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்தேருகிறது, மையத்திற்கு மேலே உள்ள கதிரியக்க மண்டலத்தை அடையும் வரை. அதன் பரப்பளவு மேற்பரப்பிலிருந்து 24% முதல் 70% ஆழத்தில் உள்ளது.
மேற்பரப்புக்கு அடியிலுள்ள வெப்பச்சலன மண்டலத்தில், காமா கதிர் அங்கிருக்கும் வாயுவை வெப்பப்படுத்துகிறது, ஆனால் ஆற்றலை மீண்டும் கதிர்வீசும் அளவுக்கு மாற்றுகிற வெப்பம்நிலை அங்கு இல்லை. அதற்கு பதிலாக, வீட்டில் சுடுநீர் கொதிக்கும் போது, கொதித்து, பரவி, குளிர்ந்து, பின்னர் மூழ்குவது போல் ஒரு நிலையில் தான் வாயுக்கள் மிதக்கின்றன.
மையத்தில் தொடங்கிய அணுக்கள் மேற்பரப்பில் இருந்து ஞாயிறு வெளிச்சமாக விடுவிக்கப்பட்டு எல்லா திக்குகளிலும் வீச ஆன நேரம் 1,00,000 ஆண்டுகள்! அவற்றில் சில கதிர்கள் 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ள பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம், 8 நிமிடங்கள். அதே நேரத்தில், ஒரு காமா ஃபோட்டான் கதிரவனின் மையத்தில் வெறும் 13 செ.மீ மட்டுமே பயணித்திருக்கும் !!
என்ன ஒரு பயணம்!